20/06/2026
Imam Gazzaly MV,Nintavur
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Imam Gazzaly MV,Nintavur, Education, Gazzaly school Road, Nintavur/11, Nintavur.
20/06/2026
19/06/2026
ஆரோக்கியமான வாழ்விற்கு அடியெடுத்து வைப்போம்! 🍎🥦
"உணவே மருந்து" - நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற மிகச்சிறந்த பொக்கிஷம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் சுவைக்கு அடிமையாகி, ஊட்டச்சத்தற்ற நச்சுத்தன்மை வாய்ந்த துரித உணவுகளைத் தேடி ஓடும் சூழலில் நாம் இருக்கிறோம்.
இந்த மாற்றத்தை மாற்ற, நமது வருங்காலத் தலைமுறையினரான பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு "ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை" குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
நமது அன்றாட உணவில் நாம் அறியாமல் சேர்த்துக் கொள்ளும் ரசாயனங்கள் மற்றும் நச்சுத்தன்மைகள் குறித்த தெளிவு.
இயற்கையான மற்றும் சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதன் அவசியம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்த்தும் ஆலோசனைகள்.
நமது உடல், நாம் உண்ணும் உணவின் பிரதிபலிப்பு. எனவே, இன்றே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை முன்னெடுப்போம். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்!
இந்த பயனுள்ள நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த அனைவருக்கும் நன்றிகள்.
IGMV News
18/06/2026
1448-ஆம் ஆண்டின் ஹிஜ்ரி புத்தாண்டு: இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் விசேட நிகழ்வு!
17.06.2026 .
புதிய ஹிஜ்ரி ஆண்டின் (1448) பிறப்பை முன்னிட்டு, எமது பாடசாலையில் முஹர்ரம் மாதத்திற்கான விசேட நிகழ்வு நேற்றைய தினம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பாடசாலையின் அதிபர் திரு. SMM. ஜபீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டது.
முஹர்ரம் மாதத்தின் வரலாற்றுப் பின்னணி, தியாகம் மற்றும் அமைதியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்ந்துகொள்ளும் வகையில், பலாஹ் பள்ளிவாயலின் பேஷ் இமாமும், ஹிப்லு மத்ரசாவின் அதிபருமான அஷ்ஷெய்க் இர்ஷாத் காஷிபி அவர்கள் விஷேட முஹர்ரம் உரையினை நிகழ்த்தினார்.
பழையனவற்றைக் கடந்து, புதிய நம்பிக்கைகளுடனும் சிறந்த ஒழுக்க விழுமியங்களுடனும் புதிய ஆண்டைத் தொடங்குவதன் அவசியத்தை இந்நிகழ்வு பறைசாற்றியது.
உரையில் இருந்து வினவப்பட்ட வினாவிற்கு சரியான விடையினைக் கூறிய மாணவனுக்கான பரிசில்களும், அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஈச்சம்பழம் , பிஸ்கட்களும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில், அதிபர் அவர்கள் இந்நிகழ்வைச் சிறப்பாக ஒழுங்கமைத்த பாடசாலையின் அனைத்து ஆளணியினர்களும், ஆர்வத்துடன் பங்கெடுத்த மாணவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, அனைவருக்கும் இனிய ஹிஜ்ரி புதுவருட வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டார்.
💐
IGMV - News
28/05/2026
Eid Al-Adha Mubarak to all
19/05/2026
பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு மற்றும் கல்விசார் கலந்துரையாடல் - 2026
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
எமது பாடசாலையில் தரம் 11 (2026) மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் அவர்களது எதிர்கால அடைவுகளை இலக்காகக் கொண்ட விசேட பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பானது அண்மையில் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் மரியாதைக்குரிய Mr.SMM.Jabeer அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலானது, பிரதி அதிபர்களான Mr. SM.NAJEEB SHAREEF மற்றும் Mr. T.M.RIFAI, மற்றும் பகுதித் தலைவர் , பாட ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்களின் சிறப்பான வழிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டது.
இச்சந்திப்பின் முக்கிய அம்சங்கள்:
1. பெறுபேற்று அறிக்கை வெளியீடு: அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாண மட்டப் பரீட்சையின் பெறுபேற்று அறிக்கைகள் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டன.
2. புள்ளிகளின் பகுப்பாய்வு (Marks Analysis): மாணவர்களின் பாடவாரியான புள்ளிகள் மற்றும் தேர்ச்சி மட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, அவர்கள் இன்னும் முன்னேற வேண்டிய பகுதிகள் சுட்டிக்காட்டப்பட்டன.
3. G.C.E. O/L பரீட்சைக்கான தயாரிப்புகள்: இவ்வருட இறுதியில் மாணவர்கள் எதிர்கொள்ளவுள்ள G.C.E. O/L பொதுப் பரீட்சைக்கு அவர்களை எவ்வாறு உளவியல் ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் தயார்படுத்துவது என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.
4. பெற்றோரின் பங்களிப்பு: பரீட்சை நெருங்கும் இவ்வேளையில், வீடுகளில் பெற்றோர்கள் மாணவர்களுக்கு எவ்வகையான வழிகாட்டல்களை வழங்க வேண்டும், கற்றலுக்கான உகந்த சூழலை எவ்வாறு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தமது பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி இச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அனைத்து பெற்றோர்களுக்கும், மாணவர்களை வழிநடத்தும் தரம் 11 ஆசிரியர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
அதிபர்
23/04/2026
💐 All the best, M.H. Muhammed Yousuf 💐
வெற்றி நிச்சயம்! சாதித்து வா மகனே!
கணித ஒலிம்பியாட் போட்டியின் தேசிய மட்டத்திற்குத் (National Level) தெரிவு செய்யப்பட்டு, எதிர்வரும் 2026.04.25 சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்குபற்றச் செல்லும் எமது பாடசாலை மாணவன் M.H. முஹம்மட் யூசூப் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
உமது கணிதத் திறமையால் தேசிய மட்டத்திலும் வெற்றி வாகை சூடி, பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அதிபர்.
20/04/2026
பெருமையுடன் பாராட்டி கௌரவிக்கப்பட்ட உயர்தரப் பரீட்சையின் சாதனையாளர்கள் 2026
🔹🔹🔹 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 🔹🔹🔹
அண்மையில் வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகளில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, பாடசாலைக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்த மாணவ,மாணவிகளை கௌரவிக்கும் விசேட நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் கௌரவ S.M.M. JABEER அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வினை பிரதி அதிபர்களான S.M. NAJEEB SHAREEF மற்றும் T.M. RIFAI ஆகியோரின் சிறப்பான வழிகாட்டலில் இனிதே நடைபெற்றது.
இதில் சாதனை படைத்த மாணவ மாணவிகள், அவர்களது பெற்றோர்களுடன் கௌரவிக்கப்பட்டார்கள்.
1. Y.SHAFI AHAMED -A 2B (1.1149/610)
2. A.M.MOHAMED NAFKHAN -ABC (0.9898/763)
3. 3.A.FATHUMA ISNA-2B C (0.8271/962)
அதிபர்.
IGMV MEDIA
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Gazzaly School Road, Nintavur/11
Nintavur
Opening Hours
| Monday | 07:00 - 14:00 |
| Tuesday | 07:00 - 14:00 |
| Wednesday | 07:00 - 14:00 |
| Thursday | 07:00 - 14:00 |
| Friday | 07:00 - 11:30 |