Rawlathul Athfaal Preschool- Puttalam

Rawlathul Athfaal Preschool- Puttalam We will give lots of fun and motivation ideas In shaa Allah we belong to the paradise

01/09/2026

எழுதுவதற்கு முன்… எழுதத் தயார்படுத்துவோம்!

புதிய முன்பிள்ளைப் பருவக் கல்விக் கலைத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, பிள்ளைகளின் வயது, வளர்ச்சி மற்றும் விருத்தி நிலைக்கு ஏற்ப கற்றல் அனுபவங்களை வழங்குவதாகும். எனவே, முன்பள்ளிக் குழந்தைகள் உடனடியாக எழுத்துகளை எழுத வேண்டும் என ஆசிரியர்களை வலியுறுத்துவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.

முன்பள்ளிப் பருவம் என்பது பிள்ளையின் கையில் பென்சிலைத் திணித்து பக்கங்களை நிரப்பச் செய்யும் காலம் அல்ல; அந்தச் சிறிய கைகளை எழுதுவதற்குத் தயார்படுத்தும் பொன்னான காலம்!

இன்று சில பெற்றோர்கள்,

* “என் பிள்ளை மற்றப் பிள்ளைகளைப் போல எழுத வேண்டும்.”
* “அ, ஆ முதல் அனைத்து எழுத்துக்களையும் எழுதத் தெரிய வேண்டும்.”
* “பயிற்சிப் புத்தகத்தில் நிறைய எழுத வேண்டும்.”

என்று எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உண்மை உள்ளது. எழுதுதல் என்பது திடீரென உருவாகும் திறன் அல்ல; அது படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒரு திறனாகும்.

அதிகப்படியான எழுத்துப் பயிற்சியால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம்?

உடல் ரீதியாக:
நீண்ட நேரம் பென்சிலைப் பிடித்து எழுதச் செய்வது கைகள், விரல்கள் மற்றும் மணிக்கட்டில் சோர்வையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தலாம். நுண்தசைத் திறன்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில், அதிகப்படியான எழுத்துப் பயிற்சி குழந்தைக்குச் சிரமமாக அமையக்கூடும்.

உள ரீதியாக:

“எழுது… சரியாக எழுது… ஏன் இன்னும் முடியவில்லை?” என்ற தொடர்ச்சியான அழுத்தம் குழந்தைகளிடம்,

× பயம்
× பதற்றம்
× தன்னம்பிக்கைக் குறைவு
× தோல்வி உணர்வு
× கற்றலின் மீதான வெறுப்பு

போன்ற உணர்வுகளை உருவாக்கக்கூடும்.

விளையாட்டு நேரம் குறையக்கூடாது!

முன்பிள்ளைப் பருவத்தில் விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. விளையாட்டின் மூலம் குழந்தைகள் மொழித்திறன், சிந்தனைத்திறன், சமூகத் திறன், சுயகட்டுப்பாடு மற்றும் நுண்தசைத் திறன்களை இயல்பாக வளர்த்துக்கொள்கின்றனர்.

“அப்படியானால் எழுதக் கற்றுக்கொடுக்க வேண்டாமா?”

கண்டிப்பாகக் கற்றுக்கொடுக்க வேண்டும்! ஆனால் அழுத்தத்துடன் அல்ல; ஆர்வத்துடனும், குழந்தையின் வளர்ச்சி நிலைக்கு ஏற்பவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

குழந்தை முதலில்,

✓ கோடுகள் வரையட்டும்
✓ படங்கள் வரையட்டும்
✓ வண்ணம் தீட்டட்டும்
✓ புதிர்களைச் சேர்க்கட்டும்
✓ களிமண் பிசையட்டும்
✓ மணிகளை கோர்க்கட்டும்
✓ எழுத்துக்களை விளையாட்டின் மூலம் அறியட்டும்
✓ கதைகள் கேட்கட்டும்
✓ நிறையப் பேசட்டும்
✓ கவனமாகக் கேட்கட்டும்

இத்தகைய செயற்பாடுகள் அனைத்தும் பின்னர் எழுதுவதற்குத் தேவையான கை–கண் ஒருங்கிணைப்பு, விரல் இயக்கம், நுண்தசைத் திறன், மொழித்திறன், சிந்தனைத்திறன் மற்றும் எழுத்தறிவுக்கான அடித்தளத்தை உருவாக்குகின்றன.

பெற்றோர்களே… இதை நினைவில் கொள்ளுங்கள்!

“இன்று என் பிள்ளை எத்தனை பக்கங்கள் எழுதினான்?” என்று கேட்பதைவிட,

• இன்று என் பிள்ளை எவ்வளவு மகிழ்ச்சியாகக் கற்றுக்கொண்டான்?
• என்ன புதிய விடயத்தை அறிந்துகொண்டான்?
• எவ்வளவு நேரம் விளையாடினான்?
• என்ன கதையைச் சொன்னான்?
• என்ன புதிதாக வரைந்தான்?

என்று கேளுங்கள்.

எழுத்தை விரல்களால் மட்டும் கற்றுக்கொள்வதில்லை.
அதை முதலில் கண்கள் பார்க்க வேண்டும்…
காதுகள் கேட்க வேண்டும்…
மனம் புரிந்துகொள்ள வேண்டும்…
வாய் பேச வேண்டும்…
கைகள் செயல்பட வேண்டும்…

அதன் பின்னரே எழுத்து அழகாக மலரும்!

முன்பள்ளிக் குழந்தைக்கு நாம் வழங்க வேண்டியது “எழுதும் அழுத்தம்” அல்ல; “கற்கும் ஆர்வம்” ஆகும்.

பெற்றோர்களே, உங்கள் பிள்ளையின் வேகத்தை மற்றொரு பிள்ளையுடன் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்துவமான வளர்ச்சி வேகமும் கற்றல் பயணமும் உண்டு.

எனவே, “எழுதக் கற்றுக்கொடுக்கிறோமா?” என்பதைவிட, “எழுதுவதற்கான அடித்தளத்தை வயதிற்கும் வளர்ச்சி நிலைக்கும் ஏற்ப வழங்குகிறோமா?” என்பதையே நாம் கவனிக்க வேண்டும்.

ஆய்வுகளும் குழந்தை வளர்ச்சி சார்ந்த அணுகுமுறைகளும், முன்பிள்ளைப் பருவத்தில் எழுதும் திறன் படிப்படியாக உருவாகும் ஒன்றாகும் என்பதை வலியுறுத்துகின்றன. விளையாட்டு, நுண்தசைச் செயற்பாடுகள், பேச்சு, வாசிப்பு மற்றும் அர்த்தமுள்ள கற்றல் அனுபவங்களே அதற்கான வலுவான அடித்தளமாக அமைகின்றன.

எதிர்காலத்தில் கற்றலை விரும்பும், தன்னம்பிக்கையுள்ள ஒரு குழந்தையை உருவாக்க ஆசிரியர்களுக்கு பக்கத்துணையாக இருங்கள்!

விளையாடட்டும்… பேசட்டும்… வரையட்டும்… ஆராயட்டும்… எழுதட்டும்!

ஆனால் அனைத்தும் அன்புடன்… அழுத்தமின்றி!

இன்றைய மகிழ்ச்சியான குழந்தையே, நாளைய தன்னம்பிக்கையான கற்றலாளி!

உசாத்துணைகள்:

* தேசிய முன்பிள்ளைப் பருவக் கல்விக் கலைத்திட்டம்
* குழந்தை மையக் கல்வி
* குழந்தை உளவியல்
* குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பொறுப்பு.

ஆசிரிய ஆலோசகர் அருணாகரன்

நன்றி sir
Arunakaran Ve

எமது முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி – 2026 நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, எமது சிறார்களை உற்சாகப்பட...
31/08/2026

எமது முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி – 2026 நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, எமது சிறார்களை உற்சாகப்படுத்திய கௌரவ மேயர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🌷

சிறார்களின் திறமைகள், தன்னம்பிக்கை மற்றும் ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் இத்தகைய நிகழ்வுகளுக்கு தாங்கள் வழங்கும் அன்பும் ஆதரவும் எமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. ❤️

🤲 அல்லாஹ் தங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், வெற்றியையும் வழங்கி, சமூகத்திற்கான தங்களது சேவைகளை சிறப்பாகத் தொடர அருள் புரிவானாக.

📌டிஸ்லெக்சியா (Dyslexia) 🪄பெற்றோர்களும் ஆசிரியர்களும் அறிந்திருக்க வேண்டியவைடிஸ்லெக்சியா என்பது இன்று பல குழந்தைகளிடம் க...
04/08/2026

📌டிஸ்லெக்சியா (Dyslexia)

🪄பெற்றோர்களும் ஆசிரியர்களும் அறிந்திருக்க வேண்டியவை

டிஸ்லெக்சியா என்பது இன்று பல குழந்தைகளிடம் காணப்படும் ஒரு கற்றல் குறைபாடு ஆகும். இது புத்திசாலித்தனத்தின் குறைபாடு அல்ல. நன்றாகப் பேசவும் சிந்திக்கவும் தெரிந்த குழந்தைகளுக்குக் கூட, வாசிப்பதிலும் எழுதுவதிலும் சிரமம் ஏற்படலாம். உதாரணமாக, எழுத்துகளை முன்னும் பின்னுமாக மாற்றி எழுதுதல், சில எழுத்துகளை விட்டுவிடுதல், ஒத்த ஒலியுடைய சொற்களை குழப்புதல் போன்றவை டிஸ்லெக்சியாவின் அறிகுறிகளாக இருக்கலாம்.

டிஸ்லெக்சியா என்றால் என்ன?

டிஸ்லெக்சியா என்பது மொழியை வாசித்து, புரிந்துகொண்டு, சரியாக எழுதுவதில் ஏற்படும் ஒரு நரம்பியல் (Neurological) அடிப்படையிலான கற்றல் குறைபாடு ஆகும். இது பிறவியிலேயே இருக்கக்கூடிய ஒரு நிலை. குழந்தையின் பார்வையோ அல்லது புத்திக்கூர்மையோ குறைவாக இருப்பதால் இது ஏற்படுவதில்லை.

காரணங்கள்

டிஸ்லெக்சியா ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. இருப்பினும், மரபணு மற்றும் மூளையின் மொழிச் செயலாக்கத்தில் ஏற்படும் வேறுபாடுகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆரம்ப அறிகுறிகள்

குழந்தைகளிடம் பின்வரும் அறிகுறிகள் காணப்படலாம்:

- எழுத்துகள் மற்றும் சொற்களை அடிக்கடி குழப்புதல்.
- வாசிப்பதிலும் எழுதுவதிலும் வயதிற்கேற்ற முன்னேற்றம் இல்லாமை.
- அதிக எழுத்துப் பிழைகளுடன் எழுதுதல்.
- எழுத்துகளை மாற்றி அல்லது விட்டுவிட்டு எழுதுதல்.
- தாய்மொழி மற்றும் கணிதத்தின் அடிப்படைத் திறன்களைப் பெற சிரமப்படுதல்.
- வகுப்பில் கவனம் சிதறுவது போல் தோன்றுதல்.

இந்த அறிகுறிகள் மட்டும் இருந்தால் டிஸ்லெக்சியா என்று உறுதியாகக் கூற முடியாது. முதலில் குழந்தையின் பார்வை மற்றும் கேட்கும் திறன் பரிசோதிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் தேவையெனில் குழந்தை நரம்பியல் நிபுணர், குழந்தை மருத்துவர், உளவியல் நிபுணர் அல்லது பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

என்ன செய்யலாம்?

அரச மற்றும் தனியார் மருத்துவமனைகள், குழந்தை வளர்ச்சி நிலையங்கள் மற்றும் சில சிறப்புக் கல்வி மையங்களில் டிஸ்லெக்சியா தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. குழந்தைக்கு இந்தக் குறைபாடு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால், ஆரம்பத்திலேயே தகுந்த நிபுணர்களை அணுகுவது மிகவும் முக்கியம்.

டிஸ்லெக்சியாவை சமாளிப்பது எப்படி?

டிஸ்லெக்சியாவை முழுமையாக குணப்படுத்தும் மருந்து இல்லை. ஆனால், சிறப்புக் கல்வி முறைகள், தனிப்பட்ட பயிற்சிகள் மற்றும் ஆசிரியர்–பெற்றோர் ஒத்துழைப்பு மூலம் குழந்தையின் கற்றல் திறனை கணிசமாக மேம்படுத்த முடியும்.

குழந்தைகளுக்கு:

- படங்கள், விளக்க அட்டைகள் மற்றும் செய்முறை கற்றல் முறைகளைப் பயன்படுத்தலாம்.
- சிறிய படிநிலைகளில் கற்பிக்கலாம்.
- தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
- அவர்களின் பலங்களை அடையாளம் கண்டு வளர்க்க வேண்டும்.

பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்

டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகள் புத்திசாலித்தனமற்றவர்கள் அல்ல. அவர்கள் கற்றுக்கொள்ளும் முறை மட்டுமே மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது. சரியான வழிகாட்டலும், பொறுமையும், ஊக்கமும் கிடைத்தால் அவர்கள் கல்வி, கலை, தொழில்நுட்பம், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்க முடியும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் கற்கும் திறன் உண்டு. அவர்களுக்கு தேவையானது குற்றம் சாட்டுவது அல்ல; புரிதல், பொறுமை, அரவணைப்பு மற்றும் சரியான வழிகாட்டுதலே.

நன்றி : https://www.dinakaran.com/health/lets-conquer-dyslexia/

✨🎉
01/10/2025

✨🎉

18/09/2025

Kid's Night Camp
17.09.2025

Alhamdulillah 🌟🌟🌟🎊Our preschool’s Night Camp was successfully conducted.We extend our heartfelt thanks to all the studen...
18/09/2025

Alhamdulillah 🌟🌟🌟🎊
Our preschool’s Night Camp was successfully conducted.
We extend our heartfelt thanks to all the students, teachers, parents, and parents committee members for their full support.
17.09.2025

Sports FiestaAugust 16, 2025
15/09/2025

Sports Fiesta
August 16, 2025

Address

11, Spill Road
Puttalam
61300

Opening Hours

Monday 08:00 - 12:00
Tuesday 08:00 - 12:00
Wednesday 08:00 - 12:00
Thursday 08:00 - 12:00
Friday 08:00 - 11:30

Telephone

+94772884245

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rawlathul Athfaal Preschool- Puttalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rawlathul Athfaal Preschool- Puttalam:

Shortcuts

Share

Category