KM/AL-ASHRAQ M.M.V. (NATIONAL SCHOOL), NINTAVUR

KM/AL-ASHRAQ M.M.V. (NATIONAL SCHOOL), NINTAVUR This is a place for all the Ashraqians to share our spirit.KM/AL-ASHRAQ M.M.V.

(NATIONAL SCHOOL), NINTAVUR is one of the leading and prestigious educational institution in this country.

**விசேட செயற்றிட்ட வகுப்பு ஆரம்பம்எமது பாடசாலையில் இம்முறை  சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற இருக்கின்ற மாணவர்களின் கணிதப் ...
18/09/2026

**விசேட செயற்றிட்ட வகுப்பு ஆரம்பம்

எமது பாடசாலையில் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற இருக்கின்ற மாணவர்களின் கணிதப் பாடத்தில் குறைவான புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கான விசேட செயற்றிட்ட வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எமது பாடசாலை அதிபர் Mr A. அப்துல் கபூர் சேர் அவர்களின் வழிகாட்டலின் கீழ், SIRAHU , மற்றும் KATHEEJA FOUNDATION நிறுவனத்தின் அனுசரணையுடன் அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் Mr. Hanifa Muzammil அவர்களினால் இவ்வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.அதற்காக அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

இவ்விசேட செயற்றிட்ட வகுப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எமது பாடசாலையின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பிரிவுத் தலைவர் Mr. NM Inshaf Hasan அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும், கணிதப் பாடத்தில் அவர்களின் அடைவுமட்டத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

பரீட்சைகளை சிறப்பாக நடாத்தியமைக்கும் பகுப்பாய்வுகளை வேகமாக மேற்கொண்டு வினைத்திறனான முறையில் பரீட்சை பிரிவை வழிநடாத்திய ப...
18/09/2026

பரீட்சைகளை சிறப்பாக நடாத்தியமைக்கும் பகுப்பாய்வுகளை வேகமாக மேற்கொண்டு வினைத்திறனான முறையில் பரீட்சை பிரிவை வழிநடாத்திய பாடசாலை கலைத்திட்ட பிரதி அதிபர் Mr.AAMM.Aslam Merza , பாடசாலை பரீட்சைகள் பிரிவின் பொறுப்பாசிரியர் Mr.YM.Ashraffஆகியோர்களை கௌரவிப்பு செய்த வேளை

OVERALL WINNER & BEST PERFOMER ( 6- 13 )  IN SECOND TERM EXAMINATION 2026JA.FATHIMA AZEERA -9A
18/09/2026

OVERALL WINNER & BEST PERFOMER ( 6- 13 ) IN SECOND TERM EXAMINATION 2026

JA.FATHIMA AZEERA -9A

Continue....இரண்டாம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு=================...
18/09/2026

Continue....

இரண்டாம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
====================================
எமது பாடசாலையில் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற கொண்ட மாணவ , மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் முதல்வர் மதிப்பிற்குரிய Mr.A.Abdul Gaffoor அவர்களின் தலைமையின் கீழ் மாணவர்களின்; பெற்றோர்களின் பங்கு பற்றுதலுடன் பாடசாலை பரீட்சைப் பிரிவினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டது.

இரண்டாம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு=============================...
18/09/2026

இரண்டாம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
====================================
எமது பாடசாலையில் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற கொண்ட மாணவ , மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் முதல்வர் மதிப்பிற்குரிய Mr.A.Abdul Gaffoor அவர்களின் தலைமையின் கீழ் மாணவர்களின்; பெற்றோர்களின் பங்கு பற்றுதலுடன் பாடசாலை பரீட்சைப் பிரிவினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இம்முறை இரண்டாம் தவணைப் பரீட்சையில்
1. 1. Best Performers ( Gr 6 – Gr 12)
2. Overall Performers ( Bilingual Unit )
3. Obtained ALL “A” students
4. Sectional Head – Obtain Highest ALL “A”
5. Average over 82% Bilingual ( special Principal Award)
6. Average Over 80% Grade ( 12) % & 70% (Grade 13) ( special Principal Award)
7. Average over 92% ( Grade 6 -9 ) ( special Principal Award)
8. Average Over 90% ( Grade 10 & 11 ) ( special Principal Award)
9. Average 95% ( Principal Award )
10. Overall Winner -Section wise
11. Overall Winner

போன்ற பிரிவுகளின் கீழ் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அம் மாணவர்களை வழிநடாத்திய பாட ஆசிரியர்கள் , வகுப்பாசிரியர்கள் , பகுதித் தலைவர்கள் , மற்றும் பாடசாலை கலைத்திட்ட பிரதி அதிபர் Mr.AAMM.Aslam Merza பாடசாலை பரீட்சைகள் பிரிவின் பொறுப்பாசிரியர் Mr.YM.Ashraff, அப்பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் Mrs. BF. Fahima, பாடசாலை பரிட்சை புள்ளிகளை நிகழ்நிலைப்படுத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் Mrs.AF.Nuskiya , சான்றிதழ்களை தயார்படுத்திய Mrs.AF.Nuskiyaஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டனர்

ஊடகப் பிரிவு
கமு கமு அல் அஸ்ரக் மமவி
தேசிய பாடசாலை
நிந்தவூர்

34 வருட ஆசிரியர் சேவைப் பணியில் இருந்து ஓய்வு========================================எமது பாடசாலையில் கடமையாற்றிய ஆங்கில...
18/09/2026

34 வருட ஆசிரியர் சேவைப் பணியில் இருந்து ஓய்வு
========================================
எமது பாடசாலையில் கடமையாற்றிய ஆங்கில் பாட சிரேஸ்ட ஆசிரியர் Mr.MMM.Ansar அவர்கள் 2026.09.17 ஆம் திகதியுடன் தனது ஆசிரியர் பணியில் இலிருந்து ஓய்வு பெற்றுச் செல்கின்றார். அவர் 1992.08.10 ஆம் திகதி தனது முதல் நியமனத்தை கமுஃஅட்ஃஅட்டப்பளம் விநாயகர் வித்தியாலயத்தில் இலிருந்து ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த ஆசியரியருக்கான ஓய்வு விழா எமது கலாசாலையின் முதல்வர் Mr.A.Gaffoor அவர்களின் தலையிமையில் அனைத்து ஆசிரிய ஆசிரியைகள் ,கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களின் பங்கு பற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.

அகில இலங்கைத் தமிழ் மொழித்தினம் - 2026 தேசிய மட்ட தமிழ்மொழித் தினப் போட்டியானது இன்று கல்வி அமைச்சில்  இடம்பெற்றது. இதில...
14/09/2026

அகில இலங்கைத் தமிழ் மொழித்தினம் - 2026

தேசிய மட்ட தமிழ்மொழித் தினப் போட்டியானது இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றது. இதில் எமது பாடசாலை சார்பாக கலந்து கொண்ட இலக்கிய விமர்சனம் பிரிவு 3 இல் செல்வி. பு . சாஹரி தேசியத்தில் மூன்றாமிடம் பெற்றதோடு கட்டுரை வரைதல் பிரிவு 2 இல் பங்குபற்றி மு.ஹ. மு. அம்ஹர் மாகாணமட்டத்தில் முதலிடத்தையும் தேசியத்தில் நான்காமிடத்தையும் பெற்று எம் ஊருக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர்களை பயிற்றுவித்த தமிழ் மொழிப்பாடப் பொறுப்பாசிரியர் வை.எம். அஷ்ரப் ஆசிரியர் அவருக்கும் அவரோடு இணைந்து தொழிற்பட்ட அ.ற. சித்தி அன்வறா ஆசிரியைக்கும் தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் தலைவர் ஆ.லெ. முஸ்பிர் அஹமட் மற்றும் பாடசாலையின் முதல்வர் Mr.A.ABDUL GAFFOOR அவர்களுக்கும் இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான பிரதி அதிபர் MR. MMM. UWAIS ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஊடகப் பிரிவு
கமு/கமு/அல் அஷ்ரக் ம. ம. வி
தேசிய பாடசாலை

SOON...........
11/09/2026

SOON...........

கல்வி அமைச்சின்  28/2025 சுற்று நிரூபத்திற்கமைய நாட்டின் சமூக பொருளாதார கலாச்சார நெறிமுறைகள் , சுற்றாடல் பாதுகாப்பு மற்ற...
11/09/2026

கல்வி அமைச்சின் 28/2025 சுற்று நிரூபத்திற்கமைய நாட்டின் சமூக பொருளாதார கலாச்சார நெறிமுறைகள் , சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தியினை ஏற்படுத்தும் நோக்கில் வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற தொனிப்பொருளுக்கமைய 2026.09.09 ஆம் திகதி புதன் கிழமை எமது பாடசாலையில் மீலாதுன் நபி தின நிகழ்வுகள் பாடசாலையின் முதல்வர் Mr.A.Abdul Gaffoor அவர்களின் தலைமையில் அனைத்து மாணவ மாணவிகளின் பங்கு பற்றுதலோடு மிகச் சிறப்பாக இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை , கலாச்சார நிகழ்வுகள் அரங்கேறியதுடன் பிரதம மார்க்க சொற்பொழிவாளர் Ash-Shek Nawsath ( Ihsani ) அவர்களினால் மார்க்க சொற்பொழிவும் மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது.

இனிய நல் வாழ்த்துக்கள் நிந்தவூர் கமு/அல் அஷ்றக் தேசிய பாடசாலையின்  80 ஆவது *அமுத* விழவின்   நினைவான வாழ்த்துக்கள்  கிழக்...
31/08/2026

இனிய நல் வாழ்த்துக்கள்

நிந்தவூர் கமு/அல் அஷ்றக் தேசிய பாடசாலையின் 80 ஆவது *அமுத* விழவின் நினைவான வாழ்த்துக்கள்

கிழக்கின் ஒளிக்கீற்று எனும் பொருள் பட அழைக்கப்படும் அல் அஷ்றக் தேசிய பாடசாலையானது நிந்தவூர் பிரதேசத்தின் அழியா சொத்து.
பல்வேறு வரலாற்றுப் பெருமையும் கல்விச் சிறப்பும் கொண்ட எமது அன்பிற்குரிய பாடசாலை தனது 80 ஆவது ஆண்டு அமுத விழாவினை கொண்டாடுவதையிட்டு எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

கடந்த 80 ஆண்டுகளாக அறிவையும், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், மனித நேயத்தையும் மாணவர்களிடையே வளர்த்து, சமூகத்திற்கும் நாட்டிற்கும் மிகச் சிறந்த ஆளுமைகளை உருவாக்கியுள்ள இப்பாடசாலையின் கல்விப் பயணம் பாராட்டுக்குரியது.
இப்பாடசாலையின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா பணியாளர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதி நிதிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள அனைவருக்கும் இந்நன்னாளில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய மாணவர்கள் நாளைய சமூகத்தின் தலைவர்களாகவும், நாட்டின் வளமான எதிர்காலத்தை உருவாக்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அந்த வகையில், இப்பாடசாலை மேலும் பல ஆண்டுகள் சிறப்புடனும், புகழுடனும் வளர்ந்து, பேர்பெற்று கல்வி மற்றும் சமூகத் துறைகளில் பல சாதனைகளைப் படைக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த 80 ஆண்டுகள் வரையில் இப்பாடசாலை பல்வேறு சாதனைகளைகள் புரிந்து எமதூருக்கும் தேசத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ளன. அதிலும் விஷேமாக கடந்த 5 வருடங்களில் பாடவிதான, இணைப்பாட விதான செயற்பாடுகளில் ஈட்டிய தேசிய மட்ட சாதனைகள் காலத்தால் அழியாதது.
இந்நிலையில் 80 இல் கால் பதிக்கும் இப்பாடசாலையின் சிறப்பான சாதனைகள் தொடர அனைவரும் சேர்ந்து யயணிக்க வேண்டியது இன்றியமையாதது. .
அதற்காக அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.

இன்னிலையில் 80 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் பாடசாலை சமூகத்தினர் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.
வாழ்க பாடசாலை!
வளர்க கல்விப் பணி!
வெல்க மாணவர் சமூகம்!
தொடரட்டும் சிறப்பான சாதனைகள்

Regards
A.Abdul Gaffoo,r
Principal,
KM/Al - Ashraq M.M.V.
(National school),
Nintavur.

Address

Main Street, Nintavur.
Nintavur
32340

Opening Hours

Monday 07:30 - 17:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 17:00

Telephone

+94672250040

Alerts

Be the first to know and let us send you an email when KM/AL-ASHRAQ M.M.V. (NATIONAL SCHOOL), NINTAVUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to KM/AL-ASHRAQ M.M.V. (NATIONAL SCHOOL), NINTAVUR:

Shortcuts

Share