01/05/2026
தேசிய மட்டத்தில் எமது பாடசாலைக்குக் கிடைத்த மற்றுமொரு மகுடம்!
#தேசிய_மட்ட_கணித_ஒலிம்பியாட்_சாதனை
கடந்த 2026 ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெற்ற தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி, வெற்றிக்கனியைத் தட்டிச் சென்ற எமது பாடசாலையின் பெருமைமிகு மாணவன் செல்வன். S. Ali Obeidat அவர்களுக்கு, பாடசாலைச் சமூகம் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இம்மாணவனின் இந்த இமாலய வெற்றியின் பின்னணியில், அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, முறையான வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் வழங்கிய ஆசிரியர்களான MBA Haleem, P. Sajeev ஆகியோருக்கும், எமது பாடசாலையின் அனைத்து கணிதப் பாட ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குறிப்பாக, இச்செயற்பாடுகளைச் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்த கணிதப் பாட இணைப்பாளர் KM Farook அவர்களுக்கு எனது பாராட்டுகள் உரியதாகட்டும்.
மேலும், இப்பயணத்தில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பக்கபலமாக இருந்து, அதிபர் சார்பில் உரிய மேற்பார்வைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான உதவி அதிபர் AGM. Janas அவர்களுக்கும், இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்குப் பொறுப்பான பிரதி அதிபர் MM.Ameenullah அவர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.
எழுபத்தைந்து ஆண்டு நிறைவை (Platinum Jubilee) கொண்டாடவிருக்கும் எமது பாடசாலையின் கல்விப் பாரம்பரியத்தில் இச்சாதனை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மற்றுமொரு நிகழ்வாகும்.
வாழ்த்துகளுடன்,
அதிபர்.