21/05/2026
அர்ப்பணிப்பு மிக்க கல்விப்பணியிலிருந்து ஓய்வுபெறும் ஆசிரியை திருமதி. சித்தி சக்கியா முகம்மட் பௌஸ் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!
கமு/கமு/அல் மதீனா மகா வித்தியாலயத்தில் விஞ்ஞானப் பாட ஆசிரியையாகவும், பெண்கள் பிரிவின் தலைவியாகவும் (Sectional Head) மிகச் சிறப்பான முறையில் பணியாற்றிய திருமதி. SSM.Fowze அவர்கள், 38.5 ஆண்டு கால நீண்ட கல்விச் சேவையை நிறைவு செய்து இன்று (2026.06.21) ஓய்வு பெறுகின்றார்.
அபூபக்கர் முகம்மது இஸ்மாயில் மற்றும் யூசுப் லெப்பை கதீஜா உம்மா தம்பதியினரின் புதல்வியும், அபூபக்கர் முகம்மது பௌஸ் அவர்களின் அன்பு மனைவியும், MF.ஷீராஸ் குல்ஷும் மற்றும் MF.தாபித் சௌஜின் அவர்களின் தாயாருமான இவர்,தனது ஆரம்பக் கல்வியை இமாம் றூமி வித்தியாலயத்திலும் மட்/ வின்சன் மகளிர் வித்தியாலயம்,கமு/மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆகியவற்றிலும் தனது கல்வியை தொடர்ந்தார்.
1987.12.14 ஆம் ஆண்டு அனுராதபுரம், பளலுவேவ முஸ்லிம் வித்தியாலயத்தில் தனது ஆசிரியர் பணியைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து கமு/அல் மதீனா மகா வித்தியாலயம் மற்றும் அறபா வித்தியாலயம் ,அல் மஸ்ஹர் பெ.உ.பாடசாலை ஆகிய பாடசாலைகளில் பல்வேறு காலகட்டங்களில் பணியாற்றி, மீண்டும் கமு/அல் -மதீனா மகா வித்தியாலயத்திலேயே தனது சேவையை நிறைவு செய்தார்.
ஒரு பாட ஆசிரியையாக மட்டுமன்றி, பெண்கள் பகுதித் தலைவியாகப் பொறுப்பேற்று மாணவிகளின் ஒழுக்கம், கல்வி முன்னேற்றம் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதில் அர்ப்பணிப்புமிக்க சேவையை ஆற்றிய ஆசிரியை திருமதி.SSM.Fowze அவர்கள், தனது ஓய்வுக்காலத்தை நிறைந்த ஆரோக்கியத்தோடும், மன நிம்மதியோடும், இறை அருளோடும் இனிதே கழிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
கமு/கமு/அல் மதீனா மகா வித்தியாலய அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள்,மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சார்பில் மனதார வாழ்த்துகிறோம்.
உங்கள் சேவை காலத்தால் அழியாதது; உங்கள் வழிகாட்டல் என்றும் எம் நினைவில் வாழும்!