09/08/2026
2026 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் எமது மாணவர்களுக்கு பழைய மாணவர் சங்கத்தின் வாழ்த்துச் செய்தி!
எமது பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகம் என அனைவரும் மேற்கொண்ட அயராத முயற்சிகளின் முக்கியமான ஒரு கட்டமே க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகும்.
நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் எமது மாணவர்கள் அனைவரும் தன்னம்பிக்கையுடனும், தெளிந்த சிந்தனையுடனும், மன அமைதியுடனும் பரீட்சையை எதிர்கொண்டு, தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி சிறந்த பெறுபேறுகளைப் பெற வேண்டும் என பழைய மாணவர் சங்கம் அன்புடன் வாழ்த்துகின்றது.
எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அறிவை விரிவாக்கி, உங்கள் முயற்சிகளுக்கு அருள்புரிந்து, சிறந்த பெறுபேறுகளையும் ஒளிமயமான எதிர்காலத்தையும் உங்களுக்கு வழங்குவானாக 🤲
அன்புடனும் பிரார்த்தனைகளுடனும்,
பழைய மாணவர் சங்கம்.