Islahiyyah Ladies College

Islahiyyah Ladies College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islahiyyah Ladies College, Education, 185, Mannar Road, Puttalam.

புத்தளத்தில் ‘இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம்’ தொடர்பான கல்வி முகாம் சிறப்புற நடைபெற்றதுபுத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூ...
18/09/2026

புத்தளத்தில் ‘இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம்’ தொடர்பான கல்வி முகாம் சிறப்புற நடைபெற்றது

புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் ஏற்பாட்டில் ‘இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம்’ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் கல்வி முகாம், 2026 செப்டம்பர் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தின் வரலாற்றுப் பின்னணி, அதன் தோற்றமும் வளர்ச்சியும், தற்போதைய சட்ட நிலை, சட்ட சீர்திருத்தங்கள், நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் சமகால சவால்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களை ஆழமாக ஆராயும் வகையில் இக்கல்வி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வு இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் M.A.L.M. பஸ்லுல் பாரிஸ் (நளீமி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரியின் முகாமைத்துவ சபைத் தலைவர் எச். அஜ்மல் மற்றும் வாரிஸாதுல் இஸ்லாஹிய்யா அமைப்பின் தலைவி அஷ்ஷெய்கா நும்ரா ஸாஜிதா (இஸ்லாஹி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

மேலும், காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் உஸ்தாத் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி), ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் Z.A. சன்ஹீர், மன்பவுஸ் ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் உஸ்தாத் அல்ஹாபிழ் றியாஸ் (தேவ்பந்தி), பாக்கியாதுஸ் ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் உஸ்தாத் அல்ஹாபிழ் ஜெம்ஸித் (ரஷாதி), பு/பாத்திமா பாலிகா முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் திருமதி சரீனா பர்வீன், பு/சாஹிரா ஆரம்பப் பாடசாலை பிரதி அதிபர் ஹஸீப், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி முகாமையாளர் ஏ.ஆர்.ஏ. அஸீம் பஸ்ரி, பிரதி அதிபர் உஸ்தாத் என்.எம். ஜாஸில் உள்ளிட்ட கல்வியாளர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கல்வி முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் வளவாளர்களாகக் கலந்துகொண்டு, இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தின் பல்வேறு பரிமாணங்கள் தொடர்பில் ஆழமானதும் அறிவுபூர்வமானதுமான உரைகளை வழங்கினர்.

அவர்களில்,

- கலாநிதி அஷ்ஷெய்க் அரபாத் கரீம் (நளீமி) – கல்வி நிகழ்ச்சித் திட்டத் தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர், ஜாமிஆ நளீமிய்யா
- சட்டத்தரணி அஷ்ஷெய்க் M.S. ஷமீல் (நளீமி) – தலைவர், ராபிததுந் நளீமிய்யீன்
- அஷ்ஷெய்க் அலா அஹ்மத் (நளீமி) – உதவிப் பிரதேச செயலாளர், மஹகும்புக்கடவல
- அஷ்ஷெய்க் அனஸ் அஹ்மத் (நளீமி) – உடபலாத கம்பளை பிரதேச காழி
- உஸ்தாத் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) – அதிபர், காஸிமிய்யா அரபுக் கல்லூரி மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி

ஆகியோர் முக்கிய வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.

இக்கல்வி முகாமின் போது இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தின் வரலாற்று வளர்ச்சி, திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான சட்ட ஏற்பாடுகள், காழி நீதிமன்றங்களின் பங்கு, சட்ட சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகள், முஸ்லிம் பெண்களின் உரிமைகள், சமகால சட்ட மற்றும் சமூகச் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இக்கல்வி முகாம் வெறுமனே சட்ட விடயங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வாக அமைந்ததுடன் மட்டுமன்றி, இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான வரலாற்று, மார்க்க, சட்ட மற்றும் சமூகப் புரிதல்களை ஒருங்கிணைத்து ஆராய்வதற்கான பயனுள்ள கல்வித் தளமாகவும் அமைந்தது.

மூன்று நாட்களிலும் இடம்பெற்ற விரிவுரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் அறிவுப் பரிமாற்றங்கள் பங்கேற்பாளர்களுக்கு இத்துறையில் தெளிவானதும் ஆழமானதுமான புரிதலை ஏற்படுத்தியதுடன், குறிப்பாக எதிர்காலத்தில் இவ்விடயம் தொடர்பான அறிவார்ந்த சமூக கலந்துரையாடல்களையும் ஆய்வுகளையும் முன்னெடுப்பதற்கான உந்துதலையும் வழங்கின.

இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் கல்வி மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கல்வி முகாம், இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான அறிவை மேம்படுத்துவதிலும், சட்டம் குறித்த சமநிலையான மற்றும் பொறுப்பான புரிதலை உருவாக்குவதிலும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்தது.

22/08/2026

Al Qirath Arena 2026 Islahiyyah Ladies College

🖤
16/08/2026

🖤

🎓 Alhamdulillah! Another Milestone of Excellence 🌟We are delighted to congratulate our students on securing admission to...
06/08/2026

🎓 Alhamdulillah! Another Milestone of Excellence 🌟

We are delighted to congratulate our students on securing admission to prestigious state universities through the GCE (A/L) – 2025 Results.

Your hard work, perseverance, and trust in Allah (SWT) have led to this remarkable achievement. We pray that Allah grants you beneficial knowledge, success in your studies, and a bright future filled with barakah.

👏 Heartfelt congratulations to all our selected students!

May this achievement inspire many more young women to pursue higher education while upholding Islamic values.

📍 Islahiyyah Ladies College, Puttalam
📚 Academic Year 2025/2026

"Knowledge with Faith, Excellence with Character."

புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி - 2026---------------------------------------இ...
05/08/2026

புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி - 2026
---------------------------------------

இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த ஆகஸ்ட் 03 ஆம் திகதி கல்லூரி வளாகத்தில் மிகுந்த உற்சாகத்துடனும் விமர்சையாகவும் நடைபெற்று முடிந்தது.

கல்லூரி அதிபரின் தலைமையில் நடைபெற்ற இவ்வருடாந்த விளையாட்டு விழாவில் சிறப்பு அதிதிகளாக கல்லூரியின் முகாமைத்துவ சபைத் தலைவர் சகோதரர் எச். அஜ்மல் மற்றும் முகாமையாளர் சகோதரர் ஏ. ஆர். ஏ. பஸ்ரி ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் ஜாஸில் (நளீமி), விரிவுரையாளர்கள், கல்லூரி உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவிகள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

தேசியக் கொடி மற்றும் கல்லூரிக் கொடிகள் ஏற்றப்பட்டு மாணவிகளின் கம்பீரமான இல்ல அணிவகுப்பு மரியாதையுடன் விழா ஆரம்பமானது.

தொடர்ந்து நடைபெற்ற தடகள மற்றும் களப் போட்டிகளில் மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடனும் விளையாட்டு உணர்வுடனும் பங்கேற்றனர். போட்டிகள் நடைபெற்ற அனைத்துக் கட்டங்களிலும் மாணவிகளின் கட்டுக்கோப்பான ஒழுக்கம், பரஸ்பர ஒற்றுமை, குழு ஒத்துழைப்பு, விடாமுயற்சி மற்றும் தலைமைத்துவப் பண்புகள் மிகச் சிறப்பாக வெளிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாணவிகளின் உடல் ஆரோக்கியம், மனவலிமை, தலைமைத்துவத் திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விளையாட்டுப் போட்டி மாணவிகளின் பல்துறை ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிப்படுத்தும் சிறந்தவொரு களமாக இவ்வாண்டும் அமைந்திருந்தது.

நிகழ்வை மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு ஒருங்கிணைத்த கல்லூரியின் இணைப்பாடவிதான செயற்பாட்டுக் குழுவிற்கு கல்லூரி நிர்வாகம் தனது விசேட பாராட்டுகளையும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டது.

அத்துடன், இல்லப் பொறுப்பாசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்லூரி ஊழியர்கள் மற்றும் இந்நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும் நிர்வாகத்தினால் உரித்தாக்கப்பட்டன.

மாணவிகளிடையே விளையாட்டு உணர்வு, கட்டுக்கோப்பான ஒழுக்கம் மற்றும் சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்திய ஒரு வெற்றிகரமான நிகழ்வாக இவ்வருட விளையாட்டுப் போட்டி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்கு மரக்கன்றுகள் அன்பளிப்புசுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் உய...
23/07/2026

இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்கு மரக்கன்றுகள் அன்பளிப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயரிய நோக்கில், புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்கு மரக்கன்றுகள் இன்று (23) அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்பாடலும் ஊடக கற்கை நெறி (Communication and Media Studies) பாட வளவாளரான திரு. தேவநேசன் அவர்கள் இம்மரக்கன்றுகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

கல்லூரி வளாகத்தை மேலும் பசுமையாக்கும் பரந்த முயற்சியின் ஒரு அங்கமாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாணவிகளிடையே சுற்றுச்சூழல் சார்ந்த பொறுப்புணர்வை வளர்ப்பதோடு மரநடுகையின் அவசியம் மற்றும் இயற்கை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நடைமுறை ரீதியாக உணர்த்துவதற்கு இச்செயற்திட்டம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

In the Thinakaran newspaper
23/07/2026

In the Thinakaran newspaper

23/07/2026
இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியில் மலேசிய UniSZA பல்கலைக்கழக மாணவியருக்கு வரவேற்பு! மலேசியாவின் புகழ்பெற்ற அரச பல்கலைக்கழகமா...
22/07/2026

இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியில் மலேசிய UniSZA பல்கலைக்கழக மாணவியருக்கு வரவேற்பு!

மலேசியாவின் புகழ்பெற்ற அரச பல்கலைக்கழகமான சுல்தான் செய்னுல் ஆப்தீன் பல்கலைக்கழகத்திற்கும் (UniSZA), இலங்கை இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்குமிடையே கையெழுத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு (MoU) அமைவாக, இவ்வாண்டும் மலேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஐந்து மாணவியர் தமது பட்டப்படிப்பின் ஓர் அங்கமான மூன்று மாதகால தொழிற்பயிற்சியை (Industrial Training) மேற்கொள்வதற்காக இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த ஆண்டைப் போன்றே இவ்வாண்டும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் இவ்விரு கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான கல்வி மற்றும் தொழிற்பயிற்சி சார் உறவு மேலும் பலமடைந்துள்ளது.

இம்மாணவியரை வரவேற்கும் சிறப்பு நிகழ்வும், பயிற்சிக்கான அறிமுக மற்றும் வழிகாட்டல் அமர்வும் கடந்த 2026 ஜூலை 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரி நிருவாக அறையில் (Board Room) கல்லூரியின் அதிபர் தலைமையில் இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது, தொழிற்பயிற்சிக் காலத்தில் மாணவியர் பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள், கல்விசார் பொறுப்புகள் மற்றும் உள்ளூர் சமூக-பண்பாட்டு சூழலுக்கு ஏற்ப இணைந்து செயல்படும் வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

மேலும், இக்காலப்பகுதியைத் தம் தனிப்பட்ட திறன் மேம்பாட்டிற்கும் பரஸ்பர அனுபவப் பகிர்விற்கும் சர்வதேச கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்குமான அரியதொரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வருகை தந்துள்ள மாணவியருக்குக் கல்லூரி நிருவாகத்தினால் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

30/06/2026

800 மரக்கன்றுகளுடன் கைகோர்த்த உலக மன்றம்! மாணவிகளின் எதிர்காலத்திற்கான பசுமை முதலீடு!

Address

185, Mannar Road
Puttalam
61300

Telephone

+94322266638

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islahiyyah Ladies College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Islahiyyah Ladies College:

Shortcuts

Share

Category