P/ Vettalai Assenkudhoos Muslim Vidhyalayam -PPA

P/ Vettalai Assenkudhoos Muslim Vidhyalayam -PPA

Share

producing intellectuals to the society since 1972...

Photos from P/ Vettalai Assenkudhoos Muslim Vidhyalayam -PPA's post 14/10/2024

#2024 All Island U 16 Champion Assenkudhoos...
#இன்று(2024.10.14) அநுராதபுரத்தில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதுபிரிவில் யாழ்ப்பாணம் வயாவிலன் ம.கல்லூரியை 2 : 1 கோல் கணக்கில் வெற்றியீட்டி 2024 அகில இலங்கை செம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது அல்ஹம்துலில்லாஹ்.. உதவி புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் ஜசாக்கல்லாஹைரன்..

Photos from P/ Vettalai Assenkudhoos Muslim Vidhyalayam -PPA's post 31/08/2023

#எமது பாடசாலை வரலாற்றுச்சாதனை #இன்று நடைபெற்ற வடமேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதின் கீழ் காற்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் எமது பு/வெட்டாளை அசன்குத்தூஸ் மு.வித்தியாலம் மூன்றாம் இடத்தை பெற்று அகில இலங்கைரீதியான போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.. இதற்காக அயராது உழைத்த அதிபர் AJM.இல்ஹாம்,ஆசிரியர் SRMM.ஆசாத்,விளையாட்டு பயிற்றுவிப்பாளர் HN.அம்லக் மொஹமட்,ஏனைய ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்,பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்தும் எமது பாடசாலை வெற்றிகளை பெற உங்களுடைய மேலான பிரார்த்தனைகளில் சேர்த்துக்கொள்ளுங்கள்...

Photos from P/ Vettalai Assenkudhoos Muslim Vidhyalayam -PPA's post 31/08/2023

#நடைபெற்று முடிந்த வடமேல் மாகாண சமூகவிஞ்ஞான போட்டியில் எமது பாடசாலையின் தரம் 9 மாணவி MRF.நஸ்ஹத் இரண்டாம் இடம் பெற்று அகில இலங்கைரீதியான போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.அல்ஹம்துலில்லாஹ்.. அம்மாணவிக்கும் அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களான MSM.மில்ஹான்,MTF.ஹஸ்னா,MRM.ஜாபிர்,NF.நிப்லா ஆகிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ஜஸாக்குமுல்லாஹ் ஹைரன். அகில இலங்கைரீதியாகவும் வெற்றி பெற எமது முன்கூட்டிய நல்வாழ்த்துக்கள்...

11/02/2023

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 18 வயதின் கீழ் காற்பந்தாட்ட போட்டியில் இன்று நடைபெற்ற மூன்றாம் சுற்று கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்துடனான போட்டியில் எமது பு/வெட்டாளை அசன்குத்தூஸ் மு.வித்தியாலயம் 7:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நான்காம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.அடுத்த போட்டி இன்ஷா அல்லாஹ் நாளை மாவனல்லை பதுரியா பாடசாலையுடன் மாவனல்லை சாகிறா மைதானத்தில் நடைபெறவுள்ளது.எமது பாடசாலையின் வெற்றிக்காக உங்களது பிரார்த்தனைகளிலும் சேர்த்துக்கொள்ளுங்கள்..

Photos from P/ Vettalai Assenkudhoos Muslim Vidhyalayam -PPA's post 05/02/2023

இலங்கை பாடசாலை காற்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளுக்கிடையிலான காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இரண்டாம் சுற்றில்,
வெளிமடை சென் தோமஸ் மைதானத்தில் இடம்பெற்ற குருதலாவ அல் இல்மா மு.வித்தியாலயத்துக்கு எதிரான போட்டியில் 3:1 என்ற கோல் கணக்கில் எமது பாடசாலை அணியினர் அபார வெற்றியீட்டி மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்💥💥💥
எமது வெற்றிக்காக உழைத்த, பிரார்த்தனை செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் ❤️..

மூன்றாம் சுற்றுப்போட்டியில் எமது பாடசாலை அணி கம்பஹாவில்
கம்பஹா பண்டாரநாயக்க மகா வித்தியாலயத்துடன்
எதிர்வரும் 10.02.2023 அன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
உங்கள் ஆதரவையும் பிரார்த்தனைகளையும் தொடர்ந்தும் எமக்கு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Photos from P/ Vettalai Assenkudhoos Muslim Vidhyalayam -PPA's post 05/02/2023

இலங்கை பாடசாலை காற்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளுக்கிடையிலான காற்பந்தாட்ட சுற்றுத்தொடரில் மாவட்டமட்டத்தில் முதலாம் சுற்றில் வெற்றியீட்டிய எமது பாடசாலை இன்ஷா அல்லாஹ் நாளை இரண்டாம் சுற்றில் குருதலாவ அல் இல்மா மு.வித்தியாலயத்துடன் வெளிமடை சென் தோமஸ் மைதானத்தில் போட்டியிடவுள்ளது.எம் அணியின் வெற்றிக்காக உங்கள் பிரார்த்தனைகளிலும் சேர்த்துக்கொள்ளவும்..

26/11/2022

P/Vettalai Assenkudhoos MV
GCE (O/L) 2021 RESULTS
No of students-24
No of students pass-18
Pass %=75%
Maths pass= 83%
Best Results:
F.M.Fasool -2A,3B,3C,1S
M.R.F.Munassa -2A,3B,3C,1S
Alhamdhulillah

05/10/2022

எமது ஆசான்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ❣️
~ P/ Vettalai Assenkudhoos Muslim Vidhyalayam -PPA

30/09/2022
Photos from P/ Vettalai Assenkudhoos Muslim Vidhyalayam -PPA's post 19/09/2022

புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயத்தின் பொன்விழாக் கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக, 2k14,2k15,2k16 O/level பழைய மாணவர் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு Black fire அமைப்பின் உதவியோடு அணிக்கு எழுவர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டித் தொடர் அதிபர் ஏ.ஜே.எம்.இல்ஹாம் தலைமையில் நடைபெற்றது.

இரு தினங்களாக நடைபெற்ற போட்டிகளில் புத்தளம் நகரின் பல பகுதிகளில் இருந்தும் வெளிப்பகுதிகளில் இருந்தும் சுமார் 20 அணிகள் பங்குபற்றின.

சனிக்கிழமை (17) ஆரம்பகட்ட போட்டிகள் இடம்பெற்றதோடு, நேற்றைய தினம் (18) அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் ஏராளனமான உதைபந்தாட்ட இரசிகர்களின் முன்னே கோலாகலமாக நடைபெற்றன.

நேற்றைய (18) போட்டி நிகழ்வுகளின் பிரதம அதிதியாக புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு,
விஷேட அதிதிகளாக நகரசபை உறுப்பினர்கள் ரனீஸ் பதூர்தீன், பர்வின் ராஜா, ஆரிப் சிஹான் மற்றும் புத்தளம் பிரதேசசபை உறுப்பினர் ரிபாய் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நேற்றைய இறுதிப் போட்டியில் CR7 Brothers மற்றும் Main City அணிகள் மோதிக்கொண்டு பலப்பரீடசை நடத்தியதோடு
விறுவிறுப்பான இப்போட்டியை CR7 Brothers அணி 4:2 எனும் கோல்கணக்கில் தன்வசப்படுத்தி வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

வெற்றிபெற்ற சாம்பியன் அணிக்கு (CR7 Brothers) வெற்றிக் கிண்ணமும் 30,000 ரூபா பணப் பரிசும்
இரண்டாமிடத்தைப் பெற்ற அணிக்கு (Main City) கிண்ணமும் 15,000 ரூபா பணப் பரிசும் அதிதிகளால் வழங்கப்பட்டன.
இதற்கு மேலதிகமாக சுற்றுப்போட்டியின் சிறந்த வீரர், சிறந்த பேற்றுக்காப்பாளர், சிறந்த இளைஞர் அணி, சிறந்த இளம் வீரர் மற்றும் சிறந்த கோல் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
போட்டி நிகழ்வுகளின் மூலம் பெறப்பட்ட 80,000 ரூபா நிதி பழைய மாணவர் அமைப்புக்களினால் பாடசாலை அபிவிருத்திக்காக அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

Want your school to be the top-listed School/college in Puttalam?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Puttalam
6300

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 14:00