22/09/2025
*உண்மை நிலவரம்*
*ஹாட்லி - வேம்படி தமிழ்த் தின போட்டிகுழுஇசை 2 தொடர்பான வாத பிரதிவாதங்களுக்கும் சமூக ஊடகங்களின் வதந்திகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி*
மாகாண மட்ட தமிழ்த் தினப் போட்டியில் குழு இசை 2 இல் ஹாட்லிக் கல்லூரிக்கு முதலிடம் வழங்கப்பட்டது. ஆனால் வேம்படி மகளிர் கல்லூரி, ஹாட்லிக் கல்லூரி பாடிய பாடல் தவறு எனக் கூறி மாகாண கல்வி திணைகளத்திற்கு முறைப்பாடு ஒன்றை செய்திருந்தது. முறைப்பாட்டுக்கு அமைவாக ஹாட்லிக் கல்லூரி சங்கீத ஆசிரியர் மற்றும் நடுவர்கள் வரவழைக்கப்பட்டு 09.07.2025 அன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. ஹாட்லி மாணவர்கள் பாடிய *மதுரை முரளிதரனது* பாடலில் நாலவது சரண சுரத்திற்கு சாகித்தியம் இல்லை. இல்லாத ஒன்றை பாட முடியாது எனவே தீர்ப்பு வழங்கியது சரிஎன முடிவெடுக்கப்பட்டது. ஆனால் மாகாண கல்வித் திணைக்களம் பக்கச்சார்பாக நடந்தது என குறை கூறி வேம்படி மகளிர் கல்லூரி சார்பில் நீதிமன்றத்தில் பெற்றோர்கள் வழக்குத்தாக்கல் செய்தார்கள்.
வழக்கினை விசாரித்த நீதிபதி முன்னய தீர்ப்புக்கள் மிகச் சரியானது என *வழக்கை தள்ளுபடி செய்தார்*. இந்நிலையில் ஹாட்லி கல்லூரி தேசிய மட்ட தமிழ் தினப் போட்டிக்கு சென்று 21.08.2025 பங்கு பெற்றியது.
தெளிவு பெறவேண்டிய விடயங்கள்
1.தமிழ் மொழித் தினப் போட்டிகள் சுற்று நிருபத்திற்கு அமைவாக நடைபெறுகிறது. சுற்றுநிருப்பத்தின்படி நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
2.மாகாண மட்ட நடுவர்கள் யாவரும் துறைசார் விற்பன்னர்களே தெரிவு செய்யப்படுகின்றனர்.
3.மாகாண கல்வித் திணைக்களம் வேம்படி மகளிர் கல்லூரி கொடுத்த முறைப்பாட்டை பாரபட்சம் இன்றியே விசாரித்தது.
4. ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் பாடியது தவறு என பெற்றோர்களுக்கு எப்படி தெரியும்? நடுவர்களைத் தவிர வேறுயாரும் போட்டி நடைபெறும் இடத்திற்கு பிரசன்னமாக முடியாது.
இத்தனை விடயங்களையும் தாண்டியே வேம்படி மகளிர் கல்லூரி நீதிமன்றம் சென்றது குறிப்பிடத்தக்கது.
தேசியமட்ட தமிழ்தினப் போட்டியில் என்ன நடந்தது
1.வேம்படி மகளிர் கல்லூரி சார்பாக அவர்களது வழக்கறிஞர் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி கல்வி அமைச்சின் தமிழ் பாட பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கு ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் பாடியது தவறு என்றும் நீதிமன்றம் செல்லவேண்டி வரலாம் என்ற தொனிப் பொருளிலும் கடிதம் அனுப்பி இருந்தார். இந்நேரத்தில் அக்கடிதம் அனுப்பப்பட்டதன் **சூட்சுமம்தான் என்ன? **
இந்நிலையில் ஹாட்லிக் கல்லூரி, நீதிமன்ற தீர்ப்பு சார்பாக மாகாணம் அனுப்பிய பிரதியை சாமர்ப்பித்து
இதேவேளை மறுபுறத்தில் 20.09.2025 அன்று சமூகவலைத் தளங்களில் உண்மைக்கு புறம்பான பொய்யான செய்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டிருந்தன. மாகாண கல்வி அதிகாரிகள் தீர்ப்பு தவறானது என்றும் இதனால் நீதிமன்ற செலவை அவர்களே பொறுப்பேற்கும் படியும் இனிவரும் காலங்களில் போட்டிகளை அவர்கள் நடத்த முடியாது என்றும் பரப்பப்படிருந்தன.
இவ்விடத்தில் ஒரு கேள்வி? *ஹாட்லி கல்லூரி மாணவர்கள் பாடியது சரி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கின்ற போது எப்படி மாகாண திணைக்கள அதிகாரிகளை குற்றம் சொல்ல முடியும்? *
மேற்கூறப்பட்ட இரண்டு செயற்பாடுகள் காரணமாக தேசிய மட்ட தமிழ்த் தின போட்டியில் ஹாட்லி மாணவர்கள் சார்பில் ஒரு தவறான எண்ணப் போக்கை தேற்றுவித்தது.
தேசிய மட்ட தமிழ்த் தின போட்டி நடத்துபவர்கள் மத்தியிலும் நடுவர்கள் மத்தியிலும் எங்கே நாங்கள் ஹாட்லிக் கல்லூரிக்கு முதலிடம் கொடுத்தால் வழக்கறிஞர் அனுப்பிய கடித்தின்படி நீதிமன்றம் செல்லவேண்டி வருமோ? என்ற எண்ணம் தோன்றி இருக்கலாம். அதில் வியப்பில்லை நீதிமன்றம் செல்வது எவருக்கும் பிடிக்காத விடயம் தானே
இந்த பின்னணியிலேயே ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் போட்டியிட்டனர். முடிவு 7வது இடம் கிடைத்தது. முடிவு அறிவிக்கப்பட்ட போது வடக்கு மாகாணம் சார்ந்த அனைவரது முகங்களிலும் ஏமாற்றம்,வியப்பு,ஏக்கம் அத்தனையும் ஒன்றாக தெரிந்தது.
நேற்று (21.09.2025) மாலை போட்டி இடம்பெற்ற விவேகானந்தாக் கல்லூரி முழுவதும் இவ்விடயமே பேசுபொருளாகியது. ஹாட்லிக் கல்லூரிக்கு முழுக்க முழுக்க துரோகம் இழைக்கப்பட்டதாக பேசினார்கள். ஹாட்லிக் கல்லூரி மேல்முறையீடு செய்து நீதிமன்றம் செல்லுங்கள் என அறிவுறுத்தினார்கள்.
ஹாட்லிக் கல்லூரிக்கு என்று தனித்துவமான மரபு உண்டு. போட்டி என்று வந்தால்
*"முடிந்தவரை முயற்சி செய்வோம் முடிவை ஏற்றுக்கொள்வோம்" *என்பதே தாரக மந்திரம்
இணைபாடவிதானச் செயற்பாடுகளில் தங்கப்பதக்கம் பெறுவது இதுதான் முதல் தடவை அல்ல. தமிழ்த் தின போட்டியில் சாங்கீதம் சார்பாக கடந்த வருடத்தில் மாத்திரம்(2024) 03 தங்கப்பதக்கங்களை பெற்றிருந்தனர் ஹாட்லியை பொறுத்தவரை இது சாதாரண விடயம். வேம்படி மகளிர் கல்லூரி சென்றவருடமும் இந்த வருடமும் சங்கீதம் சார்ப்பில் தேசியத்திற்கு தெரிவாகி இருக்கவில்லை. ஹாட்லிக் கல்லூரியை பொறுத்தவரை அடுத்த முறை இவ் வருடத்தையும் சேர்த்து தங்கப்பதக்கங்களை எடுக்கலாம்.
சில்லறைதனமான விடயங்களுக்கு எல்லாம் நீதிமன்றம் செல்வதற்கு ஹாட்லி கல்லூரி ஒன்றும் வேம்படி மகளிர் கல்லூரி இல்லை
*-நண்பர்களுக்கு மட்டும் -*