12/08/2026
A/L 2026 தமிழ் மொழிமூல பொருளியல் வினாத்தாளில் எண்ணியல் முரண்பாடு.
வினா இலக்கம் 6 (iii)
வணிக வங்கியின் ஐந்தொகைத் தரவுகள் வழங்கப்பட்ட பகுதியில் ஆங்கில மற்றும் சிங்கள மொழி மூல வினாத்தாளில் மூலதனம் ரூபா 50 மில்லியன் என சரியான பெறுமதி வழங்கப்பட்டு, தமிழ் மொழி வினாத்தாளில் மாத்திரம் மூலதனம் ரூபா 500 மில்லியன் என வேறுபட்ட பெறுமதி வழங்கப்பட்டுள்ளமையானது மாணவர்களிடையே குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது.
எனவே, விடைத்தாள் மதிப்பீட்டின்போது இந்த முரண்பாடு உரிய முறையில் கருத்தில் கொள்ளப்பட்டு தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு எந்தவிதமான அநீதியும் ஏற்படாத வகையில் உரிய அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாக நியாயமான தீர்வொன்றை வழங்க வேண்டும்.
Harini Amarasuriya
Mujibur Rahman