Bt/Bc/Kawathamunai Al-Ameen Maha Vid

Bt/Bc/Kawathamunai Al-Ameen Maha Vid Al-Ameen OBA create this page to share school activities and services

பாடசாலைகளுக்கான கோட்டமட்ட விளையாட்டு போட்டியில் இதுவரை காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்திற்கு 20 மேற்பட்ட இடங்கள்1ஆம் இ...
24/03/2022

பாடசாலைகளுக்கான கோட்டமட்ட விளையாட்டு போட்டியில் இதுவரை காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்திற்கு 20 மேற்பட்ட இடங்கள்

1ஆம் இடம் = 5 போட்டியில்
2ஆம் இடம் = 10 போட்டியில்
3ஆம் இடம் = 5 போட்டியில்

Volleyball 2nd place

இந்நிலைக்கு மாணவர்களை பயிற்றுவித்த விளையாட்டு பயிற்சிவிப்பாளர்களன R. ஸாஜஹாத் மற்றும் M. ஹபீஸ் அவர்களை வழிப்படுத்திய PT ஆசிரியர் நளீர் ஆகியோருக்கு பாடசாலை பழைய மாணவர்கள் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு

வெற்றியீட்டிய அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் எமது மட்/மம/ காவத்தமுனை அல்-அமீன் மகா வித்தியாலய மாணவர்கள் 46 பேர் 70 புள...
14/03/2022

இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் எமது மட்/மம/ காவத்தமுனை அல்-அமீன் மகா வித்தியாலய மாணவர்கள் 46 பேர் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர் என்பதோடு அவர்களுள்
MAF. Afaf - 162
NF. Nafa - 152
AMM. Atheef - 148
MNM. Fashan - 147 ஆகியோர் வெட்டுப்புள்ளி 147 க்கு மேல் பெற்றுள்ளனர் அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பழைய மாணவர்கள் சங்கம் தெரிவித்துக் கொள்வதோடு

இவர்களுக்கு கற்பித்த அனைத்து ஆரம்பபிரிவு ஆசிரியர்களுக்கும், விஷேடமாக புலமைப் பரிசில் வகுப்பில் கற்பித்த MBM. சனூஸ் மற்றும் HMM. கலாபிர் ஆகிய ஆசிரியர்களுக்கும் மற்றும் வழிகாட்டிய பாடசாலை அதிபர் அலியார் மௌலவி உள்ளடங்களான நிருவாகத்தினருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

மட்/மம/ காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள்  தொடர்பில் ...
03/05/2021

மட்/மம/ காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் வலயக்கல்வி பணிப்பாளருடனான சமூக மட்ட அமைப்புக்களின் சந்திப்பு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இணைந்து இன்று வலயக்கல்வி பணிப்பாளரை சந்தித்து பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

இதன்போது வலயக்கல்வி பணிப்பாளர் கூறியதாவது கோட்டக்கல்வி அதிகாரி அவர்களின் தலைமையிலான குழு ஒன்றினை அமைத்து பாடசாலையின் அனைத்து பிரச்சினைகளை பரிசீலித்து சிறந்த தீர்வினை மிகவிரைவாக வழங்குவதாக உறுதியளித்தார்.

இன்று தங்களது நேரகாலத்தை எடுத்து கழந்துகொண்ட மற்றும் பங்களிப்புச் செய்த பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், உதவும் உள்ளங்கள் அமைப்பின் உறுப்பினர்கள், காவத்தமுனை ஆட்டோ சங்க உறுப்பினர் மில்லத் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கழகங்கள் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளை பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

றனீஸ் இஸ்மாயில்
செயலாளர்
பழைய மாணவர்கள் சங்கம்
மட்/மம/ காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயம்

விளையாட்டு துறைகளில் ஆர்வம் கொண்டவர்களை அத்துறையில் வளப்படுத்திட உங்களது உறவினர்களை விண்ணப்பிக்கக் கூறுங்கள்
01/01/2021

விளையாட்டு துறைகளில் ஆர்வம் கொண்டவர்களை அத்துறையில் வளப்படுத்திட உங்களது உறவினர்களை விண்ணப்பிக்கக் கூறுங்கள்

நமது பாடசாலையின் தற்போதைய சிரேஷ்ட மாணவத் தலைவர்  AH.  சாதிக் ஹுசைன் அவர்கள் நேற்று 11.12.2020ம் திகதி வெள்ளிக் கிழமை கோற...
12/12/2020

நமது பாடசாலையின் தற்போதைய சிரேஷ்ட மாணவத் தலைவர் AH. சாதிக் ஹுசைன் அவர்கள் நேற்று 11.12.2020ம் திகதி வெள்ளிக் கிழமை கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்புக் கழக கூட்டத்தில் பிரதேச சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்புக் கழக தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்தின் பிரதான நுழைவாயிலில்  குறையாக காணப்பட்ட கீழ் இடைவெளியினை சில ஆசியர்களின் பங்கள...
04/12/2020

எமது காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்தின் பிரதான நுழைவாயிலில் குறையாக காணப்பட்ட கீழ் இடைவெளியினை சில ஆசியர்களின் பங்களிப்புடனும் பாடசாலை பெற்றோர்களின் உதவியுடனும் இன்று பூர்த்திசெய்யப்பட்டது. இதற்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாடசாலை பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.

03/12/2020

அதிபர் தரத்திலுள்ளவர்கள் பாடசாலைக்கு அதிபராக பனியாற்ற விரும்பாது ஒதுக்கப்படும் காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

காவத்தமுனை எனும் கிராமத்தில் அமைந்துள்ள உயர் தரம் வரையான வகுப்புக்களை கொண்ட ஒரு பாடசாலையே அல்-அமீன் வித்தியாலயல்

இங்கு பிர்தௌஸ் அதிபர் அவர்களின் ஓய்வின் பின்னர் இப்பாடசாலையினை பொறுப்பேற்று வழிநடாத்துவதற்கு எந்தவிதமான அதிபர்களும் முன்வரவில்லை. கடந்த ஐந்து மாதகாலமாக இப்பாடசாலைக்கு ஒரு அதிபரை பெறவேண்டும் என்ற நோக்கில் ஏனைய பாடசாலையில் பிரதி அதிபராக இருக்கின்ற பொறுப்புக்களை ஏற்காது இருக்கின்ற அதிபர்கள் என சிலரிடம் பாடசாலை அபிவிருத்தி சங்கம் பழைய மாணவர்கள் என நாங்கள் பேசியிருந்தும் அவர்கள் பொறுப்பெடுக்க முன்வரவும் இல்லை, முறையாக அலுவலக ரீதியாக அதிபருக்கான விண்ணப்பம் கோரப்பட்டும் யாரும் விண்ணப்பிக்கவும் இல்லை.

அன்பார்ந்த அதிபர்களே நீங்கள் எமது பாடசாலையினை பொறுப்பெடுக்க முன்வராததற்கான காரணம் என்ன?

நீங்கள் வழிநடாத்துவதற்கு தகுதியற்ற பாடசாலையா இது?

இங்கு இருக்கின்ற மாணவர்கள் கல்வி கற்பதற்கு தகுதியற்றவர்களா?

அல்லது ஒரு ஒதுக்கப்பட்ட கிராமமா இது?

இங்கும் நல்ல குணம் கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இருக்கின்றார்கள், இப்பாடசாலை ஊடாக பல்கலைக்கழகம் நுழைந்த மாணவர்கள் இருக்கின்றார்கள், சாதாரண தர பரீட்சையில் 8A, B பெறுபேறு பெற்ற மாணவர்கள் இருக்கின்றார், வருடாந்தம் இரண்டுக்கு குறையாத மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றார்கள், நாடகம் மற்றும் விளையாட்டு என பல்வேறுபட்ட துறைகளில் தேசிய மட்டம் சென்று வெற்றியீட்டிய மாணவர்கள் இருக்கின்றார்கள் இதற்கு மேலாக சட்டத்தரணிகள், ஆசிரியர்கள், வைத்தியர் பட்டதாரிகள் மற்றும் உலமாக்கள் என பலர் இருக்கின்றார்கள்.

ஒரு சமூகத்தின் தலைவிதியினை மாற்றுகின்ற கல்விக்கூடத்தினை வழிநடாத்த நீங்கள் மறுக்கின்ற செயற்பாடு ஒரு நல்ல ஆரோக்கியமாக சமூகமொன்றினை கல்குடாவில் உருவாக்க வழியேற்படுத்துமா??

கல்குடா வாழ் சமூக சேவையாளர்களே கல்விமான்களே புத்திஜீவிகளே காவத்தமுனை பாடசாலையின் நிலைபற்றி சற்று சிந்தனை செய்யுங்கள்...

அன்பார்ந்த அதிபர்களே....
நாங்கள் பழைய மாணவர்கள் என்ற ரீதியில் உங்களுக்கு மிகவும் உதவியாக இருப்போம் பாடசாலை தேவைகளை நிறைவேற்ற ஒத்துழைப்போம் தயவு செய்து முன்வாருங்கள்.

பிழை ஏதும் இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் ஒரு சமூகம் மீது கொண்ட அக்கறையின் வெளிப்பாடே இது... உங்களது சிந்தனைக்காக.

எம்.ஐ.எம். றனீஸ்
செயலாளர்
பழைய மாணவர்கள் சங்கம்
மட்/காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயம்

க.பொ.த சாதாரண தர பரீட்சை ஜனவரி மாதம் தீர்மாணிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என்றும் பரீட்சைக்கான புதிய பரீட்சை நடைபெறுவதற...
01/12/2020

க.பொ.த சாதாரண தர பரீட்சை ஜனவரி மாதம் தீர்மாணிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என்றும் பரீட்சைக்கான புதிய பரீட்சை நடைபெறுவதற்கு 6 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும்
-கல்வி அமைச்சர்-

பாடசாலை ஆரம்பிப்பதனை முன்னிட்டு அல் அமீன் வித்தியாலயத்தில் சிரமதான பனிகள்.^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^...
22/11/2020

பாடசாலை ஆரம்பிப்பதனை முன்னிட்டு அல் அமீன் வித்தியாலயத்தில் சிரமதான பனிகள்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கொரோனா விடுமுறையின் பின்னர் பாடசாலை ஆரம்பிப்பதனை முன்னிட்டு காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்தினை சுத்தம் செய்வதற்காக சிரமதான நிகழ்வொன்று பாடசாலை அதிபர் அலியார் அவர்களினால் இன்று (22) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இப் பாடசாலையில் அக்கறை கொண்டு இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாடசாலை பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

செயலாளர்,
பழைய மாணவர்கள் சங்கம்,
மட்/மம/காவத்தமுனை அல்-அமீன் வித்.

21/11/2020

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்

எதிர்வரும் திங்கள் கிழமை பாடசாலை ஆரம்பிக்க இருப்பதன் காரணமாக இன்ஸா அல்லாஹ் நாளை பாடசாலையினை சுத்தம் செய்வதற்கு சிறிய சிரமதான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் இணைந்தால் ஒரு மணித்தியாலம் மாத்திரமே செலவு செய்யவேண்டிய நிலை ஏற்படும் எனவே தயவு செய்து முடியுமானவர்கள் நாளைய தினம் காலை 8.00மணிக்கு பாடசாலை வலாகத்திற்கு வருகை தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

வரும்போது மண்வெட்டி மற்றும் குப்பை வாறிகள் இருப்பின் எடுத்து வரவும்.

தயவுசெய்து சக பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

எமது கிராமத்திலிருந்து 2019 கா.பொ.த உயர்தர பரீட்சை மூலம் விஞ்ஞான பிரிவிலிருந்து பல்கலைக்கழக கற்கைக்கு நெறிக்கு தெரிவுசெய...
01/11/2020

எமது கிராமத்திலிருந்து 2019 கா.பொ.த உயர்தர பரீட்சை மூலம் விஞ்ஞான பிரிவிலிருந்து பல்கலைக்கழக கற்கைக்கு நெறிக்கு தெரிவுசெய்யப்பட்ட அப்துஸ் ஸலாம் முஹம்மட் ஸஜீத் அவர்களுக்கு மட்/காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலய பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது கிராமத்திலிருந்து 2019 கா.பொ.த உயர்தர பரீட்சை மூலம் பல்கலைக்கழக கற்கைக்கு நெறிக்கு தெரிவுசெய்யப்பட்ட பனிச்சையடி வீத...
31/10/2020

எமது கிராமத்திலிருந்து 2019 கா.பொ.த உயர்தர பரீட்சை மூலம் பல்கலைக்கழக கற்கைக்கு நெறிக்கு தெரிவுசெய்யப்பட்ட பனிச்சையடி வீதியைச் சேர்ந்த பக்கீர் முகைதீன் பாத்திமா பர்ஹானா அவர்களுக்கு மட்/காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலய பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Address

Oddamavadi
30424

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bt/Bc/Kawathamunai Al-Ameen Maha Vid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category