T/Pulmoddai Muslim Central College

T/Pulmoddai Muslim Central College T/Pulmoddai Muslim Central College (National School)
=>Established in 1905

🎓 க.பொ.த. (சாதாரண தரம்) 2025/2026 பரீட்சையில் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழா 🌸இன்று தி/த...
21/07/2026

🎓 க.பொ.த. (சாதாரண தரம்) 2025/2026 பரீட்சையில் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழா 🌸

இன்று தி/தி/புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில், அதிபர் S. சியானா அவர்களின் தலைமையில், க.பொ.த. (சாதாரண தரம்) 2025/2026 பரீட்சையில் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

🌟 இவ்வாண்டு 9A சித்தியைப் பெற்ற பழில் முஹம்மது பஷீஹ் மாணவர் பொன்னாடை போர்த்தி, மாலை, பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கி விசேடமாக கௌரவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்ற ஏனைய மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் ஆசிரியர்களால் மாலைகள் மற்றும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

💐 அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
உங்கள் உயர்கல்விப் பயணம் சிறப்பாக அமையவும், எதிர்காலம் வெற்றிகளாலும் சாதனைகளாலும் நிரம்பியதாக அமையவும் வாழ்த்துகிறோம்.

உயர் கல்வி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் மாணவர்களே! ✌️தி/தி/ புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் 2025/2026 க.பொ.த உயர்த...
25/05/2026

உயர் கல்வி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் மாணவர்களே! ✌️

தி/தி/ புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் 2025/2026 க.பொ.த உயர்தர பரீட்சை எழுதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை ஆராதனையைத் தொடர்ந்து கல்லூரியின் அதிபர் S.சியானா அவர்களின் தலைமையின் கீழ் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா பணியாளர்கள், SDEC,OBA, பெற்றார்கள்,மற்றும் இலங்கை வங்கி உரிமையாளர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இந்நிகழ்வின் முதற்கட்டமாக 3A சித்திகளை பெற்ற
1. அப்துல் சமது அஜ்மிலா பேகம்
2. நசீர் பாத்திமா ருஸ்தா
ஆகிய இரு மாணவிகளுக்கும் அதிபரினால் பொன்னாடை போர்த்தப்பட்டு மாலை, பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அவ்விரு மாணவிகளுக்கும் இலங்கை வங்கி முகாமையாளரால் பரசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஏனைய சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்களினால் மாலைகள் அணிவிக்கப்பட்டு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களுக்கு அணிவிக்கப்பட்ட பதக்கங்களுக்கான அனுசரணையை
SDEC செயலாளர் சகோதரர் யாகூப் அவர்களும், OBA உறுப்பினர் சகோதரர் பஸ்மில் அவர்களும் வழங்கி இருந்தார்கள். அல்லாஹ் அவர்களுடைய வாழ்விலும் செல்வத்திலும் பரக்கத்தை ஏற்படுத்துவானாக.

மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் மாணவச் செல்வங்களே!!!

இன்றைய தினம் வருடாந்த ஆசிரியர் இடம் மாற்றத்தின் மூலம் தி/தி/ புல்மோட்டை முஸ்லீம் மத்திய கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று  வந...
09/01/2026

இன்றைய தினம் வருடாந்த ஆசிரியர் இடம் மாற்றத்தின் மூலம் தி/தி/ புல்மோட்டை முஸ்லீம் மத்திய கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வந்த ஐந்து ஆசிரியர்களும் தங்களுடைய கடமையை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த ஆசிரியர்களை வரவேற்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் Mrs.S.SIYANA அவர்களின் தலைமையின் கீழ் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது இதன்போது அவ்வாசிரியர்கள் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள வீதியில் இருந்து மாலை அணிவிக்கப்பட்டு கோலாட்ட குழுவினரின் வரவேற்போடு மாணவர்களின் மிகுந்த கரகோஷத்திற்கு மத்தியில் காலை ஆராதனை முன்றலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அதிபரினால்அவ்வாசிரியர்கள் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.பின்னர் அவர்களுக்கு சிற்றுண்டிகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ்வாறு இன்று வருகை தந்த ஆசிரியர்களான

M.UBAITHUIIA SIR
MN.NAJIYA TEACHER
CMM.NAJA SIR
AR.JAMSITH SIR
S.SALAHUDEEN SIR

ஆகியோரை தி/தி/ புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் , ஆசிரியர்கள் ,கல்வி சாரா பணியாளர்கள், SDEC,OBA அனைவரும் இன் முகத்துடன் வரவேற்கின்றார்கள்.

23/10/2025
15/12/2024
அஸ்ஸலாமு அலைக்கும்,புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் க.பொ.த( சா/த) மாணவர்களுக்கான விசேட பரீட்சை வழிகாட்டல் கருத்தரங...
07/12/2024

அஸ்ஸலாமு அலைக்கும்,
புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் க.பொ.த( சா/த) மாணவர்களுக்கான விசேட பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு.

எதிர்வரும் திங்கட்கிழமை (09.12.2024) முதல் வியாழக்கிழமை
(12.12.2024 )வரை கணிதம், விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான விசேட பரீட்சை வழிகாட்டல் செயலமர்வுகள் சிறந்த வளவாளர்களைக் கொண்டு நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்காலப் பகுதியில் ஏற்கனவே வழங்கப்பட்ட நேரசூசியில் குறிப்பிடப்பட்ட பாடங்கள் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். மாணவர்களுக்கு மாதிரி வினாப்பத்திரங்கள் வழங்கப்பட்டு அவற்றுக்கு பரீட்சையில் எவ்வாறு விடையளிக்கப்பட வேண்டும் என்பதற்கான தெளிவான விளக்கங்கள் விசேட வளவாளர்களினால் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்படும்.

பாடங்கள் நடைபெறும் தினங்களும் அப்பாடங்களுக்கான வளவாளர்களின் பெயர் விபரங்களும் வருமாறு.

*திங்கள்*

கணிதம்

Nm.Nashath
Bsc Engineering Hons in (Transport management and logistics Engineering)
(Reading)
University of Moratuwa.

*செவ்வாய்*

விஞ்ஞானம்

AM.Sajith. Bsc
Teacher,
R/Novi/Dela TMV
Rathnapura.

M.Ikram
Medicine (BAMS)
Select for university

*புதன்*

தமிழ்

S.Pragas. BA
Teacher,
T/T/Pulmoddai Muslim central college.

*வியாழன்*

ஆங்கிலம்

Dr.MHM. Abdullah
(PHD in islamic banking and finance)
International islamic university.
Malaysia.

எனவே அனைத்து மாணவர்களும் செயல மர்வுகளில் கலந்துகொண்டு உங்கள் பெறுபேற்று மட்டத்தை அதிகரிக்க கூடிய வழிவகைகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
*நடைபெறும் இடம்*:
தி/தி/சதாம் வித்தியாலயம்

குறிப்பு: வழமைக்கு மேலதிகமாக வருகைதரும் மாணவர்கள் தமது இருக்கைகளுக்காக ஒவ்வொருவரும் ஒரு கதிரையைக் கொண்டு வரவும்.

நிருவாகம்
புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி.

இவ்வருடம் நடைபெற்ற இரண்டாம் மொழி சிங்கள எழுத்தாக்கப்போட்டியில் நமது பாடசாலை மாணவன் H .M. றிஹாப்வலய மட்டத்தில் முதலாம் இட...
07/10/2024

இவ்வருடம் நடைபெற்ற இரண்டாம் மொழி சிங்கள எழுத்தாக்கப்போட்டியில் நமது பாடசாலை மாணவன் H .M. றிஹாப்
வலய மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று நமது பாடசாலை மாணவர்கள் சிங்கள மொழியிலும் புலமை பெற்றவர்கள் என நிரூபித்துள்ளார்
அம்மாணவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

அம்மாணவனை வழிப்படுத்திய நமது பாடசாலை சிங்களப் பாட ஆசிரியையான நிமேசா காவிந்தி க்கும் மனமார்ந்த வாழ்துக்கள்

இதற்கு உதவி நல்கிய அனைவருக்கும் நன்றிகள்

 #அகில_இலங்கை_கட்டுரைப்_போட்டியில்_முதல்_இடம்இவ்வருடம் நடைபெற்ற அகில இலங்கை தமிழ்த்தினப்போட்டியில்தி / புல்மோட்டை முஸ்லி...
06/10/2024

#அகில_இலங்கை_கட்டுரைப்_போட்டியில்_முதல்_இடம்

இவ்வருடம் நடைபெற்ற அகில இலங்கை தமிழ்த்தினப்போட்டியில்
தி / புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி பாடசாலை சார்பாக தோற்றிய நமது பாடசாலை மாணவி
நபீல் நபாஷத் நுஸ்கா கட்டுரை வரைதல் போட்டியில் இலங்கையில் காணப்படும் அனைத்து பாடசாலைகளோடும் போட்டியிட்டு இலங்கையில் முதல் இடம் பெற்றுள்ளார்.

இச்சாதனையானது புல்மோட்டை மண்ணிற்கு ஓர் அடையாளத்தை பெற்று தந்துள்ளது.இது அனைவராலும் கொண்டாடி மகிழ வேண்டிய ஒரு நிகழ்வாகும்.

இம்மாணவிக்கு எமது புல்மோட்டை மத்திய கல்லூரி சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவுக்கின்றோம்.

புல்மோட்டை மத்திய கல்லூரியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கௌரவிப்பு... #அல்ஹம்துலில்லாஹ்!இன்றைய தினம் புல்மோட்டை மத்தி...
04/10/2024

புல்மோட்டை மத்திய கல்லூரியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கௌரவிப்பு...

#அல்ஹம்துலில்லாஹ்!
இன்றைய தினம் புல்மோட்டை மத்திய கல்லூரியில் 2023/24 வெளியாகிய க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதியான மாணவர்களை இன்றைய தினம் பாடசாலைக்கு அழைத்து கௌரவிப்புச் செய்து பரிசீல்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், OBA உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

2024ஆம் ஆண்டு வலயமட்ட பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற விவசாய விஞ்ஞானப் போட்டியில் முதல் ஐந்து இடங்களுக்குள் மூன்று இடங்களை த...
12/09/2024

2024ஆம் ஆண்டு வலயமட்ட பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற விவசாய விஞ்ஞானப் போட்டியில் முதல் ஐந்து இடங்களுக்குள் மூன்று இடங்களை தி/தி/புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

அந்த வகையில் தரம் 11ஐச் சேர்ந்த மாணவர்களான
SM.அம்ஜத் இரண்டாம் இடத்தையும்
N.நுஸ்பா ஷெரீன் மூன்றாம் இடத்தையும்
SHM.ஹஸ்மி ஐந்தாம் இடத்தையும்
பெற்றுள்ளனர்.இம்மாணவச்செல்வங்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். 🎓🎓🎓

இம்மாணவர்களை வழிப்படுத்தி நெறிப்படுத்திய விவசாய விஞ்ஞானப்பாட ஆசிரியர் AM.இர்சாத்sir அவர்களுக்கும், இம்மாணவர்களைப் போட்டி நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்ற S.நாஜிமா ஆசிரியைக்கும் எமது பாடசாலை நிருவாகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இம்மாணவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கிய எமது பாடசாலை யின் அதிபர்,பிரதிஅதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இம்மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜஸாக்குமுல்லாஹு ஹைறன். !!!
இம்மாணவச்செல்வங்கள் எதிர்வரும் மாகாணமட்டப்போட்டியிலும் வெற்றிவாகை சூடிட இறைவனைப் பிரார்த்திப்போமாக!!!

Address

Main Street
Pulmoddai
TRINCOMALEE,

Website

Alerts

Be the first to know and let us send you an email when T/Pulmoddai Muslim Central College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category