Dharul Quran

Dharul Quran School and matharasa

றமழான் நிகழ்ச்சிகள்
21/04/2021

றமழான் நிகழ்ச்சிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ 20.02.2021இம் மதரஸா ஓட்டமாவடி psகுறுக்கு வீதியில் அமைந்துள்ள தாருல் குர்ஆன் எ...
20/02/2021

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
20.02.2021

இம் மதரஸா ஓட்டமாவடி psகுறுக்கு வீதியில் அமைந்துள்ள தாருல் குர்ஆன் எனும் பகுதி நேர ஹிப்ழ் மதரஸாவாகும். எமது மதரஸா இடப்பற்றாக்குறை காரணமாக அல்லாஹ்வின் அருளாலும், ஊர் மக்களின் மிகப்பாரிய பங்களிப்புகளுடன் கட்டப்பட்டது. தற்போது கட்டிடம் முழுமையடைய பின்வரும் முக்கிய பொருட்கள் தேவைப்படுகிறது.
தங்களால் முடிந்த உதவிகளை மாணவ,மாணவிகளின் நன்மையைக் கருதி உதவி செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தேவையானவைகள்

01.குடிநீர் வசதிகள்
02.மலசல கூட வசதிகள்
03.சீமெந்து-50பேக்
04.மின்சார வசதிகள்
T.p.nr:-94758951228

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ  எமது தாருல் குர்ஆன் கலாசாலை மாணவர்கள்
17/09/2020

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

எமது தாருல் குர்ஆன் கலாசாலை மாணவர்கள்

17/09/2020
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ (15/12/2019)இன்று எமது தாருல் குர்ஆன் கலாசாலையில் எதிர் வரும் வரிய ஏழை மாணவ,ம...
15/12/2019

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ (15/12/2019)

இன்று எமது தாருல் குர்ஆன் கலாசாலையில் எதிர் வரும் வரிய ஏழை மாணவ,மாணவிகளுக்கு அப்பியாச கொப்பிகள் மற்றும் பேனைகள் போன்றவைகளை உயர்ந்த கைகள் எனும் கல்குடா அமைப்பு கலாசாலை மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்தமைக்கு கலாசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்னும் எமது மதரஸாவில் அனாதை,ஏழை மாணவர்களுக்கு நிறைய தேவைகள் உள்ளன. முடியுமான தனவந்தர்கள் அல்லாஹ்வுக்காக உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு:-0773465558
WhatsApp:-+94758951228

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ  எமது தாருல் குர்ஆன் கலாசாலை பெண்கள் பிரிவில்  பகுதி நேரமாக வந்து பாடசாலைக்கு...
05/12/2019

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

எமது தாருல் குர்ஆன் கலாசாலை பெண்கள் பிரிவில் பகுதி நேரமாக வந்து பாடசாலைக்கும் மற்றும் டியூசன் வகுப்புக்களுக்கும் சென்று மிகுதி நேரத்தில் அல்குர்ஆன் முழுவதையும் 1 1/2(533நாட்கள்)வருடத்திற்குள் மனனமாக்கி MN.பாத்திமா மிஸ்கா என்ற மாணவி 05/12/2019இன்று ஹாபிழாவாகியிருக்கிறார்.
இவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு இவர் ஒரு சிறந்த ஒழுக்கமுள்ள மாணவியாகவும்,பண்புமிக்கவராகவும் இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவர் எமது கலாசாலை பெண்கள் பிரிவிலிருந்து வெளியாகும் ஐந்தாவது ஹாபிழாவாகும்.

குறிப்பு: இவர் இந்த வருடம் தரம் 10ம் வகுப்பு பயிலும் மாணவியும் அல்குர்ஆனை 533நாட்களுள் பூரணமாக மனனமாக்கி ஒரு சிறந்த முயற்சியாளராகவும் இருக்கிறார்.
அல்லாஹ் இவரது முயற்சியை பொருந்திக்கொள்வானாக!
ஆமின்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ  எமது தாருல் குர்ஆன் கலாசாலை பெண்கள் பிரிவில்  பகுதி நேரமாக வந்து பாடசாலைக்கு...
05/12/2019

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

எமது தாருல் குர்ஆன் கலாசாலை பெண்கள் பிரிவில் பகுதி நேரமாக வந்து பாடசாலைக்கும் மற்றும் டியூசன் வகுப்புக்களுக்கும் சென்று மிகுதி நேரத்தில் அல்குர்ஆன் முழுவதையும் 3வருடத்திற்கு மனனமாக்கி ms.பாத்திமா பஸீஹா என்ற மாணவி 12/11/2019அன்று ஹாபிழாகியிருக்கிறார்.
இவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு இவர் ஒரு சிறந்த ஒழுக்கமுள்ள மாணவியாகவும்,பண்புமிக்கவராகவும் இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பு: இவர் இந்த வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய மாணவர்கள் அனுமதி
04/12/2019

புதிய மாணவர்கள் அனுமதி

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..07/03/2019வியாழன் இன்று எமது கலாசாலையில் மாணவ மன்றம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் போது எம...
07/03/2019

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
07/03/2019வியாழன் இன்று எமது கலாசாலையில் மாணவ மன்றம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் போது எமது மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அதற்கான பணப்பரிசில்களையும் பெற்றுக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
எதிர்காலத்தில் இவர்கள் சிறந்த ஹாபிழ்களாகவும் நல்ல ஆலிம்களாகவும் இன்னும் ஏனைய விடயங்களில் திறமை மிக்கவர்களாகவும் வருவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
*
இப்படிக்கு
ஊடகப் பிரிவு

*எமது தாருல் குர்ஆன் கலாசாலையில் 28/02/2019 அன்று எமது கலாசாலை மாணவன் I.முஹம்மட் அல்லாஹ்வின் உதவியால் முழு குர்ஆனையும் ம...
07/03/2019

*எமது தாருல் குர்ஆன் கலாசாலையில் 28/02/2019 அன்று எமது கலாசாலை மாணவன் I.முஹம்மட் அல்லாஹ்வின் உதவியால் முழு குர்ஆனையும் மனனமிட்டு ஹாபிழாகியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

இவர் ஓட்டமாவடி_03ல் வசித்து வரும் இஸ்மாயில் சாப் என்பவரது புதல்வரும் மௌலவி இர்ஷாத்(பாரி)அவர்களின் சகோதருமாவார்.
இவர் 2016/12/18ம் திகதி எமது கலாசாலையில் பகுதி நேரமாக இணைந்து பாடசாலை மற்றும் டியூஷன் சென்றும் பல தியாகங்களுக்கு மத்தியில் 02வருடத்துக்குள் முழு குர்ஆனையும் மனனம் செய்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
அத்தோடு இவர் மேடைப்பேச்சுக்களிலும்,
கிறாஅத் போட்டிகளிலும் பங்கு பற்றி தனது திறமைகளை வெளிக்காட்டி கலாசாலைக்கும் , ஆசிரியர்களுக்கும் மற்றும் கலாசாலை நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்களை பெற்றுக்கொடுத்துள்ள ஒரு சிறந்த ஒழுக்கமுள்ள மாணவனாகும்.
அதே போல் இவர் பாடசாலைக் கல்வியிலும் திறமையான மாணவனாகவே காணப்படுகிறார். இவரது எதிர் கால கல்வி வளர்ச்சிக்காகவும் இன்னும் இவரைப் போல பல ஹாபிழ்களை உருவாக்கி சமூகப்பணி செய்யக்கூடிய இக் கலாசாலை கியாமத்து நாள் வரும் வரைக்கும் எந்த தடையுமின்றி இயங்குவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.


இப்படிக்கு
ஊடகப் பிரிவு.
*

எமது தாருல் குர்ஆனின் பார்த்து ஓதும் பிரிவு சிறார்கள்.
19/02/2019

எமது தாருல் குர்ஆனின் பார்த்து ஓதும் பிரிவு சிறார்கள்.

எமது தாருல் குர்ஆன் கலாசாலை பார்த்து ஓதும் பிரிவு மாணவர்கள்
19/02/2019

எமது தாருல் குர்ஆன் கலாசாலை பார்த்து ஓதும் பிரிவு மாணவர்கள்

Address

Oddamavadi

Telephone

+94758951228

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dharul Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category