Zanhir Sir

Zanhir Sir Economics - Zanhir sir Asst. director of Education. (Rtd.)

புத்தளம் பெரியபள்ளிவாசல் திறந்துவைக்கப்பட்ட நாள் இன்று 21. 09. 1938 இல் புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் திறந்துவைக...
21/09/2026

புத்தளம் பெரியபள்ளிவாசல்
திறந்துவைக்கப்பட்ட நாள் இன்று

21. 09. 1938 இல் புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் திறந்துவைக்கப்பட்டது.

இதற்குமுன்னர் இவ்விடத்தில் ஒரு ஸியாரம் இருந்துள்ளது. அதன் வரலாறு சுமார் 600 வருடங்களைக் கடந்து செல்கின்றது,

1494 இல் மீரா உம்மா என்பவர் இங்கு ஓர் தர்ஹா அமைக்க பெரிய பரப்பளவுகொண்ட காணி ஒன்றை வழங்கியுள்ளார்.

தற்போது முஸ்லிம் கலாசார மண்டபம் அமைந்துள்ள இடத்தில் ஆரம்ப ஜூம்ஆ பள்ளிவாசல் இருந்தது. அதன் பெயர் 'மீராலெவ்வை பள்ளிவாசல்'.

காலப்போக்கில் பள்ளிவாசல், தர்ஹா ஆகியன பழுதடைய, புதிய பள்ளிவாசலின் தேவை எழுந்தது.

1932 கார்த்திகை 7 ஆம் நாள், ஜும்ஆ வுக்குப் பின்னர், "மீராலெவ்வை பள்ளிவாசல் இருந்த இடத்தில், பெண்கள் பாடசாலை ஒன்று அமைக்கப்படல்வேண்டும்" என்ற ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டது.

ஆனால் அது நிறைவேறவில்லை.

1934 ஆவணி 27 இல் தர்ஹா உடைக்கப்பட்டது.

1938 . 09. 21 இல் தற்போதைய பள்ளிவாசல் திறந்துவைக்கப்பட்டது.

புத்தளம் சோனகர் தலைவர் (Head Moorman) சி.அ.க. ஹமீது ஹுசைன் மரைக்கார் சம்பிரதாயபூர்வமாக ஜூம்ஆ மஸ்ஜித்தைத் திறந்து வைத்தார்.

எகிப்திலுள்ள அபுல் அப்பாஸ் அல் முர்ஸி பள்ளிவாசலின் கட்டிடக்கலையை ஒத்ததாக, புத்தளம் பெரியபள்ளிவாசல் அமைந்துள்ளது என, யாழ் பல்கலைக்கழக முதலாவது துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் தனது ‘கலையும் பண்பும்’ (1961) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

நினைவூட்டலுக்கு நன்றி : Seyed Finos

© Z.A. Zanhir - 21. 09. 2026

புத்தளம் Poles வீதியும் Fort வீதியும் குருநாகல் வீதி அல்லது அனுரதபுர வீதியூடே புத்தளம் வரும்போது, தபால் நிலைய சந்தியில் ...
20/09/2026

புத்தளம் Poles வீதியும் Fort வீதியும்

குருநாகல் வீதி அல்லது அனுரதபுர வீதியூடே புத்தளம் வரும்போது, தபால் நிலைய சந்தியில் வலப்புறம் செல்லும் பாதை, 'போல்ஸ் வீதி' எனவும் இடப்புறம் செல்வது Fort Road (கோட்டை வீதி) எனவும் அழைக்கப்படுகின்றது.

பாத்திமா மகளிர் கல்லூரி, ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி போன்றன போல்ஸ் வீதியில் அமைந்துள்ளன.

வாடி வீடு, சிறுவர் பூங்கா, மாவட்ட செயலாளர் இல்லம் (GA Residence) போன்றன Fort வீதியில் அமைந்துள்ளன.

📌 தற்போது மக்கள் வங்கி அமைந்திருக்கும் சந்தியில், சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இவ்விரு பாதைகளையும் வேறுபடுத்திக் குறிக்கும் அடையாளக் கல் ஒன்று, நிலத்தில் பதிக்கப்பட்டிருந்தது நினைவில் உள்ளது.

தற்போதைய சுற்றுவட்டம் (Roundabout) அப்போது இருக்கவில்லை.

கோட்டை வீதியின் கோடியில், தற்போது நில அளவைத் திணைக்களம் அமைந்துள்ள பிரதேசத்தில், முன்னர் கோட்டை ஒன்று அமைந்திருந்தது.

📌 இக்கோட்டையில், கம்பம் (Pole) ஒன்றில் கொடி ஏற்றப்பட்டிருக்கும்.

குடியிருப்புக்களோ கட்டிடங்களோ இல்லாது பரந்த வெளியாகக் காணப்பட்ட அக்காலத்தில், தற்போதைய ஹுதாப் பள்ளி அமைந்திருக்கும் பிரதேசத்தில் நின்று பார்க்கும் போது கோட்டையில் ஏற்றப்பட்டிருக்கும் கொடிக்கம்பம் தெரியுமாம்.

இதன் காரணமாகவே இவ்வீதி "POLES ROAD" என அழைக்கப்பட்டுள்ளது.

1766 இல் தளபதி இம்ஹோப் (Capt. Imhoff) தலைமையில் ஒல்லாந்தரினால் புத்தளம் கைப்பற்றப்பட்டு, நகரின் தென் புறத்தில், அகழிகளுடனான மண் கோட்டை ஒன்றை அமைத்துள்ளனர் .

இப்பகுதியில் ஆழமான அகழி போன்ற அமைப்பொன்று இருப்பதைக் காணலாம்.

புத்தளம் நகரின் ஆரம்பக் குடியிருப்பு போல்ஸ் வீதிக்கு மேற்கில் அமைந்திருந்தது.

இன்று கங்காணிக்குள வீதி , இரண்டாம் குறுக்குத் தெரு போன்றன அமைந்துள்ள பிரதேசமே அது.

மழைக் காலங்களில் இக்குடியிருப்புப் பகுதி வெள்ளத்தில் மூழ்காதிருக்க, போல்ஸ் வீதி இருக்கும் இடத்தில் அணை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

📌 அந்த அணையின் மீது அமைக்கப்பட்டிருந்த வீதியே போல்ஸ் வீதியாகும்.

எமது சிறுபராய காலத்தில் இவ்வீதி நகரின் ஏனைய வீதிகளைவிட உயரமாக அமைந்திருந்ததனை நாம் அறிவோம்.

📌 போல்ஸ் வீதியானது "திரன வீதி" (திறன அணை ) என அழைக்கப்பட்டதாகவும் கூறுவர்.

© Z.A. Zanhir - 16. 09. 2026

சேகு மீரான் லெப்பை ஆலிம் நினைவு நாள் இன்றுபுத்தளம் நகரில் 1950 - 90 காலப்பகுதியில் வாழ்ந்த புகழ்பெற்ற ஒர் உலமா, சேகு மீர...
18/09/2026

சேகு மீரான் லெப்பை ஆலிம்
நினைவு நாள் இன்று

புத்தளம் நகரில் 1950 - 90 காலப்பகுதியில் வாழ்ந்த புகழ்பெற்ற ஒர் உலமா, சேகு மீரான் லெப்பை.

1910 காலப்பகுதியில் பிறந்த இவர், சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்தார். அவரின் குடும்பத்தைச் சேர்ந்த, நகரில் பிரபலமான, மஜீத் மரைக்காரின் அரவணைப்பில் வளர்ந்தார்.

புத்தளம் ஸாஹிறாக் கல்லூரி, நோர்த் ரோட்டில் இயங்கியபோது அங்கு சேர்ந்து ஆங்கில மொழிமூலம் ஆரம்பக் கல்விபயின்றார்.

பின்னர் வெலிகமயைச் சேர்ந்த, காலி பஹ்ஜத்துல் இப்ராஹிமிய்யா அறபுக் கலாசாலை அதிபராயிருந்த அஜ்வாத் ஆலிம் அவர்களின் தந்தையின் பராமரிப்பில், வெலிகம முர்ஸியா மத்ரஸாவில் பயின்றார். பின்னர் அவரின் வழிகாட்டலில் பஹ்ஜத்துல் இப்ராஹிமிய்யா அறபுக் கலாசாலையில் கற்று ஓர் ஆலிமானார்.

புத்தளம் அரசினர் ஆண்கள் பாடசாலை, ஸாஹிறாக் கல்லூரி என்பனவற்றில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

📌 புத்தளம் அரசினர் ஆண்கள் பாடசாலை - 1955
படம் இணைக்கப்பட்டுள்ளது

கணீரென்ற குரலில் குர்ஆன் ஓதக்கூடிய சேகு மீரான் ஆலிம், புத்தளம் பெரியபள்ளிவாசலில் நீண்டகாலம் ஜூம்ஆ பிரசங்கம் நடத்திவந்தார். அதற்காகத் தனது கையெழுத்தில் பல ஜூம்ஆ பிரசங்கங்களைத் தயாரித்து வைத்திருந்தார்.

அவரிடம் பல அறபுத் தமிழ் நூல் சேகரிப்புக்கள் இருந்தன.

📌 18. 09. 1990 செவ்வாய் அன்று அவர் காலமானார். இன்று அவரது நினைவுநாளாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தவுஸை வழங்கப் பிரார்த்திப்போம்.

நன்றி : S.I.M. அக்ரம் (ஆசிரியர்)

© Z.A. Zanhir - 18. 09. 2026

புத்தளத்தில் North Roadகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் வீதி 'வடக்கு வீதி'யாகும். (REf: Discovering Ceylon...
17/09/2026

புத்தளத்தில் North Road

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் வீதி 'வடக்கு வீதி'யாகும்.
(REf: Discovering Ceylon - RL Brohier)

இவ்வீதியை நினைவுகூரும் வகையில் இன்றும் புத்தளம் நகரில் அப்பாதையின் ஒரு பகுதி "North Road" என அழைக்கப்படுகின்றது.

கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் ஊடாக கடற்கரையோரமாக மன்னார், யாழ்ப்பாணம் வரைக்குமான ஓர் பண்டைய பயணப் பாதை அமைந்திருந்திருந்தது.

இவ்வழி, வழியே தொடர்ச்சியாக ஸியாரங்களைக் (முஸ்லிம்களின் நல்லடக்கத் தலம்) காணலாம். இவை பண்டைய குடியிருப்புக்களை அல்லது வர்த்தக நோக்கில் இடம்பெற்ற முஸ்லிம் பயணிகளை நினைவூட்டுகின்றன.

ஆறாம் மைல் தொலைவில் 'அம்பலம்' கிராமத்தில் இரு ஸியாரங்கள் காணப்படுகின்றன. "அம்பலம்" என்பது பயணிகள் தங்கும் இடத்தைக் குறிக்கும்.

இவ்வழியே சுமார் 15 கி.மீ. தொலைவில் கரைத்தீவுக் கிராமத்தில் 'கல்லடியப்பா ஹபுரடி' காணப்படுகின்றது. இங்கிருந்து சுமார் 5 km வடக்கு நோக்கிச் சென்றால் குதிரைமலை ஸியாரத்தைத் தரிசிக்கலாம்.

© Z.A. Zanhir - 17. 09. 2026

இராசதானிகளை நோக்கிச் செல்லும் புத்தளத்துப் பாதைகள்புத்தளம் நகரிலிருந்து செல்லும் பிரதான பாதைகள் ஒவ்வொன்றும் அன்றைய இராசத...
16/09/2026

இராசதானிகளை நோக்கிச் செல்லும்
புத்தளத்துப் பாதைகள்

புத்தளம் நகரிலிருந்து செல்லும் பிரதான பாதைகள் ஒவ்வொன்றும் அன்றைய இராசதானிகள் நோக்கிச் செல்வதை அவதானிக்கலாம்.

📍 தபாற்கந்தோர் சந்தியில் இருந்து அனுராதபுர வீதி, குருநாகல் வீதி ஆகியன பிரிந்துசெல்கின்றன. இவை இரண்டும் அன்றைய பிரதான இராசதானிகளாகும்.

புத்தளம் நகரின் பிரதான சுற்றுவட்டத்திலிருந்து (Roundabout) கொழும்பு வீதியும் மன்னார் வீதியும் எதிர்திசையில் செல்கின்றன.

📍 கொழும்பு வீதி, கோட்டை இராசதானியை நோக்கிச் செல்ல மற்றையது யாழ்ப்பாண இராசதானிக்குச் செல்கின்றது.

© Z.A. Zanhir - 12. 09. 2026

முஸ்லிம் வாலிபர் சங்கம் புத்தளம் நகரின் முன்னோடி சங்கமாக கருதக்கூடியது  முஸ்லிம் வாலிபர் சங்கம். புத்தளத்தின் புரட்சிகர ...
15/09/2026

முஸ்லிம் வாலிபர் சங்கம்

புத்தளம் நகரின் முன்னோடி சங்கமாக கருதக்கூடியது முஸ்லிம் வாலிபர் சங்கம். புத்தளத்தின் புரட்சிகர மாற்றங்களுக்கு இச்சங்கம் காரணமாக அமைந்தது.

ஆங்கிலத்தில் தேர்ச்சிமிக்க நில அளவையாளர், எம்.எம்.எம். உமர் இதன் தாபகராவார்.

மு.இ.மு. அப்துல் றகுமான், கே.எம். இப்ராஹிம், த.இ. அப்துல் ஹமீது, வா. ஷாஹுல் ஹமீது, எம்.ஏ. சாலிஹு, எம். அசன் நெய்னா மரைக்கார் போன்றோர் இச்சங்கத்தின் முக்கியஸ்தகர்களாவர்.

சபாநாயகர் எச். எஸ். இஸ்மாயிலின் ஆதரவும் இச்சங்கத்துக்கு இருந்தது.

அஹதியா திட்டத்தை இவர்கள் அறிமுகப்படுத்தினர். முஹம்மதிய பாடசாலையை நடத்தினர். புதிய பாதைகள் அமைப்பதற்கும் நகரின் சீரமைப்புக்கும் நகர பரிபாலன சபைக்கு அழுத்தம் கொடுத்தனர்.

அக்காலப்பகுதியில் உலகியல் கல்வியில் பொதுமக்களை ஈடுபடுத்தியதில் இச்சங்கத்தின்பணி குறிப்பிடத்தக்கது.

எம்.எம்.எம். உமர் , கல்பிட்டியில் ஆங்கில வகுப்பொன்றையும் நடத்தினார்.

மெளலாமகாம் பள்ளிவாசல் வளவில் முஸ்லிம் வாலிபர் சங்கத்துக்கான நிரந்தரக் கட்டிடம் ஒன்றை 1925 இல் இவர்கள் நிறுவினர்.

செல்வந்தர்களின் குறைகளை சுட்டிக்காட்டியதன் மூலம் மரைக்கார்மார்களின் எதிர்ப்பை சங்கம் சம்பாதித்தது. மெளலாமகாம் பள்ளி நிருவாகிகளுடன் காணிப்போராட்டம் நடத்தியது.

பாங்கு சொல்வதில் அளவுகடந்த திருத்தத்தை ஏற்படுத்த விளைந்து சமூகத்தின் எதிர்ப்புகளுக்கு ஆளானது.

காலப்போக்கில் இச்சங்கம் செயலிழந்துபோனது.

நன்றி :
ஏ.என்.எம். ஷாஜஹான்
செய்யது அஹமது (பள்ளிமாமா)

© Z.A. Zanhir - 15. 09. 2026

14/09/2026

மரங்களின் பெயர்களில்
கல்பிட்டிக் கிராமங்கள்

கல்பிட்டிப் பிரதேசம் கரையோரத் தாவரங்களுக்குப் புகழ்பெற்றதாகும்.

இலங்கையில் அதிகளவான கண்டல் (Mangroves) காடுகள் புத்தளம் மாவட்டத்திலேயே காணப்படுகின்றன.

கல்பிட்டி, தில்லையடியில் ஆரம்பித்தால் பாலாவி வரைக்குமான கிராமங்களில்; மரங்களின் பெயர்களைக் கொண்டமைந்த கிராமங்களைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்:

📍 கண்டல்குழி

📍 குறிஞ்சிப்பிட்டி

📍 கண்டல்குடா

📍 பாலக்குடா

📍 தில்லைமோட்டை

📍 ஏற்றாலை

📍 ஆலங்குடா

📍 கொய்யாவாடி

📍 இலந்தையடி

📍 நுரைச்சோலை

📍 பூலாச்சேனை (பூலாப் பழம் இனிமையானது)

📍 பனையடி

📍 மாம்புரி

📍 நாவற்காடு

📍 கரம்பை

(நன்றி : ஜவாத் மரைக்கார்)

© Z.A. Zanhir - 12. 09. 2026

முஸ்தபா அதிபரின் நினைவு நாள் இன்று புத்தளம் ஸாஹிறாக் கல்லூரியின் அதிபராக இருந்த S.M. முஸ்தபா அவர்கள் 12. 09. 1996 வியாழன...
12/09/2026

முஸ்தபா அதிபரின் நினைவு நாள் இன்று

புத்தளம் ஸாஹிறாக் கல்லூரியின் அதிபராக இருந்த S.M. முஸ்தபா அவர்கள் 12. 09. 1996 வியாழன் அன்று காலமானார்.

ஜனாஸா நல்லடக்கம் அடுத்தநாள் இடம்பெற்றது.

23.01.1992 - 07.02.1994 வரை இவர் ஸாஹிறா அதிபராகக் கடமையாற்றினார்.

1992 - 94 காலப்பகுதியில் Burhardeen Building, ISD building ஆகியன பெறப்பட்டுள்ளன.

எல்லாம் வல்ல ஏக அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸை வழங்கப் பிரார்த்திப்போம்.

© Z.A. Zanhir - 12. 09. 2026

44 வது அகவையில் தில்லையூர் வித்தியாலயம் கல்பிட்டிக் கோட்டத்தில், தில்லையூர் அரசினர் முஸ்லிம் கலவன் வித்தியாலயம் அமைந்துள...
11/09/2026

44 வது அகவையில்
தில்லையூர் வித்தியாலயம்

கல்பிட்டிக் கோட்டத்தில், தில்லையூர் அரசினர் முஸ்லிம் கலவன் வித்தியாலயம் அமைந்துள்ளது.

பாடசாலை அமைந்துள்ள பிரதேசம் பேச்சுவழக்கில் "தில்லையடி" எனப்படும். புத்தளம் நகருக்கண்மையிலும் ஒரு 'தில்லையடி' உண்டு. அங்கும் ஒரு பாடசாலை இருக்கின்றது.

11.09.1982 இல் S.M. ஜுனைத் அவர்களை அதிபராகக்கொண்டு இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

13.09.1982 இல் S.M. யூனுஸ் முதல் மாணவராக சேர்க்கப்பட்டார். 11 ஆண்கள் 12 பெண்கள் என 23 மாணாக்கர் முதல் தொகுதியில் சேர்க்கப்பட்டனர்.

தற்போது இப்பாடசாலையின் அதிபராக இருக்கும் S.M. அரூஸ் 2009 காலப்பகுதியில் இப்பாடசாலைக்கான கீதத்தை இயற்றியுள்ளார். பாடசாலை இலச்சினையை வரைந்தவர் H.M. கலீல்.

இப்பாடசாலையின் 40 வது நிறைவுவிழாவை முன்னிட்டு 'தில்லை மலர்' என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

© Z.A. Zanhir - 11. 09. 2026

பிறந்தநாள் கொண்டாடும் முசல்பிட்டி முஸ்லிம் வித்தியாலயம் கல்பிட்டிக் கோட்டத்துக்குட்பட்ட  முசல்பிட்டி முஸ்லிம் வித்தியாலய...
10/09/2026

பிறந்தநாள் கொண்டாடும்
முசல்பிட்டி முஸ்லிம் வித்தியாலயம்

கல்பிட்டிக் கோட்டத்துக்குட்பட்ட முசல்பிட்டி முஸ்லிம் வித்தியாலயம் 10. 09. 1957 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

இப்பாடசாலையின் உருவாக்கத்துக்கு S.S. மரைக்கார், அசனா மரைக்கார், முஹைதீன் போன்றோர் காரணகர்தாக்களாக இருந்துள்ளனர்.

எம். சேகுநெய்னா, எஸ். இப்ராஹிம், எஸ். அனிபா, கே. முத்துரைக்கார் ஆகியோர் இணைந்து பாடசாலைக்கான காணியை இலவசமாக வழங்கியுள்ளனர்.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு அடுத்தநாள்(11), முதல் மாணவர் பதிவு இடம்பெற்றுள்ளது. முகம்மது தவ்பீக் முதலாவது மாணவராகப் பதிவுசெய்யப்பட்டுள்ளார்.

36 ஆண்களும் 29 பெண்களும் என மொத்தம் 65 மாணவர்களுடன் M.M.M. இப்ராஹிம் அவர்களை அதிபராகக்கொண்டு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் தனது 70வது ஆண்டுவிழாவைக் கொண்டாடவிருக்கும் முசல்பிட்டி முஸ்லிம் வித்தியாலயம், சஞ்சிகை வெளியீடு உட்பட பல திட்டங்களை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

© Z.A. Zanhir - 10. 09. 2026

Address

17/23, Casim Curves, Poles Road
Puttalam
61300

Alerts

Be the first to know and let us send you an email when Zanhir Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category