PPA Al-Hamra MV - Oluvil

PPA Al-Hamra MV - Oluvil Official page of PPA Ak/Al- Hamra MV -Oluvil

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் Iconic Youth - Sri Lanka எனும் தொண்டு நிருவ...
25/12/2025

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் Iconic Youth - Sri Lanka எனும் தொண்டு நிருவணத்தின் அனுசரணையுடன் மாணவர்களுக்காக ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் பாடசாலை அதிபர் அஷ்ஷெய்க் யூ.கே. அப்துர் ரஹீம் அவர்களிடம் நேற்று (24) வழங்கி வைக்கப்பட்டது.

தேசிய ரீதியில் எமது பாடசாலையினதும், எமது ஊரினதும் பெயரை நிலை நாட்டிய எமது  #தங்க மகனுக்கு   (PPA) சார்பான கௌரவம்.*******...
20/10/2025

தேசிய ரீதியில் எமது பாடசாலையினதும், எமது ஊரினதும் பெயரை நிலை நாட்டிய எமது #தங்க மகனுக்கு (PPA) சார்பான கௌரவம்.
********************************************

அண்மையில் இடம்பெற்ற பாடசாலை களுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளப் போட்டியில் பங்கு பற்றி 14 வயதுக்குட்பட்டோருக்கான நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் தங்கப்பதக்கம் மற்றும் 80m Hurdles நிகழ்ச்சியில் வெள்ளிப் பதக்கம் என்பவற்றைப் பெற்று எமது பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை தேடித்தந்த U. அவர்கள் எமது பழைய மாணவர் சங்கம் சார்பாக அவரின் பெற்றோர்களின் முன்னிலையில் இன்று பாராட்டப்பட்டார்.

அல்ஹம்துலில்லாஹ்.

இம்மாணவன் எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் சாதித்து நிற்க எமது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

பழைய மாணவர் சங்கத்தின் நிருவாக உறுப்பினர்களுக்கான T-Shirt வெளியீடு ஒலுவில் அக்/ அல்-ஹம்றா மாகா வித்தியாலய பழைய மாணவர் சங...
18/10/2024

பழைய மாணவர் சங்கத்தின் நிருவாக உறுப்பினர்களுக்கான T-Shirt வெளியீடு

ஒலுவில் அக்/ அல்-ஹம்றா மாகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் நிருவாக உறுப்பினர்களுக்கான T-Shirt வெளியீடு நேற்று (17) அதிபர் காரியாலயத்தில் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் அஷ் ஷெய்க் யூ.கே அப்துர் றஹீம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பழைய மாணவர் சங்கத்தின் எதிர்கால திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றதுடன் நிருவாக உறுப்பினர்களுக்கான தலைவர் T-Shirt ஐ வழங்கிவைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

மாகாண விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது ஒலுவில் அல்-ஹம்றாஇன்று சனிக்கிழமை (07.09.2024) மட்டக்களப்பு வெபர் மைதானத்தி...
07/09/2024

மாகாண விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது ஒலுவில் அல்-ஹம்றா

இன்று சனிக்கிழமை (07.09.2024) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் எமது அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி RF. SAMA - Discuss Throw நிகழ்ச்சியில் முதலாம் இடத்தினைப் பெற்று எமது மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இப்போட்டிகளுக்காக ஆலோசனை மற்றும் அனுமதியினை வழங்கி உதவிய அதிபர், பிரதி, உதவி அதிபர்களுக்கும் மாணவர்களை பயிற்றுவித்து அழைத்துச்சென்ற விளையாட்டுப் பொறுப்பாசிரியரும் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் பயிற்றுப்விப்பாளருமான R.நௌசாட் sir விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் A. அஸ்மத் சஹி மற்றும் பல வழிகளிலும் ஆலோசனைகள் வழங்கி உதவிய உடற்கல்வி ஆசிரியர் AM. கியாஸ் sir இன்றைய தினம் மாணவிகளை அழைத்துச்செல்ல முன்வந்த றிஸானா Tr, சஸ்னா Tr ஆகியோருக்கும் இதனை ஒழுங்குபடுத்த உதவிய பிரதி அதிபர்
MA. கமருன்நிஸா Madam மற்றும் ஒத்துழைத்த நிர்வாகத்தினருக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் பழைய மாணவர்கள் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

நன்றி
ஒலுவில் மீடியா

அனைத்து பழைய மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கு அன்பின்பணிவு !எமது பாடசாலை அக்/அல்-ஹம்றா மகா வித்தியாலய...
28/08/2024

அனைத்து பழைய மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கு அன்பின்பணிவு !

எமது பாடசாலை அக்/அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களாகிய உங்களை எமது பழையமாணவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அதில் ஒரு முறைமையாக கீழ்காணப்படும் Google Form ஐ நிரப்பி உறுப்புரிமையை ஏற்படுத்தி உங்களுக்கான அங்கத்துவ இலக்கத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும். (இம்முறைமை கடினம் எனக்கருதுபவர்கள் Print செய்யப்பட்ட விண்ணப்பிரதியினை எமது செயலாளர்களை தொடர்புகொண்டு பெற்று பூரணப்படுத்த முடியும்.)

எதிர்வரும் நாட்களில் எமது பாடசாலையில் இடம்பெறும் அனைத்துவிதமான நிகழ்வுகளுக்கும் எம்மால் வழங்கப்படும் அங்கத்துவ இலக்கத்தினை வைத்தே நீங்கள் உள்வாங்கப்படுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

குறிப்பு: அங்கத்துவ இணைவுப்பணமான 100 ரூபாய் நேரடியாகவோ அல்லது உங்கள் இணைப்பாளர்கள் மூலமோ அறவிடப்படும்.

மேலதிக தகவல்களுக்கு;
செயலாளர் - 076 125 5913
உதவி செயலாளர் - 076 487 7127

இவ்வண்ணம்,
செயலாளர்,
பழைய மாணவர்கள் சங்கம்,
அக்/அல்-ஹம்றா மகா வித்தியாலயம்.

Click here for the Application 👇
https://forms.gle/HzJZjQoTYvjUqapx8

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலத்தில் “கட்டாயக் கல்விக்கான குழு” வலயக் கல்விப் பணிமனையால் நியமனம்.கட்டாயக் கல்விப் பிரகட...
27/08/2024

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலத்தில் “கட்டாயக் கல்விக்கான குழு” வலயக் கல்விப் பணிமனையால் நியமனம்.

கட்டாயக் கல்விப் பிரகடனங்களை அமுல்படுத்துவதற்காக "பாடசாலை குழுவுக்கான" உறுப்பினர்களை நியமித்தல் நிகழ்வு இன்று (26) பாடசாலையின் கூட்டமண்டபத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இலக்கம் 1963/30 அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையின் படி கட்டாயக் கல்விப் பிரகடனங்களின் கீழ் கமு / அக் / அல் ஹம்றா மகா வித்தியாலய பாடசாலைக்காக அமைக்கப்பட்ட உறுப்பினர்கள் இரு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த குழுவின் தலைவராக பாடசாலை அதிபர் செயல்புரிவதோடு அதன் உறுப்பினர்களாக S.Haasik Sir, MC.Nasirudeen Sir, TM Nausad Ali Sir, NL.Thowfeek, Ml.Latheef, MS.Nihal, AM.Rinoos மற்றும் AM.Samly(student) ஆகியோர் நியமிக்கப்டுள்ளனர்.

தகவல்,
ஜே.வஹாப்தீன்,
பிரதி அதிபர்,
அல்-ஹம்றா மகா வித்தியாலயம்.

அல்-ஹம்றா பழைய மாணவர்கள் ஒன்றுகூடல் - பகுதி 2எமது அக்/அல் ஹம்றா மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் எதிர்கால செயற...
19/08/2024

அல்-ஹம்றா பழைய மாணவர்கள் ஒன்றுகூடல் - பகுதி 2

எமது அக்/அல் ஹம்றா மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக இரண்டாங்கட்ட 7 Batch க்கு உரிய பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் பகுதி -2 இன்று (18.08.2024) சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இவ்வண்ணம்.
செயலாளர்,
பழைய மாணவர் சங்கம்,
அக்/அல்/ஹம்றா மகா வித்தியாலயம்.

பழைய மாணவர்கள் ஒன்றுகூடல் - பகுதி 1எமது அக்/அல் ஹம்றா மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் த...
12/08/2024

பழைய மாணவர்கள் ஒன்றுகூடல் - பகுதி 1

எமது அக்/அல் ஹம்றா மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக முதற்கட்டமாக 10 Batch க்கு உரிய பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் பகுதி -1 இன்று (11) சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இவ்வண்ணம்.
செயலாளர்,
பழைய மாணவர் சங்கம்,
அக்/அல்/ஹம்றா மகா வித்தியாலயம்.

ஒலுவில், அக்/அல்-ஹம்றா மகா வித்தியாலத்தில் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட பழைய மாணவர்கள் சங்கத்தின் (PPA)  நிறைவேற்றுக்குழ...
12/08/2024

ஒலுவில், அக்/அல்-ஹம்றா மகா வித்தியாலத்தில் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட பழைய மாணவர்கள் சங்கத்தின் (PPA) நிறைவேற்றுக்குழு
ஒலுவிலூரின் தாய் பாடசாலையான அல் - ஹம்றா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுத் தெரிவு கடந்த 24.05.2024 அன்று பாடசாலையின் அஸ்ரப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் விபரம்.
தலைவர் : UK. அப்துர் ரஹீம் (Principal)
உப தலைவர் : AMM. நெளஷாட் (MD-NST Engineering)
செயலாளர் : A. மலிக்குர் ரஹ்மான்(PHFO)
உப செயலாளர் : AL. அஹ்சன் அஹமட் (BSc Hons -UG)
பொருளாளர் : MIM. ஹர்சாத் (BBA,HNDA,DO)
உப பொருளாளர் : SM. றியாஸ் (MD-SMMR Construction)
ஆலோசகர் : Dr. MM.பைரூஸ் (Dental Surgeon)
உறுப்பினர்கள்

KA. அல் ஹாதி (undergraduate-SEUSL)
ML. றினாஸ் (HNDA,CMA,MA-SEUSL)
ALH. நிஸ்பி (HNDA,Junior Executive-Siyapatha)
SH. பாரீஜ் (BSc in Physical Sciences)
ALM. ஹஸ்பீ (BBA,B.Com,DO)
AM. றினூஸ்(BBA,MA-SEUSL)

DAY 2 LAST PART
17/03/2020

DAY 2 LAST PART

Address

Main Street
Oluvil
32360

Website

Alerts

Be the first to know and let us send you an email when PPA Al-Hamra MV - Oluvil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category