16/02/2026
*பத்ரியாவுக்கு மற்றுமோர் சாதனை*
மேல் மாகாண கல்வி அமைச்சால் ஒழுங்கு செய்யப்பட்ட மேல் மாகாண பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களுக்கான மகுடம் சூடும், கௌரவிப்பு விழா அண்மையில் (12.02.2026) கொழும்பு விவேகானந்தா சபை பிரதான மண்டபத்தில் இனிதே நிறைவு பெற்றது.
இது கல்வித்துறை சார் பல்கலைக்கழக பேராசிரியர்கள், கல்விப் பணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
அதில் கஹட்டோவிட்ட அல்- பத்ரியா மகா வித்யாலயத்தில் இருந்து,
N.M.A Fathah
M N.M Shathir
S.H Asfa
M.N.F Nidha
A.R Anaa Alman
ஆகிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு மேல் மாகாணத்தில் மகுடம் சூட்டிய 12 ஆசிரியர்களுள் அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் இருந்து மூன்று ஆசிரியர்கள் மணிமகுடம் சூட்டி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
Msr N.Masaya Farook
Mrs Farhana Farook
Mrs F. Nusra Buhary
அதேபோல் கல்வி அமைச்சு நடாத்திய சிலம்பு: தமிழை தமிழால் கொண்டாடுவதற்கான மலர்- மேல்மான கல்வித் திணைக்களத்தால் தமிழ் மொழி பாடசாலைகளுக்கு மத்தியில் நடாத்தப்பட்ட ஆய்வறிவுக்கும் அபிவிருத்திக்குமான செயற்பாட்டில் (விதானம்)
*"மேல் மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி மூலம் பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அச்சுறுத்தல்களும் மற்றும் சவால்களும்"* என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை போட்டியில் பங்குபற்றி
செல்வி Anaa Alman Abdur Rahman
என்ற மாணவி முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார், இவருக்கு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்ட நிகழ்வும் அல் பத்ரியாவுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இப்பெருமையை பாடசாலைக்கு பெற்றுக் கொடுத்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி கூறுவதோடு, அதற்குப் பின்னால் நின்று உரமூட்டி வழிப்படுத்திய பாடசாலை அதிபர் ஜனாப் M.A.M.M Asmir அவர்களுக்கும் பிரதி அதிபர் ஜனாபா M.B.F Saleeha அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
16/02/2026
10/02/2026
09/02/2026
06/02/2026
28/01/2026