Al-Fahriya Central College

Al-Fahriya Central College

Share

Thotawatta, Panadura.

Photos from Al-Fahriya Central College's post 11/08/2026

🎉 BEST STUDENTS OF THE WEEK🎉




Photos from Al-Fahriya Central College's post 07/08/2026

💫💖🎊🎉

*The Prefects' investiture Ceremony* of Al Fahriya Central College was held on 6 August 2026 under the patronage of the Principal, *Mrs. M.N.F. Rikasha*.
The event was graced by *Mr. A.B.M. Ashraf*, tha additional Secretary to the Prime Minister, as the Chief Guest.
The Assistant Director of Kalutara Zone ( tamil medium) , *Mrs. Sivagowri umapathy* attended the ceremony as the Special Guest.
The occasion was further honoured by the presence of Mr. A.K Haleem Majeed, Principal of Jeelan Central College, and Mrs. A.R.N Hassan’s, Principal of Alaviya Muslim Maha Vidyalaya, along with other distinguished invitees.

Photos from Al-Fahriya Central College's post 05/08/2026

2026.08.09 அன்று நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் எமது கல்லூரியின் மாணவர்கள் உடலாரோக்கியத்துடன் தாம் கற்றவைகளை நினைவுபடுத்தி சிறப்பான முறையில் அப்பரீட்சைக்கு முகம் கொடுக்கவும் இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்த நிகழ்வு நேற்று (04.08.2026) கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி அதிபர், உபஅதிபர்கள், ஆசிரியர்கள், Sds செயலாளர் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் போது துஆப் பிரார்த்தனை மெளலவி அல் ஹாபிழ் முஷாகிர் மதனி (அலவி) அவர்களால் நிகழ்த்தப்பட்டது.




#

01/08/2026
Photos from Al-Fahriya Central College's post 31/07/2026

*Fahriya Mega Reunion 2026*

அல் பஹ்ரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களை மீண்டும் பாடசாலையுடன் இணைக்கும் நோக்கில் *Fahriya Mega Reunion 2026* நிகழ்வு 2026 ஜூலை 26 ஆம் திகதி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் Mrs. M.N.F. Rikasa அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் OBA செயலாளர் M.R.M Saroof JP வரவேற்புரை நிகழ்த்த, கௌரவ அதிதியாக இலங்கை பிரதமரின் மேலதிக செயலாளர் திரு. A.B.M. Ashraff அவர்கள் கலந்து கொண்டு விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

உலமாக்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு பழைய மாணவர் குழுக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கிராஅத், வரவேற்புரை, தலைமை உரை, பாடசாலை அபிவிருத்தி தொடர்பான விளக்கக்காட்சி, கௌரவ அதிதி உரை, பாடசாலையை மையமாகக் கொண்ட பாடல் வெளியீடு, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் மற்ங கருத்துரை இடம்பெற்றதோடு நன்றியுரை SDEC செயலாளர் M A.M Hassan வழங்கினார்.

> உரைகளில்,
*"பாடசாலையின் வளர்ச்சிக்கான ஒற்றுமை, பழைய மாணவர்களின் தொடர்ச்சியான பங்களிப்பின் அவசியம், அண்மைக்கால கல்வி முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது".*

மேலும், *FBL Season 04* நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்துவதற்காக ஒவ்வொரு பழைய மாணவர் Batch-இலிருந்தும் பிரதிநிதிகள் இணைந்த உபகுழு அமைக்கப்பட்டது.

*"ஒற்றுமையே எமது பலம்; பழைய மாணவர்களின் பங்களிப்பே எமது பாடசாலையின் எதிர்கால வளர்ச்சியின் அடித்தளம்."*

Photos from Al-Fahriya Central College's post 28/07/2026

க.பொ.த (உ/த) - 2026 பரீட்சைக்கு கலைப் பிரிவில் தோற்றும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அரசறிவியல் பாட விசேட செயலமர்வு 27.07.2026 அன்று நடைபெற்றது.

பிரபல அரசறிவியல் பாட வளவாளர் பஸ்மில் கான் சேர் அவர்கள் பங்கேற்றார். இச்செயலமர்வுக்கான அனுசரணை திரு. அஸ்கர் அவர்களால் வழங்கப்பட்டது.




Photos from Al-Fahriya Central College's post 20/07/2026

க.பொ.த (உ/த) - 2026 பரீட்சைக்கு கலைப் பிரிவில் தோற்றும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய நாகரிகம் பாட விசேட செயலமர்வு இன்று (20.07.2026) நடைபெற்றது.

இச்செயலமர்வுக்கான அனுசரணை G.C.E. (O/L) 2000 Batch பழைய மாணவர்களால் வழங்கப்பட்டது.




Photos from Al-Fahriya Central College's post 20/07/2026

க.பொ.த (உ/த) - 2026 பரீட்சைக்கு வர்த்தக பிரிவில் தோற்றும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கணக்கியல் பாட விசேட செயலமர்வு 19.07.2026 அன்று நடைபெற்றது.

வியாங்கல்லயைச் சேர்ந்த M. அக்ரம் சேர் அவர்கள் வளவாளராக பங்கேற்றார். இச்செயலமர்வுக்கான அனுசரணை G.C.E. (O/L) 2013 Batch பழைய மாணவர்களால் வழங்கப்பட்டது.




Photos from Al-Fahriya Central College's post 20/07/2026

க.பொ.த (உ/த) - 2026 பரீட்சைக்கு வர்த்தக, கலை பிரிவுகளில் தோற்றும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொருளியல் பாட விசேட செயலமர்வு 18.07.2026 அன்று நடைபெற்றது.

மொரட்டுவ மோதரையைச் சேர்ந்த M.H.F. பஹ்மிதா ஆசிரியை அவர்கள் வளவாளராக பங்கேற்றார். இச்செயலமர்வுக்கான அனுசரணை Fahriya Future இனால் வழங்கப்பட்டது.




Want your school to be the top-listed School/college in Panadura?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Al Fahriya Central College/Thotawatta
Panadura
12500