NG AL Falah OBA

NG AL Falah OBA

Share

Poruthota Al Falah College Old Boys Association, Media unit

17/12/2025

அஸ்ஸலாமு அலைக்கும்!!

அல்-பலாஹ்வின் பழைய மாணவர்களே!!

அல்-பலாஹ் பழைய மாணவர் சங்கம் வருடா வருடம் நடாத்தி வரும் பழைய மாணவர்களுக்கான Batch Wise கிரிக்கெட் சுற்றுத் தொடரினை எதிர்வரும் ஜனவரி மாதத்தின் 15,16,17,18 ஆகிய தினங்களில் நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்ததோடு அது தொடர்பான அறிவிப்பும் உங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

எனினும் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையினை கருத்திற் கொண்டு ஜனவரி மாதம் நடாத்த திட்டமிட்டிருந்த குறித்த கிரிக்கெட் சுற்றுத் தொடரினை ஒத்தி வைக்க அல்-பலாஹ் பழைய மாணவர் சங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் குறித்த கிரிக்கெட் சுற்றுத் தொடரினை மீள நடாத்தும் திகதியினை நாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே அல் பலாஹ் பழைய மாணவர் சங்கத்தின் மேற்குறித்த தீர்மானத்திற்கு எமது கல்லூரியின் சகல பழைய மாணவர்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு மிக விநயமாக கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி!!

ஊடக பிரிவு
அல்-பலாஹ் பழைய
மாணவர் சங்கம்.

26/11/2025

அஸ்ஸலாமு அலைக்கும்!!

அல்-பலாஹ் பழைய மாணவர் சங்கம் எதிர்வரும் ஜனவரி மாதம் நடாத்த திட்டமிட்டிருக்கும் பழைய மாணவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுத் தொடர் குறித்த அறிவுறுத்தல்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளன.

குறித்த அறிவுறுத்தல்களை சரிவர பின்பற்றி கிரிக்கெட் சுற்றுத் தொடரினை சிறப்பாக நடாத்த எமக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் அணிகளுக்கான சீருடைகளை வடிவமைக்கும் போது அல்-பலாஹ் பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோகபூர்வ இலச்சினையினை சீருடையின் வலதுபுறம் பொறிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

கிரிக்கெட் சுற்றுத்தொடருக்கான விண்னப்பபடிவங்களை 300 ரூபா கொடுத்து பின்வரும் Communication களில் எதிர்வரும் 28ம் திகதி முதல் பெற்றுக் கொள்ள முடியும்.

•Deen Communication - Near the Poruthota Grand Mosque
•Afix Book Shop - Near the Al-Falah College
•Jumairah Net Cafe - Poruthota Junction
•Aaysha Book Shop Periyathodam

விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து எதிர்வரும் டிசம்பர் 20ம் திகதிக்கு முன்னர் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Mr. Afras - 0771002002
Mr. Minhaj - 0756122630
Mr. Riswan - 0760504455

"பழைய நண்பர்கள், புதிய நினைவுகள் மீண்டும் ஒன்றாக விளையாட - "AL-Falah Batch Wise Cricket Festival Season-2"

-விளையாட்டுக் குழு
அல்-பலாஹ் பழைய மாணவர் சங்கம்.

18/11/2025

பலஹத்துறை வாழ் மக்களே!!
அல்-பலாஹ் கல்லூரியின் இட நெருக்கடி காரணமாக "அல்-பலாஹ் பெண்கள் கல்லூரி" ஒன்றினை உருவாக்கும் நோக்கில் அல் பலாஹ் பழைய மாணவர் சங்கம் பல்வேறு வழிகளில் நிதி திரட்டல் வேலைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை நீங்கள் யாவரும் அறிவீர்கள்!!

அதன் ஓர் அங்கமாக அல் பலாஹ் பழைய மாணவர் சங்கம் ஊர் முழுவதும் உண்டியல்களை விநியோகித்துள்ளது. பலஹத்துறை வாழ் மக்கள் அனைவரும் இந்த வேலைத்திட்டத்தில் பங்குபெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வீடு வீடாக சென்று நாம் உண்டியல்களை விநியோகித்தோம்.
அதன் பிரகாரம் அந்த உண்டியல்களை மீள பெறுவதற்கான காலம் நெருங்கி வருவதனை ஊர் மக்களாகிய உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

இன்றைய தினம் முதல் குறித்த உண்டியல்களை மீள பெறுவதற்காக எமது பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உங்கள் வீடுகளை நோக்கி வருகை தரவுள்ளனர்.

ஆகவே அல்-பலாஹ் பெண்கள் கல்லூரியின் காணிக் கொள்வனவுக்கான உங்களது பங்களிப்பினை குறித்த உண்டியல்கள் மூலமாக எம்மிடம் கையளிக்க தயாராகுமாறு கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் உண்டியல்களின் மூலம் எமக்கு ஒப்படைக்கும் ஒவ்வொரு ரூபாவும் நாளை மறுமையில் உங்களுக்கு பயனளிக்கும்.

“நிலையான தர்மத்தின் ஊடாக நிரந்தர நன்மைகளை பெற்றுக் கொள்ள பங்களிப்பு செய்வோம்"

17/11/2025

அல்-பலாஹ் கல்லூரிக்கும் சிலாபம் நஸ்ரியா கல்லூரிக்கும் இடையில் சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி!!

அல்-பலாஹ் கல்லூரியின் 16 வயதிற்கு கீழான உதைபந்தாட்ட அணி அகில இலங்கை ரீதியிலான போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை அல்-பலாஹ் உதைபந்தாட்ட ரசிகர்கள் அறிந்த விடயமே. இந்நிலையில் எமது அல்-பலாஹ் கல்லூரியின் 16 வயதிற்கு கீழான உதைபந்தாட்ட அணி சிலாபம் நஸ்ரியா கல்லூரி அணியுடனான சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டியொன்றில் பங்கேற்க உள்ளது.

எதிர்வரும் 19ம் திகதி அல்-பலாஹ் கல்லூரி மைதானத்தில் மாலை 3.15 மணியளவில் நடைபெறவுள்ள குறித்த போட்டி நிகழ்ச்சியினை கண்டுகளிக்க வருகை தருமாறு அல்-பலாஹ்வின் உதைபந்தாட்ட ரசிகர்களை அன்புடன் அழைக்கிறோம்.

- விளையாட்டுக் குழு
அல்-பலாஹ் பழைய
மாணவர் சங்கம்.

14/11/2025

அல் பலாஹ் பழைய மாணவர் சங்கம் வழங்கும் பழைய மாணவர்களுக்கான “Batch Wise Cricket Festival Season 2”

அல்-பலாஹ் பழைய மாணவர் சங்கம் வருடாந்தம் நடாத்தும் அல்-பலாஹ்வின் பழைய மாணவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுத்தொடர் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.

கடந்த முறை போன்றே இம்முறையும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஜனவரி 15,16,17,18 ஆகிய திகதிகளில் அல்-பலாஹ் கல்லூரி மைதானத்தில் வெகு விமர்சையாக குறித்த சுற்றுத் தொடரினை நடாத்த அல்-பலாஹ் பழைய மாணவர் சங்கம் திட்டமிட்டுள்ளது.

எனவே அல்-பலாஹ் பழைய மாணவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுத் தொடரில் பங்கேற்க தயாராவோம்!! பாடசாலை கால உங்கள் நண்பர்களுடன் ஒன்றாக களமிறங்க தயாராகுங்கள்!! வெற்றிக் கிண்ணங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன!!

“பழைய நண்பர்கள், புதிய நினைவுகள் – மீண்டும் ஒன்றாக விளையாட “AL-Falah Batch Wise Cricket Festival Season 2”

10/11/2025

அஸ்ஸலாமு அலைக்கும்!!

ஒரு மாணவனின் எதிர்காலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் உயர்தர பரீட்சைகள் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.

அல்-பலாஹ் கல்லூரியில் இருந்து உயர்தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவ மாணவியர் சிறப்பாக பரீட்சைக்கு தோற்றி ஊருக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்க்கும் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அல்-பலாஹ் பழைய மாணவர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Photos from NG AL Falah OBA's post 07/11/2025

அஸ்ஸலாமு அலைக்கும்!!

அல்-பலாஹ் கல்லூரியின் 16 வயதிற்கு கீழான உதைபந்தாட்ட அணி தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு!!!

மினுவங்கொடை-கம்பஹா பிரிவில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டிகளில் வெற்றியீட்டியதன் காரணமாக அல்-பலாஹ் கல்லூரியின் 16வயதிற்கு கீழான உதைபந்தாட்ட அணி தேசிய மட்ட உதைபந்தாட்ட சாம்பியன் சுற்றுத் தொடருக்கு தெரிவாகியுள்ளது.

குறித்த அணியினை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் குறித்த அணியினருக்கும் அல்-பலாஹ் பழைய மாணவர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

அல்-பலாஹ் பழைய மாணவர் சங்கத்தின் விளையாட்டுக் குழுவின் பூரண ஒத்துழைப்புடன் பாடசாலை விளையாட்டுக் குழுவும் மாணவர்களும் இணைந்து செயற்பட்டதன் விளைவே எமது அல்-பலாஹ் கல்லூரி அண்மைக்காலமாக விளையாட்டுத் துறையில் தேசிய மட்டத்தில் பெற்றுக் கொள்ளும் சாதனைகளாகும்!!

எனவே எமது அல்-பலாஹ் கல்லூரி விளையாட்டுத்துறையில் மேலும் பல்வேறு சாதனைகளை புரிய கல்லூரியின் சகல பழைய மாணவர்களையும் எம்மோடு கை கோர்க்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.


06/11/2025

அகில இலங்கை ரீதியிலான இஸ்லாமிய கலாசார போட்டிகளில் மாகாண ரீதியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இன்று கொழும்பு எல்பின்ஸ்டன் மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் அறிவுக்களஞ்சிய போட்டி நிகழ்ச்சியில் மேல்மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற அல்-பலாஹ் கல்லூரி மாணவர்களான M.R.M Zaidh, M.K.F Ilma, M.N.F Aaysha, M.L.F Mushfira M.A.F Halfa ஆகியோருக்கு மத மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி வைத்தார்.

கஸீதா போட்டி நிகழ்ச்சியில் மாகாண மட்டத்தில் முதல் இடம்பெற்ற அல்-பலாஹ் கல்லூரி மாணவன் M.A. Abrar மற்றும் அரபு எழுத்தணி கலை போட்டி நிகழ்ச்சியில் மாகாண ரீதியில் 2ம் இடம் பெற்ற அல்-பலாஹ் கல்லூரி மாணவி F. Zainab ஆகியோருக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த மாணவர்களுக்கும் அவர்களை பயிற்றுவித்த ஆசரியர்களுக்கும் பழைய மாணவர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Photos from NG AL Falah OBA's post 03/11/2025

அஸ்ஸலாமு அலைக்கும்!!

அல்-பலாஹ் பழைய மாணவர் சங்கம் தரம் 09,10 களில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்திருக்கும் விஷேட செயற்றிட்டமான "உதயம் வகுப்புகள்" கடந்த 1ம் திகதி முதல் ஆரம்பாகின.

தொடர்ந்து ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் இரவு நேர வகுப்புகளாக குறித்த வகுப்புகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த செயற்றிட்டத்தில் பழைய மாணவர் சங்கத்திற்கு பக்கபலமாக செயற்படுகின்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் அல்-பலாஹ்வின் பழைய மாணவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்!!

01/11/2025

அஸ்ஸலாமு அலைக்கும்!!

பாடசாலைகளுக்கு இடையிலான இஸ்லாமிய தின போட்டிகளின் அகில இலங்கை ரீதியிலான அறிவுக்களஞ்சிய போட்டி நிகழ்ச்சியில் அல்-பலாஹ்விற்கு இரண்டாம் இடம்!!

கொழும்பு சாஹிரா கல்லூரியில் இன்று இடம்பெற்ற தேசிய ரீதியிலான இஸ்லாமிய தின போட்டிகளில் அறிவுக்களஞ்சிய போட்டி நிகழ்ச்சியில் போருதோட்டை அல்-பலாஹ் கல்லூரி இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

குறித்த போட்டி நிகழ்ச்சியில் அல்-பலாஹ் சார்பில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு ஊர் மக்கள் சார்பாகவும் பாடசாலை சார்பாகவும் அன்பான வாழ்த்துக்கள்!!!

01/11/2025

அஸ்ஸலாமு அலைக்கும்!!

பாடசாலைகளுக்கு இடையிலான இஸ்லாமிய தின போட்டிகளின் அகில இலங்கை ரீதியிலான போட்டிகள் இன்றைய தினம் கொழும்பு சாஹிரா கல்லூரியில் நடைபெறுகிறது.

இம்முறை அல்-பலாஹ் கல்லூரியில் இருந்து நீர்கொழும்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கிடையிலான இஸ்லாமிய தின போட்டிகளில் வெற்றி பெற்று மாகாண மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளுக்கு தெரிவாகி அங்கும் தமது திறமைகளை வெளிக்காட்டி வெற்றி பெற்று தற்போது அகில இலங்கை ரீதியிலான இஸ்லாமிய தின போட்டிகளுக்கு தெரிவாகிய மாணவர்களே இவர்கள்!!

இவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் குறித்த மாணவர்களுக்கும் அல்-பலாஹ் பழைய மாணவர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

31/10/2025

அஸ்ஸலாமு அலைக்கும்!!

அல்-பலாஹ் பழைய மாணவர் சங்கம் கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் சாதாரண தர பரீட்சையில் பெறுபேறுகளை அதிகரிக்கும் நோக்கில் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான விஷேட செயற்றிட்டம் ஒன்றினை பழைய மாணவர் சங்கம் நடைமுறைபடுத்தவுள்ளது.

"உதயம் வகுப்புகள்" எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி முதல் குறித்த வகுப்புகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Want your school to be the top-listed School/college in Negombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Negombo