Al-Mazhar Girls' High School, Nintavur

Al-Mazhar Girls' High School, Nintavur "The First Muslim Girls' Maha Vidyalaya in Sri Lanka"

12/09/2026
03/09/2026

🎉 Alhamdulillah! Heartiest congratulations to the 20 students of KM/KM/ Al-Mazhar Girls’ High School, Nintavur, who achieved above the cutoff marks in the 2026 Grade Five Scholarship Examination. 🌟

We proudly appreciate our students, teachers and parents for this wonderful achievement. 👏🎓

சுற்றாடல் வினாடி வினா போட்டியில் நிந்தவூர் கமு / கமு /அல் -மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் சுற்றாடல் கழக மாணவி தேசிய ம...
04/07/2026

சுற்றாடல் வினாடி வினா போட்டியில் நிந்தவூர் கமு / கமு /அல் -மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் சுற்றாடல் கழக மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு.
*=========================

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் CIPM இணைந்து 04.07.2026 திகதி சனிக்கிழமை மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட சுற்றாடல் வினாடி வினா விடைப் போட்டியில் அம்பாரை மாவட்ட அணி சார்பில் எமது பாடசாலை மாணவி Zhakky Ahamed Zeenath Aleena மாகாண ரீதியாக நடை பெற்ற போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இம்மாணவி அண்மையில் வெளியாகிய GCE O/L 2025(2026) பரீட்சையில் 9A சித்தியினை பெற்ற மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு இம்மாணவிற்கு ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கிய பாடசாலையின் அதிபர் Alhaj A. C. Haamithu sir அவர்களுக்கும்,அம்பாறை மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை இணைப்பாளரான Mrs.K.Kuraisiya அவர்களுக்கும், எமது பாடசாலையின் சுற்றாடல் கழகத்திற்கு பொறுப்பான உதவி அதிபர்
Mrs. M.T.Benasira Madam அவர்களுக்கும்,பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் சுற்றாடல் கழக ஜனாதிபதி பதக்க பொறுப்பாசிரியை Mrs.AF.Rusma அவர்களுக்கும், ஏனைய சுற்றாடல் கழக ஆசிரியர்களுக்கும், மாணவியின் பெற்றோர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஆளணியினருக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது..

Media unit
Km/km/AL-Mazhar GHS
Nintavur.

GCE -(O/L) 2025(2026)பரீட்சையில்  சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவிகள் பாராட்டி கௌரவிப்பு. ++++++++++++++++++++++++நிந்தவூர்...
24/06/2026

GCE -(O/L) 2025(2026)
பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவிகள் பாராட்டி கௌரவிப்பு.
++++++++++++++++++++++++

நிந்தவூர் கமு/ கமு/ அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் அண்மையில் வெளியிடப்பட்ட
GCE O/L - 2025 (2026) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற

9A - 06
8A - 10
7A - 05
6A - 07
5A - 09

37 மாணவிகள் 2026.06.22 ம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற விசேட காலை ஆராதனை நிகழ்வில் பாடசாலையின் அதிபர் Al-haj AC. Haamithu sir அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

பரீட்சைப் பெறுபேறு களின் அடிப்படையில் எமது பாடசாலை நிந்தவூர் கோட்டத்தில் அதிக 9A சித்திகளைப் பெற்று நிந்தவூர் கோட்டத்தித்தில் முதலாம் இடத்தினையும்,94.2%சித்தி வீதத்தினைப் பெற்று கல்முனை வலயத்தில் ஒன்பதாவது இடத்தினையும் பெற்று முன்னேற்றத்தினை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இச் சிறந்த பெறுபெறுகளைப் பெற்று பாடசாலையை சென்ற வருடத்தினை விட முன்னிலைக்கு கொண்டு வர உழைத்த ஆசிரிய ஆசிரியைகளுக்கும் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் அதிபர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் எமது பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள்,சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவிகளின் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

Media Unit
Km/Km/Al-Mazhar Girls' High School, Nintavur.

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை - 2025 ( 2026 ) பெறுபேறுகளின் அடிப்படையில் நிந்தவூர் கல்விக்கோட்டத்தில் அதிகூடிய 9A சித்தி...
21/06/2026

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை - 2025 ( 2026 ) பெறுபேறுகளின் அடிப்படையில் நிந்தவூர் கல்விக்கோட்டத்தில் அதிகூடிய 9A சித்திகளைப் பெற்று நிந்தவூர் கமு/கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை சாதனை.
=============================================

அண்மையில் வெளியிடப்பட்ட GCE- O/L 2025(2026) பெறுபேறுகளின் அடிப்படையில் 06 மாணவிகள் 9A சித்திகளைப் பெற்று நிந்தவூர் கோட்டத்தில் எமது பாடசாலை முன்னிலையில் காணப்படுகின்றது. மேலும் 37 மாணவிகள் 5A க்கும் அதிகமான சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சிறந்த பெறுபெறுகளைப் பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, இப்பெறுபெறுகளைப் பெறுவதற்கு சிறப்பான திட்டமிடல்களோடு ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கிய பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட அர்ப்பணிப்புடன் அரும்பணியாற்றிய ஆசிரியர்கள்,பகுதித் தலைவர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர், வலயக்கல்வி கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளர்கள்,
உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள், நிந்தவூர் கோட்டக்கல்விப்பணிப்பாளர், பாடசாலையின் EPSI இணைப்பாளார் மற்றும், கல்வி கல்விசாரா ஊழியர்கள், பெற்றோர்கள்,மேலும் சிறப்பான பெறுபேறுகளைப்பெற உதவிய அனைவருக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

Media unit
km/km/AL-Mazhar GHS
Nintavur.

நிந்தவூர் கமு /கமு /அல் -மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் மாபெரும் இல்ல விளையாட்டுவிழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் 2026...
18/06/2026

நிந்தவூர் கமு /கமு /அல் -மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் மாபெரும் இல்ல விளையாட்டுவிழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் 2026.
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
நிந்தவூர் கமு /கமு /அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் 09.06.2026, அன்று செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் A. C.Haamithu sir அவர்களின் தலைமையில் நிந்தவூர் பொது விளையாட்டரங்கில் பி. ப. 4.00 மணியளவில் வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்
பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.M. A. Mohamed Thahir அவர்களும், கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் M.S. Sahuthul Najeem sir சார்பாக கல்முனை வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் MHM. Jabir sir அவர்களும், நிந்தவூர் பிரதேச செயலாளர் A. M. Abdul Latheef அவர்களும், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ. AL. Riyas Atham அவர்களும். விசேட அதிதிகளாக கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான Mrs.MH.Riyasa madam, Mrs. V. Santharupan madam அவர்களும் நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் MLM. Mutharris sir அவர்களும், ஆரம்பகல்வி ISA மற்றும் எமது பாடசாலையின் EPSI இணைப்பாளரான Mrs. M. Y. Najimunnisa madam அவர்களும், நிந்தவூர் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், நிந்தவூர் கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஓய்வு நிலை அதிபர்கள், நலன் விரும்பிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் மூன்று இல்லங்களைச் சேர்ந்த மாணவிகளின் அணி வகுப்பு மற்றும் Band, scout, prefect, first aid குழுவினரின் அணிவகுப்பு, Marching, மைதான சுவட்டு நிகழ்வுகள், Drill, வினோத உடை போட்டி நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன.

விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் Dharul Salam இல்லம் Champion ஆகவும் Dharul Nayeem இல்லம் Runnur up ஆகவும் Dharul Maqam இல்லம் 2nd runnur up ஆகவும் தெரிவு செய்யப்பட்டதுடன், இல்ல வடிவமைப்பு போட்டியில்
முதலாம் இடத்தினை Dharul Maqam இல்லமும், இரண்டாவது இடத்தினை Dharul salam இல்லமும், மூன்றாவது இடத்தினை Dharul Nayeem இல்லமும் பெற்றுக்கொண்டது.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வெற்றிக் கேடயங்களும், பதக்கங்களும், மலர்ச்செண்டுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இறுதியாக வான வேடிக்கைகளுடன் நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு பெற்றது.

பாடசாலையின் வரலாற்றில் 98 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற முதலாவது இல்ல விளையாட்டு போட்டியாக இந்நிகழ்வு இடம்பெற்றிருப்பது குறிப்பிட்டுக் கூறக் கூடிய ஒரு அம்சமாகும்.

Media unit
Km/Km/AL-Mazhar GHS
Nintavur.

10/06/2026

Address

15, Hospital Road
Nintavur
32340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Mazhar Girls' High School, Nintavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al-Mazhar Girls' High School, Nintavur:

Shortcuts

Share

Category