AKL Institute

AKL Institute The process is more important than the result.
(1)

நீண்ட தூரம், அறியாத இடம், புதிய சூழல்…அனைத்தையும் தாண்டி, எமது AKL Institute மீதும், எமது ஆசிரியர்களின் நேர்மையான வழிகாட...
17/01/2026

நீண்ட தூரம், அறியாத இடம், புதிய சூழல்…
அனைத்தையும் தாண்டி, எமது AKL Institute மீதும், எமது ஆசிரியர்களின் நேர்மையான வழிகாட்டுதல்மீதும் நம்பிக்கை வைத்து கல்வி கற்க வந்த ஒரு மாணவர், இன்று பல்கலைக்கழகத் தெரிவை பெற்றிருக்கிறார்.
மாஷா அல்லாஹ்!
மாணவன்
ஹானிப் Olivil பிரதேசத்தைச் சேர்ந்தவர்
இந்த வெற்றி ஒரு நாளில் வந்தது அல்ல.
அதற்குப் பின்னால் தொடர்ந்த உழைப்பு,
தளராத மனம்,
நல்ல ஒழுக்கம்,
ஆசிரியர்களுக்கு மரியாதை,
மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக
அல்லாஹ்வின் மீது வைத்த நம்பிக்கை இருக்கிறது.
பலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும்;
ஆனால் அந்த வாய்ப்புகளை வெற்றியாக மாற்றுவது
நற்பண்பும் நற்குணமும் கொண்டவர்களால் மட்டுமே சாத்தியம்.
இந்த மாணவர் அதற்கான உயிருள்ள உதாரணம்.
இந்த சாதனை,
“நாம் எங்கிருந்து வருகிறோம் என்பது முக்கியமல்ல,
நாம் எங்கு செல்ல விரும்புகிறோம் என்பதே முக்கியம்”
என்பதை ஒவ்வொரு மாணவருக்கும் நினைவூட்டுகிறது.
எமது மாணவர்கள் அனைவரும் இதனை ஒரு தூண்டுதலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
கஷ்டங்களைப் பார்த்து பின்னடையாமல்,
உழைப்பை வழியாகக் கொண்டு,
நம்பிக்கையை துணையாகக் கொண்டு முன்னேறுங்கள்.
வெற்றி நிச்சயம் உங்களை தேடி வரும்.
AKL Institute
மாணவர்களின் கனவுகளை நனவாக்கும்
ஒரு கல்வி நிலையமாக தொடர்ந்து பயணிக்கிறது.
இன்னும் பல சாதனைகள்,
இன்னும் பல பல்கலைக்கழக வெற்றிகள்
இங்கிருந்து உருவாகட்டும்.
அல்லாஹ் அனைவருக்கும் வெற்றியை வழங்குவானாக. ஆமீன். 🤲

AKL கல்வி நிறுவனத்திலிருந்து 2024 கல்வி ஆண்டில்,👉 முதல் தடவைத் தெரிவு👉 Vacancy step அடிப்படையிலும்எமது மாணவர்கள் பல்கலைக...
02/01/2026

AKL கல்வி நிறுவனத்திலிருந்து 2024 கல்வி ஆண்டில்,
👉 முதல் தடவைத் தெரிவு
👉 Vacancy step அடிப்படையிலும்
எமது மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளனர் 🎓
அல்ஹம்துலில்லாஹ் 🤲
எமது கல்வி நிறுவனத்திலிருந்து,
🔹 பொறியியல்
🔹 மருத்துவம்
🔹 மற்றும் ஏனைய உயர் துறைகளில்
எமது மாணவர்கள் தமது உயர்கல்விப் பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும்,
புல்மோட்டை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஊடாகவும்,
தாம் கற்ற கல்வியையும்,
தன்னாலான உதவிகளையும் சமூகத்திற்காக வழங்கி வருவது
எமக்கு அளவில்லா மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது 🌱
✨ இம்முறையும்…
எமது மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கிறார்கள் என்பது
AKL கல்வி நிறுவனத்திற்கான இன்னொரு மைல்கல்லாகும் .

📌 இந்த வெற்றியின் பின்னணியில்
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு வழிகாட்டல்
மாணவர்களின் விடாமுயற்சி
🤲 அனைத்திற்கும் மேலாக அல்லாஹ்வின் நாட்டம் இவையன்றி வேறெதுவுமில்லை

அல்லாஹ் எமது மாணவர்களின் அறிவை பயனுள்ளதாக ஆக்கி,
உம்மத்துக்கும் சமூகத்துக்கும் ஒளியாக மாற்றுவானாக… ஆமீன்

- AKL Institute

Warm birthday wishes to our respected Biology teacher,Abdul Mubarak Sajith  SirHappy Birthday, Sir! 🎉May Allah grant you...
15/12/2025

Warm birthday wishes to our respected Biology teacher,
Abdul Mubarak Sajith Sir
Happy Birthday, Sir! 🎉
May Allah grant you abundant blessings. Aameen 🤲

இன்று க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகிறது ✨இந்தப் பயணம் மாணவர்களாகிய உங்களின் கனவுகளின் கதவுகளைத் திறக்கும்ஒரு புதிய த...
10/11/2025

இன்று க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகிறது ✨
இந்தப் பயணம் மாணவர்களாகிய உங்களின் கனவுகளின் கதவுகளைத் திறக்கும்
ஒரு புதிய துவக்கமாகட்டும்

நீங்கள் இதுவரை காட்டிய உழைப்பும், தன்னம்பிக்கையும்
இன்று உங்களை வெற்றியின் உச்சிக்குக் கொண்டு செல்லட்டும். மேலும் உங்கள்
எண்ணங்களும் அபிலாசைகளும் அனைத்தும் நனவாகி,
உங்கள் முயற்சியின் ஒவ்வொரு சொட்டு வியர்வையும்
வெற்றியின் இனிமையான பலனாக மாறட்டும்

ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹுஎமது கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர் பர்ஷாத் அவர்களின் அன்புத் தாயார் ...
02/05/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
எமது கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர் பர்ஷாத் அவர்களின் அன்புத் தாயார் இவ்வுலகை விட்டு காலமானார்கள் என்பதை மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கின்றோம்.
اللَّهُمَّ اغْفِرْ لَهَا وَارْحَمْهَا، وَعَافِهَا وَاعْفُ عَنْهَا، وَأَكْرِمْ نُزُلَهَا، وَوَسِّعْ مُدْخَلَهَا، وَاغْسِلْهَا بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهَا مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ

அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்களுக்குப் பரிசுத்தமான இடமளித்து, சுவர்க்கத்தில் குடியமர்த்துவானாக.
ஆமீன்

மாணவர்களின் மனஉளைச்சலை கருத்தில் கொண்டு, மறுஅறிவித்தல் வழங்கப்படும் வரை வகுப்புகள் நடைபெறாது என்பதைவும், அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் ஜனாஸாவிலும் துஆவில் பங்கேற்று இறைவனிடம் எம் மாணவனின் தாயாருக்கு பிராத்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

– AKL Institute நிர்வாகம்

2024 க.பொ.த (உ/த) பெறுபேறுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கைஇன்று 2024 ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பெறுபேறுகள் வெளியாகியுள்ள ...
27/04/2025

2024 க.பொ.த (உ/த) பெறுபேறுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை

இன்று 2024 ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், எமது பிரதேசத்தில் பெறுபேறுகளின் வீழ்ச்சி பற்றிய பல்வேறு வாதங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
2020 முதல் 2023 வரையிலான பெறுபேறுகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டிருந்ததை ஒப்பிடுகையில், இம்முறையிலான பெறுபேறுகளில் ஏற்பட்ட மாற்றம், மக்கள் மத்தியில் 'வீழ்ச்சி' என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருப்பது இயல்பானதே.

ஆனாலும், 2024 ஆம் ஆண்டில் பரீட்சையில் தோற்றி 28 மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை (Alhamdulillah) பெற்றுள்ளனர். துரதிஷ்டவசமாக சிறு தடைகளை சந்தித்திருந்தாலும், அவர்கள் முன்னேறும் நம்பிக்கை எங்களின் உறுதியை வலுப்படுத்துகிறது.
அவர்களுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு, வெற்றியை நோக்கி அவர்கள் வழிநடத்தப்படுகிறார்கள்.

இதனை முன்னிறுத்திக் கொண்டு, உறங்கு நிலையில் உறங்கிக் கொண்டிருந்த சில முனாபிக்குகளின் போலியான புகார்களும் இட்டுக்கட்டல்களையும் எதிர்கொண்டு, நாங்கள் உண்மையைப் பேசுவதில் பின்வாங்கவில்லை.
எமது சாதனைகளையும் முயற்சிகளையும் முந்தி விடும் வகையில், நகைச்சுவையான அவதூறுகளை பரப்பும் முயற்சிகள் நடைபெற்று வருவதைக் காணலாம்.
எனினும், எது உண்மை, எது பொய் என்பதை இம்மண் மக்கள் நன்கு அறிவர் என்பதால், அவற்றை நாங்கள் கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை.

பொறியியலாளர் அப்துல் ஹலீம் இஸ்பார் மற்றும் உயிரியல் பாட ஆசிரியர் அப்துல் முபாறக் சாஜித் ஆகியோரின் உறுதி, கடமை, தியாகம் ஆகியவை எம்மிடையே அறியப்பட்ட உண்மைகள்.
அவர்கள் செய்த உழைப்பை மறைக்க எடுக்கப்படும் எந்த முயற்சியும் வெற்றிபெறாது.

2024 க.பொ.த (உ/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் விபரம்

AKL Institute

அல்ஹம்துலில்லாஹ்...  #எங்களில்_ஒருவர்!வாழ்த்துகள் Seiyyath Mohamed Mohamed Ameenதிறந்த பல்கலைக்கழகத்தின் ஆரம்பக் கல்வி க...
09/04/2025

அல்ஹம்துலில்லாஹ்... #எங்களில்_ஒருவர்!

வாழ்த்துகள் Seiyyath Mohamed Mohamed Ameen

திறந்த பல்கலைக்கழகத்தின் ஆரம்பக் கல்வி கற்பித்தலில் சிறப்புக் கல்வி மாணியாக (B.Ed in Primary Education - Hons) நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றதைக் கொண்டாடும் இந்த நொடியை, AKL நிர்வாகம் பெருமிதத்தோடும் மகிழ்ச்சியோடும் பகிர்கிறது.

எமது ஊரின் கணித மற்றும் விஞ்ஞானத்துறையில் முன்னேற்றத்தை நோக்கி எம்மோடு சேர்ந்து பல தியாகங்களை மேற்கொண்டு, எமது மாணவர்களுக்கு கல்வி வழங்க எம்மோடு பக்கபலமாக இருக்கும் அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு தொடரும் பயணம் வெற்றி பெறவும் வாழ்த்துகிறோம்.

📢 கடைசி நாளான இன்று உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்!📅 2027 கல்வியாண்டின் கணித, உயிரியல் விஞ்ஞானப் பிரிவு அனுமதிக்கான...
03/04/2025

📢 கடைசி நாளான இன்று உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்!

📅 2027 கல்வியாண்டின் கணித, உயிரியல் விஞ்ஞானப் பிரிவு அனுமதிக்கான விண்ணப்ப படிவம் நிறைவடையும் திகதி இன்றாகும்.

🔹 இதுவரை விண்ணப்பப் படிவத்தை பெறாத மாணவர்கள், உடனே விண்ணப்பத்தை பெற்று அவற்றை பூரணப்படுத்தி AKL கல்வி நிறுவன காரியாலயத்தில் இன்று சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

📞 மேலதிக தகவலுக்கு தொடர்புகொள்ளவும்:
📲 071 976 4845
📲 071 232 3482
📲 071 651 5203

உங்கள் கல்வி பாதையை சிறப்பாக தொடங்குவதற்கு இதுவே இறுதி நாளாகும் !

- AKL Institute

"تَقَبَّلَ اللّهُ مِنَّا وَمِنْكُمْ" Eid Mubarak (Taqabbalallahu minna wa minkum)"May Allah accept [the good deeds] from...
30/03/2025

"تَقَبَّلَ اللّهُ مِنَّا وَمِنْكُمْ" Eid Mubarak

(Taqabbalallahu minna wa minkum)
"May Allah accept [the good deeds] from us and from you."

எமது கணித விஞ்ஞானப் பிரிவானது  பல்கலைக்கழகத்திற்கான நுழைவாயிலாக திகழ்வது சாதாரணம் அல்ல. இது ஒருநாள் காலத்தில் கிடைத்த வெ...
29/03/2025

எமது கணித விஞ்ஞானப் பிரிவானது பல்கலைக்கழகத்திற்கான நுழைவாயிலாக திகழ்வது சாதாரணம் அல்ல. இது ஒருநாள் காலத்தில் கிடைத்த வெற்றி அல்ல; தியாகங்களின், அர்ப்பணிப்பின், உழைப்பின் சாட்சியமாகும்.

நாங்கள் தொடங்கியபோது எதிர்பார்ப்புகளை மீறிய சவால்கள் நம்மை சூழ்ந்தன. ஆனால், அந்தச் சவால்கள் எங்கள் நோக்கத்தைக் குலைக்கவில்லை; மாறாக, எங்களை மேலும் வலுப்படுத்தின. மாணவர்கள் உயர்நிலை கல்விக்குச் செல்லும் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் காரணம், எங்கள் ஆசிரியர்களின் அயராத உழைப்பு, பெற்றோரின் ஒத்துழைப்பு, மாணவர்களின் விடாமுயற்சி, மேலும் கல்வியை ஒரு தூய செயலாகக் கொண்டாடும் எங்கள் AKL கல்வி நிறுவன குடும்பத்தின் ஒற்றுமையாகும்.

நேற்றைய தினம் வெளியாகிய பல்கலைக்கழக மூன்றாம் காத்திருப்பு பட்டியலின் அடிப்படையில் எமது மாணவர்கள் மூவருக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது அல்ஹம்துலில்லாஹ்
அவ்வகையில்,

1. அப்துல் ஸவாஹீர் முகம்மது நப்ரீஸ்
2. முகம்மது லாபீர் அகமது ரிழாகான்
3. ஹூசைன் முகம்மது பர்வீஸ்

இந்நிலையில், எங்களை வீழ்த்த எண்ணிய விமர்சனங்களும் பொய்யான தகவல்களும் வழமைபோல் வந்தன. ஆனால், காய்க்கும் மரத்திற்கே கல்லடி என்பது போல, வளர்ச்சி அடையும் அமைப்புகளே எதிர்ப்புகளுக்கு இலக்காகின்றன. நாம் அதனை பார்த்து கவலைப்படவில்லை, பின்னோக்கி செல்லவில்லை. ஏனெனில், நாங்கள் தொடங்கிய பயணம் அல்லாஹ்வுக்காக.

தடைகளை கடந்து, வாய்ப்புகளை உருவாக்கி, மாணவர்கள் ஒளிவிழுக்கும் அறிவுக் கோபுரமாய் AKL கல்வி நிறுவனமானது தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு எமது மாணவர்களே சான்று பகர்வர். எங்கள் இலக்கு ஒன்றே — கல்வியின் வாயிலாக ஒளியைப் பரப்புவது. வெற்றியின் உச்சியை நோக்கி, இன்னும் பல உயரங்களை அடைய நாங்கள் தயாராக இருக்கிறோம்! இன்ஷா அல்லாஹ்

- AKL Institute

கணித,விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான அனுமதி விண்ணப்பங்கள் கோரப்படுகிறது இம்முறை க.பொ.த சா/தரப் பரீட்சைக்கு தோற்றி 2027 ஆம்...
28/03/2025

கணித,விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான அனுமதி விண்ணப்பங்கள் கோரப்படுகிறது

இம்முறை க.பொ.த சா/தரப் பரீட்சைக்கு தோற்றி 2027 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையை எதிர்நோக்கவுள்ள மாணவர்களுக்கான அனுமதி விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது

விண்ணப்பப் படிவங்களை AKL Institute இன் அலுவலகம் மற்றும் கீழ் குறிப்பிடப்படும் தொடர்பிலங்கள் மூலம் தொடர்பு கொண்டு விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

தொடர்பு இலக்கம் :
+94 712323482
+94 719764845
+94 716515203

விண்ணப்பப்படிவம் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதி (03.04.2025) ஆகும்.

24/03/2025

Address

BOC Bank Road Pulmoddai
Pulmoddai
AKLINSTITUTE

Website

Alerts

Be the first to know and let us send you an email when AKL Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category