03/02/2024
Bachelor of Education (B.Ed.) பட்டம் பெற்ற தம்பாளையின் முதல் பெண் அதிபர் ஜனாபா அன்ஸியா கமால்தீன் அவர்களுக்கு ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்...!
பொலன்னறுவை, தம்பாளை வரலாற்றில் முதல் பெண் அதிபராக மகுடம் சூட்டிக்கொண்ட, Al Hilal Central College - Polonnaruwa யில் பிரதி அதிபராக தற்போது கடமையாற்றுகின்ற ,சிறந்த ஆளுமையும்,நிர்வாக திறனும்,முகாமைத்துவ ஆற்றலும் கொண்ட ஜனாபா அன்ஸியா கமால்தீன் அவர்கள் 31/01/2024 அன்று கல்வித்துறையில் Bachelor of Education (B.Ed.) பட்டம் பெற்றுள்ளார்.
வாழ்நாள் சாதனையாளராக ஊருக்கும், பெற்றோறுக்கும், கல்விசார் சமூகத்தினருக்கும் மேலும் கல்வித் துறையில் சாதனை படைக்க வேண்டும் என்று கனவு காணுகின்ற வளந்துவரும் இளம் பெண் சமூதாயத்தினருக்கு முன்மாதிரியாகவும் திகலும் இவர் பெற்ற ஆசிரியர் ஜனாப்.கமால்தீன் அவர்களின் பாரியாருமாவார். சகோதரி அன்ஸியா கமால்தீன் அவர்களுக்கு ஊர் சார்பாக எமது ஆத்மார்த்தமான வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, மேலும் பல வாழ்நாள் சாதனைகளையும் அவர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிராத்திக்கிறோம்.
Source: Mca Samad
சமாதான நீதவான்
(அறிவிப்பாளர்,மொழிபெயர்ப்பாளர்-தம்பாளை )
©️OHMA - Old Hilalians Media Association
புகழ் பாடுவோம்
🇱🇻