School Development Society of AK/AS -Saathiq Vidyalaya

School Development Society of AK/AS -Saathiq Vidyalaya social work

09/09/2023

Kids Sports

Kids Sports
09/09/2023

Kids Sports

27/07/2023

ஒரு குட்டிக் கதை

ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..

அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது .

வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை

நடந்து சென்றே... ரெகுலராக ஒரு மளிகைக் கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் !!

முருங்கை காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார் !!

கந்தசாமி கொண்டு வரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம் !!

இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார் !!

பல வருடமாக கந்தசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை !!

கந்தசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார் !!

காரணம் கந்தசாமி யின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!

ஒரு நாள் கந்தசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....

சிறிது நேரத்தில்....

பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...அவருக்காக மளிகைக்காரர் ... எடைபோட... அதில் ஒன்பது கிலோ

மட்டுமே இருந்தது !!

அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! கந்தசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே !!

இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே !!

அடுத்த முறை கந்தசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார் !!

நான்கு நாட்கள் கழித்து கந்தசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார் !!

நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார் !!

‘கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க ஒரு கட்டு பத்து கிலோ என்றார் கந்தசாமி ...

அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒவ்வொரு கட்டிலும் ஒன்பது கிலோ தான் இருந்தது .

வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என கந்தசாமியின் கன்னத்தில் அறைந்தார் !!

‘இத்தனை வருஷமா இப்படித் தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய்...’ என துப்ப, நிலைகுலைந்து போனார் கந்தசாமி .

அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க...

ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டு வருவேன்.

‘இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, .

மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.....

தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார் !!

இத்தனை வருடங்களாக கந்தசாமி யை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...

அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டு தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது !!

இது தான் உலகநியதி !!

நாம் எதைத் தருகிறோமோ

அதுதான் நமக்குத் திரும்ப வரும் ....

நல்லதை தந்தால் நல்லது வரும்,...

தீமையை தந்தால் தீமை வரும் !!

வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம் ,

ஆனா....

நிச்சயம் வரும் !!

ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம் !!

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும் !!

புலமைப் பரீட்சை எழுதிய மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வு.
12/05/2023

புலமைப் பரீட்சை எழுதிய மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வு.

புதிய கல்வியாண்டிற்கான வித்தியாரம்ப விழா--202325.4.2023அக்/அஸ்ஷாதிக் வித்தியாலயத்தின் தரம் ஒன்றிற்கு மாணவ சேர்வுக்கான வி...
25/04/2023

புதிய கல்வியாண்டிற்கான வித்தியாரம்ப விழா--2023

25.4.2023அக்/அஸ்ஷாதிக் வித்தியாலயத்தின் தரம் ஒன்றிற்கு மாணவ சேர்வுக்கான வித்தியாரம்ப விழா பாடசாலை அதிபர் ஜனாப் M.A.C சிஹாப்தீன் சேர் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்தது ,இன் நிகழ்வினை நடத்தி முடிப்பதற்காக அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு ,மற்றும் இந் நிகழ்வினை தொகுத்து வழங்கிய கையூம் சேர் அவர்களுக்கும்

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு சார்பாக நன்றியினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதோடு இம்மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

குழந்தைகள் பிறக்கும் போது வெற்றுக் பலகையாகவே பிறக்கின்றனர். சூழலில் கற்றுக் கொள்பவற்றைக் கொண்டும், அனுபவரீதியாக கற்றுக் ...
28/03/2023

குழந்தைகள் பிறக்கும் போது வெற்றுக் பலகையாகவே பிறக்கின்றனர். சூழலில் கற்றுக் கொள்பவற்றைக் கொண்டும், அனுபவரீதியாக கற்றுக் கொள்பவற்றைக் கொண்டும் தனது அறிவினை வளர்த்துக் கொள்கின்றனர்.

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின்முயற்சியால் பாடசாலையின் சுற்றுமதில்களை அழகு படுத்திய தருணம்.

இதற்காக உதவி புரிந்த GiftLand Pottuvil கடை உரிமையாளர் மற்றும் Abdul Bary
Pakiyawattai Community center அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

SDEC.

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு.

23/12/2022

ஜஸ் போதை பொருளின் உடல் உள தாக்கங்கள்;

ஜஸ் போதை பொருள் என்றால் என்ன?

கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் ('ஐஸ்', ஐஸ் மருந்து) என்பது ஒரு தூண்டுதல் மருந்து, அதாவது மூளைக்கும் உடலுக்கும் இடையே கடத்தப்படும் செய்திகளை வேகப்படுத்துகிறது. இது செயற்படும் தன்மை தூள் வடிவ போதை பொருளை விட வலிமையானதுடன் அதிக அடிமையாதல் மற்றும் அதனால் அதிக தீங்கு விளைவிக்கும் பக்கவிளைவுகளைக் கொண்டுள்ளது.

இப் போதைப் பொருள் பொதுவாக சிறிய ஜஸ் கட்டிகளைப் போல் தோற்றமளிக்கும் சிறிய தெளிவான படிகங்களாக வருகிறது. இது கடுமையான வாசனை மற்றும் கசப்பான சுவையுடன் வெள்ளை அல்லது பழுப்பு நிற படிக போன்ற தூளாகவும் வரலாம். இதன் வேறு பெயர்கள் கிரிஸ்டல் மெத், ஷாபு, கிரிஸ்டல், கண்ணாடி, ஷார்ட் (Crystal m**h, shabu, crystal, glass, shard).

ஜஸ் போதை பொருளின் தாக்கங்கள்
மாணவர்கள் இந்த வகை போதைப்பொருள்களை எடுத்துக்கொண்ட நிலையில் ஒரு பொருளைப் பார்க்கும் போது அதைப் பற்றிய கண்ணோட்டம் மாறும், மனநிலை மாறும், உணர்வுகள் மாறும். இந்த மருந்துகள் நேரடியாக மூளையைப் பாதித்து, மூளையின் செயல்பாட்டையே மாற்றும்.

பொதுவாக போதைப்பொருளைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பான நிலை இல்லை. எந்தவொரு மருந்தின் பயன்பாடும் எப்போதும் சில ஆபத்தைக் கொண்டுள்ளது. எந்த வகையான மருந்துகளையும் எடுத்துக் கொள்ளும்போது கவனமாக இருப்பது முக்கியம். ஜஸ் போதை பொருளின தாக்கங்கள்; 12 மணி நேரம் வரை நீடிக்கும், ஆனால் மருந்தைப் பயன்படுத்திய பிறகு சில நாட்களுக்கு தூங்குவது கடினமாக இருக்கலாம். ஜஸ் போதை பொருளின் ஒவ்வொருவரையும் வித்தியாசமாக பாதிக்கிறது, ஆனால் விளைவுகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்:

🎯 மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் உணர்வுகள்
🎯 அதிகரித்த விழிப்புணர்வு மற்றும் ஆற்றல்
🎯 திறந்த மற்றும் உலர்ந்த வாய்
🎯 பற்கள் நறுமுதல் மற்றும் அதிக வியர்த்தல்
🎯 வேகமான இதய துடிப்பு மற்றும் சுவாசம்
🎯 குறைந்த பசி
🎯 அதிகரித்த பாலுந்தல்
🎯 ஊசி மருந்துகளை உட்கொண்டால், அதிக
தொற்று, நரம்பு சேதம், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ்
🎯 மூக்கின் சுவாச பாதையை சேதப்படுத்தும் மற்றும்
மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படலாம்.

ஜஸ் போதை பொருள் பாவனையின் குறுகிய கால தாக்கங்கள்
🎯 அதிரித்த இதய துடிப்பு மற்றும் நெஞ்சு வலி
🎯 சுவாச பிரச்சனைகள்
🎯 தளர்சியான அல்லது கட்டுப்பாடற்ற அசைவுகள்
🎯 தீவிர கிளர்ச்சி, குழப்பம், கூச்சம்
🎯 திடீரென கடுமையான தலைவலி
🎯 மயக்கம்
🎯 பக்கவாதம், மாரடைப்பு அல்லது சில சமயம்
இறப்பு.
🎯 தூங்குவதில் சிரமம் மற்றும் சோர்வு
🎯 மங்கலான பார்வை
🎯 சித்தப்பிரமை, பிரமைகள் மற்றும் குழப்பம்
🎯 எரிச்சல்

நீண்ட கால விளைவுகள்
🎯 பசியின்மை காரணமாக தீவிர எடை இழப்பு
🎯 அமைதியற்ற தூக்கம்
🎯 உலர் வாய் மற்றும் பல் பிரச்சினைகள்
🎯 சளியுடன் காய்ச்சல்
🎯 கவனம் செலுத்துவதில் சிக்கல்
🎯 மூச்சுத்திணறல்
🎯 தசை விறைப்பு
🎯 கவலை, சித்தப்பிரமை மற்றும் வன்போக்கு
🎯 மனச்சோர்வு
🎯 இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள்
🎯 உளநல பிரச்சனைகள்

மாணவர்கள் ஜஸ் போதை பொருளினை அடிக்கடி பயன்படுத்துவதால், 'ஐஸ் சைக்கோசிஸ் எனப்படும் உளவியல் நிலை ஏற்படலாம். இதனால் சித்தப்பிரமை, மாயத்தோற்றம் மற்றும் வினோதமான, வன்முறை நடத்தைகளால் மாணவர்கள் பாதிக்கப்டுகிறார். ஒரு நபர் ஜஸ் போதை பொருளினை பயன்படுத்துவதை நிறுத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிகுறிகள் பொதுவாக மறைந்துவிடும்.தொடர்ந்து ஜஸ் போதை பொருளினை பயன்படுத்துபவர்கள் விரைவில் மருந்தைச் சார்ந்து இருப்பார்கள். வேலை செய்தல், படிப்பது மற்றும் பழகுவது போன்ற அவர்களின் இயல்பான செயல்களுக்கு ஜஸ் போதை பொருளினை தேவை என்று அவர்கள் உணரலாம்.

ஜஸ் போதை பொருளினை வழக்கமாகப் பயன்படுத்தும் மாணவர்கள் அன்றாட நடவடிக்கைகளில் குறைவான மகிழ்ச்சியை உணர ஆரம்பிக்கலாம். அவர்கள் எளிதில் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம் மற்றும் அவர்களின் மனநிலைகள் மிக விரைவாக மாறுபடும். இந்த மாற்றங்கள் கவலை மற்றும் மனச்சோர்வுடன் நீண்ட கால பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஜஸ் போதை பொருளினை பாவிப்பதை நிறுத்திய பின்வும் குறைந்தது பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கு இந்த விளைவுகளை உணரலாம். நீண்ட காலமாகப் பயன்படுத்திய பிறகு, அதைக் கைவிடுவது சவாலானது, ஏனென்றால் உடல் இது இல்லாமல் செயல்படப் பழக வேண்டும். திரும்பப் பெறுவதற்கான அறிகுறிகள் பொதுவாக ஒரு வாரத்திற்குப் பிறகு மறைந்து, ஒரு மாதத்திற்குப் பிறகு பெரும்பாலும் மறைந்துவிடும்.

பெற்றோர்களின் கவனத்திற்கு

📌உங்கள் பிள்ளைகளிடம் பேசுங்கள்
போதைப்பொருள், மது பாவிப்பதால் ஏற்படும் உடல், உளவியல் மற்றும் சமூக பாதிப்புகளைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்.

📌ஆவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்
உங்கள் பிள்ளைகள் தங்கள் பயங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும்போது, பொறுமையாகக் கேட்பவர்களாக இருங்கள்.
தீர்ப்பளிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

📌போதைப்பொருளை எதிர்க்க உங்கள் பிள்ளையை ஊக்குவிக்கவும். அவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகமல் பாதுகாக்க வழிகளை செய்யுங்கள்.

📌முன்மாதிரியாக இருங்கள்
பொறுப்புள்ள பெற்றோராக இருங்கள். புகைபிடிக்கும் அல்லது போதைப்பொருளை பாவிக்கும் பெற்றோரின் குழந்தைகள் சிகரெட் அல்லது போதைப்பொருளுக்கு அடிமையாகும் வாய்ப்புகள் அதிகம்.

📌உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதுகாப்பான உறவு இருந்தால், உங்கள் பிள்ளை போதைப்பொருளுக்கு அடிமையாகாமலிருக்கும்.

பாடசாலையின் எதிர்கால கல்வி அபிவிருத்தி சம்பந்தமாக மதிப்புக்குரிய அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளர் மற்றும் பொத்துவில்...
22/12/2022

பாடசாலையின் எதிர்கால கல்வி அபிவிருத்தி சம்பந்தமாக மதிப்புக்குரிய அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளர் மற்றும் பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அவர்களை பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு சந்தித்தது.

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் முயற்சியால் மதிலை அழகு படுத்தும் நோக்கில் நிறப்பூச்சு பூசப்பட்டது இதற்கான நிறப்ப...
27/10/2022

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் முயற்சியால் மதிலை அழகு படுத்தும் நோக்கில் நிறப்பூச்சு பூசப்பட்டது இதற்கான நிறப்பூச்சினை தந்துதவிய மெளலவி A.Abdul Haq (Al-Thafi) (40 Ltres filler) மற்றும் Sarjoon (20Ltres Filler) ஆகியோர்களுக்கு ,பாடசாலை சமூகம் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் இதில் சில அறிவியல் சார்ந்த வரை படங்கள் வரையவுள்ளதால் முடிந்தவர்கள் உதவி செய்யவும்.

கெளரவ SMM Muszhaaraff அவர்களே இப்பாடசாலையையும் உங்கள் கவனத்திற்கு எடுங்கள்.
25/10/2022

கெளரவ SMM Muszhaaraff அவர்களே இப்பாடசாலையையும் உங்கள் கவனத்திற்கு எடுங்கள்.

கோட்ட மட்ட சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி -2022.09.17இவ்விளையாட்டுப் போட்டியில் அக்/அஷ் ஸாதிக் பாடசாலை சார்பாக...
18/09/2022

கோட்ட மட்ட சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி -2022.09.17

இவ்விளையாட்டுப் போட்டியில் அக்/அஷ் ஸாதிக் பாடசாலை சார்பாக
தரம்-03
தரம்-04
தரம்-05
மாணவ மாணவிகள் பங்குபற்றினர் இதனடிப்படையில்
தரம்-03 இல் பங்கு பற்றிய ஆண் மாணவர்களும், பெண் மாணவிகளும் முதலாம் இடத்தினை கைப்பற்றி CHAMPIONS ஆகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தரம்-4 இல் ஆண்கள் 03 ஆம் இடத்தினையும்
தரம்-5 மாணவர்களில் பெண்கள் 01 ஆம் இடத்தினையும் பெற்று CHAMPION ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவ் வெற்றிக்கான முயற்சிகளை மேற்கொண்ட அதிபர் ஜனாப் ஷிஹாப்தீன் சேர் மற்றும் வகுப்பாசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு, மற்றும் பாடசாலை சமூகம் அனைவருக்கும், அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு சார்பாக நன்றியினையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Address

AS Saathiq Vidyalayam, Old Post Office Road, Pakkiyawatte
Pottuvil

Telephone

+94756786184

Website

Alerts

Be the first to know and let us send you an email when School Development Society of AK/AS -Saathiq Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category