19/09/2023
🔥🏏
Revealing the event number 3; PPA Cricket night!
பேப்பர் பந்தும் புத்தக மட்டையும் கொண்டு வகுப்பறை மூலைகளில் ஆரம்பித்த ஆட்டங்கள்தான் எம் வாழ் நாட்களின் முதலாவது கிரிக்கட் அனுபவங்கள்! கிரிக்கட்டின் மீதான ஆர்வம் அந்த வகுப்பறை மூலைகளில்தான் அஸ்த்திவாரம் இடப்பட்டிருக்க வேண்டும்! அவைகள்தான் பிற்காலத்தில் புத்தக மட்டைகள் கதிரை பலகைகளாகவும், பேப்பர் பந்துகள், டென்னிஸ் பந்துகளாகவும் மாறக் காரணம்.
காலையில் இருந்து துடுப்பு மட்டையையும், பந்தையும், இடைவேளை வரும் வரை ஆசிரியர் கண் படாமல் பத்திரமாய் பதுக்கி வைத்திருந்ததும், விளையாட்டு பாடவேளைக்காக ஏங்கிக் காத்திருந்ததும், இலங்கை பாக்கிஸ்தான் சண்டை போட்டதும், நண்பன் வீட்டில் மாலை முழுக்க, இரவு வரைக்கும் கிரிக்கட்டை கண்டுகழித்ததும் இன்னும் கண் முன்னே ஊஞ்சலாடுகையில் கண்களில் கண்ணீர்தான் கசிகிறது.
அந்தக்காலம், மாலையானதும் மதீனத்து மண் தன் குழந்தைகளை தன் மைதானத்தில் ஆரத்தழுவிக்கொள்ளும்! அசருடன் ஆரம்பிக்கும் ஆட்டங்கள் மஹ்ரிபுகள் தாண்டியும் நீளும்! இன்று, மாலை நேரங்களில் யாரும் இல்லை அவள் மடியில்; நேரம் இல்லை நமக்கு!
தழுவிக்கொள்ள யாருமில்லாமல் காத்திருக்கும் மதீனத்து தாய் மடியில் ஓரிரு நாட்கள் கவலை மறந்து, பாடசாலை குழந்தைகள் போல மீண்டும் விளையாட உங்களை அழைக்கிறாள் அவள்!! ஓரிரு நாட்களாவது வந்துவிட்டுப் போங்கள்! செப்டம்பர் 28 மற்றும் 29களில்!!
The crack of the bat, the cheers from the sidelines – these were the sounds of our school days. As past pupils, we come together once again on the ground field to relive those moments and celebrate the enduring love for the our Matheena. Join us for the cricket matches that are more than just runs and wickets; they are the journeys back in time. "