Ulukkappallam MMV Development

Ulukkappallam MMV Development This for Ulukkallappallam Development

27/03/2024
22/02/2024
09/06/2023

பரீட்சையை நிறைவு செய்த ம.மா.வ. ஹைபொரஸட் தமிழ் வித்தியாலய மாணவர்கள் தாம் பரீட்சையின் போது பயன்படுத்திய அருணோதய இந்து கல்லூரியின் பரீட்சை மண்டபம், சுற்றுச்சூழல் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்து விட்டு, தமக்கு கடமையாற்றிய ஆசிரியர்களுக்கும் நன்றி செலுத்தி விட்டு சென்றனர்.

09/06/2023
26/05/2023

பு/உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மகாவித்தியாலய ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் சிறந்த முன்னுதாரணம் - வருடாந்த பரிசளிப்பு வைப்பவம் 2023

சாதாரணமாக எல்லா பாடசாலைகளிலும் ஆசிரியர் நலன்புரி அமைப்புகள் ஆசிரியர்களது நலன்புரிகள் மற்றும் அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் நோக்கோடு அமைக்கப்பட்டு வருகின்றது. என்றாலும் எமது பு/உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர் நலன்புரி சங்கம் சற்று வித்தியாசமாக ஆசிரியர் நலன்புரிக்கும் மேலதிகமாக மாணவர்களது நலன்புரிகளையும் கருத்தில் கொள்ளக்கூடிய நல்ல சில செயல்திட்டங்களை செய்து வருவது பாராட்டத்தக்கது.

2022 ஆம் கல்வி ஆண்டுக்கான இறுதிப் பரீட்சையில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களையும், பொது பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் வருடாந்த பரிசளிப்பு விழாவானது முழுமையாக ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் நிதி அனுசரணையிலும் ஏற்பாட்டிலும் இடம்பெற்றது ஒரு சிறந்த முன்னுதாரணம் ஆகும்.

இதன் போது மாணவர்கள் தங்களது பெற்றோருடன் மேடைக்கு அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டதோடு அவர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டது. இது குறித்த மாணவர்களுக்கு பாராட்டாக அமைவதோடு, ஏனைய மாணவர்களுக்கு ஊக்குவிப்பாகவும் காணப்படுகிறது.

இந்நிகழ்வானது இன்றைய தினம் (26.05.2023) பு/உளுக்காப்பள்ளம் மு.ம.வித்தியாலயத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் சிறப்பு அதிதியாக அல் அக்ஸா தேசியப் பாடசாலை அதிபர் முஸ்தபா அன்சார் அவர்களும், விசேட அதிதிகளாக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் உறுப்பினர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

ஆசிரியர்கள் தங்களது நலன்களுக்கு மேலதிகமாக மாணவர்களது நலன்களை கருத்திற் கொண்டு இது போன்ற மேலதிக செயற்திட்டங்களை செய்கின்ற அதேவேளை, பெற்றோரும் மாணவர்களது நலன்களுக்கு மேலதிகமாக ஆசிரியர்களது நலன்களையும் கருத்தில் கொண்டு பரஸ்பர ஒற்றுமையுடனும், ஒத்துழைப்புடனும் செயற்படும்போது ஒரு சிறந்த பாடசாலையை கட்டி எழுப்ப முடியும்.

அந்த வகையில் முன்னுதாரணமாக திகழும் பு/உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மகாவித்தியாலய ஆசிரியர் நலன்புரி சங்கத்தினருக்கும், அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


www.facebook.com/ukmedia1996

கற்றல் கற்பித்தலை புறக்கணிக்கும் ஆசிரியர்களின் நடத்தைப் பாங்கு- ஆய்வு ரீதியானது.ந.சந்திரகுமார் SLPSமுன்னாள் கணித/ விஞ்ஞா...
17/05/2023

கற்றல் கற்பித்தலை புறக்கணிக்கும் ஆசிரியர்களின் நடத்தைப் பாங்கு- ஆய்வு ரீதியானது.
ந.சந்திரகுமார் SLPS
முன்னாள் கணித/ விஞ்ஞான ஆசிரியர்

இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 22-27% ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலைப் புறக்கணிப்பதாக அமரசிங்க,(2020),ஜாபீர்,(2021) எனும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கற்றல் கற்பித்தலை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் பின்வரும் நடத்தைப் பாங்குகளைக் கொண்டிருப்பார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

*நேரசூசிக்கு அமைய வகுப்பறைக்குச் செல்லாமல், ஆசிரியர் ஓய்வறை மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் அதிகளவு நேரத்தைச் செலவிடுவார்கள்.

*பாடசாலை நிர்வாகத்தை எப்போதும் குறைகூறிக் கொண்டு இருப்பார்கள்.

*பதிற் கடமையை புறக்கணிப்பதோடு,பதிற் கடமை ஒழுங்கை மேற்கொள்ளும் நபர்களுடன் முரண்படுவதோடு,போலி முகநூலில் விமர்சனம் செய்வார்கள்.

*பாடசாலை நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் ஆசிரியர்களைப் பற்றி அவதூறாக விமர்சனம் செய்வார்கள்.

*பாடம் நடைபெறாத மற்றும் இணைப் பாடவிதானச் செயற்பாடுகள் நடைபெறும் நாட்களில் பாடசாலைக்கு வருகை தருவார்கள்.ஆனால் பாடம் நடைபெறும் நாட்களில் அதிகளவு விடுமுறையை பெறுவார்கள்.

*Active lesson Plan , வருடாந்த வேலைத்திட்டம், கணிப்பீட்டுக் கருவிகள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் எதுவுமின்றி ஏனோதானோ என்று கற்பித்தலில் ஈடுபடுவார்கள்.

*பாடசாலை நிர்வாகத்திற்கு எதிரான முறைசாராக் குழுக்கள் மற்றும் பாடசாலைக்கு வெளியே உள்ள குழுக்களுடன் இணைந்து பாடசாலை நிர்வாகத்தை குழப்புவார்கள்.

*ஏதாவதொரு தொழிற் சங்கத்துடன் இணைந்திருந்து,சும்மா இருந்து சம்பளத்தை பெறுவதோடு, தனது தொழிலை பாதுகாக்க தொழிற்சங்கப் பதவியை பயன்படுத்துவார்கள்.

இவர்களது Fixed Mindset ஆனது,தற்கால கல்வி முறைமைக்கு ஏற்ப Flexible Mindset ஆக மாற்றம் அடையாத வரை மாணவர்களுக்கு விளைதிறன்மிக்க கல்வி கிடைப்பது கேள்விக்குறியே!

கற்றல் கற்பித்தலை புறக்கணிக்கும் ஆசிரியர்களை முகாமைத்துவம் செய்ய பின்வரும் உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும் என விதந்துரை செய்துள்ளனர்.

*இவர்களுக்கு பாடசாலை நிர்வாகத்தில் முக்கிய பதவிகளை வழங்க வேண்டும்.

*இவர்களது ஆலோசனைகளையும் மற்றும் விருப்பங்களையும் பாடசாலை நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

*SBTPD நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் Flexible Mindset ஐ விருத்தி செய்ய வேண்டும்.

*உள்ளக மேற்பார்வையை வலுவூட்டி, கற்றல் கற்பித்தல் தொடர்பான அந்தரங்க அறிக்கை மற்றும் மேற்பார்வை அறிக்கை போன்ற வற்றை பாதுகாக்க வேண்டும்.

*அதிபரால் வழங்கப்படும் கடமைகளை நிறைவேற்ற தவறும் போது,சம்பள உயர்வை இடை நிறுத்த வேண்டும்.(குறித்த ஆசிரியர் அதிபரால் வழங்கப்பட்ட கடமைகளை செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை பேண வேண்டும்.)

*வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல முயற்சி செய்தால், குறித்த ஆசிரியரை விடுவிக்க வேண்டும்.

Address

Husainiyapuram, Palavi
Puttalam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ulukkappallam MMV Development posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share