Rafeez Moulavi

Rafeez Moulavi A motivational page toward being a good human being

26/12/2025
18/12/2025
𝐖𝐨𝐫𝐥𝐝 𝐀𝐫𝐚𝐛𝐢𝐜 𝐋𝐚𝐧𝐠𝐮𝐚𝐠𝐞 𝐃𝐚𝐲 𝟐𝟎𝟐𝟓Written by: His Excellency Khalid bin Hamoud Alkahtani, Ambassador of the Kingdom of Saudi...
17/12/2025

𝐖𝐨𝐫𝐥𝐝 𝐀𝐫𝐚𝐛𝐢𝐜 𝐋𝐚𝐧𝐠𝐮𝐚𝐠𝐞 𝐃𝐚𝐲 𝟐𝟎𝟐𝟓

Written by: His Excellency Khalid bin Hamoud Alkahtani, Ambassador of the Kingdom of Saudi Arabia to the Republic of Sri Lanka

On the occasion of World Arabic Language Day, we celebrate an ancient language that, throughout the centuries, has served as a vessel of knowledge and a source of human thought, playing a pivotal role in the transmission of sciences and the building of civilizations. With its expressive richness and structural flexibility, Arabic is not merely a language of history, but a living tool capable of interacting with the changes and demands of our time.

Given its cultural significance, the Arabic language has received increasing attention at official and institutional levels, in recognition of its importance in strengthening cultural identity and fostering a sense of belonging, as well as in supporting education, knowledge, and creativity. In this context, Saudi Arabia's Vision 2030 affirms that the Arabic language is a fundamental element in human development and societal progress, through supporting its presence in education, media, culture, and technology, enhancing Arabic content, and linking the language to cultural and intellectual development projects.

The King Salman Global Academy for the Arabic Language is an advanced institutional model in serving the Arabic language, as it undertakes a specialized scientific role in language planning, developing dictionaries and corpora, supporting scientific research, and promoting the use of the Arabic language in modern technical fields, including artificial intelligence, in addition to building international partnerships and qualifying competencies, which contributes to raising the efficiency of Arabic and enhancing its global presence.

Celebrating World Arabic Language Day is an affirmation of a growing awareness of its cultural value and its role in cultural dialogue, and an opportunity to renew the commitment to protecting and developing it, and enabling it to keep pace with the rapid transformations in today’s world.

In conclusion, the Arabic language remains a living language capable of renewal and giving, and present in its cultural and intellectual role in building a more connected and creative future.

உலக அரபு மொழி தினம் 2025

எழுத்து: இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் கெளரவ காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி

பல நூற்றாண்டுகளாக அறிவுக்கான கலனாகவும், மனித சிந்தனைக்கு ஊற்றாகவும் விளங்கி, அறிவியல் துறையை வளர்ப்பதிலும் நாகரிகங்களை கட்டியெழுப்புவதிலும் முக்கிய பங்காற்றிய பாரம்பரிய மொழியான அரபு மொழியை கொண்டாடும் தினம் இன்றாகும். அரபு மொழியானது மொழிச் செழுமையும் கட்டமைப்பில் நெகிழ்வுத்தன்மையும் கொண்ட ஒரு பண்டைய வரலாற்று மொழி மட்டுமல்ல, மாறாக காலத்தின் மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப வளைந்து கொடுக்கும் திறன் கொண்ட உயிரோட்டமான மொழியாகும்.

அரபு மொழி அதன் நாகரிக முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, அதிகாரபூர்வ மற்றும் நிறுவன மட்டங்களில் அதிகரிக்கும் கவனத்தைப் பெற்றுள்ளது. இது கலாச்சார அடையாளத்தை வலுப்படுத்துவதிலும், சுதேச உணர்வை உறுதிப்படுத்துவதிலும், கல்வி, அறிவு மற்றும் புத்தாக்க துறைகளுக்கு ஆதரவளிப்பதிலும் அதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதாகும். இதனடிப்படையில், சவூதி அரேபியாவின் விஷன் 2030 திட்டம், கல்வி, ஊடகம், கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அரபு மொழியின் பாவனையை வலுப்படுத்துவதன் மூலம், அரபு மொழியின் உள்வாங்களை மேம்படுத்தி, மொழியை கலாச்சார மற்றும் அறிவு மேம்பாட்டு திட்டங்களுடன் இணைப்பதன் மூலம், தனிநபர் கட்டமைப்பிலும் சமூக வளர்ச்சியிலும் அரபு மொழி ஒரு அடிப்படை கூறாகும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அரபு மொழிக்கான மன்னர் சல்மான் உலகளாவிய அகாடமி, அரபு மொழிக்குச் சேவை செய்யும் ஒரு முன்னேற்றமான நிறுவனமாக திகழ்கிறது. மொழிசார் திட்டமிடல், அகராதிகள் மற்றும் மொழித் தரவுத்தொகுப்புகள் உருவாக்கம், அறிவியல் ஆய்வுகளுக்கு ஆதரவு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத் துறைகளில் அரபு மொழியின் பயன்பாட்டை ஊக்குவித்தல், மேலும் சர்வதேச கூட்டாண்மைகள் உருவாக்கி திறமைகளை உருவாக்குதல் போன்ற சிறப்பு அறிவியல் பங்குகளை அது மேற்கொள்கிறது. இதன் மூலம், அரபு மொழியின் செயல்திறனை உயர்த்தி, அதன் உலகளாவிய இருப்பை வலுப்படுத்துகிறது.

உலக அரபு மொழி தினத்தை கொண்டாடுவது, அதன் நாகரிக மதிப்பு கலாச்சார வளர்ச்சியில் அதன் பங்களிப்பும் குறித்த அதிகரிக்கும் விழிப்புணர்வை உறுதிப்படுத்துவதோடு, இன்றைய உலகின் வேகமான மாற்றங்களுடன் ஒத்திசைவதற்காக அரபு மொழியை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் உள்ள உறுதிப்பாட்டை புதுப்பிக்கும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

இறுதியாக, அரபு மொழியானது புதுப்பித்தலும் பங்களிப்பும் செய்யக்கூடிய ஒரு உயிருள்ள மொழியாகத் தொடர்ந்து திகழ்கிறது; மேலும், அதிக தொடர்பாடலும் படைப்பாற்றலும் நிறைந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் அதன் கலாச்சார மற்றும் அறிவுப் பங்கு தெளிவாக வெளிப்படுகிறது.

ලෝක අරාබි භාෂා දිනය 2025

කතෘ: කාලිඩ් බින් හමූද් අල්-කහ්තානි, ශ්‍රී ලංකා ජනරජයේ සෞදි අරාබි රාජධානියේ තානාපති

ලෝක අරාබි භාෂා දිනය නිමිත්තෙන්, අපි සියවස් ගණනාවක් පුරා දැනුමේ භාජනයක් සහ මානව චින්තනයේ මූලාශ්‍රයක් ලෙස සේවය කළ, විද්‍යාවන් සම්ප්‍රේෂණය කිරීමේදී සහ ශිෂ්ටාචාර ගොඩනැගීමේදී ප්‍රධාන කාර්යභාරයක් ඉටු කළ පුරාණ භාෂාවක් සමරන්නෙමු. එහි ප්‍රකාශිත පොහොසත්කම සහ ව්‍යුහාත්මක නම්‍යශීලීභාවය සමඟ, අරාබි භාෂාව හුදෙක් ඉතිහාසයේ භාෂාවක් නොව, අපේ කාලයේ වෙනස්කම් සහ ඉල්ලීම් සමඟ අන්තර් ක්‍රියා කළ හැකි ජීවමාන මෙවලමකි.

සංස්කෘතික අනන්‍යතාවය ශක්තිමත් කිරීම සහ අයිතිවාසිකම් පිළිබඳ හැඟීමක් ඇති කිරීම මෙන්ම අධ්‍යාපනය, දැනුම සහ නිර්මාණශීලීත්වයට සහාය වීම සඳහා අරාබි භාෂාවේ වැදගත්කම හඳුනා ගනිමින්, නිල සහ ආයතනික මට්ටමින් එයට වැඩි අවධානයක් ලැබී තිබේ. මෙම සන්දර්භය තුළ, සෞදි අරාබියේ 2030 දැක්ම, අරාබි භාෂාව අධ්‍යාපනය, මාධ්‍ය, සංස්කෘතිය සහ තාක්‍ෂණය තුළ එහි පැවැත්මට සහාය වීම, අරාබි අන්තර්ගතය වැඩි දියුණු කිරීම සහ භාෂාව සංස්කෘතික හා බුද්ධිමය සංවර්ධන ව්‍යාපෘතිවලට සම්බන්ධ කිරීම තුළින් මානව සංවර්ධනයේ සහ සමාජ ප්‍රගතියේ මූලික අංගයක් බව තහවුරු කරයි.

කිං සල්මාන් ග්ලෝබල් ඇකඩමිය අරාබි භාෂාවට සේවය කිරීමේදී දියුණු ආයතනික ආකෘතියක් වන අතර, එය භාෂා සැලසුම් කිරීම, ශබ්ද කෝෂ සහ සංස්ථාවන් සංවර්ධනය කිරීම, විද්‍යාත්මක පර්යේෂණ සඳහා සහාය වීම සහ කෘතිම බුද්ධිය ඇතුළු නවීන තාක්ෂණික ක්ෂේත්‍රවල අරාබි භාෂාව භාවිතය ප්‍රවර්ධනය කිරීම සඳහා විශේෂිත විද්‍යාත්මක කාර්යභාරයක් ඉටු කරයි. ජාත්‍යන්තර හවුල්කාරිත්වයන් සහ සුදුසුකම් ලැබීමේ නිපුණතා ගොඩනැගීමට අමතරව, අරාබි භාෂාවේ කාර්යක්ෂමතාව ඉහළ නැංවීමට සහ එහි ගෝලීය පැවැත්ම වැඩි දියුණු කිරීමට දායක වේ.

ලෝක අරාබි භාෂා දිනය සැමරීම යනු එහි සංස්කෘතික වටිනාකම සහ සංස්කෘතික සංවාදයේ එහි කාර්යභාරය පිළිබඳ වර්ධනය වන දැනුවත්භාවය තහවුරු කිරීමක් වන අතර, එය ආරක්ෂා කිරීමට සහ සංවර්ධනය කිරීමට ඇති කැපවීම අලුත් කිරීමට සහ අද ලෝකයේ වේගවත් පරිවර්තනයන් සමඟ වේගයෙන් ගමන් කිරීමට එයට හැකියාව ලබා දීම සඳහා අවස්ථාවක් වේ.

අවසාන වශයෙන්, අරාබි භාෂාව පුනර්ජීවනය කිරීමේ සහ පරිත්‍යාග කිරීමේ හැකියාව ඇති ජීවමාන භාෂාවක් ලෙස පවතින අතර, වඩාත් සම්බන්ධිත හා නිර්මාණශීලී අනාගතයක් ගොඩනැගීමේදී එහි සංස්කෘතික හා බුද්ධිමය කාර්යභාරය ඉටු කරයි.

17/11/2025
https://youtu.be/gxbkdM0qICs?si=WY5QwcpbU0Xv95Xd
13/11/2025

https://youtu.be/gxbkdM0qICs?si=WY5QwcpbU0Xv95Xd

🌸 صلوا على الحبيب المصطفى ﷺ 🌸💡 قال النبي ﷺ: "من صلى علي صلاة صلى الله عليه بها عشرًا"فأكثروا من الصلاة والسلام عليه تنالوا البركات والرحمات.أخلاق النبي......

https://youtu.be/fFjCYqjMH5M?si=5uQ1y75UbBYqpSSl
13/11/2025

https://youtu.be/fFjCYqjMH5M?si=5uQ1y75UbBYqpSSl

في هذا الفيديو من قناة زاد القلوب، نغوص في فكر الإمام ابن القيّم الجوزية من خلال كتابه العظيم مدارج السالكين، لنتأمل العلاقة العجيبة بين القلب والعقل في طريق...

2026 ஹஜ் சம்பந்தமான இலங்கையருக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது .---------------------------2026ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்...
11/11/2025

2026 ஹஜ் சம்பந்தமான இலங்கையருக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது .
---------------------------
2026ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டது. ஜெத்தாவில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை கலாசார விடயங்களுக்கான பிரதி அமைச்சர் முநீர் முலாஃபர் மற்றும் சவூதி ஹஜ், உம்ரா பிரதி அமைச்சர் கலாநிதி அப்துல் பாத்தாஹ் பின் சுலைமான் மஷ்ஷாத் கையெழுத்திட்டனர்.
இலங்கைக்கு 3,500 யாத்திரீகர்கள் அளவில் ஹஜ் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

எமது தாய் நாடு மென்மேலும் பாரிய அபிவிருத்திகளைக் காண்பதற்கு இப்படியான சந்திப்புக்கள் வழிகோல வேண்டும் எனப் பிரார்த்திக்கி...
10/11/2025

எமது தாய் நாடு மென்மேலும் பாரிய அபிவிருத்திகளைக் காண்பதற்கு இப்படியான சந்திப்புக்கள் வழிகோல வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.

ரியாத்தில் இடம்பெறும் 26வது உலக சுற்றுலா..
Read more>>>https://www.itnnews.lk/1g17

மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்:பாலஸ்தீன மக்களுக்கு உதவும் பிரபலமான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, காச...
09/11/2025

மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்:

பாலஸ்தீன மக்களுக்கு உதவும் பிரபலமான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, காசாவின் தெற்கே உள்ள அல்-கராரா பகுதியில் உள்ள அனாதை முகாமில் உணவுப்பொருட்கள் மற்றும் குழந்தை பால்மா போன்றவற்றை விநியோகித்ததன் மூலம் பாலஸ்தீனத்திற்கு சவுதி அரேபியாவின் அசைக்க முடியாத ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது மற்றும் உலகம் முழுவதும் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் அதன் மனிதாபிமான பங்கை விரிவுபடுத்தியுள்ளது.

01/11/2025

சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சு, இலங்கைக்கான சவுதி அரேபிய தூதரகம் மற்றும் இலங்கையின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனப் போட்டியின் மூன்றாவது பதிப்பினை நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.
இப்போட்டிகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரபுக் கல்லூரிகள், ஹிப்ழுல் குர்ஆன் மத்ரஸாக்கள் மற்றும் அரச பாடசாலைகள் அல்லது அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களை மையப்படுத்தி ஆண், பெண் இரு பாலாருக்கும் நான்கு பிரிவுகளாக நடாத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் போட்டியாளர்கள் சவூதி அரேபியாவின் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சினால் பெறுமதியான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுவர்.

🛑போட்டி நிபந்தனைகள்:

1-இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.

2-முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அரபுக் கல்லூரி, ஹிப்ழ் குர்ஆன் மத்ரஸா, அரச பாடசாலைகள் அல்லது அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கல்வி கற்பவராக இருத்தல்.

3-ஒரு போட்டியாளர் ஒரு பிரிவில் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்.

3-போட்டியாளர்கள் ஏதாவது ஒரு சர்வதேச போட்டியில் ஏற்கனவே கலந்துகொள்ளாதவராகவும், கடந்த 2023,2024 ஆம் ஆண்டுகளில் நடந்தேறியே 1ம் மற்றும் 2ம் பதிப்புக்களில் கலந்துகொண்டு பரிசு பெறாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4- 2025.11.30 ஆம் திகதியை அடிப்படையாககொண்டே போட்டியில் பங்குகொள்கின்றவர்களது வயது கணிக்கப்படும்.

5-போட்டி முடிவுகளில் நடுவர்களின் தீர்மானமே இறுதியானதாகும்.

6-போட்டியாளர்கள் திணைக்களத்தின் விதிகளை மீறும் பட்சத்தில் போட்டியில் பங்குபற்றும் தகைமையை இழந்தவராகக் கருதப்படுவர்.

🛑போட்டி நடைபெறும் தினம்

=ஆரம்பகட்டப் போட்டிகள் 2025 நவம்பர் மாதம் நடத்துவதற்காகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

=இறுதிப் போட்டி எதிர்வரும் 2025 டிசம்பர் மாதமளவில் கொழும்பில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

🛑 போட்டிகள் நடைபெறும் நிலையங்கள்

1. கொழுப்பு
2. கண்டி
3. மட்டக்களப்பு
4. குருநாகல்
5. வவுனியா

🛑 போட்டிகள் கீழ்வரும் பிரிவுகளில் நடைபெறும்

பிரிவு: 01:
அல்குர்ஆன் முழுவதும்
வயது: 15 - 23

பிரிவு 02
ஆரம்ப பத்து ஜுஸ்'ங்கள்
வயது: 12 - 20

பிரிவு: 03:
முதல் ஐந்து ஜுஸ்'உக்கள்
வயது: 10 - 15

பிரிவு: 04:
முதல் இரண்டு (1-2) அல்லது இறுதி இரண்டு ஜுஸ்'உக்கள் (29 -30)
வயது: 07 - 12

🛑விண்ணப்ப முடிவுத் திகதி: 2025.11.09

🛑விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்களை பின்வரும் google form இணைப்பினூடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
https://forms.gle/DunA6FwtrMs3eZ2j8

🛑போட்டியின் போது சமர்ப்பிக்கப்படவேண்டியவை

=google form விண்ணப்பத்தின் பிரதி.

=விண்ணப்பதாரிகளின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்.

=அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச் சீட்டின் பிரதிகள்.

=அடையாள அட்டை இல்லாதவர்கள் 2″X2″ அளவிலான புகைப்படத்தின் பின்பக்கத்தில் பெயர், முகவரி என்பவற்றை குறிபிட்டு கல்லூரி அதிபர் மூலம் அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணம்.

🛑 📓குறிப்பு: தபால் மூலம் அல்லது நேரடியாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Address

Ehuthar Hajiyar Road
Periya Kinniya
31100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafeez Moulavi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rafeez Moulavi:

Shortcuts

Share

Category