Quranic Studies Center

Quranic Studies Center QURANIC STUDIES CENTER
NAWANNA KADE JUNCTION
PUTTALAM
O718413913

25/08/2026
BLISSFUL LAURELS 26’Quranic Studies Center – Puttalam இன் மாணவர்களின் திறமைகள், சாதனைகள் மற்றும் வளர்ச்சியை கௌரவிக்கும் ...
25/08/2026

BLISSFUL LAURELS 26’

Quranic Studies Center – Puttalam இன் மாணவர்களின் திறமைகள், சாதனைகள் மற்றும் வளர்ச்சியை கௌரவிக்கும் “Blissful Laurels 26” விழா 14.08.2026 அன்று Nuhman Reception Hall இல் மிகச் சிறப்பாகவும் இனிதாகவும் நடைபெற்று முடிந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!

அறிவையும், ஆன்மீகத்தையும், ஆளுமையையும் ஒருங்கிணைத்து மாணவர்களை சிறந்த எதிர்காலத்தை நோக்கி வழிநடத்தும் எமது பயணத்தில், இந்நிகழ்வு மற்றுமொரு அழகிய மைல்கல்லாக அமைந்தது.

இந்நிகழ்விற்கு Ash-Sheikh Fawaz (Azhari, BA) அவர்கள் தலைமை தாங்க, எமது நிலையத்தின் பழைய மாணவரான AHH AADHAM அவர்கள் நிகழ்வை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

இதில் Quranic Studies Center இன் இரண்டு வருட கற்கை நெறியை நிறைவு செய்த ஆறாவது அணி மாணவர்களும் அவர்களது பெற்றோரும் சான்றிதழ்கள், பதக்கங்கள், விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்
இம்முறை வெளியான
GCE (O/L) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற எமது இரண்டாவது அணி மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

விழாவின்
அதிதிகளாக Ash-Sheikh HM Minhaj (Islahi) Principal Casimiya Arabic College.
Engineer Rinshadh – Mayor, Puttalam Municipal Council, Alhaj Mr Saleem – President, Puttalam Grand Masjid, H. Ajmal – Principal, MS SOE, Mrs. Zareena Farwin – Principal, P/F.B.M.V, Ash-Sheikh Uzair (Islahi),
Ash-Sheikh Ihsan Nawawi, Mr. Al Haj Muzammil மற்றும் Mr. Murshidh ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தமது பெறுமதியான நேரத்தை ஒதுக்கி இங்கு வருகை தந்து விழாவை சிறப்பித்த
அனைத்து அதிதிகளுக்கும்
எமது நன்றிகள்.

இந்நிகழ்வு வெற்றிபெற கைக் கோர்த்த மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள். உங்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் ஈருலக பாக்கியங்களை தந்தருள்வானாக!

எமது மாணவர்களின் ஒவ்வொரு சாதனையும், அவர்களது எதிர்கால வெற்றிக்கான ஒரு படிக்கல். அந்த வெற்றிப் பயணத்தை ஊக்குவிக்கும் இனிய நினைவாக Blissful Laurels 26’ என்றும் நிலைத்திருக்கட்டும்.

எமது Al Quranic Studies center மாணவர்கள்  2025 ம் ஆண்டுக்கான இறுதிப் பரீட்சை எழுதும்  புகைப்படங்கள்
10/02/2026

எமது Al Quranic Studies center மாணவர்கள் 2025 ம் ஆண்டுக்கான இறுதிப் பரீட்சை எழுதும் புகைப்படங்கள்

02/09/2025
Blissful Laurels 25'(Album 02)
13/08/2025

Blissful Laurels 25'
(Album 02)

Blissful Laurels 25'(Album 01)
13/08/2025

Blissful Laurels 25'
(Album 01)

Blissful Laurels 25'Al Quranic Studies Center ஏற்பாடு செய்த Blissful Laurels 25' மாணவர் கௌரவிப்பும் விருது வழங்கும் வைபவ...
11/08/2025

Blissful Laurels 25'

Al Quranic Studies Center ஏற்பாடு செய்த Blissful Laurels 25' மாணவர் கௌரவிப்பும் விருது வழங்கும் வைபவமும் மற்றும் மாணவள்கலைநிகழ்ச்சிகள் என்பன, Ash-Sheikh Fawaz (Azhari) அவர்களின் தலைமையில் 08 ஆகஸ்ட் 2025 அன்று Puttalam Nuhuman Reception Hall-ல் சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வில்,
🎉 பாடநெறியை நிறைவு செய்த ஐந்தாவது தொகுதி மாணவர்கள்
🎉 Fajr Warriors 25' ரமழான் போட்டி வெற்றியாளர்கள்
🎉இம்முறை O/L பரீட்சையில் சிறப்பான பெறுபேறு பெற்ற first Batch மாணவர்கள்
அனைவரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பிரதம அதிதியாக
Ash-Sheikh Jifnas (Misbahi), President – All Ceylon Jamiyyathul Ulama, Puttalam Branch
கலந்து கொண்டதுடன்

விஷேட அதிதிகளாக:
Ash-Sheikh Uzair (Islahi), President – SLJI
Mr. I.A. Najeem, Principal – Zahira National College
Mr. Ranees Badur Deen, Member – Municipal Council
Ash-Sheikh H. M. Minhaj (Islahi), Principal – Casimiya Arabic College
Mr. Shareek, Teacher, Zahira National College
Mr. Naseem
Mrs. Nasriya, Vice Principal – Al Ashraq Maha Vidyalaya

கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வை சிறப்புறச் செய்த மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள, அதிதிகள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் அனைவருக்கும் Quranic Studies Center இதயப்பூர்வமான நன்றிகளைதெரொவித்துக்கொள்கிறது.
جزاكم الله خيرا و خير الجزاء

முன்கட்டிளமைப்பருவ மாணவர்களது அறிவு, ஆன்மீகம், ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்து வதோடு அல்குர்ஆனுடன் உறவு பேணும் பண்புள்ள தலைமைத்துவம் உருவாக்குதல் எனும் குறிக்கோளுடன் கடந்த ஏழு ஆண்டுகளாக Quranic Studies Center தனது பணியை வெற்றிகரமாக செய்து வருகிறது.
உங்களது பிரார்த்தனைகளையும் ஆலோசனைகளையும் வேண்டி நிற்கிறது.

The Blissful Laurels 25' Student Felicitation and Awards Ceremony, along with student performances, organized by Al Quranic Studies Center, was held grandly on 8th August 2025 at the Puttalam Nuhuman Reception Hall, under the leadership of Ash-Sheikh Fawaz (Azhari).

On this occasion, the following were honoured with awards:
🎉 Students of the 5th batch who completed their course
🎉 Winners of the Fajr Warriors 25’ Ramadan Competition
🎉 1st Batch students who achieved excellent results in the O/L Examination

Chief Guest:
Ash-Sheikh Jifnas (Misbahi), President – All Ceylon Jamiyyathul Ulama, Puttalam Branch

Special Guests:
Ash-Sheikh Uzair (Islahi), President – SLJI
Mr. I.A. Najeem, Principal – Zahira National College
Mr. Ranees Badur Deen, Member – Municipal Council
Ash-Sheikh H. M. Minhaj (Islahi), Principal – Casimiya Arabic College
Mr. Shareek , Teacher - Zahira National College
Mr. Naseem
Mrs. Nasriya, Vice Principal – Al Ashraq Maha Vidyalaya

Our heartfelt thanks go to all the students, alumni, parents, teachers, guests, and technical assistants who made this event a great success.
جزاكم الله خيرا
(May Allah reward you with goodness and the best reward)

For the past seven years, the Quranic Studies Center has been successfully carrying out its mission to develop the knowledge, spirituality, and personality of pre adolescent students, while nurturing leadership qualities grounded in maintaining a strong relationship with the Qur’an.
Quranic Studies Center humbly request your prayers and guidance in continuing this mission.

30/03/2025

AL Quranic Studies Center இன் ரமழான் கால பயிற்சிப் பட்டறை வழமை போல இம்முறையும் Puttalam Nuhman Reception Hall இல் ரமழான் 2 முதல் ரமழான் 20வரை தொடராக நடைபெற்றது..

இதில் எமது நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் புதிய மாணவர்களும் , கலந்து பயன்பெற்றனர்.

FAJR WARRIORS எனும் தொனிப்பொருளில் இவ்வருட வசந்தம் வளம்பெற்றது
அல்ஹம்துலில்லாஹ்.

ரமழான் கால பாடத்தலைப்புகள், குர்ஆனிய சிந்தனைகள், நபிகளாரின் நற்பன்புகள் வரலாற்றுப் பக்கங்கள்,திக்ரில் நனைவோம், படைப்பாளனுடன் உறவுகொள்வோம் போன்ற தலைப்புகளுடன் ரமழானில் மாணவர்களுக்கென விசேடமாக தயாரிக்கப்பட்ட ரய்யான் (Wilumiyam), ரமழானை வரவேற்போம்(Nafeel Abaabeel) போன்ற பாடப்புத்தகங்களும் பட்டறை பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டன.
இன்னும்
மாணவர்களது திறன்களைவெளிக்காட்டும் சித்திரம், கீதம், கதை,பேச்சு, விவாத அரங்கு என பல்சுவை அம்சங்களும் அழகு சேர்த்தன.
அதே நேரம் குர்ஆன் முரத்தல், ஹிப்ளுல் குர்ஆன், ஹதீஸ், துஆ மனனப் போட்டிகளிலும் மாணவர்கள் தமது திறமையை வெளிக்காட்டினர்.

தினம் உதிரும் சுவனச்சிட்டுகளுக்காக பாலஸ்தீன ஆதரவு பிரகடனம் ஒன்றையும் பட்டறையின் இறுதிநாள் அமர்வில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

அதே போல இறுதி அமர்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார்,
நிகழ்ச்சிக்கு பெற்றோரும் பழைய மாணவர்களும் முழுப் பங்களிப்பு செய்தமையை நன்றியுடன் நினைவு கூறுகின்ரோம்.
அருளாளன் அவர்களது ஸதகாக்களை பூரணமாக ஏற்றுக் கொள்வானாக!
அதேபோல இருபது தினங்களும் மண்டபத்தை தந்துதவிய உரிமையாளருக்கும் இறையருளும் அபிவிருத்தியும் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்

ரமழானின் முழுப்பயனையும் பதின்மச் சிறுவர்கள் பெற்றுக் கொள்வதோடு அவர்கள் பெற்றோரின் கண்குளிர்ச்சியாகவும்,
இறை வழிகாட்டலையும், அவனதுஅன்பையும் பெற்றவர்களாக மாற வேண்டும்
என்ற நோக்கோடு இடம்பெற்ற இந்நிகழ்வை வல்ல இறைவன் பொறுந்திக்கொண்டு இதற்காக மேற் கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளுக்கும் நிறைவான நாற்கூலிகளை வழங்குவானாக.

29/03/2025.

Address

Puttalam
0094

Telephone

+94718413913

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quranic Studies Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Quranic Studies Center:

Shortcuts

Share

Category