28/04/2026
"Hidaya pearls" Award Night - 2026
___________________________________
எமதுபாடசாலையின்சாதனையாளர்களை பாராட்டி விருது வழங்கும் வரலாறு காணாத நிகழ்வு 2026.04.18 அன்று பி.ப.4.30 மணியளவில் எமது கல்லூரியின் அதிபர் MTM.சியாத் ஷேர் அவர்களின் தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விருது வழங்கும் விழா வானது 2017ஆம்ஆண்டு முதல் இது வரை க்கும் க.பொ.த.உயர்தர பரீட்சையில் தோற்றி அதி சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுபல்கலைக்கழகம், மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவான மாணவிகளை பாராட்டி விருது வழங்கி கௌரவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் அஷ்ஷேக் AM.றஹ்மத்துல்லா ஷேர் அவர்கள் கலந்து கொண்டதோடு,கௌரவ அதிதியாக கல்முனை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்(Assistant Superintendent of Police) MKM.இப்னு அஸார் ஸேர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவர்களோடு எமது கிராமத்தின் கல்வி யியலாளர்கள், அக்கரைப்பற்று வலயக்கல்வி பிரதிக் கல்வி பணிப்பாளர் கள்,எமது கிரா மத்தின் வைத்தியர்கள், பொறியியலாளர்கள்,சட்டத்தரணிகள், அதிபர்கள், கல்லூரியின் ஆசிரியர்கள்,கல்வி சாரா ஊழியர்கள்,ஓய்வு பெற்ற அதிபர்கள்,அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு, பழைய மாணவர்கள்,மற்றும் பெற்றோர் கள் என பல தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.
தலைமைஉரை நிகழ்திய கல்லூரியின் அதிபர்அவர்கள் தனது உரையில் எமது பாடசாலை பல சவால்களுக்கு மத்தியில் எவ்வாறு சிறப்பாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் இப்பிராந்தியத்தில் முன்னிலையில் திகழ்கிறது என்பனை தெழிவுபடுத்தியதோடு எம் கல்லூரியின் உடனடித் தேவையான வகுப்பறை அமைக்கத் தேவையான பாடசாலைக்கு அருகாமையில் உள்ள நிலத்தினை கொள்வனவு செய்வது தொடர்பான யோசனையினையும் முன் மொழிந்தார். இதன்போது அவர் தனது உரையில் இவ்விழா இவ்வளவு சிறப்பாக நடைபெற ஒத்துழைப் வழங்கிய SDEC செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், தனவந்தர்கள், பழையமாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் என பலருக்கும் தனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். இதனைத்தொடர்ந்து அதிதிகளால் மாணவர்கள் மெடல் அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது அவர்களது பெற்றோர்களும் பிரசன்னமாயிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து அதிதிகள் சார்பாக எமது பிராந்தியத்தின் பெண் ஆளுமை சம்மாந்துறை கல்வி வலய பிரதிக் கல்வி ப்பணிப்பாளர் MM.சித்தி பாத்திமா அவர்கள் உரைநிகழ்தியதோடு, பாடசாலை சார்பாக உதவி அதிபர் UL. அஸ்வத் அவர்களும் SDEC சார்பாக கலாநிதி AH. றிபாஸ் விரிவுரையாளர் அவர்களும் உரை நிகழ்த்தினர். இதனைத்தொடர்ந்து விருது பெற்ற முன்னிலை மாணவிகளில் ஒருவரான Mrs.T. பாத்திமா நதா அவர்களால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து பிரதம அதிதி உரை இடம்பெற்றது. வலயக்கல்வி ப்பணிப்பாளர் அஷ்ஷேக் AM. றஹ்மத்துல்லா ஸேர் அவர்கள் தனது உரையில் பாராட்டி கௌரவம் பெறுகின்ற மாணவர்களை வாழ்தியதோடு இப்பிரமாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்த பாடசாலை சமூகத்தினரையும் அதிபரை யும் பாரா
ட்டியதோடு இவ்வாறான சாதனைகளுக்குப்பின்னால் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் போன்ற தரப்புகளின் தியாகம் இருப்பதுபோன்று வலயக்கல்வி அலுவலகம் எவ்வாறான பங்களிப்பு களை செய்தது என்பது தொடர்பாகவும் சிலாகித்துப்பேசினார். இதனைத்தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு A/L பரீட்சையில் அதிசிறந்த பெறுபேறுகளை பெற உழைத்த ஆசிரியர்கள் பாராட்டப்பட்டதுடன் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதனோடு இணைந்ததாக இப்பாடசாலையின் அதிபராக நியமிக்கப்பட்டது முதல் மிக சிறந்த முன்னெடுப்புகளை கல்விப் புலத்தில் மேற்கொண்டுவருவதோடு
இந்நிகழ்வு சிறப்புற அமைய அயராது பாடு பட்டு உழைத்த அதிபர் MTM.சியாத் ஸேர் அவர்களை SDEC உறுப்பினர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தமை இந்நிகழ்வின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
இறுதியாக SDEC உறுப்பினர் தென்கிழக்கு பல்கலைக்கழக அபிவிருத்தி உத்தியோகத்தர் Mr.ALM.ஹஸ்மிர் அவர்களின் நன்றி உரையுடன் இராப்போசன நிகழ்வு இடம்பெற்றது. இறுதியாக புகைப்படம் எடுக்கின்ற நிகழ்வு இடம்பெற்றதுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.