Tk/Pottuvil methodist tamil maha vidyalayam

Tk/Pottuvil methodist tamil maha vidyalayam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tk/Pottuvil methodist tamil maha vidyalayam, Education, Hospital Road, Pottuvil.

இவ்வாண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக தோற்றிய விசேட தேவையுடைய மாணவர்கள் மத்தியில் எமது பாடசால...
11/09/2025

இவ்வாண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக தோற்றிய விசேட தேவையுடைய மாணவர்கள் மத்தியில் எமது பாடசாலை சார்பாக தோற்றி சித்தி பெற்று எமது பாடசாலைக்கும் திருகோவில் கல்லி வலயத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களையும் அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று எமது வித்தியாலய அதிபர் தலைமைவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொத்துவில் மெதடிஸ்த தேவாலய போதகர், திருகோவில் வலயக் கல்லி பணிமனையின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. A. நசீர் சேர்அவர்களும், எமது வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் அவர்களும் தற்போது பொத்துவில் மத்திய கல்லூரியின் அதிபராக கடமையாற்றிவரும் திரு.நபீஸ் சேர் அவர்களும் பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.T.உதயகுமார் சேர் அவர்களும் விசேட கல்வி இணைப்பாளர் திரு.S.விவேகாநந்தராஜா சேர்அவர்களும், ஆரம்க் கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி.K.ஜெயந்த அவர்களும், Deaf Link அமைப்பின் எமது பிராந்திய இணைப்பாளர் திரு. ரொசான் அவர்களும், திகோ/விபுலானந்த வித்யாலய அதிபர், திகோ/ இன்ஸ்பெக்டர் ஏத்தம் அ. த. க. பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அதிதிகளால் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று மூன்று மாணவர்களுக்கும் அவர்களை சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள வழிப்படுத்திய ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இன்றைய தினம் (2025.09.10) எமது பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தின்  ு_திறன்_வகுப்பறை கொமர்ஷல் வங்கியின் முழு ...
10/09/2025

இன்றைய தினம் (2025.09.10) எமது பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தின் ு_திறன்_வகுப்பறை கொமர்ஷல் வங்கியின் முழு அனுசரணையின் கீழ் அதிபர் தலைமையில் கொமர்ஷில் வங்கியின் பிரதம முகாமையாளர் குழுவினரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மாணவர் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

10/09/2025



2025ம் ஆண்டு நடைபெற்ற 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கமு/திகோ/பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மாகா வித்தியாலயத்தின் விசேட கல்வி பிரிவில் பரீட்சைக்கு தோற்றி குறித்த பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளான N.samira, R.nuha. H.fathima Ayna ஆகிய மூவரையும் பாடசாலையின் அதிபர். ஆசிரியர்கள்.பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.

இன்று (01/08/2025) கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாஸித் அவர்கள் எமது பாடசாலைக்கு திடீர் விஜயமென்றினை மேற்கொண்டார்....
01/08/2025

இன்று (01/08/2025) கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாஸித் அவர்கள் எமது பாடசாலைக்கு திடீர் விஜயமென்றினை மேற்கொண்டார்.

குறித்த விஜயத்தின் போது, பாடசாலையின் தற்போதைய நிலைமை, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்களுடைய கற்றல் நடவடிக்கைகள் தொடர்பாக பாடசாலை அதிபர், ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

க.பொ.த(உ/த) இல் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி 2025.08.05 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
31/07/2025

க.பொ.த(உ/த) இல் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி 2025.08.05 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் சித்திர வேலாயுதர் ஆலய தீர்த்தோற்சவம் காரணமாக (24)நாளை பாடசாலை  விடுமுறை...நாளைதினம் (வியாழன் 24/07/2025) தி...
23/07/2025

திருக்கோவில் சித்திர வேலாயுதர் ஆலய தீர்த்தோற்சவம் காரணமாக (24)நாளை பாடசாலை விடுமுறை...

நாளைதினம் (வியாழன் 24/07/2025) திருக்கோவில் சித்திர வேலாயுதர் ஆலய தீர்த்தோற்சவம் காரணமாக பாடசாலை விடுமுறையை வழங்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளரிடமிருந்து தற்போது அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
எனவே நாளை பாடசாலை நடைபெறமாட்டாது என்பதை பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களுக்கும் அறியத்தருகின்றேன்.
அதேவேளை இதற்கான பதில் பாடசாலையை எதிர்வரும் 26/07/2025 சனிக்கிழமை அன்று நடத்த வேண்டும் எனவும் இதன்போது ஆசிரியர்களதும் மாணவர்களதும் முழுமையான வரவை அதிபர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

-அதிபர்-

திகோ / பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய  #சிறந்த_பெறுபேற்றினை_பெற்ற_மாணவர்கள்_கௌரவிப்பு...திகோ / பொத்துவில் மெதட...
21/07/2025

திகோ / பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய #சிறந்த_பெறுபேற்றினை_பெற்ற_மாணவர்கள்_கௌரவிப்பு...

திகோ / பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் அண்மையில் வெளியான கா.பொ.த.சாதாரண தர பரீட்சையில் 01 மாணவி "9A" சித்தியையும், 01 மாணவி "8A,B"சித்தியையும்,
02 மாணவிகள் “ 6A 3B” சித்தியினையும் மற்றுமொரு மாணவி 5A,2B,C,S சித்தியினையும் பெற்றிருந்தனர்.

பெறுபெற்றினை பெற்ற மாணவர்களான
K.kirushtikka-9A
S.Nathursha - 8A,B
S.Sujanu - 6A,3B
T.Thivinka Thilrukshi - 6A,3B
S.Sathurshiya 6A,B,2C
A.Thenila 5A,2B,C,S

மேற்படி மாணவர்களை அதிபர்,பிரதி அதிபர்கள்,கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி கெளரவித்திருந்தனர்.

இந் நிகழ்வானது (21.07.2025) காலை ஒன்று கூடலில் பாடசாலையின் அதிபர்.K.கமலராஜன் தலைமையில் இடம்பெற்றது.

2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 1 மாணவி "9A" சித்தியையும் மற்றும் ஒரு மாணவி "8A,B"சித்தியையும்..2 மாணவி...
12/07/2025

2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 1 மாணவி "9A" சித்தியையும் மற்றும் ஒரு மாணவி "8A,B"சித்தியையும்..2 மாணவிகள் 6A3B" சித்தியையும் மற்றும் இரு மாணவிகள் முறையே 6A,B,2C சித்தியினையும் 5A,2B,C,S சித்தியினையும் பெற்றுள்ளனர்.

மேற்படி சித்தி பெற்ற முன்னணியிலுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எமது பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துகளை தெரிவிப்பதோடு இந்நிலையினை பெறுவதற்கு வழிகாட்டிய அதிபர், பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றிகளும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொத்துவில் கோட்ட மட்ட தமிழ் தினப் போட்டியில் பங்குபற்றி சாதனை படைத்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வா...
02/07/2025

பொத்துவில் கோட்ட மட்ட தமிழ் தினப் போட்டியில் பங்குபற்றி சாதனை படைத்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வானது இன்று காலை பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களை தயார் செய்த ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் ஒழுங்குபடுத்தலில் மனித நேயம் அறக்கட்டளை அமைப்பின் அனுசரணையின் கீழ் எமது பாடசாலை...
17/06/2025

விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் ஒழுங்குபடுத்தலில் மனித நேயம் அறக்கட்டளை அமைப்பின் அனுசரணையின் கீழ்
எமது பாடசாலைக்காக வழங்கப்பட்ட ஆனது மாணவர்களினது பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(2025.06.17) எமது பாடசாலை அதிபர் திரு.K.கமலராஜன் sir தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதன் போது விசேட அதிதிகளாக பொத்துவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.T.உதயகுமார் sir மற்றும் எமது பாடசாலைக்கான EPSI Coordinator திரு.K.குலேந்திரேஸ்வரன் sir ஆகியோர் கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர். மேலும் கௌரவ அதிதிகளாக விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் ஸ்தாபகரும் இணைப்பாளருமான திரு.Vயதுர்ஷன், தலைவர் திரு.T.கோபிதன், பொருளாளர் திரு.M.திலக்‌ஷன், செயலாளர் திரு.R.ஜனுஷன் அகியோரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் இந் நிகழ்வின் போது விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் ஸ்தாபகரும் இணைப்பாளருமான திரு.Vயதுர்ஷன் மற்றும் தலைவர் திரு.T.கோபிதன் ஆகியோருக்கு எமது பாடசாலைச் சமூகம் சார்பாக பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இச் Smart classroom ஆனது எமது பாடசாலையிற்கு கிடைப்பதற்கு சகல வகையிலும் உதவிகள் புரிந்த அதிபர்,பிரதியதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், கல்விசார ஊழியர்கள் மற்றும் மணவர்கள் அனைவருக்கும் எமது பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

👆 ஜூன் 5 -  ுற்றாடல்_தினத்திற்காக_பாடசாலைமட்ட_நடவடிக்கைகளை_மேற்கொள்ளல்நேற்றைய தினம் (2025.06.05) எமது பாடசாலையில் முன்னெ...
06/06/2025

👆 ஜூன் 5 - ுற்றாடல்_தினத்திற்காக_பாடசாலைமட்ட_நடவடிக்கைகளை_மேற்கொள்ளல்

நேற்றைய தினம் (2025.06.05) எமது பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட மர நடுகை மற்றும் சுற்றாடல் தின நிகழ்வுகள்.

Address

Hospital Road
Pottuvil
32500

Telephone

+94768374228

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tk/Pottuvil methodist tamil maha vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category