Nuraicholai National School

Nuraicholai National School Official page of Nuraicholai National School Nuraicholai Muslim Maha Vidyalaya (National School) established in 1929.

The school is one among the popular school in terms of primary and secondary education, sports, arts and culture in Puttalam Education Zone.

2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 9 மாணவர்களுக்கும் எமது பாடசாலையின் பழைய மாணவரும் தொழில் அதிபரும் ...
10/09/2026

2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 9 மாணவர்களுக்கும் எமது பாடசாலையின் பழைய மாணவரும் தொழில் அதிபரும் Paper House உரிமையாலருமான MSM Shafras அவர்களினால் 2000 ரூபா பெறுமதியான Gift Voucher எமது மாணவர்களுக்கு வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்

2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, அதிபர் இக்பால் மூச...
08/09/2026

2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, அதிபர் இக்பால் மூசீன் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

கற்பிட்டி கோட்டத்தில், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையிலும் அதனுடன் தொடர்புடைய சதவீத அடிப்படையிலும் எமது பாடசாலை முதலிடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கற்பிட்டி பிரதேச சபையின் தலைவர் ASM ரிகாஸ் அவர்களும், விசேட அதிதியாக கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் AW ஜவாத் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும், சிறப்பு அதிதிகளாக நுரைச்சோலை ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் பாஜில் ஹாஜியார் மற்றும் நுரைச்சோலை கிராம சேவகர் M நௌபல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், வெட்டுப்புள்ளியைத் தாண்டிய ஒன்பது மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட்டதுடன், புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், இந்த வெற்றிக்குத் தலைமைத்துவம் வழங்கிய அதிபர் அவர்களும், வெற்றியை நோக்கி மாணவர்களை வழிநடத்திய உப அதிபர் (ஆரம்பப் பிரிவு) அவர்களும், அர்ப்பணிப்புடன் பங்களிப்பு செய்த ஆசிரியர், ஆசிரியைகளும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் SDEC மற்றும் OBA உறுப்பினர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வெற்றி எமது பாடசாலையின் அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர் குழுவினதும், மாணவர்களினதும், பெற்றோர்களினதும் ஒன்றுபட்ட முயற்சிக்குக் கிடைத்த சிறப்பான அங்கீகாரமாகும்.

எமது பாடசாலையில் இருந்து புலமை பரிசில் பரீட்சைக்கு தோன்றிய 9 மாணவ மாணவியர் வெட்டுப்புள்ளியை தாண்டி சித்தி பெற்று பாடசாலை...
02/09/2026

எமது பாடசாலையில் இருந்து புலமை பரிசில் பரீட்சைக்கு தோன்றிய 9 மாணவ மாணவியர் வெட்டுப்புள்ளியை தாண்டி சித்தி பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்திருக்கிறார்கள்.

மாஷா அல்லாஹ்.

Target Grade 5 என்ற செயற்திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை வழிநடத்திய அதிபர் இக்பால் மூஸீன் மற்றும் உப அதிபர் தில்ரூபா அவர்களுக்கும் , அர்ப்பணிப்புடன் ஆரம்ப பிரிவில் கற்பித்த அனைத்து ஆசிரிய ஆசிரியைகளுக்கும், விஷேட வகுப்புக்களை நடாத்திய ஆசிரியர்களுக்கும், இந்த திட்டத்திற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் !!

⚡️𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐓𝐫𝐢𝐩 𝟐𝟎𝟐𝟔 𝐆𝐫𝐚𝐝𝐞 𝟒&𝟓 ⚡️      தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுடன் தரம் 4 மாணவர்களின் ஒரு நாள்...
02/09/2026

⚡️𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐓𝐫𝐢𝐩 𝟐𝟎𝟐𝟔 𝐆𝐫𝐚𝐝𝐞 𝟒&𝟓 ⚡️

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுடன் தரம் 4 மாணவர்களின் ஒரு நாள் கல்விச் சுற்றுலா - 2026
=======================
எமது பாடசாலையில் இவ்வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்கள், தரம் 4 மாணவர்களின் ஒரு நாள் கல்விச் சுற்றுலா நேற்றைய தினம்(2026.09.01) அதிபர் மற்றும் உதவி அதிபர் (ஆரம்பபிரிவு) தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்!

இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

19/08/2026
16/08/2026 அன்று எமது பாடசாலையில் தரம் 4 மாணவர்களுக்கான முன்னோடி புலமை பரீட்சை Mr. SA Issath ஆசிரியரியரால் முதலாவது வகுப...
17/08/2026

16/08/2026 அன்று எமது பாடசாலையில் தரம் 4 மாணவர்களுக்கான முன்னோடி புலமை பரீட்சை Mr. SA Issath ஆசிரியரியரால் முதலாவது வகுப்பு அதிபர் மற்றும் உதவி அதிபர் தலைமையில் மிகச்சிறப்பாக ஆரம்பித்தது வைக்கப்பட்டது.

புத்தளம் வலய மட்ட ஆங்கில தினப் போட்டிகளில் சிறப்பாகப் பங்குபற்றி, வெற்றிபெற்று மாகாண மட்ட ஆங்கில தினப் போட்டிகளுக்குத் த...
12/08/2026

புத்தளம் வலய மட்ட ஆங்கில தினப் போட்டிகளில் சிறப்பாகப் பங்குபற்றி, வெற்றிபெற்று மாகாண மட்ட ஆங்கில தினப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ள எமது பாடசாலை மாணவிகளுக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

உங்களது அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் திறமைக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி மேலும் பல வெற்றிகளுக்கான ஆரம்பமாக அமையட்டும்.

மாகாண மட்டத்திலும் சிறப்பாகச் சாதித்து, தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகி எமது பாடசாலைக்கு பெருமை சேர்க்க எமது மனமார்ந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!

11/08/2026
🌟 BEST WISHES FOR YOUR G.C.E. A/L EXAMINATION! 🌟
09/08/2026

🌟 BEST WISHES FOR YOUR G.C.E. A/L EXAMINATION! 🌟

தரம் 5 புலமை பரிசில் பரீட்சையை எழுதும் மாணவ மாணவியர் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்கான " உதவி தேடும் தொ...
09/08/2026

தரம் 5 புலமை பரிசில் பரீட்சையை எழுதும் மாணவ மாணவியர் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்கான " உதவி தேடும் தொழுகை" மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை ஜும்மா பள்ளிவாசல் இமாம் அஷ் ஷேஹ் அப்துல் ரஹ்மான் அவர்களால் இன்று காலை எமது பாடசாலையின் பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்டது. இதில் மாணவ மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இன்று பரீட்சை எழுதும் அனைத்து மாணவ மாணவியரும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரியட்டும்!

ஆமீன்

Address

Main Street Nuraicholai
Puttalam
61342

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 11:30

Alerts

Be the first to know and let us send you an email when Nuraicholai National School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category