OBA Pallivasalthurai m.m.v

OBA Pallivasalthurai m.m.v

Share

Officially page

09/04/2026
08/04/2026

Our past 👩‍🎓 kiysdeeen asani

06/04/2026

இது அண்மையில் வெளிவந்த உயர்தர பரிட்சையில் சித்தியடைந்து வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவன் ஒருவனின் வாழ்கை குறிப்பு சிங்கள பதிவு ஒன்றிலிருந்து கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு:

அப்பா இறந்தபோது எனக்கு வயது 5. அப்பாவை மிகவும் அரிதாகவே நினைவில் வைத்திருக்கிறேன். அப்போது நாங்கள் பூகோடாவில் உள்ள அப்பாவின் சொந்த வீட்டில் இருந்தோம். அப்பா இறந்து சில மாதங்களில் அந்த வீட்டைவிட்டு நாங்கள் வெளியேற நேர்ந்தது. பெரியப்பா, அல்லது அப்பாவின் அண்ணன், பெருமழை பெய்த ஒரு நாளில் அம்மாவையும் என்னையும் வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார் எனக்கு நினைவிருக்கிறது... "உன் மூடத்தனத்தால்தான் உன் புருஷன் செத்தான்" என்று அன்று பெரியப்பா அம்மாவின் முகத்தில் துப்பினார். அம்மா பெருமழையில் என்னையும் அழைத்துக்கொண்டு கிரிந்திவெலவில் உள்ள தமையனார் வீட்டிற்கு வந்தார். அது ஒரு சிறிய வீடு. ஒரே ஒரு அறைதான் இருந்தது. ஆனால் அம்மாவின் அக்காவும், அவருடைய கணவரும் எங்களை அங்கே தங்க அனுமதித்தார்கள். பெரியப்பா நில அளவை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக இருந்தார். அம்மா கூலிவேலைக்குச் செல்லத் தொடங்கினார். பெரியம்மா நான் திரும்பும் வரை என்னைப் பார்த்துக்கொண்டார். பெரியப்பா தமது நண்பர் ஒருவரிடம் சொல்லி, கிரிடிவெல கிராமப் பள்ளியில் என்னைச் சேர்த்தார். நான் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அன்று என் அம்மாவின் முகத்தில் இருந்த புன்னகை எனக்கு நினைவிருக்கிறது. அம்மாவைப் போலவே பெரியம்மாவும் பெரியப்பாவும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். அம்மா சொன்னார்: "உன்னால் முடிந்தால், பெரியப்பாவைப் போல அரசு அலுவலகத்தில் வேலை செய்... அதற்குப் படித்துக்கொள், என் மகனே" என்று. புலமைப்பரிசிலிலுக்கு பிறகு , கொழும்பிலுள்ள மிகப்பெரிய பாடசாலையில் என்னைச் சேர்க்க பெரியப்பா முடிவு செய்தார். அவர் அம்மாவிடம் சொன்னார்: "நீ பயப்படாதே... நான் பையனைப் பார்த்துக்கொள்கிறேன்" என்று. அந்தக் கல்லூரிக்கு நான் வந்த முதல் நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. பொம்மைகள் போல் அழகான குழந்தைகள். வெள்ளைக் கொக்குகள் போல். மிக அழகாக உடை அணிந்து, தலைவாரிக் கொண்டு நிறைய குழந்தைகள் பள்ளிக்கு வந்தார்கள். நான் டிவியில் பார்த்த குழந்தைகள் போல் இருந்தார்கள்... ஆரம்பத்தில் பள்ளியில் அயர்வாக உணர்ந்தேன். கிராமப் பள்ளி போல் இல்லை, முற்றிலும் வேறுபட்டது. அப்பாவின் உறவினர்கள் அம்மாவைத் திட்டினார்கள்: "ஏன் கொழும்புப் பள்ளியில் சேர்த்தாய்? பெரிய மனிதர்கள் செய்வதை உன்னால் செய்ய முடியுமா?" என்று. உண்மைதான்... பள்ளியில் இருந்த நிறைய குழந்தைகளுடன் ஒப்பிடும்போது நான் தரையாக, அவர்கள் வானமாக இருந்தார்கள். பெரியப்பா வேலை முடிந்து வீட்டுக்கு வந்து, இரவில் பகுதி நேரமாக வீடுகளுக்கு வண்ணம் பூசச் சென்றார். என் பொருட்டு பணம் சம்பாதிக்க. அவருடைய மகளுக்கு என்னைப் போல் படிக்க முடியவில்லை. அவள் சாதாரண தரத் தேர்விலும் தோல்வியடைந்தாள். ஆனால் பெரியப்பா சொன்னார்: "என் பையா, நன்றாகப் படி. நீ எங்கள் முழு குடும்பத்தையும் காப்பாற்ற முடியும்" என்று. பள்ளி வேனுக்கும், விளையாட்டுப் பொருட்களுக்கும் நிறைய பணம் செலவானது. நான் முடிந்தவரை மிச்சப்படுத்தினேன். சாதாரண தரத் தேர்வு முடிவுகள் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அம்மா ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ஒரு மரம் விழுந்து அம்மா இறந்துவிட்டார்...

எனக்காகத் துன்பப்பட்ட அம்மாவைக் கவனித்துக்கொள்ள முடியாத வலி, என் மூச்சு இருக்கும்வரை இருக்கும்... ஆனால் பெரியம்மாவும் பெரியப்பாவும் எனக்கு அம்மா அப்பாவின் குறையை உணரவிடவில்லை. நான் சாதாரண தரத் தேர்வில் உயர்ந்த தரத்தில் தேர்ச்சி பெற்றேன். முடிவுகள் வந்த நாளில் பரிசாக ஒரு ஸ்டெதஸ்கோப்பை வாங்கி வந்தார் பெரியப்பா... "மகனே, நீ எப்போதாவது ஒரு டாக்டராக வேண்டும்.. நான் உன்னை ஒரு டாக்டராக்கித்தான் பின்னால் பார்ப்பேன்" அந்த வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு அன்பும், நம்பிக்கையும் இருந்தது...

இடையிடையே சந்தித்த அப்பாவின் உறவினர்கள்... "நீ என்ன செய்கிறாய்? ஏதாவது ஒரு வேலைக்கு செல்லலாமே... வெறுமனே இருக்காதே, ஒரு வேலை செய்" என்று குறை சொன்னார்கள். நெஞ்சில் குத்துக் குத்துவது போல் இருந்தன அந்த வார்த்தைகள். நான் எப்படியாவது ஒரு தரவரிசையைப் பெற வேண்டும் என்று நினைத்தேன்... ஆம், நான் அதைச் செய்தேன். முடிவுகள் வந்த அன்றே, பெரியப்பா கொண்டு வந்த ஸ்டெதஸ்கோப்பை அவருடைய மார்பில் வைத்து, "உங்களைப் போல் நல்ல இதயம் எந்த டாக்டருக்கும் கிடைக்காது" என்று சொன்னேன்...

வாழ்க்கை என்பதே ஒரு பெரிய புத்தகம்... சில பக்கங்கள் மிகவும் துன்பமாக இருக்கும். சில பக்கங்கள் புரிந்துகொள்ளவே முடியாது. அப்பாவின் உறவினர்களைப் பற்றிய பக்கங்கள் அப்படி... புரிந்துகொள்ள முடியாது. சில பக்கங்கள் மிகவும் அன்பானவை. பெரியம்மாவின், பெரியப்பாவின், அக்காவின் ஒவ்வொரு பக்கமும் மிகவும் அழகானது... அன்பானது. சிறியதாக இருந்தாலும் அது ஒரு பெரிய அரண்மனை. பெரியம்மா செய்யும் பருப்புக் குழம்பும் சம்பலும் நாக்குக்கு ஒரு மருந்து போல் இருக்கும். அடுத்த பக்கங்களை நான் பெரியம்மாவின், பெரியப்பாவின், அக்காவின் மகிழ்ச்சிக்காக எழுத வேண்டும்... நான் அதையும் செய்வேன்.

Photos from President's Science College's post 04/04/2026
03/04/2026

பட்டப்படிப்பைத் தொடர பல தகுதியுள்ள அரச நிறுவனங்கள் வழிகாட்டுகின்றன.

1.👉👨‍🎓 திறந்த பல்கலைக்கழகம் (OUSL):
இது வேலை செய்துகொண்டே படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இங்கு பொறியியல், சட்டம், கல்வி, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவம் போன்ற துறைகளில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களைப் பெறலாம்.

2. 👉👨‍🎓ஏனைய பல்கலைக்கழகங்கள்:
கொழும்பு, ஸ்ரீ ஜெயவர்தனபுர, களனி, பேராதனை, யாழ்ப்பாண, தென்கிழக்கு மற்றும் கிழக்கு போன்ற பல்கலைக்கழகங்கள் வெளிவாரி பட்டப்படிப்புகளை வழங்குகின்றன.

3. 👉👨‍🎓இலங்கை சட்டக் கல்லூரி
நீதித்துறை மற்றும் சட்டத்துறையில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு இலங்கை சட்டக் கல்லூரி ஒரு கௌரவமான நுழைவாயிலாகும்.

4. 👉👨‍🎓உயர்தேசிய டிப்ளோமா (HND - SLIATE) இலங்கை மேலதிக கற்கைகளுக்கான நிறுவனம் (SLIATE) நாடு முழுவதும் உள்ள தனது உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள் (ATI) ஊடாக 15 HND பாடநெறிகளை வழங்குகிறது.

5. 👉👨‍🎓தொழிநுட்பக் கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் (UNIVOTEC & University Colleges)
UNIVOTEC: உயர்தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வழங்கும் 17 வகையான பட்டப்படிப்புகள் (B.Tech/ B.Ed) மாணவர்களுக்குத் தொழிற்றுறை சார்ந்த நிபுணத்துவத்தை வழங்குகின்றன.

6. 👉👨‍🎓பல்கலைக்கழகக் கல்லூரிகள் (University Colleges): இங்கு NVQ மட்டம் 5 மற்றும் 6 வரையான டிப்ளோமாக்களைப் பெற்று, பின்னர் பட்டப்படிப்பிற்குத் தகுதி பெறலாம்.

7. 👉👨‍🎓இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகம் (Ocean University)
கடல்சார் பொறியியல் (Marine Engineering), மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு (Fisheries and Aquaculture) போன்ற விசேட பட்டப்படிப்புகளை மேற்கொள்ளலாம்.

8.👉👨‍🎓 தேசிய கல்வியியல் கல்லூரிகள்.
ஆசிரியர் பணியை இலக்காகக் கொண்ட மாணவர்களுக்கு சிறந்த வழி.

9. 👉👨‍🎓நிதிச் சுமையின்றி தனியார் உயர்கல்வி (வட்டியற்ற கடன் திட்டம்) Interest-Free Student Loan Scheme (IFSLS)
பொருளாதார வசதி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இலங்கை அரசாங்கம் ஒரு திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

10. 👉👨‍🎓தொழிநுட்பக் கல்லூரிகள் மற்றும் ஏனைய வாய்ப்புகள்
தொழினுட்பக் கல்லூரிகள் (Technical Colleges):

11. சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம்

01/04/2026

Congratulations 🎈

27/03/2026

Congratulations 🎉 M.T.M.THAHEER

21/03/2026

#பள்ளிவாசல்துறையில்
#கண்டது_பிறையா
#பிரமையா*
#எமது #ஊரின் #முதுகல்விமான் #பேராசிரியர். M.S.M. அவர்கள் எமது தலைப்பிறை விவகாரம் பற்றி எழுதியுள்ள கட்டுரை* By Prof.Msm anes
20.03.2026
University of Peradeniya

(தலைப்பிறைப் பிரச்சினைகள்)

பள்ளிவாசல்துறை எனது ஊர். அங்கு
தலைப் பிறை கண்ட செய்தியை
முகநூல் வழியாக அறிந்து கொண்டேன். வெல்லங்கரை இளைஞர்களும் இதில் சம்பந்தம்.

பள்ளிவாசல் துறையில் பிறை காணப்பட்டது என்பதில் எனக்கு
ஒரு நம்பிக்கை இருந்தது.

பிறையைப் பார்த்த இளைஞர்களின்
வாக்கு மூலத்தையும் கேட்டேன்.
பள்ளிவாசல்துறை பள்ளிவாசல்
நிர்வாகம் வெல்லங்கரை பள்ளி வாசல் நிர்வாகத்தையும் இணைத்து
கொழும்பு பிறைக் கமிட்டிக்கு அனுப்பிய உத்தியோக பூர்வமான
கடிதத்தையும் முக நூலில் படித்தேன் .

கவனிக்க வேண்டிய பல விடயங்கள்
அவற்றில் இருந்தன. அது சில இளைஞர்களின் விண்ணப்பம்
மட்டுமல்ல. பள்ளிவாசல் நிர்வாகத்தின் அங்கீகாரமும்
பெறப்பட்டுள்ளது. அந்தக் கடிதம்
தெளிவாக எழுதப்பட்ட ஒரு
சிறிய அறிக்கை.

சனிக் கிழமை பெருநாள் என
பிறைக் கமிட்டி தீர்மானம்
எடுத்துள்ளது . அதை ஏற்றுக்
கொண்டாலும் சில பிரச்சினைகள்
உள்ளன.

பள்ளிவாசல்துறை பல நூற்றாண்டுக்
பழையான ஊர். பள்ளிவாசல்,ஊர் நிர்வாகம் ,பள்ளித்தலைத்துவம் இப்படி அந்த ஊருக்கென சில பண்பாட்டு மரபுகள் உள்ளன.

வெல்லங்கரையும் ஒரு பண்டைய
கிராமம். பள்ளிவாசல் துறைக்கு
அடுத்த கிராமம்.

*பிறை பார்க்கும் விடயம் பள்ளிவாசல்துறைக்குப்
புதியதல்ல . பிறைக் கமிட்டிக்கு
வயது அரை நூற்றாண்டு என்றால்
அந்த மக்களது பிறை பார்க்கும் வரலாறு ஐந்து நூற்றாண்டுகளுக்கும் அதிகம்.*

நாங்கள் சிறுவர்களாக, இளைஞர்களாக ஊரில் இருந்த
காலம் எல்லாம் நோன்பு தலைப்
பிறை, பெருநாள் ( ஷவ்வால்) தலைப்பிறை பார்க்க பள்ளிவாசல்
துறை பழைய பள்ளிக்கு ( இப்போது
இல்லை ) பின்னால் பரந்து கிடந்த
வெண் மணற் பரப்பில் மணற்
திடர்களில் நின்று பிறை பார்ப்பது
வழக்கம். சில பள்ளிப் பிரமுகர்களும்
சில முதியோரும் பிறை பார்க்க
வல்லவர்களும் அங்கு கூடுவார்கள்

எந்த இடத்தில் எந்தக் கோணத்தில்
நின்றால் சரியாக பிறைபார்க்கலாம்
என்பதை பெரியவர்கள் சொல்லிக்
காட்டுவார்கள். ஊரில் இருந்த
காலத்தில் 10 தலைப் பிறைகளையாவது அவர்களின்
வழிகாட்டலில் அதே இடத்தில்
பார்த்துள்ளேன். பிறை பார்க்காது
திரும்பிய அனுபவங்களும் உண்டு

தலைப்பிறையின் காலமும்
அளவும் பசுமரத்தாணிபோல்
நெஞ்சில் பதிவாகி உள்ளது.

ஆனால், எங்களைப் போல் அல்லாது
கிராமத்திலேயே தொடர்ச்சியாக
வாழ்வோரின் பிறை அனுபவம்
எவ்வளவு பெரியது.

கிராமத்தில் பிறையும் நிலவும்
மக்களுடன் கலந்திருக்கும்
சந்தர்ப்பங்கள் அதிகம்.

கடல் வற்றுப் பெருக்கை எங்கள்
மீனவர்கள் பிறையின் வளர்ச்சியை
வைத்துத்தான் கணக்கிடுவார்கள் .

எங்கள் பெண்களின் கலண்டரே
பிறைக் கணக்குத்தான்.

தலைப் பிறையை எப்படிப்பார்ப்பது
அதன் நீள அகலம் என்ன என்று
பள்ளிவாசல்துறை மக்களுக்கு
யாரும் பாடம் எடுக்க வேண்டிய
தில்லை.

ஷவ்வால் பிறை பார்க்க என்றே
ஒரு இடத்தை ஒதுக்கி அழகு
பார்த்த ஊர்.

அங்கிருந்து ஒரு மைல் நடந்தால்
வெல்லங்கரை. பள்ளிவாசல்துறை
பிறைக் காட்சி வெல்லங்கரைக்கும்
உரியதுதான்.

பிறைக் கமிட்டிக்கு இந்த உண்மை
தெரியாதது ஆச்சரியமாக உள்ளது.

இந்த வரலாறு தெரிந்திருந்தால்
அந்த இளைஞர்களின் வாக்குமூலம்
மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்கப்
பட்டிருக்கும். மயிர் பிளக்கும் வாதங்களுக்குள் நுழைந்து
நியாயம் தேடும் தேவை ஏற்பட்டிருக்காது.

கிராம மக்கள் , இளைஞர்கள்
பிறை பார்ப்பதில் காட்டி வரும்
ஆர்வத்தை தகர்ப்பது போன்ற
கருத்துக்களுக்குப் பதிலாக
இதில் உள்ள பிரச்சினைகளை
உணர்ந்து தீர்க்கக் கூடிய வழி
வகைகளைத் தேட வேண்டும்.

பேசுவோம்.

Photos from OBA Pallivasalthurai m.m.v's post 24/12/2025

🎉 வாழ்த்துக்கள் M.T.M. தஹீர்! 🇱🇰🏐
===============================
எமது பள்ளிவாசல்துறை மு.ம.வி. பாடசாலையின் பெருமைமிகு பழைய மாணவர் M.T.M. தஹீர்,
CAVA Cup for Men 2025 போட்டியில் இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணிக்காக விளையாடி
Bronze Medal வென்று பெருமை சேர்த்துள்ளார். 🥉👏

இந்த சாதனையை பாராட்டும் வகையில்,
இன்று எமது பாடசாலைக்கு அழைப்பித்து நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி கௌரவித்தோம். 🎖️

🤲 அவர் எதிர்காலத்திலும் மேலும் வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறோம். 🇱🇰✨

Photos from OBA Pallivasalthurai m.m.v's post 23/10/2025

எமது பாடசாலையின் பழைய மாணவர் m.t.m.thahir தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய அணிக்காக இன்று விளையாடி எமது பாடசாலைக்கு பெருமை ஈட்டி தந்துள்ளார் அவருக்கு எமது பாடசாலை பழைய மாணவர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்

06/10/2025

HAPPY TEACHER’S DAY

01/10/2025

பழைய மாணவர் சங்கத்தின் சிறுவர் தின வாழ்த்து செய்தி..💐

100 வது ஆண்டினை (நூற்றாண்டு விழா) நோக்கிய பாடசாலையின் பயணத்தில், இறை அருளைப்பெற்று அறிவும் ஆற்றலும் சிறந்த மனப்பாங்கும் நிறைந்த மாணவர்களை உருவாக்குவதே நம் பழைய மாணவர்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்

" *நாளைய எதிர்காலத்தின் சிறந்த முதலீடு எம் மாணவ சிறுவர்கள்* "

சர்வதேச சிறுவர் தினத்தினை கொண்டாடும் எம் பாடசாலை சிறுவர்களுக்கு பழைய மாணவர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

-- பழைய மாணவர் சங்கம் --
பள்ளிவாசல் துறை மு.ம.வி

Want your school to be the top-listed School/college in Puttalam?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


School Road, Palliwasalthurai
Puttalam
61354