Past Pupils’ Association-PT/ Erukkalampiddy MMV

Past Pupils’ Association-PT/ Erukkalampiddy MMV 𝗧𝗵𝗶𝘀 𝗜𝘀 𝗢𝗳𝗳𝗶𝗰𝗶𝗮𝗹 𝗣𝗮𝗴𝗲 𝗠𝗮𝗻𝗮𝗴𝗲𝗱 𝗕𝘆 𝗧𝗵𝗲 𝗣𝗣𝗔 𝗢𝗳 𝗣𝗧/𝗘𝗠𝗠𝗩 𝗡𝗮𝗴𝗮𝘃𝗶𝗹𝗹𝘂

04/10/2026

ALL ISLAND SCHOOL FOOTBALL TOURNAMENT

Under-18

P/Emmv 🆚️ Zahira College Colombo

🏟Jaffna Central College

Congratulations… Congratulations Jusli Shaaqir[174]🌟 சாதனைப் புதல்வனுக்கு பழைய மாணவர் சங்க சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்க...
06/09/2026

Congratulations… Congratulations
Jusli Shaaqir[174]

🌟 சாதனைப் புதல்வனுக்கு பழைய மாணவர் சங்க சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌟

எமது பு/எருக்கலம்பிட்டி பாடசாலையின் பெருமையை மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலை நாட்டியுள்ள அன்பு மாணவன் 𝐌𝐨𝐡𝐚𝐦𝐞𝐝 𝐉𝐮𝐬𝐥𝐢 𝐌𝐨𝐡𝐚𝐦𝐞𝐝 𝐒𝐡𝐚𝐚𝐪𝐢𝐫
(174) அவர்களுக்கு எமது உளம் கனிந்த வாழ்த்துக்கள்! 💐

🏆 பெற்ற சிறப்பிடங்கள்:

மாவட்ட மட்டம்: இரண்டாம் இடம் 🥈

மாகாண மட்டம்: மூன்றாம் இடம் 🥉

எமது கிராமத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்த இந்த மாணவனின் எதிர்காலம் மேலும் மிளிரவும், இன்னும் பல சாதனைகளைப் படைக்கவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்! 🙌

2026 ஆம் (G.C.E. Advanced Level Examination) பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!இந்த முக்கியமான மைல்கல...
09/08/2026

2026 ஆம் (G.C.E. Advanced Level Examination) பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!

இந்த முக்கியமான மைல்கல், பல ஆண்டுகளாக நீங்கள் செய்த கடின உழைப்பு, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும்.

ஒவ்வொரு தேர்வையும் அமைதியான நம்பிக்கை, கூர்மையான கவனம் மற்றும் உறுதியுடன் அணுகுங்கள்.,


𝐖𝐢𝐬𝐡𝐢𝐧𝐠 𝐛𝐞𝐬𝐭 𝐨𝐟 𝐥𝐮𝐜𝐤 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞  Scholarship 𝐞𝐱𝐚𝐦𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝟐𝟎𝟐6நாளை புலமைப் பரீட்சைக்கு தோற்றும் எமது  மாணவச் செல்வங்கள் உட்ப...
08/08/2026

𝐖𝐢𝐬𝐡𝐢𝐧𝐠 𝐛𝐞𝐬𝐭 𝐨𝐟 𝐥𝐮𝐜𝐤 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 Scholarship 𝐞𝐱𝐚𝐦𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝟐𝟎𝟐6

நாளை புலமைப் பரீட்சைக்கு தோற்றும் எமது மாணவச் செல்வங்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் பழைய மாணவர் சங்கம் சார்பாக எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு,

உங்கள் அனைவரினதும் இலட்சியங்கள் நிறைவேறவும் உமது பெற்றோர்களது
எதிர்பார்ப்புக்கள் வெற்றியடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.,


#வாழ்த்துக்களும்,
#பிரார்த்தனைகளும்

சிதம்பரா கணிதப் போட்டியில் வெற்றி பெற்றபு/எருக்கலம்பிட்டி பாடசாலையின் மாணவர்களுக்கு கௌரவிப்பு!சிதம்பரா கணிதப் போட்டியில்...
27/07/2026

சிதம்பரா கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற
பு/எருக்கலம்பிட்டி பாடசாலையின் மாணவர்களுக்கு கௌரவிப்பு!

சிதம்பரா கணிதப் போட்டியில் வெற்றி பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு,

இன்று எமது பு/எருக்கலம்பிட்டி பாடசாலையில் காலைக் கூட்டத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கணிதத் துறையில் தமது திறமைகளை வெளிப்படுத்தி அகில இலங்கை ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் சாதித்துக்காட்டிய இம் மாணவர்களின் சாதனையைப் போற்றும் வகையில்,
இன்றைய தினம் பாடசாலையில் விசேட கௌரவிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் முக்கிய அம்சமாக, வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சிறப்புமிக்க பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, அதிபர் உட்பட ஆசிரியர்களின் பாராட்டுக்களும் நல்வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டு ,

மாணவ செல்வங்களுக்கு பழைய மாணவர் சங்கம் சார்பாக 𝐏𝐏𝐀 [𝟐𝟎𝟐𝟒/𝟐𝟕] வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்

கல்வியில் மட்டுமின்றி இணைப்பாடவிதான நடவடிக்கைகளிலும் எமது பாடசாலை மாணவர்கள் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.




▫️மீண்டும் மாகாண மட்டத்தில் எருக்கலம்பிட்டி- நாகவில்லு கிராமத்திற்குப் பெருமை சேர்த்த வீரர்கள்,புத்தளம் எருக்கலம்பிட்டி ...
12/07/2026

▫️மீண்டும் மாகாண மட்டத்தில் எருக்கலம்பிட்டி- நாகவில்லு கிராமத்திற்குப் பெருமை சேர்த்த வீரர்கள்,

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம், வடமேல் மாகாணத்தில் தொடர்ச்சியாக 3வது தடவையாகவும் அகில இலங்கை ரீதியான பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டள்ளது,

புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் புதன்கிழமை (07) மாலை நடைபெற்ற மாகாண மட்டத்திலான இறுதிப்போட்டியில்,

▫️ பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்டோருக்கான உதைப்பந்தாட்டப்
இறுதிப்போட்டியில், புத்தளம் கடையாமொட்டை முஸ்லிம் மகா வித்தியாலத்தை எதிர்த்து போட்டியிட்டு 02:00 கோல் கணக்கில் [𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒] சாம்பியன் பட்டத்தை பெற்றனர்,

▫️ பாடசாலைகளுக்கிடையிலான 18 வயதிற்குட்பட்டோருக்கான உதைப்பந்தாட்டப்
இறுதிப்போட்டியில்,
புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் முஸ்லிம் மகா வித்தியாலத்தை எதிர்த்து போட்டியிட்டு 03 : 00 என்ற கோல் கணக்கில் 2ம் இடத்தை [𝟏𝐒𝐓 𝐑𝐔𝐍𝐍𝐄𝐑𝐒-𝐔𝐏] பெற்றனர்,

▫️இந்த வெற்றிக்கு வழிகாட்டிய பயிற்றுவிப்பாளர்கள், ஆதரவு வழங்கிய அதிபர்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கம், பெற்றோர்,மற்றும் நலன்விரும்பிகள், அனைவருக்கும் பழைய மாணவர் சங்கம் சார்பாக 𝐏𝐏𝐀 [𝟐𝟎𝟐𝟒/𝟐𝟕] வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்

மீண்டும் ஒரு முறை—உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்,


🎓 நமது சிறந்த O/L சாதனையாளர்களுக்கு வாழ்த்துகள்! 🎉2025(2026) G.C.E. O/L தேர்வில் புத்தள எருக்கலம்பிட்டி மாணவர்கள் பெற்ற ...
22/06/2026

🎓 நமது சிறந்த O/L சாதனையாளர்களுக்கு வாழ்த்துகள்! 🎉

2025(2026) G.C.E. O/L தேர்வில் புத்தள எருக்கலம்பிட்டி மாணவர்கள் பெற்ற வெற்றியை நாங்கள் பெருமையுடன் கொண்டாடுகிறோம். உங்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் உண்மையாகவே பயனளித்துள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றி 2 மாணவர்கள் 9A சித்திகளும்,

ஏனைய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகள பெற்று பாடசாலையிற்கு பெருமை சேர்த்தமைக்கு அனைத்து மாணவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

📊 மொத்த மாணவர்கள் : 79

📈 தகுதி வீதம் : 72.6%

மேற்படி மாணவர்களின் வெற்றிக்கு அயராது உழைத்த பாட ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம், பெற்றோர்கள் மற்றும் பாடசாலையின் நலன்விரும்பிகள் என சகலருக்கும் பாடசாலை பழைய மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் மேலும் தெரிவித்து கொள்கிறோம் .

/ l

அகில இலங்கை சமூக விஞ்ஞானப் போட்டி – 2025.இப்போட்டியில் தேசிய மட்டத்தில் முதல் பத்து இடங்களில் 3 இடங்களை எமது பு/ எருக்கல...
10/04/2026

அகில இலங்கை சமூக விஞ்ஞானப் போட்டி – 2025.

இப்போட்டியில் தேசிய மட்டத்தில் முதல் பத்து இடங்களில் 3 இடங்களை எமது
பு/ எருக்கலம்பிட்டி பாடசாலை மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்!

🏅𝐌.𝐀.𝐀𝐛𝐝𝐮𝐥 𝐔𝐦𝐚𝐫(𝟑𝐫𝐝) ,
🏅𝐌.𝐊.𝐌.𝐒𝐡𝐚𝐲𝐚𝐚𝐧(𝟓𝐭𝐡),
🏅𝐌.𝐈.𝐑𝐚𝐡𝐢𝐥(𝟕𝐭𝐡)

தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு கல்லூரியில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

கல்லூரியின் கௌரவ பிரதி அதிபர்
𝐒𝐇𝐌𝐌.𝐒𝐔𝐋𝐅𝐈 அவர்களின் தலைமையில்,
கல்லூரியின் பிரதான காலைக்கூட்டத்தில் உற்சாகமான வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக, பதக்கம் மற்றும்
பெறுமதிமிக்க பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அனைவருக்கும் பழைய மாணவர் சங்க சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

🇱🇰 எம் தாய்நாட்டின் 78-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.எமது தாய்நாடாம் ...
04/02/2026

🇱🇰 எம் தாய்நாட்டின் 78-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

எமது தாய்நாடாம் இலங்கை திருநாடு தனது 78-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த இனிய வேளையில்,

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் (PPA) அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் நாட்டு மக்களுக்கும் தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.🇱🇰🇱🇰🇱🇰



தேசிய மட்டத்திலும் எருக்கலம்பிட்டி வீரர்கள்‼️▫️தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று, எருக்கலம்பிட்டி- நாகவில்லு கிர...
01/02/2026

தேசிய மட்டத்திலும் எருக்கலம்பிட்டி வீரர்கள்‼️

▫️தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று, எருக்கலம்பிட்டி- நாகவில்லு கிராமத்திற்குப் பெருமை சேர்த்த வீரர்கள்,

▫️தேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையிலான 18 வயதிற்குட்பட்டோருக்கான உதைப்பந்தாட்டப்
இறுதிப்போட்டியில், புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய மற்றும் கிண்ணியா அல்-அமீன் பாடசாலை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

▫️இந்த போட்டியில் கிண்ணியா அல்-அமீன் பாடசாலை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.,

▫️இந்த 2ம் இட வெற்றி, எருக்கலம்பிட்டி நாகவில்லு உதைப்பந்தாட்ட வரலாற்றில் இன்னொரு பெருமைமிக்க அத்தியாயமாகும்.

▫️இந்த வெற்றிக்கு வழிகாட்டிய பயிற்றுவிப்பாளர்கள், ஆதரவு வழங்கிய அதிபர்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கம், பெற்றோர்,மற்றும் நலன்விரும்பிகள், அனைவருக்கும் பழைய மாணவர் சங்கம் சார்பாக 𝐏𝐏𝐀 [𝟐𝟎𝟐𝟒/𝟐𝟕] வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்

மீண்டும் ஒரு முறை—உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

Address

Nagavillu, Palavi
Puttalam
61300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Past Pupils’ Association-PT/ Erukkalampiddy MMV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category