18/07/2023
அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நகரத்தில் இயங்கும் கெப்ரிகோன் சர்வதேச பாடசாலைக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயம்
கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்த குமார் 17.07.2023 அன்று விஜயம் மேற்கொண்டார். இதன் போது. பாடசாலை முன்னேற்றம் மாணவர்களின் கல்வி நிலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பாடசாலை அதிபர் திருமதி ஜெ.சத்தியவாணி அவர்களிடமிருந்து கேட்டு அறிந்து கொண்டார்.
மேலும் பாடசாலைக்கு எதிர்காலத்தில் சில உதவிகளை செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் கூறினார்.
அத்தோடு மாணவர்களின் கல்வி வளர்ச்சியை தெரிந்து கொண்ட அமைச்சர் மாணவர்களை பாராட்டியதோடு சேவைகளை சிறப்பாக செய்யுமாறு அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்து செய்தியை குறிப்பிட்டார்.