2014 Batch in ALDA

2014 Batch in ALDA www.istudyroom.com Neengalaam oru vahaiyaana Batch da!

04/12/2014

இன்ஷா அல்லாஹ் இந்த மாத இறுதிக்குள் 2014 ஆம் ஆண்டிற்குரிய க.பொ.த உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும்

~EXAM DEPARTMENT

10/08/2014

2014 A/L
Final paper headings:
1. saaithala uraiwu
2. Aaviyathal than marai weppam
3. thirusiyamaani
4. aluththamaani
5. watta iyakkam, sulatchi iyakkam
6. gittar -thinmangalil sound speed
7. SHM, Hooks law, Bil, Bqv
8. surface tension
9a. AC generator-pin minniyakka visai
9b. transistor
10a. Newtons cooling law
10b. carbon thethiyidal.

Smileking!

08/07/2014

:
Dear 2014 batch SCIENCE STREAMS Students!
2mro 8.30 AM itku Admission Name Check & sign panna Varattaam.
And 10th che, phy seminar(Free) batti la Nadakka pohutham. schlaala poha bus book panni irukkaam.
colombo paper aam.
Vara virumbuvoar 10th 7AM ku varavum.

IN4M:NAWAS(TR)
SMILEKING.

18/06/2014

2014 ஆம் ஆண்டு அதாவது இவ்வருடம் உயர் தரப் பரீட்சையை எதிர் நோக்கும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்ஷா அல்லாஹ் இன்று பிற்பகல் 4 மணிக்கு மட்/ஓட்டமாவடி தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...

2014 BATCH ALDA மாணவர் குழாம்

27/04/2014

Which of the following atom pair have the same structure?
(a): N, C
(b): B, Li
(c): He, Ne+
(d): Li+, Na+

சமுதாயம் பின் தங்கிக் காணப்பட்ட காலங்களில் கல்வி அறிவில் முன்னணி வகித்து வந்த எமது பாடசாலைகள் நவீன வளர்ச்சியின் எழுச்சிய...
26/04/2014

சமுதாயம் பின் தங்கிக் காணப்பட்ட காலங்களில் கல்வி அறிவில் முன்னணி வகித்து வந்த எமது பாடசாலைகள் நவீன வளர்ச்சியின் எழுச்சியில் இருந்து கொண்டும் முட்டாள்களை அறுவடை செய்யும் நிலைக்கு இன்று தள்ளப் பட்டு உள்ளது.ஏன் ?
இன்று மாணவன் என்றால் பையில் கொஞ்சம் பைசா,கையில் ஒரு போன்,உதட்டில் ஒரு சிக்கரட்,வாயில் கொஞ்சம் கஞ்சா, படிக்கும் போதே பொண்டாட்டி,இருந்தால் அவர் தான் பெரியவர் அவர் தான் பெரும் சாதனையாளர்.இதை எல்லாம் படிப்பரிறி வே இல்லாது மாடு மேய்ப்பவர் கூட (மன்னிக்கவும் )செய்து விடலாம் என்பதையும் ,.எது தேவை எது சரி எது பிழை என்பதை காலத்தின் ஓட்டத்துடன் வரக் கூடிய ஆசிரியர்களால் உணர்த்தப் பட வேண்டும்.

பல பாடசாலைகளில் அதிபர்களுக்கு #முதுகெலும்பு வாங்கிக் கொடுக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது.ஆளுமை இல்லாமல் சந்திக்கு வந்து பந்திக்கு வரப் பயப்பட்டால் உங்கள் சம்பளம் கைகளில் கிடைக்கும் ,மாணவர்களின் வாழ்க்கை அம்பலத்தில் தவிக்கும் என்பதை மனதில் நினைத்து தனி முடிவெடுத்து பாடசாளையை வழி நடத்திட முதுகெலும்புடன் துணிந்திட வேண்டும்.

அடுத்து கற்பிக்கும் ஆசிரியர்கள் தற்பெருமைக்கு போடும் போராட்டம். நீ புதியவன் நான் பழையவன் நீ வெளி ஊரான் நான் உல் ஊர்காரன் அடங்கி இரு என்று ஒருவரை ஒருவர் அடக்கிடும் போராட்டம் இதிலும் நாசமாக்குவது மாணவர்களின் கல்வி மட்டுமே அல்லாமல் உங்கள் பிழைப்பும் வயிறும் அல்லவே ..

இதை எல்லாம் விட இன்னும் ஒரு சிலர தனது அழகினை மூலதனாமாய் வைத்து #விபச்சாரம் செய்யும் விபச்சாரியைப் போல் தமது அறிவினை மூலதனமாய் வைத்து #டியுசன் கிளாஸ் வந்தால் மாத்திரம் தான் கட்பிபேன் என்ற கொள்கையில் இருப்பார் இவர்கள் திருந்த வேண்டும்,திருத்தப் படவேண்டும் இல்லை என்றால் ஊரை விட்டு அடித்துத் துரத்தப் படவேண்டும்.

வெளி நாட்டில் வாழ்க்கை,கையில் பணம் இருந்தால் போதும், என்ற நிலை மாறி விட்டதை அழகாய் நிருபித்துக் காட்டுகிறது இன்றைய பாடசாலை நிர்வாகக் குழுக்கள்..எங்கோ ஒரு முதலாளியாய் இருந்து கொண்டு செய்யும் அட்டகாசம் உள்ளதே ...சரிந்து போன பாடசாலை மானத்தை நிமிர்த்தி விட விளையாட்டினை கை பிடிகிறார்கள் அதன் மூலம் பாடசாலையை பிரபல்யப் படுத்தலாமாம்..அல்லது கண்காட்சி கலைவிழா என்று பாடசாலையை கலை கட்டிட முயல்கிறார்கள் இதற்கு உடந்தையாக கூத்தடிக்கும் சில ஆசிரியர்கள் வேறு ..இது போன்ற பொறுப்பற்ற #குட்டிக்கழுதைகள் எட்டி உதைக்கப் படவேண்டும்.

ஒவ்வொரு மாணவனும் எனது ஊர் எனது பாடசாலை எனது எதிர்காலம் என்ற சிந்தனை வட்டத்துக்குள் தெளிவாக,தெளிவான ஆசிரியர்களால் கொண்டு வரப் படவேண்டும்.கல்வி முதல் நிலைப் படுத்தப் படவேண்டும் ,மாணவர்கள் ஆசிரியர்களால் சரியாக இனம் காணப் பட்டு அதற்கேற்றவாறு விளையாட்டு,கலை என்று அவர்களின் பாதையை காட்டி இயன்றவரை கல்வியுடன் அவர்கள் முன்னேற்றப் படவேண்டும் .மாறாக மாட்டு மந்தையை சந்தைக்கு கொண்டு போய் விற்பதைப் போல் அனைவரையும் ஒரே பாதையில் கொண்டு சென்று பொதுத் தேர்வில் பலி கொடுப்பதற்கு அல்ல உங்களுக்கு சம்பளம் வழங்கப் படுகிறது என்பது நினைவில் இருந்திடட்டும்.

அதிபர் என்றால் ,ஆசிரியர் என்றால் ஒரு ஆளுமை பேச்சில் உடையில்,நடத்தையில் இருந்திடவேண்டும்.திட்டமிட்டு கற்றுக் கொடுக்க,சட்டம் இட்டு மாணவனையும் அவன் பெற்றோரையும் கட்டுப் படுத்த துணிந்திருக்க வேண்டும்.அவருக் கென்று ஒரு சுய கௌரவத்தை உருவாக்கிட வேண்டும்.நீங்கள் கற்பிப்பது குக் கிராமத்தில் என்றாலும் சரியே நீங்கள் ஒரு ஆசிரியர்,நீங்கள் ஒரு அரசாங்க உத்தியோகத்தர் என்பது நினைவில் இருந்திட வேண்டும் .

இதற்கெல்லாம் ஆசிரியர்கள் அதிபர்களுக்கு #சொரணை என்ற ரோஷம் வரவேண்டும் ..தேவை அற்ற சக்திகள் பாடசாலையை விட்டு துரத்தப் படவேண்டும், பாடசாலையில் முதல் அதிகாரம் அதிபருக்கு அடுத்த அதிகாரம் ஆசிரியரிக்கு வர வேண்டும், .வெளி உதவியில் பாடசாலை இயங்க அது தனியார் நிறுவனம் அல்ல.அதையும் மீறி உதவி தேவைப் படின் பொறுப்புள்ளவர்கள் இது போன்ற பாடசாலைக்கு வெளி நிர்வாகமாய் தோல் கொடுக்க வரும் போது வெறுப்புல்லாம் கொண்டவர்களும் தோல் கொடுப்பார்கள்.அதன் வெளிப்பாடாய் மாணவர்களுக்கு திறமை ஊட்டப் பட்டு பட்டதாரிகள் அறுவடை செய்யப் படவேண்டும்.இது ஒவ்வொருவரினதும் கடமை.பொறுப்பு .அதுவரை உங்கள் சம்பாத்தியம் ஹலால் தானா நீங்களும் உங்கள் பிள்ளை குட்டிகளும் உண்பது ஹலாளைத் தானா என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள்

பி .கு **
#கடமை தவறாதவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள். :1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், ...
19/04/2014

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள். :
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில்   ALDA 2014 BATCH மாணவர்கள்....
05/04/2014

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் ALDA 2014 BATCH மாணவர்கள்....

11/03/2014
இருபடிச் சமன்பாடுகள்-2
02/03/2014

இருபடிச் சமன்பாடுகள்-2

இருபடிச்சமன்பாடுகள்1
02/03/2014

இருபடிச்சமன்பாடுகள்
1

Address

Oddamavadi
30420

Telephone

0777123456

Website

Alerts

Be the first to know and let us send you an email when 2014 Batch in ALDA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category