Km/Km/Al-Athan Vidyalaya Nintavur

Km/Km/Al-Athan Vidyalaya Nintavur UNITE FOR QUALITY EDUCATION

அறிவை விதைத்து, அன்பை வளர்த்து, பல தலைமுறைகளை உருவாக்கிய உன்னத கல்விப் பயணம் முடிவுறுகிறது.*****************************...
18/08/2026

அறிவை விதைத்து, அன்பை வளர்த்து, பல தலைமுறைகளை உருவாக்கிய உன்னத கல்விப் பயணம் முடிவுறுகிறது.
*****************************************************

எமது அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய கமு/கமு/ அல்-அதான் வித்தியாலயத்தின் ஆசிரியை திருமதி UHM. ANVAR (HABEEBA Teacher) அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டும், வாழ்த்துகளும்!♥️

ஆசிரியர் திருமதி UHM. ANVAR அவர்கள், 15.05.1992 அன்று தனது ஆசிரியர் பணியினை ஆரம்பித்து, ுடங்களும் #04மாதங்களும்_27நாட்களும் அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும், பொறுப்புணர்வுடனும் கல்விச் சேவையாற்றி, தற்போது தனது நீண்டகால ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்று செல்கின்றார்.

🏫 சேவையாற்றிய பாடசாலைகள் மற்றும் காலப்பகுதிகள்

• கமு/கமு அஸ்-ஸபா வித்தியாலயம் – 12 வருடம் 11 மாதங்கள்

• கமு/அல்-இமாம் ரூமி வித்தியாலயம் – 16 வருடம் 4 மாதம் 19 நாட்கள்

• கமு/கமு அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை – 1 வருடம் 29 நாட்கள்

• கமு/கமு/ GMMS வித்தியாலயம், சாய்ந்தமருது – 6 மாதம் 9 நாட்கள்

• கமு/கமு அல்-அதான் வித்தியாலயம் – 3 வருடம் 5 மாதம் 11 நாட்கள்

🌷 அர்ப்பணிப்புமிக்க கல்விச் சேவை

தனது நீண்டகால ஆசிரியர் சேவையின் போது பல்வேறு பாடசாலைகளில் தரம் 1 முதல் தரம் 5 வரையான வகுப்புகளுக்கு பொறுப்பாசிரியராகவும், குறிப்பாக தரம் 05 வகுப்பாசிரியராகவும் மிகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

மேலும், தான் சேவையாற்றிய பாடசாலைகளில் பாடசாலை நலன்புரிச் சங்கத்தின் செயலாளராகவும், பொருளாளராகவும், ஒழுக்காற்றுக் குழு, கொள்வனவுக் குழு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை ஏற்று, அவற்றை மிகுந்த பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் திறம்பட நிறைவேற்றியுள்ளார்.

அத்துடன், இலவச பாடநூல் மற்றும் சீருடை விநியோகம், தமிழ் தினப் போட்டிகள், சமய தின நிகழ்வுகள், குருளை சாரணியம், கல்விச் சுற்றுலாக்கள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பாடசாலை செயற்பாடுகளில் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஈடுபட்டு, தான் சேவையாற்றிய ஒவ்வொரு பாடசாலையின் முன்னேற்றத்திற்கும், மாணவர்களின் கல்வி, ஒழுக்கம், திறன் விருத்தி மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

🏆 புலமைப்பரிசில் பரீட்சை சாதனைகளாக.......

1997 – கமு/அல்-இமாம் ரூமி வித்தியாலயத்தில் – 7 மாணவர்களும்

2010 – கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் – 6 மாணவர்களும்

2011 – கமு/கமு/GMMS வித்தியாலயத்தில் – 6 மாணவர்களும் என

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேலும், பல நூற்றுக்கணக்கான மாணவர்களை வெற்றிப்புள்ளிக்கு மேலும் சித்தியடைய வழிகாட்டியுள்ளார்.

💐 அன்பிற்குரிய ஹபீபா ஆசிரியர் அவர்கள்!

தங்களின் #34வருடங்கள்_04_மாதங்கள்
#27நாட்கள் கல்விச் சேவையில் நீடித்து நின்றது என்பது ஒரு சாதாரண விடயமல்ல! இப்பணிக்காலம் என்பது பல தலைமுறை மாணவர்களின் வாழ்க்கையை அறிவாலும், அன்பாலும் வழிநடாத்திய ஓர் உன்னதமான நீண்ட கல்விப் பயணம் ஆகும்.

தாங்கள் பணியாற்றிய ஒவ்வொரு பாடசாலையிலும் மாணவர்களின் நலனையும், பாடசாலையின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்தி, தங்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பையும் அர்ப்பணிப்பு, நேர்மை, அன்பு மற்றும் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றியுள்ளீர்கள்.

தங்களின் சேவை முடிவடைகின்ற போதிலும், தாங்கள் விதைத்த அறிவின் விதைகளும், வழங்கிய அன்பும், உருவாக்கிய மாணவர்களின் சாதனைகளும் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

#ஆசிரியர்பணியில்_இருந்து_ஓய்வு #பெறலாம்_ஆனால்_மாணவர்களின் #இதயங்களில்_இருந்து_ஒருபோதும்
#ஓய்வு_பெறமாட்டீர்கள்!♥️

தங்களின் ஓய்வுக்காலம் ஆரோக்கியம், மகிழ்ச்சி, மனநிம்மதி, இறையருள் மற்றும் குடும்ப ஒற்றுமை, சகவாழ்வு ,அன்பு நிறைந்ததாக அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

🌹 நன்றியுடனும் அன்புடனும்…

பாடசாலையின் அதிபர்,
பணிக்குழுவினர்கள்,
பழைய மாணவர்கள்,
மாணவர்கள்,
மற்றும்
பாடசாலைச் சமூகம்

கமு/கமு/ அல்-அதான் வித்தியாலயம், நிந்தவூர்.

17/08/2026
 #ஒரு_நீண்ட_பயணம்_முடிவுறுகிறதுஅர்ப்பணிப்பும் சேவையும் நிறைந்த ஓர் உன்னதப் பயணத்திற்கு வாழ்த்துக்கள்!கமு/கமு/அல்-அதான் வ...
25/06/2026

#ஒரு_நீண்ட_பயணம்_முடிவுறுகிறது

அர்ப்பணிப்பும் சேவையும் நிறைந்த ஓர் உன்னதப் பயணத்திற்கு வாழ்த்துக்கள்!
கமு/கமு/அல்-அதான் வித்தியாலயத்தின் மதிப்பிற்குரிய ஆசிரியை திருமதி. பாத்தும்மா ஷஹீது அவர்கள் ஓய்வு பெறும் தருணம் இது.

கல்விப் பணியை ஒரு தொழிலாக அல்லாது, ஒரு புனிதமான பொறுப்பாகக் கருதி, அர்ப்பணிப்பும், அன்பும் கலந்த சேவையினால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் அறிவொளி ஏற்றிய இலங்கை ஆசிரியர் சேவை தரம் I ஆசிரியையான திருமதி. பாத்தும்மா ஷஹீது ஆசிரியை அவர்கள்,
தனது சுமார் #38வருட கால கல்விச் சேவையை நிறைவு செய்து ஓய்வு நிலையை அடையும் இத்தருணத்தில், கமு/கமு/அல்-அதான் வித்தியாலயக் குடும்பம் சார்பாக எமது இதயங்கனிந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

1988 ஆம் ஆண்டு தனது ஆசிரிய சேவையில் இணைந்து கொண்ட அவர், தனது ஆசிரியப் பயணத்தில் பல கல்வி நிறுவனங்களில் சிறப்பாகச் சேவையாற்றியுள்ளார்.
*சேவையாற்றிய பாடசாலைகள்*

▪️ கமு/கமு/இமாம் றூமி வித்தியாலயம் – 03 வருடங்கள் 08 மாதங்கள்.

▪️ கமு/கமு/அல்-அஷ்றக் தேசியப் பாடசாலை – 07 மாதங்கள்.

▪️ கமு/கமு/அல்-மதீனா மகா வித்தியாலயம் – 12 வருடங்கள் 8 மாதங்கள்.

▪️ கமு/கமு/அறபா வித்தியாலயம் –07 வருடங்கள் 07 மாதங்கள்.

▪️ கமு/கமு/அல்-அதான் வித்தியாலயம் – 11 வருடங்கள் 4 மாதங்கள்.
இவ்வாறு பல பாடசாலைகளில் சேவையாற்றிய அவர், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் நற்பண்பு வளர்ச்சிக்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

கற்பித்தல் பணிக்கு அப்பால்,
கமு/கமு/அல்-அதான் வித்தியாலயத்தில் சேவையாற்றிய காலப்பகுதியில், பாடசாலையின் பல்வேறு நிர்வாக மற்றும் தலைமைத்துவப் பொறுப்புகளையும் திறம்பட வகித்துள்ளார். பாடசாலையின் ஒழுக்காற்றுக் குழு உறுப்பினராகச் செயற்பட்டு மாணவர்களிடையே ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

மேலும், தரம் 05 ன் பிரிவுத் தலைவராக இருந்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் வழிகாட்டியாக விளங்கியுள்ளார்.

அத்துடன், பாடசாலையின் நலம்புரிச் சங்கத்தின் தலைவராக செயற்பட்டு ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தின் நலன்சார் செயற்பாடுகளை முன்னெடுத்து, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

பாடசாலை முகாமைத்துவக் குழுச் செயலாளராக,கலாச்சார மற்றும் மொழித்தின உறுப்பினராக என பல்வேறு குழுக்களின் உறுப்பினராகவிருந்து தனது பொறுப்புகளைப் பொறுப்புடன் செய்திருகாகிறார். சமூக மற்றும் தலைமைத்துவப் பணிகளிலும் அவர் தனித்துவமான தடம் பதித்துள்ளார்.
அவை தாண்டி-

# 2017–2018 காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா சாரணியர் சங்கத்தின் நிந்தவூர் இணைப்பாளராகச் செயற்பட்டு இளைய தலைமுறையினரின் ஆளுமை வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளார்.

# 2009 காலப்பகுதியில் சிறுவர் இலக்கிய ஆக்கப் போட்டியில் வலய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றமை அவரது படைப்பாற்றலையும் திறமையையும் வெளிப்படுத்துகிறது.

# அவரது அர்ப்பணிப்பான கல்விச் சேவையின் பலனாக, புலமைப்பரிசில் பரீட்சையில் ஐந்து ஆண்டுகளில் 19 மாணவர்களை வெட்டுப் புள்ளகளுக்கு மேலும் பல நூற்றுக் கணக்கான மாணவர்களை வெற்றிப் புள்ளிக்கு மேலும் சித்தி பெறச்செய்து வெற்றிப் பாதைக்கு வழிநடாத்தியுள்ளார்.

இது, அவர் ஒரு ஆசிரியையாக் கொண்டிருந்த அர்ப்பணிப்பிற்கும் திறமைக்கும் சிறந்த சான்றாகும்.
சமூகப் பணிகளிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

# 2010 ஆம் ஆண்டு முதல் மத்தியஸ்த சபை உறுப்பினராகவும், சமாதான நீதவானாகவும் (JP) சேவையாற்றி வருவதுடன், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் மத்தியஸ்த சபையில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கில் வடகிழக்கு மாகாண மட்ட நிகழ்ச்சிகளில் 2010, 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் வளவாளராகப் பங்காற்றியுள்ளார்.

மாணவர்களின் அறிவு, ஒழுக்கம், மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் பணியில் தங்களின் அர்ப்பணிப்பும் சேவையும் என்றும் நினைவுகூரப்படும்.

தாங்கள் விதைத்த கல்வி விதைகள் தலைமுறைகள் தோறும் பலன் அளித்துக்கொண்டே இருக்கும்.
அல்லாஹ் தஆலா அவர்கள் தங்களின் அனைத்து நற்பணிகளையும் ஏற்றுக்கொண்டு, சிறந்த ஆரோக்கியம், மனநிறைவு, குடும்ப மகிழ்ச்சி, நீண்ட ஆயுள் மற்றும் பூரண சுகத்தையும் வழங்கி ஓய்வு காலத்தை அருள் நிறைந்ததாக ஆக்கி அருள்வானாக!!. ஆமீன்.

#ஒரு_ஆசிரியரின்_சேவை_ஓய்வடையலாம், #ஆனால்_அவர்_விதைத்த_அறிவும் #நற்பண்புகளும்_தலைமுறைகளைத் #தழைக்கச்_செய்யும்.”

" உங்கள் சேவைப் பயணம் எங்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியெனக் கருதி...
வாழ்த்தி விடைபெறுகிறோம்!.

அதிபர்,
அனைத்து பாடசாலைப் பணிக்குழுவினர், மாணவர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறப்பினர்கள்,
பெற்றோர்கள்.
கமு/கமு/அல்-அதான் வித்தியாலயம், நிந்தவூர்.

 ுற்றாடல்_தினம்_2026"இயற்கையால் ஈர்க்கப்பட்டவை காலநிலைக்காக.... நமது எதிர்காலத்திற்காக" (Inspired by Nature. For Climate...
11/06/2026

ுற்றாடல்_தினம்_2026

"இயற்கையால் ஈர்க்கப்பட்டவை காலநிலைக்காக....
நமது எதிர்காலத்திற்காக"
(Inspired by Nature. For Climate. For Our Future)

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, மேற்படி கருப்பொருள் தாங்கி நிந்தவூர், கமு/ கமு/ அல்- அதான் வித்தியாலயத்தில் (05.06.2026) அன்று பாடசாலையின் அதிபர்
Mr. M.Habeebulla Sir அவர்களின் தலைமையில்
பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

இந்நிகழ்வில் போது மாணவர்களுக்கு #சுற்றுச்சூழல் # தொடர்பான உரையொன்று அதிபரினால் இடம்பெற்றதுடன் மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கான சத்தியப்பிரமாணமும் இடம்பெற்றது.

மேலும், இந்நிகழ்வில் #சுற்றுச்சூழல் # தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் பாடசாலையின் மாணவர்கள் மற்றும் குருளைச்சாரணிய படையினரின் பங்களிப்புடன் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வின் போது, அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சுற்றாடல் கழக மாணவர்களினால் மரக்கன்றுகளும் நடப்பட்டன.


Km/km/Al-Athan Vidyalaya
Nintavur

Inter House Sports Festival - 2026
11/05/2026

Inter House Sports Festival - 2026

  Media Unit Km/Al-Athan Vidyalaya Ninthavur
09/05/2026





Media Unit
Km/Al-Athan Vidyalaya
Ninthavur

 #கமு/ #அல்- #அதான்_வித்தியாலய_இல்ல  #விளையாட்டு_விழா_2026கமு/அல்- அதான் வித்தியாலயத்தின் 30வது வருட ( #முத்துவிழா) நிறை...
09/05/2026

#கமு/ #அல்- #அதான்_வித்தியாலய_இல்ல #விளையாட்டு_விழா_2026

கமு/அல்- அதான்
வித்தியாலயத்தின் 30வது வருட ( #முத்துவிழா) நிறைவையொட்டி பாடசாலைச் சரித்திரத்தின் முதன்முதல் #இல்ல_விளையாட்டு_விழா கடந்த வாரம் 02.05.2026 ஆம் திகதி சனிக்கிழமை அன்று எமது பாடசாலையின் அதிபர் Mr.M.HABEEBULLAH Sir அவர்களின் தலைமையில் பாடசாலை மைதானத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக Mr. MHM.JABEER (DDE- Establishment & General Management Zonal Education Office, Kalmunai) அவர்களும்,
கெளரவ அதிதியாக Mr.AM.ABDUL LATHEEF (Divisional Secretary, Divisional Secretariat- Ninthavur) அவர்களும்,
விசேட அதிதிகளாக Mr.UL.RIYAL (DDE- Education Management, Zonal Education Office-Kalmunai) அவர்களும்,
Mr. A. SANJEEWAN (DDE- Maths, Zonal Education Office- Kalmunai) அவர்களும்,
Mr. MLM. MUTHARRIS ( DDE- Health & Physical Education, Divisional Director Of Education, Ninthavur) அவர்களும்,
சிறப்பு அதிதியாக
Mr. IM.ISSADEEN ( Managing Director , CO Lesthekir International College) அவர்களும்,
அதிதிகளாக
Mrs.MY. NAJIMUN NIZA ( SLTAS- Primary, ZEO- Kalmunai) அவர்களும்,
Mr.SMM. ANSAR ( Resource Person ,ZEO- Kalmunai) அவர்களும்,
Mr. AM. ANSAR (Teacher Advisor, Physical Education, ZEO, Kalmunai) அவர்களும்,
மற்றும் விசேட அழைப்பினர்கள், பாடசாலைகளின் அதிபர்கள்,
எமது பாடசாலையின் அனைத்து ஆளணியினர், SDEC உறுப்பினர்கள்,பெற்றோர்கள்நலன்விரும்பிகள், நன்கொடையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்.

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த இல்ல விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

மேலும், இந்த இல்ல விளையாட்டு விழாவில் OVERALL Champion ஆகத் தெரிவு செய்யப்பட்ட AL FALAH இல்லத்துக்கும், RUNNER-UP ஆக தெரிவு செய்யப்பட்ட AL HIQMA இல்லத்துக்கும் மற்றும்
2nd RUNNER-UP ஆக தெரிவு செய்யப்பட்ட
ANNOOR இல்லத்துக்கும் வாழ்த்துக்கள்.!

இல்லங்களைப்பொறுப்பெடுத்து வழிநடாத்திய பொறுப்பாசிரியர்களுக்கும், குழுவினர்களுக்கும் நன்றிகளும், வாழ்த்துகளும்!

மேலும்,எமது பாடசாலையின் முகாமைத்துவ குழு, விளையாட்டு குழு மற்றும் இவ்விளையாட்டு விழா சிறப்புற நடைபெறத் துணை புரிந்த ஏக இறைவனுக்கும் நன்றி கூறுவதுடன் இன்னும் எவ்வழியிலேனும் எமக்கு உதவிகள் மற்றும் ஒத்தாசை புரிந்தார்களோ அத்துணை நல்லுள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகளும்
வாழ்த்துக்களும்!
நன்றி!!!

Media Unit,
Km/ Al-Athan Vidyalaya,
Ninthavur.

Address

Nintavur
32340

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:01
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 23:30

Telephone

+94761808461

Website

Alerts

Be the first to know and let us send you an email when Km/Km/Al-Athan Vidyalaya Nintavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Km/Km/Al-Athan Vidyalaya Nintavur:

Shortcuts

Share