CP/GP/Kathiresan Central College

CP/GP/Kathiresan Central College 1 AB (Super)

கதிரேசன் எனும் கல்விக்கோயில்

போர்ட் ராஜரத்தினத்தின் தலைமையில் இயங்கிய வித்தியா விருத்திச் சங்கத்தினர் நாவலப்பிட்டியில் சைவசமய அறநெறிப் பாடசாலை ஒன்றை அமைக்கவும் அங்கு முன்னோடியாக இந்து வாலிப சங்கத்தை தோற்றுவிப்பதற்கும் முயற்சியெடுத்தனர். அவர்கள் நாவலப்பிட்டி கதிரேசன் கோயிலுடன் சம்பந்தப்பட்ட செட்டியார் சமூகம் மற்றும் பல பிரமுகர்களை சந்தித்து செயற்குழு ஒன்றை அமைத்தனர். இச்செயற்குழுவான இந்து வாலிப சங்கத்தின் செயலாளராக நாவலப்பிட்டி கிறீன்வூட் தோட்ட உரிமையாளர் கனக சபை செயற்பட்டார். அவரும் பிறவுன் அன் கம்பனி உத்தியோகத்தராக இருந்த க.சம்பந்தன் வர்த்தகரான லட்சுமிமணன் செட்டியார் ஆகியோர் இணைந்து பாடசாலை நிறுவுவதற்கு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சி.ந.சி.இராமன் செட்டியார் என்ற பெரியார் ரூ.1000 கொடுத்து அந்நிலத்தை வாங்கி இந்து வாலிப சங்கத்திற்கு கையளித்தார். சைவ பெருமக்களின் மனதில் வாழ்க்கையில் ஒளிக்கதிர்களை பதிக்க 1924 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 30 ஆம் திகதி கதிரேசன் வித்தியாசாலை இந்திய அரசாங்க பிரதிநிதி க.இரங்கநாதனால் L.C.S. திறந்து வைக்கப்பட்டது.
இப்பாடசாலை உருவாக்கத்தில் பங்களிப்புச் செய்தவர்களில் நினைவு கூறத்தக்கவர்கள். கரு.மு.சி.ஞானசம்பந்தன், சி.ந.சி இராமன் செட்டியார், ந.சி.சி. முத்தையா செட்டியார், எம்.சந்தானம், சி.கனகசபை, டி.ஏ.டி.பெரியசாமிப்பிள்ளை, சி.ந.சி.லெட்சுமணன் செட்டியார், பெ.கோவிந்தசாமிப்பிள்ளை, வீ.எம்.பெரிய கருப்பன், ஜே.எம்.பொன்னையா, டி.சிவகுருநாதர்,சி.வேலாயுதம் சேர்.சம்பந்தன், சே.சோமசுந்தரம், ஜே.எம்.பொன்னையா ஆகியோராவார். சேர்.சம்பந்தன் முகாமையாளராகவும், ஆழ்வாப்பிள்ளையெனும் பால பண்டிதர் தலைமை ஆசிரியராகவும் அமர்ந்தனர். ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய அக்காலத்தில் அரசாங்க சம்பளத்திலும் மேலதிகமாக 25/= கொடுத்தே அவரை நியமனம் செய்தனர்.
இராஜகுலேந்திரன் கற்பிக்கும் ஆசிரியர்கள் மகிழ்வான மனநிலையில் இருக்கவேண்டும் என்பதை மனதில் கொண்டு வேதனத்தை தமது சொந்த பணத்தில் கொடுத்து விட்டு ஆண்டு இறுதியில் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொண்டார். கல்லூரியின் செயற்பாடுகள் சிறப்பாக அமைந்தமையினால் மாணவர் தொகையும் 1000ஐ எட்டிப்பிடித்தது. ஆங்கிலப் பாடசாலையில் எஸ்.எஸ்.சி. வகுப்பும் ஆரம்பிக்கப்பட்டது. கல்கி பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் உதவியுடன் இசை கச்சேரிகள் நடாத்திய நிதியைக் கொண்டு பவ்வாகமப் பகுதியில் ஒரு கட்டிடம் உருவாக்கப்பட்டது.
இவ்வாறான படிப்படியான வளர்ச்சியில், 1953இல் உயிரியல் ஆய்வு கூடமும், 1954-1955 இல் இரசாயண பௌதீக ஆய்வு கூடங்களும் அமைக்கப்பெற்றன. அறிவியல் பகுதிக்குத் தேவையான உபகரணங்கள், கருவிகள், இரசாயன பொருட்கள் என்பவற்றை முகாமையாளர் அதிபர், கல்விச்சபை அங்கத்தவர் முயற்சியால் நேரடியாக இங்கிலாந்தில் இருந்தே வரவழைத்தனர். பின்னர் முகாமையாளர் ஆசிரியர்களை கொழும்புக்கு அழைத்து சென்று மேலதிக உபகரணங்கள், வாயு விநியோக முறை, உப்புகள் என்பவற்றை ரூ.10000 வாங்கினார். இத்தகைய உபகரணங்கள் நீர் விநியோகங்கள், மின்சாரம் என்பவை இல்லாமையால் செயற்படாதிருந்ததுடன் விஞ்ஞான கூடமும் செயற்படாதிருந்தது. ஆசிரியர்கள் கற்பித்தலிலோ மாணவர்கள் கற்கும் ஆர்வத்தையோ பெரும் அளவு பாதிக்கவில்லை.
அறிவியல் மன்றங்கள், சுற்றுலாக்கள், விவாதங்கள், போட்டிகள் நடைபெற்றன. இத்தகைய செயற்பாடுகள் மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளுக்கு காரணமாய் அமைந்தன. நகரப்பாடசாலையில் பின்பகுதியில் மண்டபம் ஒன்று இந்து வாலிப சங்கத்தால் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு இடவசதி ஏற்பட்டது. 1960 ஆம் ஆண்டு விஞ்ஞான ஆய்வு கூடம் இசை கச்சேரியால் அமைக்கப்பட்ட (இடத்திற்கு) பாடசாலைகளுக்கு மாற்றப்பட்டும், ஆறாம் தரம் முதல் க.பொ.த (உயர்தரம்) வரை நகர்பாடசாலையிலும் இயங்கின.
1960களில் கதிரேசன் கல்லூரி தனது வெள்ளிவிழாவை கொண்டாடியது. அவ்விழாவில் சிறப்பம்சமாக மலரும் வெளியிடப்பட்டது. அம்மலரும் கதிரேசன் வளர்ச்சிக்கு சான்று பகிர்கின்றது. மலைப்பகுதி பாடசாலையின் மிகுதிப் பகுதியையும் கட்டிமுடிக்க அக்காலத்தில் சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜிகணேசன் உதவியைப் பெற கல்விச் சபை தீர்மானித்து சிவாஜிகணேசனும் நாடகம் நடத்தி நிதி திரட்டித் தருவதாக ஒப்புக்கொண்டு அதற்கான ஏற்பாடுகள் கூடிவருகையில் 1962 ஆம் ஆண்டு அரசாங்கப் பாடசாலைகளை பொறுப்பேற்றது.
இதன் விளைவாக ஒரு அதிபரின் கீழ் இறங்கிய கதிரேசன் கல்லூரி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. நகர் பகுதியில் உள்ள பாடசாலை கனிஷ்ட வித்தியாலயமாகவும் மலைப்பகுதியில் இயங்கிய பாடசாலை குமார மகாவித்தியாலயம் என தனி ஆண்கள் பாடசாலையாக மாற்றப்பட்டது.
அதிபர் பதவியை ஏற்றிருந்த பெருந்தகைகள்
1) க.சம்பந்தர் - முகாமையாளர் 1924-1929
2) க.சுப்பிரமணியம் - முகாமையாளர் 1929-1939
3) ஜே.ஜி.ராஜகுலேந்திரன் (B.A. Stare Council Member) - அதிபர் 1939-1948
4) வி.இராமநாதன் (B.A.) - அதிபர் 1948-1951
5) க.சபாஆனந்தன் (B.A.Lirt) - அதிபர் 1951-1963
6) ளு.ஆனந்தகுமாரசுவாமி (B.A.Dip–in—Edu) அதிபர் 1964-1970
7) அ.இராஜகோபால் (B.A.Dip–in—Edu) அதிபர் 1970-1972
8) ளு.இராஜா - அதிபர் 1972-1973, (9)
9) ளு.ஏ.ஆறுமுகம் (B.A.Dip in Edu) அதிபர் 1973-1974
10) வு.ஏ.மாரிமுத்து (M.A..) அதிபர் 1974-1975
11) ளு.இராஜு அதிபர் (Eng Trained) 1975 -1984
12) ளு.ஏ.ஆறுமுகம் (B.A.Honest. M.A) அதிபர் 1975-1984
13) ளு.ஆ.யு.மூர்த்தி (B.A) அதிபர் 1984-1985
14) திரு.எஸ்.செல்வக்குமார் (B.A.Dip in Edu) அதிபர் 1985-1990
15) திரு.வு.பெரியசாமி B.A. 1990-1991
16) திரு.P.பெரியசாமி (B.A.Dip in Edu) 1991-1994
17) மு.கணபதிபிள்ளை (B.A.Dip in Edu) 1996-1994
18) ளு.மு.எழில்வேந்தன் (B.A. Hons) 1997
19) கே.கோபாலகிருஷ்ணன் 2005-2006
20) ராஜேந்திரன் 2007-2016
21) நாகராஜ் 2016
கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயம்
22) நா.முத்தையா 1963
23) நா.நடேசன் 1976
24) ளு.நடேசன் 1981
25) க.சுப்பிரமணியம் 1986
26) சே.சுகுமாரி 2002

20/01/2020

வருடாந்த பொதுக் கூட்டமும் ஒன்றுகூடலும்

17/01/2020

தலை­ந­கரில் கள­மி­றங்கும் நாவ­லப்­பிட்டி கதி­ரேசன்

BMI Check and vision checkup held at our school
29/05/2018

BMI Check and vision checkup held at our school

21/05/2018

மத்திய மாகாண தமிழ்தின போட்டிகளில் கதிரேசன் கல்லூரி இதுவரை கிடைக்கப்பெற்ற போட்டிமுடிவுகளின்படி இரண்டு முதலிடங்களை பெற்று தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவாகி சாதனைபடைத்துள்ளது.
Debate 1st Place
Individual Dance 1st Place
Group Song 2nd Place
Waiting for Drama Results

today we celebrated tamil sinhala new year at our school..
11/05/2018

today we celebrated tamil sinhala new year at our school..

வாழ்த்துக்கள்தமிழ்த்தின போட்டிகள் - 2018வலயமட்டம் (கம்பளை வலயம்)நாடகம் முதலாம் இடம்விவாதம் முதலாம் இடம்நாட்டார் பாடல் இர...
06/05/2018

வாழ்த்துக்கள்

தமிழ்த்தின போட்டிகள் - 2018
வலயமட்டம் (கம்பளை வலயம்)
நாடகம் முதலாம் இடம்
விவாதம் முதலாம் இடம்
நாட்டார் பாடல் இரண்டாம் இடம்
ஆசிரியர்கள் ரஜீவ், செந்தில்குமார், ஏனைய ஆசிரியர்கள் மற்றும் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
- அதிபர்

05/05/2017

நாவல் நகர் / கதிரேசன் மத்திய கல்லூரி
பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின்
வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும்

திகதி : 06.05.2017
நேரம் : மாலை 5.00 மணி
இடம் : சஸக்காவா மண்டபம் - கொழும்பு 03
(Cinnamon Grand Hotel க்கு முன்பாக)
கட்டணம் : 1500/-

தொடர்புகளுக்கு :

ம.நாகபாலேந்திரன் - 0773 166 803
க.தயாளகாந்தன் - 0777 573 903
V.தேவராஜு : 0777 311 669
P.குமரேசன் : 0777 485 312
V.சிறிதரன் : 0773 439 435
D.கலைச்செல்வன் : 0773 535 537

Address

Nawalapitiya

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Telephone

+94 54 2222429

Alerts

Be the first to know and let us send you an email when CP/GP/Kathiresan Central College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to CP/GP/Kathiresan Central College:

Shortcuts

Share

Category