14/07/2026
🏆 மாகாண மட்டத்தில் முதலிடம்: எமது பாடசாலைக்கு மற்றுமொரு வரலாற்றுச் சாதனை! 🏆
அகில இலங்கை தமிழ்மொழித் தின போட்டிகள் - 2026 இல் எமது பாடசாலை மாணவி மாகாண மட்டத்தில் முதலாமிடம் பெற்று பாடசாலைக்கு பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளார்.
📘 போட்டிப் பிரிவு: கட்டுரை வரைதல் (பிரிவு 4)
🥇 வெற்றி விபரம்: மாகாண மட்டம் - முதலாமிடம் (1st Place - Provincial Level)
✨ சாதனையாளர்: செல்வி M.T.F. Zahra
மாகாண மட்டத்திலான கடும் போட்டிக்கு மத்தியில், தனது தனித்துவமான எழுத்தாற்றலால் முதலிடத்தைச் சுவீகரித்து, எமது மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த சாதனைச் செல்விக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்! 💐🎉
இந்த வெற்றியின் பின்னணியில் இருந்து மாணவியை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும், ஊக்கமளித்த பெற்றோருக்கும் எமது நன்றிகள்.
மாணவி Zahra தேசிய மட்டப் போட்டியிலும் இதே போன்றதொரு வரலாற்றுச் சாதனையைப் படைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு, எமது பாடசாலைச் சமூகம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்! 👍🌟