13/07/2025
இம்முறையும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வில் சாதித்த மட்/மமே/முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயம்
-------------------------------
இம் முறையும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மேசைப்பந்தாட்ட தொடரிலும் வெற்றிவாகை சூடி தங்களது திறமையை மீண்டுமொருமுறை நிரூபித்த மட்/மமே/ முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய மேசைப்பந்தாட்ட அணிகள்.
கிழக்குமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 2025ம் ஆண்டுக்கான மாகாண மட்ட விளையாட்டு நிகழ்வுகள் திருகோணமலையில் நடைபெற்றுவரும் நிலையில் அதன் ஒரு அம்சமான மேசைப்பந்தாட்ட போட்டியானது அனைத்து வயதுப் பிரிவினருக்கும் நேற்றும் இன்றும் ( சனி,ஞாயிறு) இடம்பெற்றிருந்தது.
இவ் மாகாண மட்ட போட்டிகளில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் சார்பாக பங்கு கொண்டிருந்த முனைக்காடு விவேகானந்த மகாவித்தியாலய மேசைப்பந்தாட்ட அணியினர் மீண்டுமொருமுறை தங்களது திறமைகளை நிரூபித்து பல வெற்றிகளை குவித்துள்ளனர்
அந்த வகையில் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு மற்றும் 18 வயதுக்குட்பட்ட ஆண் பிரிவுகளில் சம்பியனாக தெரிவானதுடன் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டது
அத்தோடு 20 வயதுக்குட்பட்டோருக்கான தனிப்பட்ட வீராங்கனைகளுக்கான போட்டியில் M. நிவேதிதா சம்பியனானதுடன் சிறந்த வீராங்கனையாகவும் தெரிவானார் 2024 ம் ஆண்டு அதே வயதுப் பிரிவில் சம்பியனானமை குறிப்பிடத்தக்கது. 18 வயதுப் பிரிவு வீராங்கனையான இவர் திறந்த போட்டிப்பிரிவான 20 வயதுக்குட்பட்ட தனிப்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொண்டு தனது திறமையினை வெளிப்படுத்தினார்.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தனிப்பட்ட போட்டிப்பிரிவில் K. டிபாணுஜன் இரண்டாமிடத்தையும் பா. குகேநிசன் 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர் இவர்களும் 18 வயதுப்பிரிவு வீரர்களாக காணப்படுகின்ற வேளையிலும் திறந்த போட்டியான 20 வயதுப்பிரிவில் கலந்து கொண்டு தமது திறமையினை வெளிக்காட்டி மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கும் முனைக்காடு விவேகானந்த மகாவித்தியாலயத்திற்கும் முனைக்காடு கிராமத்திற்கும் பெருமையினை தேடிக்கொடுத்திருக்கின்றனர்.
மட்/மமே/ முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய மேசைப்பந்தாட்ட அணி பாடசாலை மட்டங்களில் மாத்திரமன்றி திறந்த கழகமட்ட போட்டிகளிலும் முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டுக் கழகத்திற்காக களம் இறங்கி சாதித்துக்காட்டிக்கொண்டிருக்கின்றனர்