17/07/2017
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பார்ந்த பலகத்துரை ஜமாஅத்தினரே .சமூக சீர்திருத்தசிந்தனையாளர்களே , பழய மாணவர் சங்க நிர்வாகம் மற்றும் சக அங்கத்தவ சகோதரர்களே பாடசாலை அபிவிருத்திச்சங்கம் மற்றும் அதிபர் உற்பட்ட ஆசிரியர்களே .இதோ உங்கள் முன்னால் பதிவேற்றப்பட்ட போட்டோக்கள் மூலம் தெரிந்து தெளிவுபட வேண்டிய ஒரு உணர்வுப்பூரவமான செயல்பாடு ஒன்றை காணமுடிகின்றது .
டெங்கு என்ற உயிர்கொள்ளி நோயால் நமது நாட்டில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு அச்சுருத்தலுடன் தத்தமது வீடுகளையும் தோட்டங்களையும் முற்றங்களையும் துப்புரவுசெய்துவிட்டு ஆறுதலாகிவிடுகின்றனர் ஆனால் தம்மால் தமது வீடுகளில் இருந்து அகற்றப்பட்டு கழிவுகள் ஊரின் பிரதான இடங்களில் சந்திகளில் வீதியோர வடிகால் ( கான்)களில் போய் தேங்கிக்கிட்கின்ற துர்பாக்கிய நிலை கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றது காரணம் அது நகரசபை / மாநகரசபை ஊழியர்களின் தேவை அவர்களின் வேலை என்ற அசமந்தப்போக்கே .
இந்த நிலை நமது நீர்கொழும்புப்பிரதேசத்தின் கம்மல்துரை / பலகத்துரையூரின் அல்பலாஹ் பாடசாலையில்வெள்ளிக்கிழமை 14 /07 2017 .அன்று ஏற்பாடு செய்து பெற்றோர்களுக்கான அழைப்புகள் கொடுத்தபோது வெறும் சில பெற்றோர்களே வருகைதந்திருந்தாலும் பாடசாலை உற்புரம் 3 /4 பங்கு வேளைகள் சீர்செய்யப்பட்டு துப்பரவு செய்யப்பட்டது .அங்கு வருகைதந்த பெற்றோர்களுக்கும் அபிவிருத்திச்சங்க சகோதரர்களுக்கும் நன்றி .
ஆனால் 16 /07 2017 ஞாயிற்றுக்கிழமை நமது பலகத்துரையூரின் அல்பலாஹ் பாடசாலைக்குமுன்னால் உள்ள ஆட்டோ ஒட்டும் சகோதரர்களினால் ஏற்பாடாகிய மிகவும் பெறுமதியான சிறமதான நிகழ்வு ஊர்மக்களின் மணதைக்கவர்ந்ததது ..
காரணம் பல மாதங்களாக அசிங்கங்களுடன் தேங்கிக்கிடந்த வடிகாள் என்ற பெயரில் ஒரு சிலருடய தேவைக்காக
அமைக்கப்பட்ட பாடசாலை முன்னால்
உள்ள (தக்கியாவீதி ) காண் துப்பரவுசெய்யப்படுகின்றது என்பதேயாகும் . இந்த பாரிய வேலைத்திட்டத்துக்கு முன்வந்தவர்கள் பாடசாலை முன்னால் உள்ள ஆட்டோ ஒட்டும் குழுமத்தின் சகோதரர்கள் .
பலகத்துரையில் நடாத்தப்படும் சமூக நலன்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி போதை ஒளிப்பு .சமூக ஒற்றுமைக்கான வழிகாட்டல் மார்க்க நிகழ்வுகள் என்று எதை எடுத்தாலும் முதலில் கச்சைகட்டி முன் வருவது ஆட்டோக்காரன் என்ற பெயரால் அதிகாரமட்டத்தில் இருந்து சமிக்ஞைகாட்டப்படும் இந்த பாமரசகோதரர்களே என்பதில் மணச்சாசட்சியுள்ள எவரும் மறுப்பதட்கில்லை ..
அதனடிப்படையிலே இன்று தமது வருமானத்தை பெரிதாக எதிர்பார்க்கும் தினமாக ஞாயிற்றுக்கிழமை என்றிருந்தும் அந்த,உழைப்பையும் தியாகம் செய்து தக்கியாவீதியில் நடமாடும் அனைவருக்காகவும் பாடசாலையின் சுத்தம் சுகாதாரத்திட்காகவும் .யாரும் செய்ய முன்வராத ஒரு பாரியவேலையை சிறமேற்கொண்டு செயல்படுத்தியதன் மூலம் பண்பாலும் செயலாலும் மேன்மையானவர்கள் ஆட்டோக்காரர்கள் என்று பலகத்துரைக்குமட்டுமல்ல அனைவருக்கும் எடுத்துச்சொல்லிவிட்டனர் .
மாஷா அல்லாஹ் .
பணத்துடன் அறிவு சேராது என்பது முதுமொழி .பண்புடன் அழகுசேரும் என்பதட்கு அழகான வழிகாட்டலாக ஆட்டோக்காரர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வை வெளிப்படுத்திய அந்த சகோதர நெஞ்சங்களை வாழ்த்துவோம் அவர்களுக்கு நன்றி பாறாட்டுவோம் இன்ஷா அல்லாஹ் .
பலகத்துரையூரின் சார்பாக .அனைத்து அமைப்புகள் சங்கங்கள் மற்றும் பாடசாலையின் அநிபர் உற்பட சக ஆசிரியர்கள் சார்பாகவும் நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாக்கி முடிக்கிறேன் .
ஜஸாகல்லாஹு ஹைர் .
பதிவு
உங்கள் அன்பின்
M .fபாயிஸீன் .
S D S 🔛 OBA .
kammalthurai .