Mind Mover

Mind Mover for your bright future

Contact Us 0773127434

08/01/2023
13/04/2022

1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்
2) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி
3) உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை
4) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீற்றர்)
5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)
6) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி(11.522மீற்றர்)
7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன்
உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம்
9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான்
10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்
11) உலகிலேயே பெரிய தீவு எது? கிறீன்லாந்து
12) உலகிலேயே பெரிய கண்டம் எது? ஆசியாக்கண்டம்
13) உலகிலேயே சிறிய கண்டம் எது? அவுஸ்ரேலியா
14) உலகிலேயே பெரிய நாடு எது? கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)
15) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா
16) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீராப்புஞ்சி
17) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி
18) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்
19) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? எவரெஸ்ட்
20) உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார்(சிலி) 5.990 மீற்றர்
21) உலகிலேயே மிக நீளமான மலை எது? அந்தீஸ்மலை
22) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? தென்சீனக்கடல்
23) உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)
24) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979மீற்றர்
25) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? சீனா
26) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? வத்திக்கான்
27) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர்
28) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏரி
29) உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத் குகை
30) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? நேபாளம்
31) உலகிலேயே மிகப்பெரிய பு எது? ரவல்சியாஆர்ணல்டி
32) உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? அலாஸ்கா
33) உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? தொலமி
34) உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? நேச்சர் 35) ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது? பிலிப்பைன்ஸ்
36) உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? அவுஸ்ரேலியா
37) உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது? டிடிக்காகா
38) உலகில் மிக உயரமான அணை எது? போல்டர் அணை
39) உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது? சீனா
40) உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா
41) உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது? மாண்டரின்(சீனா)
42) உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது? பைபிள்
43) கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது? நெதர்லாந்து
44) உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது? சவுதி அரேபியா
45) உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது? இந்தோனோசியா
46)உலகில் மிக உயரமான அணை யாது? போல்டர் அணை (உண்மை தேடல்)

01/09/2021

பொது அறிவு கட்டமைக்கப்பட்ட கட்டுரை வினா சிங்கள மொழி மூல மாதிரி வினாப்பத்திரத்திலிருந்து
1. மூன்றாம் உலக நாடுகள் என குறிக்கப்படும் 3 நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக?
2.மூன்றாம் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரதான சவால்கள் 03 ஐக் குறிப்பிடுக?
3. அதற்கான தீர்வாக நீங்கள் முன்வைக்கும் தீர்வுத் திட்டங்கள் 3 குறிப்பிட்டு விளக்குக?

மூன்றாம் உலக நாடுகளின் கடன்சுமையின் இன்றைய நிலைமூன்றாம் உலக நாடுகள் தமது பணத்தில் 42 சதவீதத்தை கடன் தவனைக்காக செலுத்துகி...
01/09/2021

மூன்றாம் உலக நாடுகளின் கடன்சுமையின் இன்றைய நிலை
மூன்றாம் உலக நாடுகள் தமது பணத்தில் 42 சதவீதத்தை கடன் தவனைக்காக செலுத்துகின்றன!- நைஜீரியா நாட்டு அதிபர் ஒபாஸஞ்சோ

ஒரு வருடத்தில் நாங்கள் வாங்கியது என்னவோ 5 பில்லியன் டாலர் மட்டுமே. இதுவரை 16 பில்லியன் டாலர் திருப்பிக் கொடுத்து விட்டோம் . ஆனால் இன்னும் 28 பில்லியன் டாலர் பாக்கி இருக்கிறது என்கிறார்கள்.அந்திய நிறுவனங்களின் அநியாயவட்டி விகிதம்தான் 28பில்லியன் டாலர் ஆகிவிட்டது. உலகிலேயே மோசமான பொருள் எது என நீங்கள் என்னிடம் கேட்டால் நான் ஒன்றே ஒன்றைச் சொல்வேன்: கூட்டு வட்டிதான் அது.
(”ஒகினாவாவில்நடந்த ஜி8 உச்சி மாநாட்டில் நைஜீரியா நாட்டு அதிபர் ஒபாஸஞ்சோ வயித்தெறிச்சலுடன் கூறிய வார்த்தை இது”. )
நைஜீரியா என்கிற ஆப்பிரிக்க நாடு கல்வி,மருத்துவம் ஆகிய துறைகளுக்கு ஒதுக்குகின்ற தொகையைவிட மூன்றுமடங்கு அதிகமான தொகையை கடன் தவணையும் வட்டியையும் செலுத்துவதற்காக ஒதுக்குகின்றது.
பொதுவாக மூன்றாம் உலக நாடுகள் தன்னுடைய பணத்தில் 42 சதவீதத்தை கடன் தவணையைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஒதுக்குகின்றது. 28 சதவீதத்தை ராணுவத்துக்கும் 16 சதவீத்த்தை ஆட்சி செயல்பாடுகளுக்கும் ஒதுக்குகின்றது.இவ்வாறாக மருத்துவம், சுகாதாரம், கல்வி, சாலைவசதி, உள்கட்டமைப்பு,மின்சாரம், குடிநீர்வசதி போன்றவற்றை எஞ்சிய 13 சதவீதத் தொகையில் சமாளித்தாக வேண்டிய கட்டாயம்…!
இதன் விளைவாக மிக முக்கியமான துறையான கல்வித்துறைக்கு இரண்டு சதவீதத்தொகையே ஒதுக்கப்படுகின்றது.இதுதான் மிக மிக வேதனையான கண்டிக்கத்தக்க நிலை!
சமீப ஆண்டுகளில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது ஆப்பிரிக்க நாடுகளே…!
ஸஹாரா பாலைவனத்திற்குத் தெற்கே இருக்கும் நாடுகள் மட்டும் ஆண்டுக்கு 10 பில்லியன் (100 கோடி) டாலர்கள் உலக வங்கிகளுக்கு வட்டியாக கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.
வலையுகம் ஹைதர் அலி -முகநூல்

SLAS ( மட்டுப்படுத்தப்பட்ட ) பரீட்சைக்கு சுயமாக கற்பதற்கான சில உத்திகள்.... கடந்த வாரம் இப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப...
08/08/2021

SLAS ( மட்டுப்படுத்தப்பட்ட ) பரீட்சைக்கு சுயமாக கற்பதற்கான சில உத்திகள்....

கடந்த வாரம் இப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

நானே அமைத்துக் கொண்ட பாடதிட்டத்திற்கேற்ப சுயமாக கற்றே பரீட்சையில் தேறினேன்.

ஆக அந்த என் யுக்திகளையும், பயன் படுத்திய வளங்களையும் இங்கு பகிரப் போகிறேன்.

விடுமுறை நாட்களை முற்று முழுதாக விசேட வகுப்புக்களுக்கு ஒதுக்க நேரம் இல்லாத, ஆயிரக்கணக்கில் தண்ணீராக காசைச் செலவழிக்க வழி இல்லாத, சவால்களை எதிர் கொள்ள விரும்பும் என்னைப் போன்றவர்கள் வாசித்துப் பயன் பெறலாம்.

பயன்படுத்திய மூல வளங்கள்

தாபன விதிக்கோவை 1,11
நிதி ஒழுங்குகள்
ஆணைக்குழுவின் விதிகள் (ps procedure)
செயல்முறைத் தொழில்நுட்பத் திறன்கள் - தரம் 7 முதல்(pts)
வரலாறு- தரம் 6 முதல்
3 மாதங்களுக்குள்ளான பத்திரிகைகள்
நுண்ணறிவு தொடர்பான பழைய இத்துப் போன புத்தகங்கள்
கிரகித்தற் கட்டுரைகள்

பொதுவாக நம்மில் பலர் விடும் தவறு முல ஏடுகளை ஆதாரமாகக் கொண்டு யாரோ எழுதும் புத்தகங்களையும் வினாவிடைகளையும் அடிப்படையாகக் கொண்டு பரீட்சைகளுக்குத் தயாராகுவதாகும். ஆனால் நான் என்றுமே யாரும் எழுதிய புத்தகங்கள் , வினா விடைகள், மீட்டல் பயிற்சிகள் என்பவற்றைப் பயன்படுத்தவில்லை.
மாறாக மூல ஏடுகளையே (AR,FR,PS pro) வாசித்தேன்.

எதையும் பாடமாக்கவில்லை. நுணுக்கமாக வாசிக்க மட்டுமே செய்தேன். அதுவும் ஒரு தடவையல்ல. கதை போல சொல்லும் அளவுக்கு வாசித்தேன்.

ஏனென்றால் எதையும் பாடமாக்க வேண்டிய அவசியம் இல்லை. கேள்விகள் கட்டமைப்பான விடைகளையே எதிர்பார்த்துக் கேட்கப்படும். தரப்பட்ட இடைவெளிகளிலேயே பதில் எழுதப்பட வேண்டும். ஆக பந்தி பந்தியாக எழுத வேண்டியதில்லை. விடய அறிவே சோதிக்கப்படும்.ஆக நுணுக்கமாக விளங்கி வாசித்தலே போதுமானது.

அடுத்து நுண்ணறிவு தொடர்பாக நான் பயன்படுத்தியது நூலகத்தில் இருந்த பழைய புத்தகங்கள். ஏனென்றால் அவற்றில் தான் ஒவ்வொரு விதமாக பயிற்சிகளையும் அணுகும் முறை பற்றிய விளக்கம் உள்ளது. புதிய புத்தகங்களில் வினா விடை மட்டுமே உள்ளன. செய்முறை விளக்கங்கள், தெளிவாக்கங்கள் இல்லை. ஒவ்வொரு வகைக்கும் குறைந்தது 50 பயிற்சிகள் செய்யுங்கள். (இலக்கம், படம்) மீண்டும் மீண்டும் அதையே திருப்பிச் செய்யுங்கள். வேறு வேறு பயிற்சிகள் மாற்ற வேண்டாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களை அறியாமலேயே மனதில் நுட்பம் பதிந்து விடும். கண்களும் அதற்குப் பழகி விடும். அத்தோடு வேகமும் கூடும்.

அடுத்து கிரகித்தற் பயிற்சிக்காக நிறைய வாசியுங்கள். எளிமையான கட்டுரைகள் தொடங்கி சிக்கலான நீண்ட வாக்கியங்கள் கொண்ட கட்டுரைகள் வரை வேகமாக வாசியுங்கள். வாசிக்கும் போதே ஒவ்வொரு பந்தியின் கரு என்னவென்று அருகில் சிவப்பு மையில் எழுதுங்கள். ஒரே கட்டுரையை பல தடவைகள் வாசித்து நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிக்க முயலுங்கள். கட்டுரைகளை வாசிக்கத் தொடங்க முன்னர் கொடுக்கப்பட்ட கேள்விகளை இரண்டு முறை நன்றாக வாசியுங்கள்.

சாரம்சம் எழுதும் போது தரப்பட்ட பந்தியில் உள்ள வர்ணனைகள், உதாரணங்கள்,புள்ளி விபரங்கள் என்பவற்றைத் தவிர்த்து உங்கள் சொந்த நடையில் எழுதுங்கள். தரப்பட்ட பந்தியையே திருப்பி எழுத வேண்டாம்.

அடுத்து பொது அறிவு...

இந்த வினாத் தாள் மட்டும் தான் நாம் இஷ்டப்பட்ட படி வரையறை இல்லாமல் தரப்பட்ட தலைப்புக்களில் தாராளமாக எழுதக் கூடியது. இது இலங்கை மற்றும் உலக விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக அரசியல், சமய விடயங்கள் கேட்கப்பட மாட்டா. ஆனால் சமூக, சூழல், பொருளாதார விடயங்கள் ஆராயப்படும்.

இதற்காக நான் பயன்படுத்தியது பழைய பத்திரிகைகள் பாடசாலைப் பாடப்புத்தகங்கள். வாசித்தல் மட்டும் போதுமானது.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது புத்துணர்வான மனநிலையில் கற்றல் ஆகும்.

உழைத்துக் களைத்த நேரங்களில் புத்தகங்களைக் கையில் தொட வேண்டாம்.

நன்றாக உறங்கி எழுந்த பின்னர் வயிறு நிறைய சாப்பிட்டு, குளித்து வீட்டில் வேலைகள் எல்லாம் முடித்து,நிம்மதியான மன நிலையுடன், தூய்மையான ,காற்றோட்டமான, வெளிச்சமான இடத்தில் இருந்து விருப்பத்துடனும் தூய்மையான எண்ணத்துடனும் கற்றல் வேண்டும்.

ஒரு நாளைக்கு இவ்வளவு என இலக்கு வைத்துப் படியுங்கள்.

ஊரில் உள்ள எல்லோரும் எழுதிய புத்தகங்களை வாங்கிக் குவிக்க வேண்டாம். மற்றவர் படிப்பதை எட்டிப் பார்க்கவும் வேண்டாம். இவை வேண்டாத தலை வலிகள். அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் மனப்பாரம் கூடும்.

நான் கடைப்பிடித்த முறைகள் எல்லாவற்றையும் சொல்லி விட்டேன்.
இதற்கு மேலும் விளக்கங்கள் யாருக்கேனும் தேவைப்பட்டால் என்னை அணுகலாம். மெஸஞ்சரில் அல்ல.
என் மின்னஞ்சல் முகவரி
[email protected]

#எமா மேடம் #

டியர் மூன் என்ற திட்டத்தின் கீழ் நிலவுக்கு பயணம் செய்ய தெரிவு செய்யப்பட்டுள்ள இறுதியான முழு அணியில் இலங்கையை சேர்ந்த சந்...
19/07/2021

டியர் மூன் என்ற திட்டத்தின் கீழ் நிலவுக்கு பயணம் செய்ய தெரிவு செய்யப்பட்டுள்ள இறுதியான முழு அணியில் இலங்கையை சேர்ந்த சந்தனி குமாரசிங்க என யுவதி இடம்பெற்றுள்ளார்.

இந்த திட்டத்திற்காக 249 நாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் விண்ணப்பங்களில் 17 பேரின் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களில் 8 பேருக்கு இந்த சிறப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் இந்த குழுவினர் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு நிலவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு சந்தனி குமாரசிங்கவுக்கு அமெரிக்காவின் நாசா நிறுவனத்தில் விண்வெளி மற்றும் விண்வெளி வீரருக்கான பாடநெறியை கற்க புலமைப்பரிசில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் புதிய பட்டுப்பாதைஉலகின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளில் ஜாம்பவானாகத் திகழும் சீனாவின் கனவு முயற்சியாக பட்டி மற்ற...
19/07/2021

சீனாவின் புதிய பட்டுப்பாதை

உலகின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளில் ஜாம்பவானாகத் திகழும் சீனாவின் கனவு முயற்சியாக பட்டி மற்றும் பாதைப் புதுமுயற்சி (Belt and Road Initiative – BRI)யை கருத முடியும். உலகின் சனத்தொகை மிகுந்த நாடாகிய சீனா அந்த சனத்தொகையை வைத்து சாதனை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. கடந்த சில தசாப்தங்களாக சீனாவின் உற்பத்திப் பெருக்கமும் வர்த்தக விரிவாக்கமும் உலக வர்த்தக நிறுவனத்தில் அதன் அங்கத்துவமும் அங்கீகாரமும் இணைந்து சீனப் பொருளாதாரத்தை பூதாகரமாக விரிவடையச் செய்தன. வர்த்தக மீதி எப்போதும் மிகை நிலையில் இருந்ததுடன் சீன முதலீடுகள் வெளிநாடுகளை நோக்கிச் செல்லவும் அது வழிவகுத்தது. சீனாவின் மலிவான உழைப்பாளர்கள் காரணமாக சர்வதேச நேரடி முதலீடுகள் அங்கு சென்று குவிந்தன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதன் ஆட்சியாளர்களுக்கு புது உந்துசக்தியை வழங்கியது.

பண்டைய உலகில் குறிப்பாக ஐரோப்பாவில் கைத்தொழில் புரட்சி ஏற்பட முன்னர் சீனாவும் இந்தியாவுமே உலகின் முன்னணி நாடுகளாக இருந்தன. சீனாவின் பட்டு உற்பத்தியும் இந்தியாவின் பருத்தி உற்பத்திகளும் ஐரோப்பிய சந்தைகளில் விற்கப்பட்டன.


சீனாவிலிருந்து மத்திய ஆசியா ஊடாக ஐரோப்பாவை நோக்கி ஒரு வர்த்தகப் பாதை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததாகவும் ‘ஹான்’ சாம்ராஜ்ஜிய (Han Dynasty) காலப்பகுதியில் இது உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பிரசித்திபெற்ற பட்டுப்பாதை (Silk Road) என இது அழைக்கப்பட்டது.

இந்த புராதன பட்டுப்பாதையை மையமாகக் கொண்டு அதனை வரலாற்று ஆதாரமாகக் கருதி 21ஆம் நூற்றாண்டில் மீண்டும் சீனாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் ஒரு புது முயற்சியாக 2013ஆம் ஆண்டில் சீன ஜனாதிபதி (Xi Jiping) சீ ஜிபெங் அவர்களால் இருபத்தோராம் நூற்றாண்டின் பட்டி மற்றும் பாதை புதுமுயற்சி (BRI) அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த புதுமுயற்சியின் முக்கிய நோக்கங்களாக

1. பௌதீக உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கலும் மேம்படுத்தலும்.

2. கடன் வழங்கல் மற்றும் மூலதனத்தை திரட்டுதல் போன்ற நிதிசார் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதும் மேம்படுத்தலும்

3. சுங்கம், வர்த்தகக் கூட்டுக்களை உருவாக்குதல் போன்ற கொள்கை சார்ந்த விடயங்களை மேம்படுத்தல் என்பன அமைந்திருந்தன.

இந்த நடவடிக்கைகள் மூலம் உலகின் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பெருமளவு விரிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இவற்றுள் முதலாவது நோக்கமாகிய பௌதீக உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி மேம்படுத்தலின் அடிப்படையில்

–புதிய நெடுஞ்சாலைகளை உருவாக்குதல் அதனோடு தொடர்புடைய உட்கட்டமைப்புகளை உருவாக்குதல்.

–புதிய புகையிரதப் பாதைக் கட்டமைப்புகளையும் அதனுடன் தொடர்புடைய உட்கட்டமைப்புகளும் உருவாக்குதல்.

–துறைமுகங்களை உருவாக்குதல், மேம்படுத்தல் அதனோடு தொடர்புடைய உட்கட்டுமானங்களை உருவாக்குதல்.

–சக்தி வனத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ளல்

–விமான நிலையங்களை உருவாக்குதல்.

தொலைத்தொடர்பு வலைப்பின்னல் வசதிகளை உருவாக்குதல் என்பன பல்வேறு கட்டங்களில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

சீனாவின் இந்த BRI முயற்சியில் இரண்டு பிரதான பிரிவுகள் உண்டு.

01. பட்டுப்பாதை பொருளாதாரப் பட்டி (Silk Road Economic Belt)

02. 21ஆம் நூற்றாண்டின் கடல் பட்டுப்பாதை (The 21St Century Maritime Silk Road)

இவ்விரண்டில் பட்டி (The Belt) என்பது நிலத்தின் மீது அமைக்கப்படும் பாதைக் கட்டமைப்புகளையும் ‘பாதை’ (The Road) என்பது கப்பற்பாதைகளையும் குறிக்கிறது.

பட்டுப்பாதை பொருளாதாரப் பட்டியானது சீனாவை கண்டங்களை ஊடறுத்துச் சென்று ஐரோப்பிய நாடுகளுடன் இணைக்கும் சாலைக் கட்டமைப்பை உள்ளடக்கியுள்ளது. தென்கிழக்காசியா, கிழக்காசியா, மத்திய ஆசியா, ரஷ்யா ஆகிய பிராந்தியங்களூடாக பாதை வலைப் பின்னல்கள் மூலம் தரை வழியாக இவ்வழித்தடம் அமைந்துள்ளது.

21ஆம் நூற்றாண்டின் பட்டுப் பாதையானது சீனாவின் துறைமுக நகரங்களை தென்கிழக்காசியா, தெற்காசியா, தென் பசுபிக், மத்திய கிழக்கு, கிழக்காபிரிக்கா போன்ற கடல்வழிப் பிராந்தியங்களூடாக ஐரோப்பிய துறைமுகங்களுடன் இணைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

சுருக்கமாகச் சொன்னால் இப்புதுமுயற்சியின் ஒரு கரம் சீனாவிலிருந்து தரைவழித் தடங்களூடாக ஐரோப்பாவை நோக்கி நீள்கிறது. மற்றொரு கரம் கடல் வழி கப்பற்பாதைகளூடாக மத்தியதரைக் கடல் வழியே ஐரோப்பாவைச் சென்றடைகிறது. ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களை இணைப்பதாகவும் இந்து சமுத்திரம், அத்திலாந்திக் சமுத்திரம் உள்ளிட்ட சமுத்திரங்கள் ஊடாக செல்வதாயும் இவ்வழித் தடங்கள் அமைந்துள்ளன.

உலகின் 65 இற்கு மேற்பட்ட நாடுகளை BRI முயற்சி இணைக்கிறது. உலகில் வாழும் சுமார் 4.4 பில்லியன் மக்களை அதாவது உலக சனத்தொகையில் சுமார் 63% சதவீதத்தினரை இத்திட்டம் உள்வாங்கியுள்ளது. அதுமட்டுமன்றி உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29% பங்கினை இத்திட்டம் உள்ளடக்கும் நாடுகள் உற்பத்தி செய்கின்றன. இந்த BRI முயற்சியின் மூலம் உலகின் 2/3 நாடுகள் சிறப்பான முறையில் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.

சுமார் 1.1 டிரில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட நிதி மேற்படி திட்டங்களுக்காக சீன அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்புதிய முயற்சிகள் காரணமாக வர்த்தகப் பாதைகள் மேம்படுத்தப்படுவதாலும் உட்கட்டுமானங்கள் விரிவாக்கப்படுவதாலும் உலகலாவிய ரீதியில் ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் இலகுவாகவும் துரிதமாகவும் குறைந்த செலவில் தமது வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்க முடியும். ஏற்கனவே உள்ள வளங்கள் வசதிகளை மேம்படுத்துவதுடன் புதிய சந்தைகளையும் இதன் மூலம் விருத்தி செய்யலாமெனவும் நம்பப்படுகிறது.

சீனா என்னும் தனியொரு நாட்டினால் முதலீடு செய்யப்படும் இத்திட்டம் சீனாவுக்கு பெரிதும் நன்மை பயக்கும் என்பது நமக்குத் தெரிந்தது தான். ஆயினும் இத்திட்டத்துடன் இணைந்துள்ள 65 நாடுகளும் அதன் மக்களும் அதன் நன்மைகளை பெறலாம் என்பதும் உண்மைதான். இதில் இணைந்துள்ள நாடுகள் எவ்வளவு தூரம் சாமர்த்தியமாக இதன் நன்மைகளை உயர்ந்த பட்ச அளவில் அடையலாம் என்பது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

சீனாவின் இத்திட்டத்தை தவிர்த்துவிடுவது சாத்தியமல்ல. மறுபுறம் சீனாவின் ஆதிக்கம் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி வருகிறது என்பதற்கு இந்த BRIமுயற்சியும் ஒரு காரணம் என்பது சிறு குழந்தைக்கும் நன்கு புரியும்.

மறுபுறம் ‘ஒக்டபஸ்’ தனது கரங்களை விரிவாக்கி இரையை கௌவுவது போல உலகம் பூராகவும் சீனாவின் கரங்கள் இம் முயற்சியூடாக நீண்டு வருகிறது. பொருளாதார ரீதியிலும் அரசியல், சமூக, கலாசார ரீதியிலும் சீனாவின் ஆதிக்கம் வேகமாக பரவிவருகிறது.

இதனால் அச்சமடைந்த அமெரிக்கா சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போரை தொடங்கியது என்பதும் ஏலவே தெரிந்ததுதான். சீனாவின், எதிரி நாடான இந்தியாவும் இதில் கடுப்பாகியுள்ளது. வங்காள தேசம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இதில் சீனாவுடன் இணைந்து கொண்டுள்ளமையும் பாக்கு வெட்டிக்குள் அகப்பட்டுள்ள நிலைக்கு இந்தியாவை இட்டுச் சென்றுள்ளது.

இந்த பட்டுப்பாதை புதுமுயற்சியில் இலங்கை முக்கியமானதொரு மையப்புள்ளி என்பதை இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உலக வரைபடங்களை பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும். கிழக்காசியாவிலிருந்து கிழக்கு ஆபிரிக்காவரையிலான கடல் வழிப்பாதையில் இலங்கை தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு நாடு. எனவே தான் அது பட்டுப் பாதையில் கண்களுக்கு நன்கு புலப்படுகிறது.

மத்தளை விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் என முப்பெரும் முயற்சிகள் இலங்கை அரசாங்கத்தால் சீனாவின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டன. இதில் இரண்டு வெள்ளை யானைகள் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டு ஈ ஓட்டிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றை சீனா, தானே பார்த்துக் கொள்கிறேன் என்று எடுத்துக் கொண்டுவிட்டது. துறைமுக நகரம் கட்டப்பட்டு வருகிறது.

அதில் பெரும் வணிக நகரமொன்று அமையும் போதே அதன் வெற்றி தோல்வி பற்றிப் பேசமுடியும். எவ்வாறாயினும் உள்ளூர் அரசுகளின் ஆளுமை, நிர்வாகத்திறன், எதிர்காலத்தை எதிர்வுகூறும் திறன், வெளிப்படைத்தன்மை, என்பனவற்றைப் பொறுத்தே பட்டுப்பாதையின் நன்மை தீமைகள் அமைந்திருக்கும்.

ஸ்மார்டாக இயங்கும் பல நாடுகள் ஏற்கனவே சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்துடன் இணைந்து நன்மை பெறத் தொடங்கியுள்ளன. அண்மையில் பாகிஸ்தான் உள்ளூர் வெளியுலக அழுத்தங்கள் காரணமாக BRI திட்டம் ஒன்றில் இருந்து ‘ஜகா’ வாக்கியதாக செய்திகள் கூறின.

அமெரிக்காவும் இந்தியாவும் முடிந்தவரை முயற்சித்து சீனாவின் ஒக்டோபஸ் கரங்களை வெட்டி வீழ்த்தத் துடிக்கின்றன.

எவ்வாறாயினும் இன்றைய உலகப் புறச்சூழலில் சீனாவின் ஆதிக்கத்தையும் BRI புதுமுயற்சி விரிவாகிச் செல்வதையும் தடுக்கும் ஆற்றல் நோயாளிகளாக மாறிப்போயுள்ள ஐரோப்பிய, அமெரிக்க பொருளாதாரங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

சீனாவுக்கு பாடம் படிப்பிக்க அமெரிக்கா மேற்கொண்ட வர்த்தக யுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்து போயுள்ளமையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எனவே இருபத்தோராம் நூற்றாண்டு ஆசியாவின் (சீனாவின்?) நூற்றாண்டில் இருக்கும் என்ற கருத்து உண்மையாகும் போலத்தான் இருக்கிறது.

கலாநிதி எம். கணேசமூரத்தி
பொருளியல்துறை,
கொழும்புப் பல்கலைக்கழகம்

இணையவழிக் கல்வியும் இன்றைய தேவையும் கல்வி மாணவர்கள் கொரோனாOnline classஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வி...
17/07/2021

இணையவழிக் கல்வியும் இன்றைய தேவையும்

கல்வி மாணவர்கள் கொரோனா
Online classஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வியாகும். அக்கல்வியால் அறிவார்ந்த சமுதாயம் மலர்கிறது. கல்வி கற்கும் முறைகளில் காலந்தோறும் பல மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

கற்றல், கற்பித்தல் எனும் நேரடி வகுப்பறை நிகழ்வில் ஆசிரியரும் மாணவரும் இணைந்து செயல்படுவர். இந்நிலை இன்றைய சூழலில் இணைய வழியில் கற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. தகவல் தொழில்நுட்பப் பெரு வளர்ச்சியால் உலகமே ஒரு சிறிய கைப்பேசிக்குள் அடங்கிவிட்டது எனலாம்.

கொரோனா தீநுண்மி உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில் கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்தும் பொதுமுடக்கத்தால் முடங்கிப்போயின.

விளம்பரம்தொடர, ஸ்க்ரோல் செய்யவும்
மக்கள் வாழ்விலும் பொருளாதாரத்திலும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. இச்சூழ்நிலையில் மாணவர்களின் எதிர்காலக் கல்வியிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி இன்றைய சூழலில் பெரிதும் தேவையாகிறது.

அறிதிறன்பேசி (Smart Phone), மடிக்கணினி (Laptop), கணினி (Computer) முதலான தொழில்நுட்பக் கருவிகள் இன்றைய காலத்தில் கல்வி கற்கத் துணைசெய்கிறது. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பல வசதிகளோடு இணையத்தில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு Webinar, Google Meet, Zoom, Teamlink முதலான செயலிகள் அறிமுகமாயின.


அனுபவமிக்க ஆசிரியர்களால் முன் தயாரிப்புடன் பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் வகுப்புகளை ஒவ்வொரு மாணவரும் பயன்படுத்தி, அறிவை விரிவு செய்துகொள்ள வேண்டும்.

குறித்த நேரத்தில் வகுப்பு நடத்தி, கலந்துரையாடல் செய்து, மதிப்பீடு தருதல் வேண்டும். அவ்வாறு நடத்தும் போது அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல ஏதுவாக அமையும். மாணவர்களுக்குக் குறித்த நேரத்தில் குறித்த தகவலை மன நிறைவாக ஆசிரியர்கள் அளித்து ஊக்குவிக்க வேண்டும்.


கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப் படுகின்றன. பொறியியல், அறிவியல், கணினியியல் துறை மாணவர்கள் இணைய வழியில் கற்று வருகின்றனர். ஆனால் கலைப்பிரிவு மாணவர்களுக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. பல்கலைக்கழகங்கள் அதன் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தியுள்ளன.

பள்ளி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குப் புது வரவாக இன்று இணைய வழிக் கல்வி அமைகிறது. எல்லா நிலைகளிலும் தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்ளத் தூண்டுகோளாய் இணையம் விளங்குகிறது.


இனிவரும் காலங்களில் அதாவது பொதுமுடக்கக் காலத்தில் எளிமையாகக் கல்வி கற்றிட, ஏற்றவழி ஒரேவழி இணைய வழிதான். அதனை வரவேற்றுப் பயன்படுத்திட இணையவழிக் கல்வி இன்றைய சூழலில் மிகத் தேவை. அதுவே காலத்தின் கட்டாயமாகும். அதற்கு மைய, மாநில அரசுகள் ஊக்குவிக்க முன் வரவேண்டும்.

சிறப்புகள்

இணையவழிக் கல்வி, எல்லா வசதிகளோடு இருந்த இடத்தில் இருந்தவாறு கல்வி கற்கவும் மாணவர்களின் கற்றல் திறனையும் அறிவுத் திறனையும் வளர்த்தெடுக்கவும் உதவுகிறது. திறன்மிக்க ஆசிரியர்களால் பல தரவுகள் திரட்டப்பட்டு வழங்கப்படும் வகுப்புகளால் மாணவர்கள் பல பயன்களைப் பெறுவதோடு, வகுப்பு முடிந்தவுடன் கலந்துரையாடலால் பல ஐயங்களைக் களைந்து கொள்ளலாம்.

சிக்கல்கள்

இணையவழியில் நடக்கும் நீண்ட நேர வகுப்புகளால் கைப்பேசி, மடிக்கணினி முதலான கருவிகள் வெப்பத்தால் பலவீனமடையும் சூழல் உள்ளது. அதேபோன்று மாணவர்களுக்கும் தலைவலி, கண் பாதிப்பு, மனஅழுத்தம் முதலான உடலியற் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வகுப்புகள் நடக்கும் போது இடையிடையே விளம்பரங்கள் வருவதால் கவனச் சிதறல் ஏற்படும் நிலையுள்ளது.

அறிதிறன்பேசி எல்லா மாணவர்களிடம் இருக்காது. அப்படியே அறிதிறன்பேசி இருந்தாலும் இணைய இணைப்பு எல்லா நேரமும் கிடைக்காது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களால் இணைய வழியில் கல்வி கற்க முடியாத சூழல் உள்ளது.


அதனால் கல்வியில் ஏற்றத் தாழ்வு ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. அறிதிறன்பேசி இல்லாத காரணத்தால் இணையவழி வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்யும் சூழல் தற்போது நடந்து வருகிறது.

இணையவழியில் பயிலும்போது தொழில்நுட்பக் கோளாறுகளால் குறித்த நேரத்தில் வகுப்பை நடத்தி மதிப்பீடு பெற இயலாத சூழலுள்ளது. இவை போன்ற பல சிக்கல்கள் இணையவழிக் கல்வி முறையில் நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

தீர்வுகள்

ஒரு வகுப்பின் கால அளவு 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை அமையலாம். இணையவழியில் கற்கும்போது மாணவர்கள் கண் கண்ணாடி அணிந்து கற்றால் தலைவலி, கண் பாதிப்பு முதலான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். கல்வியாளர்களைக் கொண்டு அரசாங்கம் ஒரு வல்லுநர் குழுவை ஏற்படுத்தலாம்.

அக்குழு அளிக்கும் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இணையவழிக் கல்வியை நடைமுறைப் படுத்தலாம். மாணவர்கள் அனைவரும் பயன்பெற, கல்விக்காக நிரந்தரமாக ஒரு தொலைக்காட்சியை அரசாங்கம் ஏற்படுத்தி, அதனைக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் நடத்தலாம்.


அறித்திறன்பேசி, மடிக்கணினி, கணினி போன்ற தொழில்நுட்பக் கருவிகள் இல்லாத மாணவர்களும் தொலைக்காட்சி வழியாகக் கற்கமுடியும். தற்போது தமிழக அரசும் தொலைக்காட்சி வழி மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளைக் கால அட்டவணையோடு வெளியிட்டிருப்பது சற்று ஆறுதல் தருகிறது.

நிறைவாக, ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்கிணங்க, கல்வி முறையில் பல புதுமைகளைப் புகுத்தி, நம் தலைமுறையினருக்குப் பயனுள்ள வகையில் கற்றல் நிகழ்வுகளை அளித்திட வேண்டும். “கல்வி சிறந்த தமிழ்நாடு“ என்று பாரதியும் “என்னருந் தமிழ்நாட்டின்கண் எல்லோரும் கல்விகற்று..” என்று பாரதிதாசனும் கல்வி குறித்து மொழிவர்.

கல்வி வளமே நாட்டின் மிகச்சிறந்த மனிதவளம் ஆகும். இன்றைய சூழலில் இணையவழிக் கல்வி மிகமிகத் தேவையாகிறது. ஆதலால் இணையவழிக் கல்வியை நேரடி வகுப்பறைக் கல்விக்கு இணையாகக் கொள்ள முடியாது. இது தற்காலிகத் தீர்வாகக் கொள்ளலாம். எனவே அனைவருக்கும் இணையவழிக் கல்வி கிடைத்திட வழிவகை செய்யவேண்டும். அதுவே கல்வித் துறைக்கு நாம் தற்போது ஆற்ற வேண்டிய கடமையும் தேவையுமாகும்.

மன்னர்களும் அவர்கள் கட்டுவித்த குளங்களும்
15/07/2021

மன்னர்களும் அவர்கள் கட்டுவித்த குளங்களும்

செந்தரவு புத்தகத்தில் இடம்பிடித்துள்ள அருகிவரும் சில உயிரினங்களின் விபரம்
10/07/2021

செந்தரவு புத்தகத்தில் இடம்பிடித்துள்ள அருகிவரும் சில உயிரினங்களின் விபரம்

எதிர்பார்க்கைக் கட்டுரை (சிங்கள மொழி எதிர்பார்க்கை மாதிரிப் பரீட்சையைத் தழுவியது) இலங்கைப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கட...
01/07/2021

எதிர்பார்க்கைக் கட்டுரை (சிங்கள மொழி எதிர்பார்க்கை மாதிரிப் பரீட்சையைத் தழுவியது)
இலங்கைப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கடற்பரப்பில் மாசற்ற சுற்றுச்சூழல் ஒன்றினை உருவாக்குவோம் எனும் தொகுப்பொருளில் கட்டுரை வரைதல்

Address

Main Street
Periya Kinniya
31100

Opening Hours

Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+94773127434

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mind Mover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mind Mover:

Shortcuts

Share