20/06/2026
வெற்றி என்பது ஒரு பயணம் : அது இலக்கல்ல.
நேற்று (19) வெளியான 2025ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் வெற்றி பெற்று சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் Gaffoor Moulavi Legacy Path சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உங்களது கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இன்று சிறந்த பலனைத்தந்துள்ளது. உங்கள் சாதனைகளைக் கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கப்பெறாத மாணவர்களுக்கு இது உங்கள் கல்விப்பயணத்தின் முடிவல்ல என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.
பரீட்சை முடிவு உங்கள் திறமையையோ அல்லது உங்கள் எதிர்கால வெற்றியையோ தீர்மானித்து விடாது. வெற்றியை நோக்கிச்செல்ல எண்ணற்ற வழிகள் உள்ளன. உங்கள் பாதையைக்கண்டறிய நாங்கள் உங்களுக்கு உதவத்தயாராகவுள்ளோம்.
MGM Legacy Path, அடுத்தடுத்த வாய்ப்புகளையும் புதிய தொடக்கங்களையும் திடமாக நம்புகிறது. உங்கள் வாழ்க்கைப்பாதையை மீண்டும் சரியாகத் திட்டமிடவும், முன்னேறவும் உதவும் வகையில், துறைசார்ந்த நிபுணர் குழுவுடன் இணைந்து பிரத்தியேக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவுள்ளோம்.
நீங்கள் எந்தத்துறைகளில் ஆர்வம் கொண்டுள்ளீர்கள்?
Agriculture
Information Technology
Engineering
Automobile
Hotel & Tourism
அல்லது வேறு ஏதேனும் துறைகள்.
உங்கள் ஆர்வத்தை கமெண்ட் செய்யுங்கள். நீங்கள் வெற்றிபெறத்தேவையான திறன்களைப்பெற, நிபுணர்களையும் வளங்களையும் நாங்கள் பெற்றுத் தருகிறோம்.
உங்கள் எதிர்காலத்தை நாம் இணைந்து உருவாக்குவோம்.
- MGM Legacy Path,
Join our community for more information and update
https://chat.whatsapp.com/FVT9APRparGJX3wRenyz08