04/02/2026
Independence Day Celebration
Arabic College
Green Club
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றதன் தொடரில்... எமது சிறாஜ் அரபுக் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 8.30மணி முதல் வெகு விமர்சையாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ, அல்ஹாஜ். எம்.எஸ்.எம். ஹலால்தீன் (Chairman, Pradeshiya Saba, Oddamavadi, KPW) அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்ததுடன், கௌரவ அதிதிகளாக அல்ஹாஜ். எஸ். எல். ஹயாத் முஹம்மத் (தொழிலதிபர்) மற்றும் சிறப்பு அதிதிகளாக புனானை கிழக்கு, பஞ்சமகா விகாரையின் விகாராதிபதி பீட்டாரமங்கார தேரர், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கல்குடா கிளை செயலாளர் அஷ்ஷெய்க். A.M. இஸ்ஸத் அஹ்மத் நஹ்ஜி, அவர்களும் விசேட அதிதிகளாக Serendip Organic நிறுவனத்தின் தலைவர் சகோதரர் ஏ.ஆர். பர்ஸான் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர் சகோதரர் யூ.எல் ஹாரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டதுடன், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் கல்லூரி மாணவர்களின் பங்கேற்புடன் இனிதே நடைபெற்றது.
மேற்படி சுதந்திர தின நிகழ்வுகளை தொடர்ந்து, சுற்றுச்சூழல் சார் விசேட செயற்திட்டங்களை மேற்கொண்டு வரும் சிறாஜ் பசுமைக் கழகம் (Siraj Green Club) மூலம் மர நடுகை மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மருத மரச் சோலை நடுவே வளாகத்தில் இனிதே இடம் பெற்றன. இந்நிகழ்வில் விசேட வளவாளர்களாக Serendip Organic நிறுவனத்தின் தலைவர் சகோதரர் ஏ.ஆர். பர்ஸான் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர் சகோதரர் யூ.எல் ஹாரிஸ் ஆகியோர் கலந்துகொண்டு "Shifting to traditional and Echo Friendly Farming, விதைப்பந்துகள் தயாரித்தல்" எனும் கருப்பொருள்களில் ஆக்கப்பூர்வமான பல்வேறு கருத்துக்களை வழங்கினர்.
மேற்படி நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து அதிதிகளுக்கும் நிகழ்வுகள் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் வல்ல ரஹ்மான் மேலான நற்கூலிகளை வழங்கி வைப்பானாக.