D U Kashiful Hudha Arabic College - Mudalaippali

D U Kashiful Hudha Arabic College - Mudalaippali Dharul Uloom Kashiful Hudha Arabic College _mudalaippali

வாழ்த்துக்கள்!மாஷா அல்லாஹ் எமது கல்லூரியில் 2024(2025)ம் ஆண்டு நடைபெற்ற அஹதிய்யா இறுதிச் சான்றிதழ் பரீட்சையில் சிறந்த பெ...
19/01/2026

வாழ்த்துக்கள்!

மாஷா அல்லாஹ் எமது கல்லூரியில் 2024(2025)ம் ஆண்டு நடைபெற்ற அஹதிய்யா இறுதிச் சான்றிதழ் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

07/01/2026அல்ஹம்துலில்லாஹ்எமது கலாசாலையில்  04/01/2026ம் திகதி அன்று 33 புதிய மாணவர்கள் சேர்த்து அவர்களின் கல்விப் பயணத்...
07/01/2026

07/01/2026
அல்ஹம்துலில்லாஹ்

எமது கலாசாலையில் 04/01/2026ம் திகதி அன்று 33 புதிய மாணவர்கள் சேர்த்து அவர்களின் கல்விப் பயணத்தை ஆரம்பித்தார்கள்.அவர்களை எங்களது மத்ரஸா நிர்வாகமும் ,உஸ்தாத்மார்களும் வரவேற்பு நிகழ்வுகளை நடாத்தி அவர்களை வரவேற்றார்கள்.

இன்று 07/01/2026ம் திகதி எமது கலாசாலையில் புதிய கல்வியாண்டிற்கான பாடத்தை கலாசாலையின் அதிபர் கண்ணியத்திற்குரிய உஸ்தாத் அஷ்ஷேக் மௌலவி A.W.M ஜமில்கான் (ரஹ்மானி) ஹஸரத் அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.

(01)வது நிகழ்வாக ஹிப்ழ் வகுப்பு மாணவன் முஹம்மத் றய்யான் என்ற மாணவரினால் கிராஅத் ஒதி ஆரம்பிக்கப்பட்டது.

(02)வது நிகழ்வாக புதிய மாணவர்கள் உஸ்தாத்மார்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.

(03)வது நிகழ்வாக கல்லூரியில் மாணவர்கள் எப்படி ஒழுக்கங்களை பேணி நடக்க வேண்டும் என்ற தர்பியா நிகழ்வை அஷ்ஷெய்க் மௌலவி றஸ்மில்கான் (றஷீதி)ஹஸரத் அவர்கள் நிகழ்த்தினார்கள்.

(04)வது நிகழ்வாக
புதிதாக வந்த ஹிப்ளு மாணவர்களுக்காக எமது கலாசாலையில் ஹிப்ழ் பிரிவில் கடமையாற்றுகின்ற அஷ் ஷேஹ் அல் ஹாபிழ் மௌலவி இப்றாஸ் (உஸ்வி) ஹஸரத் அவர்களின் மூலமாக அவர்களுடைய பாடங்கள் ஆரம்பிக்கப்பட்டது.

கிதாபு பிரிவு மாணவர்களுக்காக அவர்களுடைய பாடங்களை எமது கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ் ஷேஹ் மௌலவி பஷீல் (தீனி) அவர்களின் மூலமாக அவர்களுடைய பாடங்கள் ஆரம்பிக்கப்பட்டது.

(05)வது நிகழ்வாக கல்லூரியினுடைய அதிபர் அஷ்ஷெய்க் மௌலவி ஜமில்கான்( ரஹ்மானி)ஹஸரத் அவர்களினால் சிறிய உபதேசம் செய்யப்பட்டது.

இந் நிகழ்வின் இறுதியில் நமது மத்ரஸாவில் கடமையாற்றக்கூடிய உஸ்தாத்மார்கள், அவர்களுடைய குடும்பங்கள், பிள்ளைகள்,அதேபோன்று நமது மத்ரஸாவில் முன்னாள் கடமையாற்றிய உஸ்தாத்மார்கள்கள், ஊழியர்கள் , பட்டம் பெற்று சென்ற காஷிபிய்யீன்கள் ,எமது மத்ரஸாவுக்காக உதவி செய்யும் அத்துனை நல்லெண்ணம் கொண்ட சகோதர,சகோதரிகளுக்கும் அனைவருக்கும் துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது.

வல்ல இறைவன் இந்த மாணவர்களுடைய வாழ்க்கையில் அழகாக வழிகாட்டி நாளைய சமுதாயத்துக்காகவும்,தீனுக்காகவும் தக்வாவுடன் தொண்டு செய்யக்கூடிய ஹாபிழ்களாக ஆலிம்களாக தாயிகளாக ஆக்கி அருள்வானாக.

05/01/2026

புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு 2026.01.04

NEW STUDENTS WELCOME PROGRAM - 2026.01.04

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி  வபரகாதுஹூ எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!அல்ஹம்துலில்லாஹ்எமது கலாசாலையில் 25/12/2025ம் ...
29/12/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
அல்ஹம்துலில்லாஹ்

எமது கலாசாலையில் 25/12/2025ம் திகதி (வியாழக்கிழமை)அன்று நடைபெற்ற 07வது பட்டமளிப்பு விழாவும், துஆ மஜ்லிஸும் கல்லூரியின் அதிபர் கண்ணியத்திற்குரிய உஸ்தாத் அஷ்ஷேக் மௌலவி A.W.M ஜமீல்கான் (ரஹ்மானி) ஹஸரத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இப்பட்டமளிப்பு விழாவில் 07ஆலிம்கள் பட்டம் பெற்றனர்.

இந் நிகழ்வில பிரதம அதிதியாகவும், விஷேட பேச்சாளராகவும் கலந்து கொண்ட கொழும்பு பெரிய பள்ளி மதீனதுல் இல்ம் அரபுக்கல்லூரியின் அதிபரும், நாடறிந்த தஃவா பேச்சாளருமான அஷ்ஷேய்க் மௌலவி அப்துல் அஸீஸ்(ஹிழ்ரி) ஹஸரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் இந்நிகழ்வில் பட்டம் பெற்றுச் செல்லுகின்ற ஆலிம்களுக்கு சான்றிதழ்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் எமது மாணவர்களுக்காக க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர் தரப்பரீட்சையிலும் சிறந்த பெறுபேறுகளை பெற முயர்சித்த எமது கலாசாலையினுடைய பாடசாலை பிரிவு ஆசிரியர்களுக்கான பரிசில்களும், கௌரவிப்புகளும் நடைபெற்றது.

மேலும் எமது கலாசாலைக்கு பட்டம் பெற்று செல்லுகின்ற 07 ஆலிம்களின் மூலமாக ஒலி பெருக்கி ( Mic Settings) வசதிகளை செய்து தந்துதவினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வின் இறுதியில் எமது கலாசாலையினுடைய வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டு மண்ணறையில் இருக்கின்றவர்களுக்காக துஆ பிரார்த்தனையும் நடைபெற்றது.

வல்ல இறைவன் இந்த முத்துக்களான 07 ஆலிம்களுடைய வாழ்க்கையை சிறப்பாக்கி வைப்பானாக.

எங்களுடைய கலாசாலைக்கு ஹாபிழ்களை ஆலிம்களை உருவாக்க யாரெல்லாம் உடல்,பொருளால் உதவி செய்தார்களோ அல்லாஹ் அவர்களுடைய வாழ்க்கையிலையும் பரக்கத்தை சொரிந்தருள்வானாக!
ஆமீன்

21/11/2025
21/11/2025

புதிய மாணவர்கள் அனுமதி 2026

DHARUL ULOOM KASHIFUL HUDHA ARABIC COLLEGE MUDALAIPPALI KALPITIYA PUTTALAM

காலம்: 22,23.11.2025 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்
நேரம்: 09.00 AM

தொடர்புகளுக்கு
0705668463
0715576060

பிரார்த்தனைக்காக!மாஷா அல்லாஹ் ஒவ்வொரு வருடமும் எமது தாருல் உலூம் காஷிபுல் ஹூதா அரபுக் கல்லூரியிலிருந்து க.பொ.த உயர் தரப்...
10/11/2025

பிரார்த்தனைக்காக!

மாஷா அல்லாஹ் ஒவ்வொரு வருடமும் எமது தாருல் உலூம் காஷிபுல் ஹூதா அரபுக் கல்லூரியிலிருந்து க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றுகின்றனர். அதேபோல் இவ்வருடமும் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு எமது கல்லூரியிலிருந்து 07 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

சாதிக்கப் பிறந்த இவர்கள்தான் நாளைய உலகின் கதாநாயகர்கள்.

இறைபணிவோடும் மனத்தெளிவோடும் உளத்துணிவோடும் செல்லுங்கள்.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று எமது கலாசாலைக்கும் எமது சமூகத்திற்கும் எமது நாட்டிற்கும் பிரயோசனமுள்ளவர்களாக வாழ வல்லவன் அல்லாஹ் துணை புரிவானாக!
ஆமீன் 🤲🤲🤲

Dharul Uloom Khasiful Hudha  Arabic collage    Mudalaippaliஅல்ஹம்துலில்லாஹ்    எமது கல்லூரியில் 30.10.2025 ஆம் திகதி  பு...
30/10/2025

Dharul Uloom Khasiful Hudha Arabic collage Mudalaippali

அல்ஹம்துலில்லாஹ்
எமது கல்லூரியில் 30.10.2025 ஆம் திகதி புனித அல் குர்ஆனை மனனம் செய்து முடித்த 111வது ஹாபிழான புத்தளத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் முஹம்மத் அம்மார் அவர்களுக்கு கல்லூரி அதிபர்,உஸ்தாத்மார்கள்,நிர்வாகிகள் சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். 👋🏻👋🏻🎉🎉

"ஒரு ஹாபிழின் மூலம் அல்லாஹ் எந்த அந்தஸ்துகளை கொடுப்பதாக வாக்களித்துள்ளானோ அவைகளை அவருக்கும் அவருடைய பெற்றோர்களுக்கும் ,குடும்பத்தாருக்கும் கொடுத்தருள்வானாக! 🤲🤲

மேலும் அல் குர்ஆனை மனனம் செய்து முடிக்க அவருக்கு துணை நின்று அவருக்கு வழிகாட்டல்கள் வழங்கிய அவருடைய உஸ்தாத்மார்களுக்கு கல்லூரி சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

19/10/2025

✨السلام عليكم ورحمة الله وبركاته✨`

புதிய மாணவர்கள் அனுமதி 2026

DHARUL ULOOM KASHIFUL HUDHA ARABIC COLLEGE
`MUDHALAIPALI ,KALPITYA`PUTTALAM

📞 `பதிவுகளுக்கு`
0705668463
0715576060

Address

Mudalaippali
Puttalam
626

Telephone

+94711900907

Website

Alerts

Be the first to know and let us send you an email when D U Kashiful Hudha Arabic College - Mudalaippali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to D U Kashiful Hudha Arabic College - Mudalaippali:

Shortcuts

Share

Category