Bt/Bc/Jeyanthiyaya Ahamed hiraz vidyalaya

Bt/Bc/Jeyanthiyaya Ahamed hiraz vidyalaya government school

* #பச்சை_சபா_இல்லம் வெற்றிக்  கிண்ணத்தை சுவிகரித்தது 👏👏💐🏆🏆🏆🏆⚽🏏⛳🏑🎮பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எமது ஜேந்தியாய அகமட் ஹிராஸ...
09/03/2023

* #பச்சை_சபா_இல்லம் வெற்றிக் கிண்ணத்தை சுவிகரித்தது 👏👏💐🏆🏆🏆🏆⚽🏏⛳🏑🎮

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
எமது ஜேந்தியாய அகமட் ஹிராஸ் வித்தியாலயத்தின் #எட்டாவது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் விறுவிறுப்பான நடைபெற்ற முடிந்த போட்டிகளின் அடிப்படையில் #சபா பச்சை இல்லம் (ரிக்காஸ் ஆசிரியர்) முதலாம் இடத்தையும் மர்வா நீல இல்லம் (நிலாம் ஆசிரியர்) இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர். பாடசாலை சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

2023.03.08 அன்று இடம்பெற்ற இறுதி நாள் நிகழ்வினை அதிபர் அவர்கள் தலைமை தாங்கி பகல் இரண்டு மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. பிரதி அதிபர் மற்றும் எமது பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆகியோர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் மிகச் சிறப்பாக இந்நிகழ்வானது இடம்பெற்று முடிந்தது. எல்லா புகழும் இறைவனுக்கே. அல்ஹம்துலில்லாஹ்.
இறுதி நாள் நிகழ்வுகளுக்காக வலையக்கல்வி பணிப்பாளர், கோட்டக்கல்வி பணிப்பாளர், ஊர் தலைவர்கள் கழகத் தலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்து மாணவர்களுக்கான பரிசீல்களையும் வழங்கி வைத்தனர். இதை நடத்தி முடிப்பதற்கு உறுதுணையாக இருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் இல்ல தலைவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் விளையாட்டு கழகங்கள் அனைத்து தரப்பினருக்கும் எமது பாடசாலை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
💐💐ஜஸாகுமுல்லாஹ் ஹைரன்.💐💐

👑🥇🥇🎉இரண்டு வருடங்களுக்குப் பின்னால் கிடைத்த  #மாபெரும்  #வெற்றி ...🥇🥇🎉🎉👑💐பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 💐எமது கல்குடா பிரத...
26/01/2023

👑🥇🥇🎉இரண்டு வருடங்களுக்குப் பின்னால் கிடைத்த #மாபெரும் #வெற்றி ...🥇🥇🎉🎉👑

💐பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 💐

எமது கல்குடா பிரதேசத்தில் அனைத்து வசதி வாய்ப்புகளும், தரமான ஆசிரியர்களும் கற்பித்து மாணவர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் கல்வி சென்றடைந்து பிரபல பாடசாலைகளில் 200, 300 மாணவர்கள் பங்கு பற்றி 20,30,40 என மாணவர்கள் சித்தி அடையும் இந்த தருணத்தில் .....

அடிப்படை வசதிகள் கூட கஷ்டமான, பாடசாலை பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு கஷ்டமான, மூன்று வேளை உணவு உண்பதற்கு கஷ்டமான.... வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 🥺 குடும்பங்களில் இருந்து வரும் எமது பாடசாலை மாணவர்களில் 2022ம் ஆண்டு தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கு 13 மாணவர்கள் மாத்திரமே தோற்றி அதில் #மூன்று_மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கும் அதிகமான புள்ளிகளை பெற்றதோடு👑🥇🏆 அனைத்து மாணவர்களும் சித்தி அடைந்து பாடசாலைக்கும் ஊருக்கும் வலையத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்.👏👏👏👏👏👏

உண்மையில் எமது பாடசாலை அதிபரின் வழிகாட்டலில் அனைத்தும் இடம்பெற்றதோடு பாடசாலையிலேயே தங்கி பல சிரமங்களை எதிர்கொண்டு தனது நேரம்,பணம், ஆரோக்கியம் என்பவற்றை தியாகம் செய்து இந்த வெற்றியை அடைய பாடசாலைக்காக அயராது உழைத்த எமது ிஸ்வி ஆசிரியர் அவர்களுக்கு பாடசாலை ரீதியாகவும் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் ஊர் மக்கள் அனைவரதும் சார்பாகவும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்💐💐💐 ஜசாக்குமுல்லாஹ் ஹைரன்.....❤️❤️💝 (இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டும் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲)

இதேபோன்று எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை நாம் பெற வேண்டுமானால் இதே போன்ற ஏனைய மாணவர்களும் சாதனைகளை அடைய வேண்டுமானால் மாணவர்களுக்கான வசதி வாய்ப்புகள் உதவிகள் கிடைக்க பெறுவதோடு அரச சார்பற்ற நிறுவனங்கள், ஏனைய சமூக அமைப்புகள், அரசியல்வாதிகள், ஊர் மக்கள் அனைவரிடமும் ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிகவும் அவசியமாகும் என்பதை நினைவு படுத்திக் கொள்கின்றோம்...

(HIRAZ MEDIA UNIT)

📢  #மர்வா (நீல) அணி முன்னிலையில்... 🔥🔥🏆🏆எமது அஹ்மட் ஹிராஸ் பாடசாலையின் எட்டாவது வருட இல்ல விளையாட்டுப் போட்டியில் கடந்த ...
25/01/2023

📢 #மர்வா (நீல) அணி முன்னிலையில்... 🔥🔥🏆🏆

எமது அஹ்மட் ஹிராஸ் பாடசாலையின் எட்டாவது வருட இல்ல விளையாட்டுப் போட்டியில் கடந்த 20.01.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை இடம்பெற்ற #மரதன் ஓட்ட போட்டியில் ஒரு அணியில் இருந்து 10 வீரர்கள் என்ற அடிப்படையில் மொத்தமாக 20 வீரர்களைக் கொண்டு #ஜெயந்தியாய ஊரினை சுற்றி மரதன் ஓட்டபோட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வை அதிபர் அவர்கள் ஆரம்பித்து வைக்க முதலாம் இரண்டாம் நான்காம் ஐந்தாம் 9ம் இடங்களை மறுவா அணியும் மூன்றாம் ஆறாம் ஏழாம் எட்டாம் பத்தாம் இடங்களை சபா அணியும் பெற்றுக்கொண்ட அடிப்படையில்
மர்வா - 68 புள்ளிகள்
சபா - 42 புள்ளிகள்
பெற்றுக் கொண்டனர். போட்டியில் முதலாம் இடத்தை 🥇 மர்வா 🧿🧿அணியை சேர்ந்த தரம் ஒன்பதில் கல்வி கற்கும் #உஸ்மான் எனும் மாணவர் பெற்றுக்கொண்டார்.

அதன் அடிப்படையில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் சபா அணி 57 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்திலும் மர்வா அணி 78 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்திலும் காணப்படுகின்றனர். இதனை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் பழைய மாணவர் சங்கம் மற்றும் ஊர் தலைவர்கள் ஊர் மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை 💐 தெரிவித்து தொடர்ந்தும் உங்களது பங்களிப்புகளை எமது பாடசாலைக்கு செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

(HIRAZ MEDIA UNIT)

 #சபா இல்லமா  #மர்வா இல்லமா ??? 🔥🔥💐பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 💐 எமது பாடசாலையில் இந்த வருடத்திற்கான இல்ல விளையாட்டுப் ...
22/01/2023

#சபா இல்லமா #மர்வா இல்லமா ??? 🔥🔥

💐பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 💐

எமது பாடசாலையில் இந்த வருடத்திற்கான இல்ல விளையாட்டுப் போட்டியில் முதலாவது பெரு விளையாட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாடசாலை விளையாட்டு மைதானத்தில் மிகக் கோலாகலமாக 🏏🏏🏏🏏🏏🏏🏏🏏 சுற்றுப்போட்டியினூடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

பச்சை நிற சபா இல்லத்தின் அணி தலைவர் #நிம்சாட் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை முதலில் தெரிவு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய சபா இல்லம் பத்து ஓவர்களில் 89 ஓட்டங்களை பெற்றனர். தொடர்ந்து துடுப்படுத்தாடிய #அல்தாப் தலைமையிலான நீல நிற மர்வா இல்லம் 10 ஓவர்களில் 75 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.

இல்ல விளையாட்டுப் போட்டியில் முதலாவது விளையாட்டில் வெற்றி பெற்றதன் மூலம் #றிகாஸ் ஆசிரியர் தலைமையிலான பச்சை நிற இல்லம் 15 புள்ளிகளையும் #இஸ்மாயில் ஆசிரியர் தலைமையிலான நீல நிற இல்லம் 10 புள்ளிகளையும் பெற்று முதலாம், இரண்டாம் இடங்களில் வகிக்கின்றனர்..........

(HIRAZ MEDIA UNIT)

🎉பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 🎉மாணவர்களின்  #விளையாட்டு திறமையை இனம் காண்பதற்கும் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்...
11/01/2023

🎉பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 🎉

மாணவர்களின் #விளையாட்டு திறமையை இனம் காண்பதற்கும் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் என எமது பாடசாலையின் 2023ம் வருடத்திற்கான #இல்ல #விளையாட்டுப் #போட்டிகளுக்கான ஆரம்ப நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை (09.01.2023) முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இல்ல விளையாட்டு போட்டிகள் இந்த வருடம் முதல் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய எமது பாடசாலையிலும் நடத்துவதற்கான திட்டங்கள் #அதிபர் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

அந்த வகையில் தரம் ஒன்று முதல் தரம் 9 வரை கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்குமான விளையாட்டுக்கள் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஆறாம் தேதிக்கு முன் நடத்தி முடிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. #சபா, #மர்வா எனும் பச்சை, நீளம் ஆகிய இல்லங்கள் இம்முறை போட்டி போட இருக்கின்றன. பாடசாலை committee சார்பாக இரு குழுக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இம்முறை பாடசாலையில் #பழைய_மாணவர்_சங்கம் அத்தோடு பெற்றோர், ஆசிரியர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 🎉

☺️ *பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்* ☺️ 27.11.2022 சனிக்கிழமை இன்றைய தினம் எமது பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான விர...
27/11/2022

☺️ *பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்* ☺️

27.11.2022 சனிக்கிழமை இன்றைய தினம் எமது பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான விருந்துபசார நிகழ்வு ஒன்றை தற்போது வெளிநாட்டில் தொழில் புரியும் எமது பாடசாலையின் விஞ்ஞான பாட ஆசிரியர் * #முன்தஸிர்* அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். ஜஸாகுமுல்லாஹு ஹைரன். இறைவன் அவருக்கு அருளையும் ஆரோக்கியமான வாழ்வையும் ரஹ்மத்தையும் புரிவானாக...... ஆமீன்.🤲🎉🎊

இந்நிகழ்வானது பாசிக்குடா மனோகர் தோட்டத்தில் மிகச் சிறப்பான முறையில் அதிபர் தலைமையில் இடம்பெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ். இதற்கு சமூகமளித்த அதிபர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள், அவர்களது குடும்பங்களுக்கு *ஏற்பாட்டு குழு* சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். 🎊🎉👏✅

💐பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்💐எமது பாடசாலையைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றிக் கொண்டிருக்கும் முன்தஸிர் ஆ...
21/08/2022

💐பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்💐

எமது பாடசாலையைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றிக் கொண்டிருக்கும் முன்தஸிர் ஆசிரியர் அவர்கள் தனது சொந்த வேலை நிமிர்த்தம் வெளிநாடு செல்ல இருப்பதை முன்னிட்டு எமது பாடசாலையின் தரம் 07 மாணவர்கள் மற்றும் தரம் 09 மாணவர்களால் பிரியாவிடை நிகழ்வுகள் இடம் பெற்றன.

இதன்போது பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அவரின் வெளிநாடு செல்லும் பயணம் இனிதே நிறைவேற பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

-HIRAZ MEDIA UNIT-

🎉பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்🎉எமது பாடசாலையில் 2020ஆம் ஆண்டு சிறுவர் திறனாய்வு போட்டியில் (kids athletic) கலப்பு பிரிவில...
16/04/2022

🎉பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்🎉

எமது பாடசாலையில் 2020ஆம் ஆண்டு சிறுவர் திறனாய்வு போட்டியில் (kids athletic) கலப்பு பிரிவில் தரம் 3 சேர்ந்த மாணவர்கள் பங்கு பற்றி தங்கப்பதக்கத்தை 🥇வெற்றியீட்டியமைக்கு கடந்த (01.04.2022) வெள்ளிக்கிழமை அன்று அவர்களுக்கான சான்றிதழ்கள்🏆 பாடசாலையின் ஆசிரியர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இதற்காக மாணவர்களை பயிற்றுவித்த எமது பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் MSM.Sathir அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.💐

💐பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 💐எமது பாடசாலையில் முதன்முறையாக தரம் 9 இற்கான வகுப்புக்கள் 2020 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப...
10/04/2022

💐பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 💐

எமது பாடசாலையில் முதன்முறையாக தரம் 9 இற்கான வகுப்புக்கள் 2020 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இவ்வருடம் மார்ச் 31ஆம் திகதி அவர்களுக்கான பிரியாவிடை வைபவம் மிகவும் சிறப்பான முறையில் அதிபர் அவர்களின் தலைமையின் கீழ் இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

இந்த நிகழ்வில் தரம் 9 இல் கல்வி கற்கும் நான்கு ஆண் மாணவர்களும் நான்கு பெண் மாணவிகளும் பிரியா விடை பெற்று செல்கின்றனர். அவர்களை கௌரவிக்கும் முகமாக இந்த நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அதிதிகளாக சேர்மன் தாஹிர் அவர்களும் , ADE JABEER KAREEM அவர்களும் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவரும் சமாதான நீதவான் ஆகிய முனாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பிரியாவிடை பெற்றுச் செல்லும் மாணவர்கள் எதிர்காலத்தில் கல்வி ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் சிறந்த அடைவுகளை அடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

💐பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்💐எமது மட்/மம/ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தின் வெள்ளி விழாவின் முதற்கட்ட நிகழ்வாக ஒர...
03/04/2022

💐பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்💐

எமது மட்/மம/ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தின் வெள்ளி விழாவின் முதற்கட்ட நிகழ்வாக ஒரு நாள் #கல்விச்சுற்றுலா ஒன்றினை (26/03/2022) கடந்த சனிக்கிழமை அன்று காலை 6 மணி அளவில் கல்லூரியின் முதல்வர் எம்.ஐ. ஜெயினுலாப்தீன் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் #சிகிரியா மற்றும் #பொலநறுவையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பார்வை இடப்பட்டு இறைவனின் உதவியால் மீண்டும் இரவு 9 மணி அளவில் பாடசாலை வந்தடைந்தோம்.
அல்ஹம்துலில்லாஹ். 💐

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்எமது பாடசாலையில் இவ்வருடம் தரம் ஒன்றுக்கு புதிதாக சேர்க்கப்பட்ட  மாணவர்களுக்கான  #விளையாட்டு...
21/03/2022

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

எமது பாடசாலையில் இவ்வருடம் தரம் ஒன்றுக்கு புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான #விளையாட்டு_வீடு செயற்பாடுகள் வகுப்பாசிரியர் Msf. Safna ஆசிரியை அவர்களின் கண்காணிப்பில் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ். 💐👏

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்எதிர்வரும் திங்கட்கிழமை (07/03/2022) ஒரு மாத கால விடுமுறையின்  பின்னர் எமது பாடசாலை மூன்றாம்...
05/03/2022

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

எதிர்வரும் திங்கட்கிழமை (07/03/2022) ஒரு மாத கால விடுமுறையின் பின்னர் எமது பாடசாலை மூன்றாம் தவணைக்காக தொடங்க இருக்கின்றது.
இதற்காக மாணவர்களை கல்வி நடவடிக்கைகளுக்கு தயார் படுத்தும் முகமாக இன்றைய தினம் (05/03/2022) பாடசாலை வளாகம் மற்றும் வகுப்பறைகள் அதிபர் அவர்களின் தலைமையின் கீழ் ரிஸ்வி ஆசிரியர் அவர்களின் மேற்பார்வையின் கீழ் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் அவர்களும் இணைந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர்.....

Address

Punanai

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bt/Bc/Jeyanthiyaya Ahamed hiraz vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category