02. 11.2025
*தேசிய மட்ட சாதனை*
==================
இன்று நடைபெற்ற தேசிய மட்ட இஸ்லாமிய கலாச்சார போட்டியின் அறபுத் தமிழ் இலக்கிய நிகழ்ச்சியில் கிரி/நூராணியா முஸ்லிம் வித்தியாலய மாணவி பங்கு பற்றி இரண்டாம் இடத்தை பெற்று பாடசாலையின் வரலாற்று சாதனையை ஈட்டியுள்ளார்.
வலயம், மாகாணம் ஆகிய மட்டங்களில் முதலிடம் பெற்று தேசிய மட்டம் வரை சென்று எமது பாடசாலை சார்பாக போட்டியில் பங்கு பற்றி எமது பாடசாலையின் பெயரை தேசிய மட்டத்தில் தடம் பதித்த M.H.யும்னா என்ற மாணவிக்கு எமது பாடசாலை மற்றும் நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு
இம்மாணவியை திறம்பட வழிநடாத்திய கலாச்சார குழுவின் தலைவர் உட்பட ஏனைய ஆசிரியர்களுக்கும் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
*பாடசாலை நிர்வாகம்*
Giri / Nooraniya Muslim Vidyalaya
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Giri / Nooraniya Muslim Vidyalaya, School, Nugagahagedara, Pahamune, Narammala.
04/09/2025
**வரலாற்றுச் சாதனை**
இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் 6 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இவ் வெற்றிக்காக உழைத்த அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவிகள் சங்கம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
**Nooraniya Media**
13/08/2025
எமது பாடசாலையில் இணைபாடவிதான செயற்பாடுகளை மேம்படுத்தும் வேலைத் திட்டங்களில் ஒன்றான St John Ambulance முதலுதவிப் படையொன்றை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட பயிற்சி நெறி கடந்த 2025.08.11 மற்றும் 2025.08.12 ஆகிய இரண்டு தினங்களிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந் நிகழ்ச்சியை சிறப்பாக நடாத்தி முடிக்க உதவியாக இருந்த St John Ambulance படையின் அங்கத்தவர்களான Mr.Randika, Mr.Tharaka மற்றும் Miss. Anjalika, ஆகியோருக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் A.L. மம்மனிபா (Sadakathulla Sir) அவர்களுக்கும், இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த எமது பாடசாலையின் இணைப்பாடவிதான செயற்பாட்டுக் குழு மற்றும் நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
10/07/2025
2025.07.09 நேற்று எமது பாடசாலையில் Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் "Clean Steps Safe Space" வேலைத்திட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
27/06/2025
2025.06.24,25,26 ஆம் திகதிகளில் அலவ்வ ராஹுல தேசிய பாடசாலை மைதானத்தில் இடம் பெற்ற கோட்ட மட்டப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் எமது பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றி ஒரு முதலாம் இடத்தையும், இரண்டு இரண்டாம் இடங்களையும் பெற்று வலைய மட்டப் போட்டிகளுக்குத் தெறிவாகியுள்ளனர்.
கடந்த வருடத்திலிருந்து எமது பாடசாலை மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அம் மாணவர்களை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் S.L.M. Riswan ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
.நிர்வாகம்..
Under 16 Boys - Discus Throw - 1st Place
Shot put. - 2nd Place
Under 12 Boys - Relay - 2nd Place
02/02/2025
கடந்த வியாழக்கிழமை தரம் ஒன்றிற்கான புதிய மாணவர்களளை சேர்த்துக் கொள்ளும் வைபவம் மிகவும் சிறப்பாக எமது பாடசாலையில் நடைபெற்றது.
23/01/2025
சென்ற புதன்கிழமை கிரி / நூரானியா முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் கிரி / சுலைமானியா முஸ்லிம் மகா வித்தியாலயமும் இணைந்து AI செயற்கை நுண்ணறிவை எவ்வாறு ஆசிரியர்கள் கற்பித்தலில் பயன்படுத்தலாம் என்ற அடிப்படையில் ஆசிரியர் வான்மை விருத்தி வழிகாட்டல் கருத்தரங்கு மிகவும் சிறப்பாக எமது பாடசாலையில் நடைபெற்று முடிந்தது.
இதனை சிறப்பாக நடாத்ததித் தந்த அஷ்ஷேயிக் புஹாரி நலீமி அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
21/11/2024
இன்று 2024.11.21 எமது பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "மாபெரும் சிறுவர் சந்தை" மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
அல்ஹம்துலில்லாஹ்..
**Nooraniya Media**
20/11/2024
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்..
2024.11.20 இன்றைய தினம் எமது பாடசாலையில் NOORANIYA Old Girls Association ன் முழு அனுசரணை யின் கீழ் ...
எமது மாணவர்களுக்கு ...*முதலுதவி சிகிச்சை* பற்றிய அடிப்படை செயற்பாட்டு விளக்கம் நடைபெற்றது...
இதனை திறம்பட நடாத்திக் கொடுத்த அதி திறமை ஆசிரியர்.... சதக்கத்துல்லா ஆசிரியர் அவர்களுக்கும்.... ஏற்பாடு செய்த Nooraniya பழைய மாணவிகள் சங்கத்தினருக்கும் பாடசாலை சார்பாக நன்றிகளைத் தெறிவித்துக் கொள்கிறோம்.
**Nooraniya Media**
20/11/2024
03/10/2024
அஸ்ஸலாமு அலைக்கும்
இம்முறையும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கோட்ட மட்டத்தில் முதலாம் இடம், வலயமட்டத்தில் இரண்டாம் இடம்.
அல்ஹம்துலில்லாஹ்
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Culinary Team
Attire
Website
Address
Nugagahagedara, Pahamune
Narammala
60112