29/04/2024
ஆசிரிய பணியிலிருந்து ஓய்வு
எமது பாடசாலையான கமு/கமு/ஜேர்மன் நட்புறவு ஆரம்ப பாடசாலையின் முன்னாள் பதில் அதிபரும் தற்போதைய பிரதி அதிபருமாகிய ஜனாப் M. சஹீது 2024.04.30 ம் திகதி அன்று ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
இவர் முதல் நியமனமான
1992.06.25 இல் ஆரம்பக் கல்வி ஆசிரியராக நியமனம் பெற்று தனது ஆரம்ப நியமன முதல் இறுதி ஓய்வு பெறும் காலம் வரை தரம் 5 மாணவர்களுக்கு கற்பித்தல் பணியில் ஈடுபட்டதும் சிறப்பம்சமாகும். இவருடைய கற்பித்தல் காலப் பகுதியில் பல கஷ்டப் பாடசாலைகளில் 12 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தி அடைய காரணமாக இருந்ததும் விஷேட அம்சமாகும். இவருடைய சேவை காலப்பகுதியில் மாணவர்களின் கல்வி, இணைப் பாடவிதான செயற்பாடு, ஒழுக்க விழுமியங்களின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர். ஆசிரியப் பணியுடன் நின்றுவிடாது பாடசாலையின் ஆசிரியர் சங்கச் செயலாளராய், பகுதி தலைவராகவும் சிறந்த ஆலோசகராய், முகாமைத்துவக் குழு உறுப்பினராய், ஆசிரியர்- மாணவர் நலநோம்பல் குழு உறுப்பினராய் எனப் பல்வேறு வகிபாகங்களைக் கொண்டிருந்தார். இவர் ஜனநாயக ஆசிரிய தொழிற் சங்கத்தின் பிரதி தலைவராகவும், கல்முனை கல்வி வலயத்தின் இடமாற்ற சபை உறுப்பினராகவும் இருந்து பல ஆசிரியர்களின் இடமாற்ற பிரச்சினைக்கு தீர்வும் பெற்றுக் கொடுத்தவர்.
32 வருட சேவைக் காலத்தில் ஆசிரிய பணி செய்த பரடசாலை பின்வருமாறு 1)நிந்தவூர் மினா வித்தியாலயம், ( 5 வருடம் 8 மாதம்) 2) பதுறியா வித்தியாலயம்,(11 வருடம் 9 மாதம்) 3) மாவடிப்பள்ளி அஸ்றப் வித்தியாலயம் (2 வருடம் 1 மாதம்) 4) நிந்தவூர் அல் மினா வித்தியாலயம் (8 வருடம் 11 மாதம்) 5) நிந்தவூர் ஜேர்மன் வித்தியாலயம்( 3 வருடம் 3 மாதம்) போன்றவற்றில் சேவையாற்றிய M. சஹீது ஆசிரியர் இறுதியாக எங்கள் பாடசாலையான நிந்தவூர் ஜேர்மன் வித்தியாலயத்தில் இருந்து பதில் அதிபராக மற்றும் பிரதி அதிபராகவும் இருந்து பல கல்வி அதிகாரிகளின் சினேக உறவு கொண்டவர். இவரது ஓய்வு எமது பாடசாலையை பொறுத்தவரை பெறும் இழப்பாகும். இவரது வெற்றிடம் இவரைப் போன்ற ஒரு ஆசிரியருக்காகக் காத்துக்கிடக்கிறது.
கொடுக்கும் எந்த வேலைகளையும் செவ்வன செய்து முடிக்கும் திறனும், ஆளுமையும் கொண்டவராகவும் எவ்வாறான சந்தர்ப்பத்திலும் புன்னகையோடு கருமமாற்றும் பேரன்பும் கொண்ட M. சஹீது ஆசிரியரின் ஓய்வு காலம் சிறப்பாக அமைய பாடசாலை சார்பாக வாழ்த்துகிறோம். இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அதிபர்,
பிரதி அதிபர்,
ஆசிரியர்கள்,
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
மாணவர்கள்,
பாடசாலை அபிவிருத்திக் குழு,
பாடசாலை சமூகம்.