AL-Hilal Central College - Official

AL-Hilal Central College - Official about school

78 வது தேசிய சுதந்திர தின நிகழ்வு-தி/மூ/அல்-ஹிலால் மத்திய கல்லூரி மேற்படி நிகழ்வு இன்று முற்பகல் 8 30 மணியளவில் அதிபர் S...
04/02/2026

78 வது தேசிய சுதந்திர தின நிகழ்வு-தி/மூ/அல்-ஹிலால் மத்திய கல்லூரி

மேற்படி நிகழ்வு இன்று முற்பகல் 8 30 மணியளவில் அதிபர் SI.Suhood(sir) தலைமையில் பாடசாலை முன்றலில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆசிரியர்களும் மாணவர்களும் உற்சாகமான முறையில் கலந்து கொண்டனர். பிரதம அதிதியாக அல்ஹாஜ் கலாநிதி MM.Janah (Nadhwi) அவர்கள் கலந்து சிறப்பித்து விஷேட
உரையென்றையும் ஆற்றினார்.

இந் நிகழ்வின் போது அதிதிகளால் மரக்கன்றுகளும் நடப்பட்டமை குறிப்பிட்ட தக்கது. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்,
அதிபர்.

புகைப்படம்,
HM.Azam(sir)

பிரியாவிடை நிகழ்வு - தி/மூ/அல்-ஹிலால் மத்திய கல்லூரி (2026/02/03)எமது கல்லூரியில் கடமையாற்றி, பிற பாடசாலைகளுக்கு இடமாற்ற...
03/02/2026

பிரியாவிடை நிகழ்வு - தி/மூ/அல்-ஹிலால் மத்திய கல்லூரி (2026/02/03)

எமது கல்லூரியில் கடமையாற்றி, பிற பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரிய ஆசிரியைகளுக்கான பிரியாவிடை நிகழ்வும், மதியபோசன விருந்துபசாரமும் இன்று (03) கல்லூரி முதல்வர் SI.சுஹுட் (sir) தலைமையில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

இதன் போது எமது பாடசாலையில் இருந்து இடமாற்றம் பெற்றுச்சென்ற 11ஆசிரிய ஆசிரியைகள் கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் SDEC மற்றும் OBA செயலாளர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிட்ட தக்கது.

தகவல்,
அதிபர்.

புகைப்படம்,
HM.Azam(sir)

வகுப்பறை பெயர் பலகை அன்பளிப்பு -2026/01/26தி/மூ/அல்ஹிலால் மத்திய கல்லூரியின்   தேவை கருதி கல்லூரி முதல்வர் S.I.Suhood (S...
26/01/2026

வகுப்பறை பெயர் பலகை அன்பளிப்பு -2026/01/26

தி/மூ/அல்ஹிலால் மத்திய கல்லூரியின் தேவை கருதி கல்லூரி முதல்வர் S.I.Suhood (SLPS) அவர்களின் வேண்டுதலின் அடிப்படையில் எமது பாடசாலையின் பழைய மாணவன் Mr . Idroos Mohamed Haarish
(MA in TESl,BA, Diploma Sales &marketing management and Division iii Cricketer) அவர்கள் எமது கல்லூரியில் காணப்படுகின்ற வகுப்பறைகளுக்கான பெயர்ப்பலகைகளை தனது சொந்த நிதியுதவியுடன் வடிவமைத்துத் தந்துள்ளார்.

குறித்த வகுப்பறைகளுக்கான பெயர்ப்பலகைகளை இன்று(26.01.2026) கல்லூரிக்கு வருகை தந்து கல்லூரி முதல்வரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது கல்லூரிக்கு வருகை தந்து எமது தேவையறிந்து நிறைவேற்றித் தந்த இவரை எமது கல்லூரி சமூகம் நன்றியுடன் நினைவுகூர்வதோடு அவரின் இத்தகைய பணிகளுக்கான நற்கூலியை வல்ல இறைவன் வழங்கியருள வேண்டி பிரார்த்திக்கின்றோம்.

தகவல்,
அதிபர்.

Photography,
HM.Azam sir

தரம் 6 புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 2026/01/21 இன்று.     தி/மூ/அல்ஹிலால் மத்திய கல்லூரியில்  இந் நிகழ்வானது வெக...
21/01/2026

தரம் 6 புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 2026/01/21

இன்று. தி/மூ/அல்ஹிலால் மத்திய கல்லூரியில் இந் நிகழ்வானது வெகு விமர்சையாக இடம் பெற்றது.

கல்லூரியின் முதல்வர்
எஸ்.ஐ. சுஹூட்(sir) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மூதூர் கோட்டக்கல்வி பணிப்பாளரும் எமது கல்லூரியின் EPSI இணைப்பாளருமான
எம்.எஸ்.எம் றமீம் (sir)கலந்து சிறப்பித்ததோடு பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் MMA.அறூஸ்(former chairman) மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் ஜே.எம். இஹ்சான் உட்பட கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் பிள்ளைகளின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வை ஒழுங்கு செய்ய உதவிய அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்,
அதிபர்
தி/மூ/அல் ஹிலால் ம.க.

புகைப்படங்கள்,
HM.அஸாம்(sir)

கற்றல் உபகரணங்கள் வழங்கல் - 2026வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது இவ்வாரம் ...
09/01/2026

கற்றல் உபகரணங்கள் வழங்கல் - 2026

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது இவ்வாரம் தி/மூ/அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் அதிபர் Mr.SI.Suhood sir தலைமையில் நடைபெற்றது.

Global Ceylon Seafood (Pvt) limited நிறுவன தலைவர் Mr.MA.Raheem Haji அவர்களின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் ஒரு தொகுதியினருக்கு கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளிக்க பட்டன.

ஏற்பாடுகளை மேற்கொண்ட நிறுவன தலைவருக்கும் மற்றும் அதன் நிருவாக உறுப்பினர்களுக்கும் பாடசாலைக்கு கிடைக்க செய்த பிரதி அதிபர் Mr.AJM.Ramees sir அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்,
அதிபர்

போதையில் இருந்து இளைஞர் சமூகத்தையும் நாட்டையும் பாதுகாப்போம். (2025/12/26)மாண்புமிகு கௌரவ ஜனாதிபதி அவர்களின் மேற்படி வேல...
26/12/2025

போதையில் இருந்து இளைஞர் சமூகத்தையும் நாட்டையும் பாதுகாப்போம். (2025/12/26)

மாண்புமிகு கௌரவ ஜனாதிபதி அவர்களின் மேற்படி வேலைத்திட்டம் தி/மூ/அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் அதிபர் Mr SI.Suhood(sir) தலைமையில் இன்று நடைபெற்றது.
சமூர்த்தி முகாமையாளர் Mr MSM.Muhees(sir) அவர்களின் ஒழுங்கமைப்பில் சமூர்த்தி சமுதாய வங்கி மற்றும் சமுதாய அடிப்படை அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந் நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

சிறப்பு அதிதிகளாக மூதூர் வலய கல்வி பணிப்பாளர் Mr.AL.Siraj(sir) அவர்களும் மற்றும் மூதூர் கோட்ட கல்வி பணிப்பாளர் Mr.MSM.Rameem(sir) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

வளவாளராக Mr.AHM.Riyadh(C.O) அவர்களும் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் O/L & A/L மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாகமான முறையில் கலந்து கொண்டனர். சமூர்த்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி சங்க தலைவர்கள் மற்றும் SDEC செயலாளர் Mr.MMA.Aroos (former chairman) மற்றும் Mr.Aadheel அவர்களும் கலந்து கொண்டனர் . எமது பாடசாலையில் ஒழுங்கு செய்த பிரதேச செயலகதத்திற்கும் மற்றும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Photography:- Mr.HM.Azam(sir)
News:- SI.Suhood(principal)

T/Mu/Al-hilal central college உள ஆற்றுகை செயற்பாட்டு வாரம்- 2025 /12/16 தொடக்கம் கல்வி அமைச்சின் உள ஆற்றுகை  வேலைத் திட்...
18/12/2025

T/Mu/Al-hilal central college

உள ஆற்றுகை செயற்பாட்டு வாரம்- 2025 /12/16 தொடக்கம்

கல்வி அமைச்சின் உள ஆற்றுகை வேலைத் திட்டத்தின் கீழ் இயற்கை அனர்தத்தால் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து பிள்ளைகளை விடுவிக்கும் நோக்கில் பல்வேறு உள ஆற்றுப்படுத்துகை
எமது பாடசாலையிலும் நடை பெற்று கொண்டிருக்கிறது.

இதில் அதிபர், பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பிரதேச அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுபவ வளவாளர்கள் பலர் பங்களிப்பு வழங்கினர்.
அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிபர்,
SI.Suhood(sir)

14/12/2025

தி/மூ/அல்-ஹிலால் மத்திய கல்லூரி

சிரமதான வேலைத்திட்ட பங்களிப்பு

கடற் படையினர் ஏற்பாடு
#பிரதேச செயலகம் - ADS மற்றும் Mr.MSM.Siya sir (SH)
#அகில இலங்கை ஜமாத்தே இஸ்லாமிக் நிறுவனம் - Mr.AM.Najah sir (VP)
# பிரதேச சபை- Mr.MM.Aroos SDEC Secerety (முன்னாள்
தவிசாளர்)
# வேலைத்திட்ட ஒழுங்கமைப்பு - Mr.AJM.Ramees sir(DP)
# சம்பூர் கடற் படை பொறுப்பு அதிகாரி ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்

சிரமதான வேலைத்திட்ட நிகழ்வின் போது.......

தகவல்,
அதிபர்.

வெள்ள அனர்த்த சிரமதான வேலைத்திட்டம் - 2025/12/13கல்வி அமைச்சின் பாடசாலைகளை மீளத் திறக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கடற்பட...
13/12/2025

வெள்ள அனர்த்த சிரமதான வேலைத்திட்டம் - 2025/12/13

கல்வி அமைச்சின் பாடசாலைகளை மீளத் திறக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கடற்படையினர் மற்றும் அகில இலங்கை ஜமாத்தே இஸ்லாமிக் நிறுவன தொண்டர்களின் பங்கு பற்றலுடன் அதிபர் SI.Suhood(sir) தலைமையில் பிரதி அதிபர், மற்றும் ஆசிரியர்கள் , ஊழியர்கள் மற்றும் SDEC செயலாளர் MMA.Aroos(முன்னாள் தவிசாளர்) மற்றும் பிரதேச சபை ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மேற்படி மாபெரும் சிரமதான வேலைத்திட்டம் இன்று தி/மூ/அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

Cleaning items ஐ வழங்கிய ZDE office, MOH office , மற்றும் பிரதேச சபை மற்றும் அதன் செயலாளர் உட்பட பங்கு கொண்ட அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளை பாடசாலை சமூகம் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்

தகவல்,
SI.Suhood
(Principal)

FELICITATION CEREMONY
05/11/2025

FELICITATION CEREMONY

தி/மூ/அல்-ஹிலாலின் உலக ஆசிரியர் தின கொண்டாட்டம் 2025.10.08SDEC மற்றும் OBA நிருவாகத்தின் ஏற்பாட்டில்  A/L மாணவர்களின் ஒத...
08/10/2025

தி/மூ/அல்-ஹிலாலின் உலக ஆசிரியர் தின கொண்டாட்டம் 2025.10.08

SDEC மற்றும் OBA நிருவாகத்தின் ஏற்பாட்டில் A/L மாணவர்களின் ஒத்துழைப்புடன் இந் நிகழ்வானது அதிபர் SI.Suhood(sir) தலைமையில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

மேலும் ஆசிரியர்களால் பல்வேறு நிகழ்ச்சிகள் அவையோரை கவரும் வகையில் இடம் பெற்றது. SDEC செயலாளர் Mr.MMA.Aroos(முன்னாள் தவிசாளர்) சிறப்புரையாற்றினார். மற்றும் Mr.Farook Asmi தலைமையில் ஆன 2002 (O/L Batch )பழைய மாணவர்களால் மதியபோசனை விருந்து சிறப்பான முறையிலே ஒழுங்கமைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கபட்டன.

அதிபர் ஆசிரியர்களுக்கு SDEC & OBA நிருவாக உறுப்பினர்களால் அன்பளிப்புகள் வழங்கி கௌரவிக்க பட்டனர். இந்நிகழ்விற்கு கௌரவ அதிதியாக வலய கல்வி பணிப்பாளர் Mr.ALM.Siraj(sir) கலந்து சிறப்பித்தார்.

பிற்பகல் 2pm அளவில் இந் நிகழ்வுகள் யாவும் சிறப்பான முறையில் நிறைவு பெற்றது.

தகவல்,
அதிபர்.

அல் ஹிலால் மத்திய கல்லூரி மாணவன் எம்.எம்.எம். முஸ்பீக் தேசிய மட்டத்தில் சாதனை. கடந்த 21 ஆம் திகதி கொழும்பு கொட்டாஞ்சேனை ...
22/09/2025

அல் ஹிலால் மத்திய கல்லூரி மாணவன் எம்.எம்.எம். முஸ்பீக் தேசிய மட்டத்தில் சாதனை.

கடந்த 21 ஆம் திகதி கொழும்பு கொட்டாஞ்சேனை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழி தின தேசிய மட்ட போட்டியில் எமது கல்லூரி மாணவன் எம்.எம்.எம். முஸ்பீக் குறுநாடக ஆக்கப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தினை பெற்றுள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கும், மூதூர் வலயத்திற்கும், மற்றும் தி/மூ/ அல் ஹிலால் மத்திய கல்லூரிக்கும் பெருமை சேர்த்த மாணவனுக்கும் அதற்கான பயிற்சிகளை வழங்கிய ஆசிரியர்களான எஸ்.ஏ.எம். அஸ்மி,
ஆர். தெளபீக்
பசினா சுக்ரி மற்றும் வகுப்பாசிரியை
நஜீபா அஸ்லம் ஆகியோருக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று (22)காலை கல்லூரியின் முதல்வர் எஸ்.ஐ .சுஹுட் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தகவல்,
அதிபர்

Address

New Jetty Road
Mutur
31200

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 11:30

Telephone

+94262238542

Alerts

Be the first to know and let us send you an email when AL-Hilal Central College - Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category