01/10/2025
P /Zainab Muslim Girls Primary School ...
Grade 05 - 2024 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களையும் , கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் விழா.
மேற்படி விழா கடந்த 2025.09.24 புதன் கிழமை புத்தளம் IBM - மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இவ்விழாவிற்கு புத்தள மாநகரசபை முதல்வர் கௌரவ Eng. Rinshad Ahamed பிரதம அதிதியாகவும்,
கௌரவ அதிதிகளாக Mr.M.Y.M.Rizvi ( உரிமையாளர் Razana Ceramic)
Mr.A.A.Hafeel . ( ISA - Primary- Zonal Education office Puttalam)கலந்து சிறப்பித்ததோடு,
விசேட அதிதியாக Mr.A.M.Mihlar* ( Country Director of - Muslim Hands) கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மற்றும் ஆசிரியர்கள் , SDEC - செயலாளர் Mr.M.J.M.Naleem உட்பட SDEC உறுப்பினர்கள், இவ்விழாவுக்கான நன்கொடையாளர்கள் , பெற்றோர்கள்,நலன் விரும்பிகள், பாடசாலை Road Safety Group Members, அயற்பாடசாலை அதிபர்கள், Former - SDEC Members ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து (210) மாணவர்கட்கும் ,
சான்றிதழ்களும், பரிசில்களும், நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
அத்துடன் விசேடமாக
கற்பித்த ஆசிரியர்களுக்கும் பரிசில்களும்,நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது என்பது விசேட அம்சமாகும்.,
மேலும், முதலாம் இடம் பெற்ற மாணவி H.Fathima Haziqah (161 ) விற்கு மடிக்கணணி Laptop ஒன்றை Mr.M.Y.M.Rizvi - Razana Ceramic உரிமையாளரினால் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது என்பது விசேட அம்சமாகும்.
மேலும் மேற்படி விழாவினை சிறப்பாக நடாத்தி முடிக்க அயராது உழைத்த பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், மற்றும் இப்பரிசளிப்பு விழாவிற்காக அமைக்கப்பட்ட விசேட ஆசிரியர் குழுக்கள் , "பரிசளிப்பு விழா - பெற்றோர் குழு" SDEC உறுப்பினர்கள்,
சிற்றூழியர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பான மனமார்ந்த நன்றிகள்,
மற்றும் இவ்விழாவினை சிறப்பாக நடாத்தி முடிக்க தேவையான அனைத்து உதவிகளையும் விசேடமாக செய்து தந்த
" பரிசளிப்பு விழா பெற்றோர் குழு வினருக்கும் "
அதிபர் என்ற வகையில் பாடசாலை சமூகம் சார்பாக விசேட நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
மற்றும் பாடசாலை வாத்திய குழுவினர் சிறப்பாக இயங்க அது தொடர்பான ஏற்பாடுகளையும்,
மாணவிகளுக்கான பயிற்சிகளையும் வழங்கிய பொறுப்பாசிரியை
Mrs. Risna , Ms .Shehara ஆகிய இரு ஆசிரியைகளுக்கும் நன்றிகள்.
மேலும் விழா சிறப்பாக நடைபெற உதவிய அத்தனை ஆசிரியர்களுக்கும், நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும் .
Alhamthulillah...
( அதிபர்)
2025.09.25