Casimiyyah Arabic College المدرسة القاسمية العربية

Casimiyyah Arabic College المدرسة القاسمية العربية High School

“ஊழலற்ற மற்றும் மனிதநேயமிக்க பண்பாட்டு சமூகத்தை உருவாக்குதல்” – விழிப்புணர்வு நிகழ்ச்சிமுஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல...
29/07/2026

“ஊழலற்ற மற்றும் மனிதநேயமிக்க பண்பாட்டு சமூகத்தை உருவாக்குதல்” – விழிப்புணர்வு நிகழ்ச்சி

முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, “ஊழலற்ற மற்றும் மனிதநேயமிக்க பண்பாட்டு சமூகத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று எமது புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில், கல்லூரி அதிபர் அஷ்ஷெய்ஹ் H.M. மின்ஹாஜ் (இஸ்லாஹி) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

இந்நிகழ்வில், எமது கல்லூரியின் பழைய மாணவரும், முகாமைத்துவ சபை உறுப்பினரும், ஸில்ஸலதுல் காஸிமிய்யீன் பழைய மாணவர் அமைப்பின் உப தலைவருமான அஷ்ஷெய்ஹ் அப்துல் கஹ்ஹார் காஸிமி (மதனி) அவர்கள் சிறப்புரை ஆற்றி, ஊழலற்ற சமூகக் கட்டமைப்பு, மனிதநேயம், ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் இஸ்லாமிய விழுமியங்களின் முக்கியத்துவம் குறித்து பயனுள்ள விளக்கங்களை வழங்கினார்கள்.

மேலும், இந்நிகழ்வை எமது கல்லூரியின் கல்வி விவகாரப் பொறுப்பாளர் அஷ்ஷெய்ஹ் முஸ்தபா காஸிமி அவர்கள் திறம்பட நெறிப்படுத்தியதுடன், கல்லூரியின் உஸ்தாத்மார்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

மாணவர்களிடையே நேர்மை, பொறுப்புணர்வு, மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது.

இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது கல்லூரியின் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும், அல்லாஹ்வின் அருளும் பரக்கத்தும் கிடைக்கப் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்றைய உதயம் பத்திரிகையில் எமது கல்லூரி தொடர்பாக பிரசுரிக்கப்பட்ட செய்தி.இச்செய்தியை வெளியிட்ட உதயம் பத்திரிகைக்கும், ஆச...
09/07/2026

இன்றைய உதயம் பத்திரிகையில் எமது கல்லூரி தொடர்பாக பிரசுரிக்கப்பட்ட செய்தி.

இச்செய்தியை வெளியிட்ட உதயம் பத்திரிகைக்கும், ஆசிரியர் திரு. சனூன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேசிய கல்வி நிறுவகத்தின் திறந்த பாடசாலை செயற்றிட்டத்தின் புத்தளம் பிரதேச கற்கை நிலையமாக புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூ...
02/07/2026

தேசிய கல்வி நிறுவகத்தின் திறந்த பாடசாலை செயற்றிட்டத்தின் புத்தளம் பிரதேச கற்கை நிலையமாக புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரி தெரிவு

___________________________________________________

இலங்கை கல்வி அமைச்சின் தேசிய கல்வி நிறுவகத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் திறந்த பாடசாலை செயற்றிட்டத்தின் புத்தளம் பிரதேச கற்கை நிலையங்களுள் ஒன்றாக புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரி தெரிவு செய்யப்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்!

இதனை முன்னிட்டு, எமது கல்லூரியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அரச பாடசாலை பாடத்திட்டத்தின் கற்றல்–கற்பித்தல் செயற்பாடுகளை கண்காணித்து மதிப்பீடு செய்வதற்காக, 2026.07.01 ஆம் திகதி அன்று தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிநிதிகள் எமது கல்லூரிக்கு விஜயம் செய்தனர்.

இந்நிகழ்வில்,
1. Dr. A. D. A. De Silva – Deputy Director General, Faculty of Teacher Education & Alternative Education
2. Ms. Hyunsook – Assistant Secretary General, Korean National Commission for UNESCO
3. Ms. Inhye – Programme Specialist, Korean National Commission for UNESCO
4. Mr. S. Dunaisingh – Head / Senior Lecturer
5. Mr. M. G. Munasinghe – Senior Lecturer
6. Mr. R. M. S. I. Wijebandara – Senior Lecturer
7. Mr. M. H. M. Nawas – Senior Tutor, Open School Programme
உள்ளிட்ட அதிகாரிகள், கல்லூரி உஸ்தாத்மார், பாடசாலை பாட ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு எமது கல்லூரி அதிபர் அஷ்ஷெய்ஹ் எச். எம். மின்ஹாஜ் இஸ்லாஹி அவர்கள் தலைமை தாங்கினார்.

வருகை தந்த அதிகாரிகள் கல்லூரியின் வகுப்பறைகளைப் பார்வையிட்டதுடன், அரச பாடத்திட்டம் தொடர்பான கற்றல்–கற்பித்தல் நடவடிக்கைகள், கல்வி நிர்வாகம் மற்றும் கல்லூரியின் செயற்பாடுகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தனர்.

இதன்போது, எமது கல்லூரியில் நீண்டகாலமாக அரச பாடத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதைப் பாராட்டி, தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

மேலும், இச்செயற்றிட்டத்தின் கீழ் புத்தளம் பிரதேச கற்கை நிலையமாக எமது கல்லூரி தொடர்ந்து செயற்படுவதற்கான பூரண அங்கீகாரத்தை வழங்கியதோடு, அரச பாடசாலை பாடத்திட்டத்தை தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தேசிய கல்வி நிறுவகம் வழங்கும் என்றும் உறுதியளித்தனர்.

நிகழ்வின் நிறைவில், வருகை தந்த அதிகாரிகள் கல்லூரியின் விருந்தினர் பதிவுப் புத்தகத்தில் தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, அவர்களின் வருகையை நினைவுகூரும் வகையில் மர்ஹூம் மஹ்மூத் ஆலிம் நினைவு முத்திரை பொறிக்கப்பட்ட கல்லூரியின் முதல் நாள் உரை நினைவுப் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தேசிய கல்வி நிறுவகத்தின் இவ்வங்கீகாரம், புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் கல்விச் சேவைக்கும், தரமான கற்றல்–கற்பித்தல் நடவடிக்கைகளுக்கும் கிடைத்துள்ள மேலும் ஒரு முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

முழு நேர விரிவுரையாளர் பதவி வெற்றிடம்_____________________________________________புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில்...
27/05/2026

முழு நேர விரிவுரையாளர் பதவி வெற்றிடம்
_____________________________________________

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் தங்கி இருந்து மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய முழுநேர விரிவுரையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பிரதான பொறுப்புகளும் தகைமைகளும்

• ஷரீஆ துறையுடன் தொடர்புடைய அனைத்து பாடங்களையும் கற்பிக்கக்கூடியவராக இருத்தல்.
• கல்லூரியில் தங்கி இருந்து கடமையாற்றக்கூடியவராக இருத்தல்.
• குறைந்தது 2 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் பெற்றிருத்தல்.
• ஆங்கில மொழியியை கற்பிக்கும் திறன் மேலதிக தகைமையாக கருதப்படும்.

குறிப்பு

✓ உணவு, தங்குமிட வசதி என்பன இலவசமாக வழங்கப்படும்.
✓ சம்பளம் மற்றும் விடுமுறை தொடர்பான விடயங்கள் கலந்துரையாடலின் மூலம் தீர்மானிக்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் 0712640232 எனும் இலக்கத்திற்குத் தமது சுயவிவரக்கோவையை WhatsApp செய்யவும்.

விண்ணப்ப முடிவு திகதி
15 / 06 / 2026

மேலதிக விபரங்களுக்கு:
0712640232
Principal,
Casimiyya Arabic College,
Puttalam.

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் இடம்பெற்றஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 🇱🇰 78ஆம் சுதந்திர தின நிகழ்வு – 2026____...
04/02/2026

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் இடம்பெற்ற
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 🇱🇰 78ஆம் சுதந்திர தின நிகழ்வு – 2026

______________________________________________

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78ஆம் சுதந்திர தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாகவும் எளிமையான முறையிலும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தன. அல்ஹம்துலில்லாஹ்!

கல்லூரி அதிபர் அஷ்ஷெய்ஹ் HM மின்ஹாஜ் இஸ்லாஹி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காஸிமிய்யா நிர்வாக சபை, முகாமைத்துவ சபை, ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் NTM தாஹிர், புத்தளம் மாநகர சபை உறுப்பினர்கள், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர், கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள், புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகத்தினர், புத்தளம் ஜம்இய்யதுல் உலமா நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் விஷேட அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் NTM Thahir Marikkar அவர்கள் கலந்து கொண்டு விஷேட உரையாற்றினார்.

மேலும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு காஸிமிய்யா நிர்வாக சபை தலைவர் அல்ஹாஜ் SRM முஸம்மில் அவர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டதுடன், கல்லூரி அதிபர் அவர்களால் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும், வருகை தந்து நிகழ்வை சிறப்பித்த அனைத்து அதிதிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜஸாகுமுல்லாஹு ஹைரன்!

04/02/2026

78th Independence Day Program @ Casimiyya Arabic College - Puttalam

புதிய மாணவர்கள் வரவேற்பு மற்றும் பெற்றோர் சந்திப்பு நிகழ்வு - 2026________________________________________________எமது க...
18/01/2026

புதிய மாணவர்கள் வரவேற்பு மற்றும் பெற்றோர் சந்திப்பு நிகழ்வு - 2026

________________________________________________

எமது கல்லூரியில் புதிய மாணவர்கள் உள்வாங்கும் நிகழ்வு நேற்று (17.01.2026) மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! புதிய மாணவர்களின் பதிவு செயல்முறைகள் நிறைவுற்ற பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியும் பெற்றோர் சந்திப்பும் நடைபெற்றன.

நிகழ்வு 2ம் தர மாணவர்களின் அல்கிராஅத் பாராயணத்துடன் ஆரம்பமானது. அஷ்ஷெய்ஹ் பவாஸ் கபூரி அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழிநடத்தினார். கல்லூரி மாணவர்களின் மத்ரஸா கீதம், வரவேற்பு கீதம் மற்றும் 2ம் தர மாணவரின் பாடல் நிகழ்ச்சி ஆகியவை நிகழ்வை மேலும் சிறப்பித்தன.

கல்லூரி அதிபர் அஷ்ஷெய்ஹ் HM மின்ஹாஜ் இஸ்லாஹி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரி நிர்வாக சபை உறுப்பினர்கள், முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், புதிய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

அதிபர் அவர்கள் தனது தலைமை உரையில் மார்க்கக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், மாணவர்களும் பெற்றோர்களும் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் பற்றியும் விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து, அஷ்ஷெய்ஹ் ஜுனைதீன் நூரி அவர்கள் மார்க்கக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி விசேட உரையாற்றினார். பின்னர், “கல்லூரியின் பொது ஒழுங்குகள், சட்டங்கள் மற்றும் தேவைகள்” என்ற தலைப்பில் அஷ்ஷெய்ஹ் அம்மார் மஹ்மூத் (காஸிமி) அவர்கள் விளக்கமான Presentation மூலம் உரையாற்றினார்.

இறுதியாக, அஷ்ஷெய்ஹ் பாரிஸ் மதனி அவர்கள் நன்றியுரை வழங்க, நிகழ்வு இனிதே துஆவுடன் நிறைவடைந்தது.

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரிக்கான புதிய மாணவர் அனுமதி – 2026.இரண்டாம் கட்ட நேர்முகப்பரீட்சை...
06/01/2026

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரிக்கான புதிய மாணவர் அனுமதி – 2026.
இரண்டாம் கட்ட நேர்முகப்பரீட்சை...

2026ம் ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட புதிய மாணவர்களின் விபரம்
26/12/2025

2026ம் ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட புதிய மாணவர்களின் விபரம்

புதிய மாணவர் அனுமதி - 2026
18/12/2025

புதிய மாணவர் அனுமதி - 2026

Address

177, Mannar Road
Puttalam

Telephone

009432226738

Website

Alerts

Be the first to know and let us send you an email when Casimiyyah Arabic College المدرسة القاسمية العربية posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Casimiyyah Arabic College المدرسة القاسمية العربية:

Shortcuts

Share

Category