24/12/2013
தப்ஸீர் கலையின் தோற்றமும் வளர்சியும்
---------------------------------------------------------------------------------------
பகுதி :- 01
தப்ஸீர் என்ற அரபுச்சொல்லுக்கு, மொழிரீதியாக, விளக்கமளித்தல், தெளிவுபடுத்தல், விளங்கப்படுத்தல் போன்ற கருத்தினை கொடுக்க முடியும்.
குர்ஆனில் உள்ள அனைத்து சொற்கள், வசணங்ளுக்கு நபி ஸல் அவர்களால் விளக்கம் கொடுக்கப்பட வில்லை. அதே போன்று நபித்தோழர்களான ஸஹாபாக்களாலும் கொடுக்கப்படவில்லை, மேலும் ஸஹாபாக்கள் காலத்தில் வாழ்த தாபியீன்களாலும் முழுக்குர்ஆனுக்கான விளக்கம் கொடுக்கப்பட வில்லை. இவர்களுடைய காலத்தில் குர்ஆன் வசணங்களை விளங்கிக்கொள்வதில் பிரச்சினைகள் காணப்படவில்லை. தேவைகளுக்கும், சந்தர்பங்களுக்கும் ஏற்பவே மேற்குறிப்பிடப்பட்ட காத்தில் வாழ்ந்த உத்தமர்ள் குர்ஆனுக்கான விளக்கத்தினை வளங்கினர்.
முழு குர்ஆன் வசணங்களுக்கு முதல் மதலில் விளக்கம் கொடுத்தவர் இமாம் இப்னு ஜரீர் மஹம்மத் அத்தபரி ஆவார்கள்.
தப்ஸீர் கலை கடந்து வந்துள்ள பாதையினை நான்கு கட்டங்களாக பிரித்து நோக்க முடியும்.
01. தவ்ரு தக்ஸீஸ் (طور التأسيس) – ஆரம்ப காலம் அல்லது கட்டம்.
02. தவ்ரு தஃஸீல் (طور التأصيل) –அடிப்படைக்காலம் அல்லது கட்டம்.
03. தவ்ரு தப்ரீக் (طور التفريغ) – பிரிவுகள் அல்லது, வகைகளாக உருவான காலம், அல்லது கட்டம்.
04. .தவ்ரு தஜ்தீத் (طول التجديد) – புதிய அல்து நவீன காலம் அல்லது கட்டம்.
01. தவ்ரு தக்ஸீஸ் (طور التأسيس)
இக்காலம் நபி (ஸல்) அவர்களின் காலாத்தில் ஆரம்பித்து, ஸஹாபாக்கள், தாபியீன்கள் மற்றும் தாபியீ தாபியீன்கள் காலம் வரை நீண்டு செல்கின்றது.
இக்காலத்தை மூன்றாக பிரித்து பார்க்க முடியும்.
01.நபி (ஸல்) அவர்களின் காலம்.
02.ஸஹாபாக்களின் காலம்.
03.தாபியீன்களின், தாபியீ தாபியீன்களின் காலம்.
நபி (ஸல்) அவர்களின் காலம்
நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு கூறிய, ஓதிக்காட்டிய குர்ஆன் வசனங்களில் ஏதும் விளங்காமல் இருக்கும் சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடத்தில் கேட்கும் போது நபி (ஸல்) அவர்கள் குறித்த வசனங்களை விளங்கப்படுத்துவார்கள், அல்லது குறித்த ஒரு வசணத்தை பிழையாக விளங்கிதன் அடிப்படையில், செயற்படுத்தி பின்னர் நபி (ஸல்) அவர்களிடத்தில் கூறுகின்ற போது அதன் சரியான முறையினை விளங்கப்படுத்துவார்கள். உதாரணமாக, நோன்பு பிடிப்பது, திரப்பதின் நேரம் பற்றி வந்திருக்கம் வெள்ளை நூல் கருத்த நூல் என்ற வசனத்தை நபித்தோழர் பிழையாக விளங்கி மறு நாள் நபி (ஸல்) அவர்களிட்த்தில் முறையிட்ட போது அதனை விளங்கப்படுத்தினார்கள், அல்லது குறித்த குர்ஆன் வசனம் பற்றிய தங்கள் கருத்தை ஸஹாபாக்கள் கூறுகின்ற நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் அதனை தெளிவு படுத்துவார்கள். இதற்கு பல உதாரணங்களை காணமுடியும்.
நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் வசனங்கள் அனைத்திற்கும் தங்களின் விளக்கத்தினை கொடுக்க வில்லை.
ஸஹாபாக்களின் காலம்
நபி (ஸல்) அவர்களின் மறைவில் இருந்து ஸஹாபாக்களின் காலம் ஆரம்பிக்கின்றது. நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்னால் ஸஹாபக்கள் குர்ஆன் வசனங்ளுக்கு விளக்கங்களை கொடுத்த போதிலும், இக்காலத்தில் மக்கா, மதீனா, கூபா, ஷாம் பிரதேசங்களில் பிரசித்தி பெற்ற தப்ஸீர்கலை மத்ரஸாக்கள் காணப்பட்டன.
மக்கா
மக்காவில் தப்ஸீர்கலையின் இமாமாக வர்ணிக்கப்படும், நபி (ஸல்) அவர்களின் சிறப்பு துஆவினை பெற்ற அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களை ஆசிரியராக காணப்பட்டார்ள். இந்த மத்ரஸாவில் இருந்து முஜாஹித் இப்னு சுபைர், சயீத் இப்னு சுபைர், தாவூஸ் இப்னு கீஸான் அல் யமானியீ, இக்ரீமா அல் பரீரீயி, அதா இப்னு அபீ ரிபாஹ், போன்ற தாபியீன்கள் தப்ஸீர் கலை இமாம்களாக, முபஸ்ஸிரின்களாக கல்வி கற்று வெளியேறினார்கள்.
மதீனா
மதீனாவில் காணப்பட்ட தப்ஸீர் கலை மத்ரஸா , நபி தோழர் உபை இப்னு கஃப் அல் அன்ஸாரி (ரழி) அவர்களை ஆசிரியராக கொண்டு செயற்பட்டது. அபூ ஆலியா, ரபீ இப்னு மிஹ்ரான் அர்ரியாஹீ, முஹம்மத் இப்னு கஃப் அல்கர்ழீ, சயீத் இப்னு முசையப், சய்த் இப்னு அஸ்லம் போன்ற தாபியீன்கள் தப்ஸீர் கலை இமாம்களாக, முபஸ்ஸிரின்களாக கல்வி கற்று வெளியேறினார்கள்.
கூபா
கூபாவில் காணப்பட்ட தப்ஸீர்கலை மத்ரஸா நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்ளை ஆசிரியராக கொண்டு செயற்பட்டதை காணமுடியும். இந்த மத்ரஸாவில் இருந்து அலகமத் இப்னு கைஸ் அன்நஹ்யீ, மஸ்றூக், சிர் இப்னு ஹுபைஷ், அபூ அப்துர்ரஹ்மான் அப்துல்லாஹ் இப்னு ஹபீப் அஸ்ஸலமீ, அஸ்வத் இப்னு யஸீத், ஆமீர் அஷ்ஷஃபீ, ஹஸன் அல் பஸரீ, கதாதா இப்னு துஆமாஹ், உபைதத அஸ்ஸலமீ போன்ற தாபியீன்கள் தப்ஸீர் கலை இமாம்களாக, முபஸ்ஸிரின்களாக கல்வி கற்று வெளியேரினார்கள்.
ஷாம்
ஷாம் பிரதேசத்தில் காணப்பட்ட மத்தரஸா ,நபித்தோழர் அபூ மூஸா அல் அஷ்அரீ (ரழி) அவர்களை ஆசிரியராக கொண்டு இயங்கிய போதிலும், அதைப்பற்றி அதிமாக புத்தகங்களிள் காணப்படவில்லை.
தாபியீன்களின் காலம்
ஸஹாபாக்களின் காலத்தில் குறிப்பிடட்பட்டுள்தை போன்று தாபியீன்கள் ஸஹாபாக்களிடத்தில் இருந்து தப்ஸீரை கற்றுக்கொண்டார்கள். இவர்களுக்கு ஸஹாபாக்கள் ஆசிரியர்களாக இருந்தனர். ஸஹாபாக்களிடம் இருந்து கற்றுக்கொண்டதோடு, தாங்கள் விளங்கிக்கொண்டதன் அடிப்படையிலும் குர்ஆனுக்கு விளக்கங்கள் கொடுத்தார்கள்.
தாபியீ தாபியீன்களின் காலம்
தாபியி தாபியீன்கள் ஸஹாபாக்களின் மாணவர்களான தாபியீன்களிடம் இருந்து தப்ஸீரினை கற்றதோடு, நபி (ஸல்) அவர்களால் தெளிவு படுத்தப்படாத வசனங்களை தாபியீன்கள் கேட்டபோது , ஸஹாபாக்கள் தாங்கள் விளங்கிய விளக்கத்தினை சொன்னது போன்று , தாபியீன்களும், தாபியி தாபியீன்களும் தாங்கள் விளங்கியதை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தனர்.
இக்காலத்தில் பிரசித்தி பெற்ற தப்ஸீர்கலை இமாம்களாக, யசீத் இப்னு ஹாரூன் அஸ்ஸலமீ, ஷூஃபா இப்னு அல் ஹஜ்ஜாஜ், வகீஃ இப்னு அல் ஜர்ராஹ், சுப்யான் இப்னு உயைனா, இஸ்மாயீல் இப்னு அப்துர்ரஹ்மான், அஸ்ஸதி அல் கபீர், மகாதில் இப்னு சுலைமான், அப்துல் மலிக் இப்னு ஜரீஹ், அபூ பக்கர் இப்னு அபீ ஷைபா, அப்துல் ரஸ்சாக், இப்னு ஹிமாம், யஹ்யா இப்னு ஸலாம் அல்பசரீ, அப்து இப்னு ஹமீத் போன்றவர்களை குறிப்பிடலாம்,
இக்காலத்தில் சிலர் தங்களின் தப்ஸீர்களை தொகுத்துள்ளதோடு, தாபியீன்களால் குர்ஆன் வசனங்களுக்கு கொடுக்கப்பட்ட விளங்கங்களும் ஒன்று சேர்கப்பட்டன.
தப்ஸீர் முஜாஹித், தப்ஸீர் இப்னு அப்பாஸ், தப்ஸீர் ஹஸனுல் பசரீ, தப்ஸீர் கதாதா, தப்ஸீர் சுப்யான் அத்தவ்ரீ, தப்ஸீர் அஸ்ஸதீ அல் கபீர், தப்ஸீர் அப்துல்ராஸிக் அஸ்ஸன்ஆனி போன்றவைகளை உதாரணங்களாக குறிப்பிடலாம்.
இக்காலத்தில் காணப்பட்ட தப்ஸீர்களை பார்கும் போது,
சந்தர்பங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதால், இக்காலத்தில் முழு குர்ஆன் வசனங்களுக்கும் தப்ஸீர் விளக்கங்கள் கூறப்படவில்லை. இக்காலத்தில் இரண்டு வகையான தப்ஸீர்கள் காணப்பட்டன.
01.தப்ஸீர் கலை அறிஞர்கள் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் சொல்லும் போது நபி (ஸல்) , ஸஹாபக்களின் கூற்றுகளின் அடிப்படையில் மாத்திரம் தங்கள் விளக்கங்களை வழங்கினர், எழுதினர்.
இந்த வகை தப்ஸீரினை அரபியில் அத்பஸீர் அல் அதரி என்று சொல்லப்படும். இந்த வகை தப்ஸீரின் இஸ்தாபகர்களாக, இப்னு அப்பாஸ், முஜாஹித், இப்னு ஜரீர், கதாதா, ஹஸன் அல் பஸரி போன்றவர்கள் பிரசித்தி பெற்றவர்களாவர்.
02. குர்ஆன் வசனங்களில் வரகூடிய சொற்களுக்கான கருத்து, அச்சொல் எந்த மூலத்தில் இருந்து பிறந்தது, அரபு கவிதைகளிள் இருந்து அதற்கு ஆதாரங்களை முன்வைத்தல், தெளிவுபடுத்துதல், போன்ற அரபு இலக்கனம் சார்ந்ததாக தபஸீர்கள் காணப்பட்டன. இந்தவகை தப்ஸீர்களை அரபியில் அத்தபஸீல் அல் பயானியி என்று சொல்லப்படும்.
இந்த வகை தப்ஸீர்களுக்கு, இமாம் அபூ உபைதத மஃமர் அவர்ளின் மஜாஸூல் குர்ஆன், இமாம் பர்ரா அவர்களின் மஆனியல் குர்ஆன், இமாம் அஹ்பஷ் அவர்களின் மஆனியல் குர்ஆன், இமான் இப்னு குதைபா அவர்களின் தவ்வீலு முஷ்கிலில் குர்ஆன் போன்றவற்றை குறிப்பிடலாம்.
இந்த வகை தப்ஸீரின் இஸ்தாபகர்களாக, அல் பர்ரா, அல் கசாயீ, அல் அஃபஷ், இப்னு குதைபா, அஸ்ஸுஜாஜ் போன்றவர்களை பிரதானமானவர்கலாவர்.