04/11/2025
காணாமல் போகும் கணிதக் குரல்
வேப்பமடு பாடசாலையில் நீண்ட நாள்கள் கணித பாடம் கற்பித்து வந்த ஆசிரியர் S.A.C.M.பசீர் தனது 60 வது வயதில் 35 வருட சேவைக் காலத்தை நிறைவு செய்து விட்டு இன்றுடன் (4/11/2025) ஓய்வு பெற்றுச் செல்கிறார்.
1990 ம் ஆண்டு மன்/மறிச்சுக்கட்டி அ.மு.க.பாடசாலையில் ஆசிரியர் தொழிலில் காலடி எடுத்து வைத்த இவர் இடம்பெயர்வுக்குப் பின்னர் பு/கரைத்தீவு மு.ம.வித்தியாலயத்திலும் பின்னர் பு/மதவாக்குளம் மு.ம.வித்தியாலயத்திலும் கற்பித்து வந்ததோடு 1997ம் ஆண்டு வேப்பமடு பாடசாலை ஆரம்பித்தபோது அப்பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்து,பாடசாலையின் கணித வளர்ச்சியில் மாத்திரமல்லாமல் முழு பாடசாலை வளர்ச்சிக்கும் பங்காற்றினார்.பின்னர் 2011 ம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டுவரை புத்தளம் பாத்திமா கல்லூரியில் சேவையாற்றிய பின்னர் மீண்டும்
பு/வேப்பமடு மு.ம வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று வந்து இன்றுவரை அந்தப் பாடசாலையில் சிறப்பாக சேவையாற்றி விட்டு கட்டாய ஓய்வில் செல்கிறார்.
சுமார் 27 வருடங்கள் கணித பாடத்தின் குறையை அறியாத வேப்பமடு மு.ம.வித்தியாலயம் நாளை பிறக்கும் நாளில் குறித்த பாடசாலை கணிதத்தின் குறையை அறியத் தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆசிரியர் தொழிலில் இருந்தோமா? போனோமா?என்ற மனநிலைக்கு அப்பால் தனது 50 வயதைத் தாண்டியும் குரலில் கம்பீரமும் அங்க அசைவுகளில் சற்றே குறைவும் அல்லாமல் கற்பித்தலில் ஈடுபடுவது என்பது இலகுவான விடயமல்ல.அவ்வாறு ஒரு நல்ல வரலாற்றை நிறைவு செய்து கொண்ட ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் S.A.C.M.பசீர் அவர்கள் சிறந்த தேகாரோக்கியத்துடன் வாழ எல்லோரும் பிரார்த்திப்போம்